இன்று எங்கு பார்த்தாலும் ஆக்ஸிடண்டு நடக்கிறதே ஏன்?

 என்பது கேள்வி 



நுாஹ் நபி(அலை) அவர்களின் சமுதாயத்தவர்கள் எவ்வளவு மோசமான இழிந்த செயலை செய்தார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியும். அதற்கு தண்டனையாக பெரிய வெள்ளப் பிரளயத்தை அல்லாஹ் ஏற்படுத்தினான்


அல்லாஹ்வின் கட்டளைப்படி தண்ணீர் பொங்கியது. எது வரை? ஜுதி மலையின் உச்சியையெல்லாம் தாண்டி மேல் நோக்கி  வெள்ளம் ஏற்பட்டு விட்டது. அப்பொழுது நபி நுாஹ்(அலை) அவர்கள் முஃமின்களை கப்பலில் ஏறச் சொன்னார்கள். எப்படி ஏறச் சொன்னார்கள்


இந்த மாதிரி சூழலில் நாம் எப்படி ஏறச் சொல்வோம் ஏறு ஏறு சீக்கிரம் ஏறு என்றுதான் சொல்வோம். வெள்ளம் என்றால் எந்த மாதிரி வெள்ளம். சுனாமியைவிட பல மடங்கு. சுனாமியில் பனை மரம் அளவுதான் தண்ணீர் அலையாக பொங்கியது..


இங்கோ அலைகள் மலைகளைப் போன்று உயா்ந்தது. இதை நாம் சொல்லவில்லை அல்லாஹ் சொல்லி உள்ளான்அவ்வளவு பிரளயத்திலும்நுாஹ் நபி என்ன சொன்னார்கள்.


بِسْمِ اللّٰهِ مَجْرٖؔٮٰھَا وَمُرْسٰٮهَا ‌ؕ اِنَّ رَبِّىْ لَـغَفُوْرٌ رَّحِيْمٌ

இதில் ஏறிக் கொள்ளுங்கள்! என்று மட்டும் சொல்லவில்லை.

இது ஓடுவதும், நிற்பதும் அல்லாஹ்வின் பெயராலேயே உள்ளது. என் இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' 
என்று  கூறினார்கள்.11:41.

இதில் இருந்து என்ன தெரிகிறோம்.

 

வெளியில் போகும்போது டூ வீலர்களில் போனாலும் பஸ், கார், ரயில், விமானம், ராகட் என எந்த வாகனத்தில் ஏறினாலும் பிஸ்மில்லாஹ் சொல்லி துஆ ஓத வேண்டும். எப்படி பிஸ்மில்லாஹ் சொல்ல வேண்டும்? குர்ஆன் ஓதும்போது சொல்கிறோமே அது மாதிரியா? என்றால் இல்லை.  நுாஹ் நபி சொன்ன மாதிரி என்பார்கள்.


11:41.ல் உள்ளபடி நுாஹு நபி செய்தது  துஆவா,  கொள்கைப் பிரச்சாரமா? அந்த வசனத்தை ஆய்வுடன் படியுங்கள். அது துஆ அல்ல. அல்லாஹ்வை நினைவு கூறி செய்த பிரச்சாரம் என்று விளங்கும். 

அது துஆ என்று வைத்துக் கொண்டாலும். நுாஹ் நபி சொன்ன மாதிரி என்றால் நுாஹ் நபியா  நமக்கு முன் மாதிரி? 


நமக்கு முன் அழகிய முன் மாதிரிவழி காட்டுதல் என்பது இறுதித் துாதர் முஹம்மது(ஸல்) அவர்களிடம்தான் இருக்கின்றது.


நுாஹ் நபி போன்ற முந்தைய நபிமார்கள் வாழ்வில் நமக்கு படிப்பினைகள் இருக்கின்றன. வழி காட்டுதல்கள்  பின் பற்றுதல்கள் இல்லை.  அல்லாஹ் குறிப்பிட்டு சொன்னால் அதில் மட்டும் பின் பற்றுதல் இருக்கும்.


 

நமக்கு முன் அழகிய முன் மாதிரி, வழி காட்டுதல் என்பது இறுதித் துாதர் முஹம்மது(ஸல்) அவர்களிடம்தான் இருக்கின்றது.



நபி(ஸல்) அவர்கள் பயணத்திற்காக தமது வாகனத்தில் ஏறி அமர்வார்கள். உடனே  மூன்று தடவை

اَللهُ أَكْبَرُ اَللهُ أَكْبَرُ اَللهُ أَكْبَرُ       

என்று கூறுவார்கள். பின்னர்


سُبْحَانَ الَّذِيْ سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِيْنَ وَإِنَّا إِلَى رَبّنَا لَمُنْقَلِبُوْنَ اَللّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا اَلْبِرَّ وَالتَّقْوَى وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَى اَللّهُمَّ هَوّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اَللّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيْفَةُ فِي الأَهْلِ اَللّهُمَّ إِنّيْ أَعُوْذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالأَهْلِ

என்றும் கூறுவார்கள்.  இது முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது. என்ன அர்த்தம்?

அல்லாஹ் மிகப் பெரியவன். எங்களுக்கு இதை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதன் மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு! இதன் தொலைவை எங்களுக்குச் குறைத்து விடு! இறைவா! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். இறைவா! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும், மோசமான தோற்றத்திலிருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். என்று அர்த்தம்.


பயணத்திலிருந்து திரும்பும் போது மேற்கண்ட அதே துஆவை  ஓத  வேண்டும். அத்துடன் آيِبُوْنَ تَائِبُوْنَ عَابِدُوْنَ لِرَبّنَا حَامِدُوْنَ  என்றும் ஓத வேண்டும். இது முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது. எங்கள்  இறைவனை  வணங்கியவர்களாகவும்,   புகழ்ந்தவர்களாகவும்  மன்னிப்புக்   கேட்பவர்களாகவும்  திரும்புகிறோம் என்பது இதன் பொருள்


வெளியூரில் தங்கும் போது بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ أَعُوذُ

முழுமையான அல்லாஹ்வின் வார்த்தைகளைக் கொண்டு அவன் படைத்த அனைத்தின் தீங்கை விட்டும் அவனிடமே பாதுகாப்புத் தேடுகிறேன் என்பது  இதன் பொருள் இதுவும் முஸ்லிம் என்ற நுாலில் இடம் பெற்றுள்ளது. வாகனத்தில் ஏறி உடன் டுர்ர் டுர்ர் என பிறரை பயம் காட்டாமல் அல்லாஹ்வை பயந்து நபி(ஸல்) காட்டிய வழியில் பிஸ்மில்லாஹ் கூறினால் அனைத்து தீமைகளிலிருந்தும் பாதுகாக்கும் பொறுப்பு அல்லாஹ்வுக்கு வந்து விடுகிறது. நபி வழியில் பிஸ்மில்லாஹ் சொல்வோம் ஆக்ஸிடண்டுகளை தவிர்ப்போம்.

http://mdfazlulilahi.blogspot.ae/2017/08/blog-post_3.html 

 அடுத்த கேள்வி 

முஸ்லிமை முஸ்லிம் இல்லை என்று கூறலாமா?

 முந்தைய கேள்வி 

ஏழு வசனங்கள் எவை? அலீ (ரலி) அவர்களின் பதில் 

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்  என்பதில்  மட்டும் ஏன் நம்பர் போடப்படவில்லை?

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.