அல்லாஹ் ரஹ்மான் ரஹீம் என்று எழுதுவதை வெறுப்பவர்கள் யார்?
அல்லாஹ் என்பதற்கு கடவுள் என்றோ இறைவன்
என்றோ மொழி பெயர்ப்பது சரியா?
இன்று பலர் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
என்பதற்குப் பதிலாக கடவுளின் பெயரால், இறைவனின் திருப் பெயரால் என்று எழுதுகிறார்கள். இந்த சிந்தனை எந்த ஷய்த்தானால் ஏற்பட்டது?
அல்லாஹ் என்பது அரபி வார்த்தை. ஆங்கிலத்தில் GOD என்கிற மாதிரி தமிழில் ஏகன், கடவுள், இறைவன் என்கிறோம் என
விளக்கம் கூறுகின்றார்கள். இதன் மூலம் அல்லாஹ்வின் பெயரால்
என்பதற்குப் பதிலாக கடவுளின் பெயரால்,
இறைவனின் பெயரால் என்று எழுதுவதை நியாயப்படுத்தி வருகின்றார்கள்.
லா இலாஹ இல்லல்லாஹ் இதற்கு மொழி பெயர்ப்பு
என்ன?
லா – இல்லை.
இலாஹ – கடவுள்/ தெய்வம்/ சாமி /இறைவன்
இல்லா
– தவிர/ அல்லாத / வேறான
இது வரை மொழி பெயர்க்கலாம். அல்லாஹ் என்பதற்கு அல்லாஹ் எனும்பொழுது என்ன அர்த்தம் வரும்?
கடவுளே இல்லை அல்லாஹ்வைத் தவிர. அல்லது வணக்கத்துக்குரிய
நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று சொல்வோம்.
அல்லாஹ் என்பதற்கு கடவுள் என்று மொழி பெயர்த்தால்
எப்படி சொல்ல வேண்டும்? கடவுளே இல்லை கடவுளைத் தவிர என்றுதான் சொல்ல வேண்டும்?
இந்த ஒன்றின் மூலமே புரிந்து இருப்பீர்கள். அல்லாஹ்
என்பதை எந்த மொழியிலும் மொழி பெயர்க்க முடியாது என்று.
பண்புப் பெயர்களை மொழி பெயர்க்கலாம். இயற்
பெயர்களை இடு குறிப் பெயர்களை விபரம் உள்ள யாரும் மொழி பெயர்க்க மாட்டார்கள். ரஹ்மான்,
ரஹீம் போன்ற 99 பெயர்களும் அல்லாஹ்வின் பண்புப் பெயர்கள்.
இதற்கு காரணப் பெயர்கள் என்றும் தொழிற் பெயர்கள் என்றும் சொல்வார்கள்.
ஹுதைபியா
உடன்படிக்கை. ரசூல் (ஸல்) அவர்கள் எழுத்தரை அழைத்தார்கள். அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் ஆகிய அல்லாஹ்வின் பெயரால்...' இப்படி சமாதான ஒப்பந்தத்திற்கான துவக்க
வாசகத்தை நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். குறைஷிகளின் துாதராக வந்த சுஹைல் என்ன சொன்னார்?
அது என்ன றஹ்மான் றஹீம்
இதுவெல்லாம் அல்லாஹ்வைக் குறித்து நாங்கள் கேள்விப்படாத பெயர். பிஸ்மிக்க அல்லாஹும்ம. அல்லாஹ்வின் பெயரால் எழுதுகிறேன் அவ்வளவுதான் "ரஹ்மான் - அளவற்ற அருளாளன்'
என்பது என்ன என்று எனக்குத் தெரியாது.
எனவே அல்லாஹ்வின் திருப்பெயரால்...' என்று நீங்கள் முன்பு எழுதிக் கொண்டிருந்ததைப் போல் தான்
நான் எழுத வேண்டும்'' என்றார்.
முஸ்லிம்கள், "அல்லாஹ்வின்
மீது ஆணையாக! "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்- அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் பெயரால்... என்று தான் இதை
எழுதுவோம்'' என்று கூறினார்கள். குறைஷிக்
காபிரின் நிர்ப்பந்தத்திற்காக மட்டுமல்ல. துார நோக்குடைய உடன்படிக்கை ஏற்பட
வேண்டும் என்பதற்காக. நபி (ஸல்)
அவர்கள், " "பிஸ்மிக்க அல்லாஹும்ம - யா அல்லாஹ் உன் திருப்பெயரால்' என்று எழுத சம்மதித்தார்கள்.
நன்றாகக் கவனிக்க வேண்டும். அளவற்ற அருளாளன் என்ற அல்லாஹ்வின் பெயர் குறைஷிக் காபிர்களுக்குத்தான் ஒருவிதமான குமட்டலை வெறுப்பை
ஏற்படுத்தி இருக்கின்றது. இதை அல்லாஹ்வே திருக்குர்ஆனில் சொல்லிக் காட்டி உள்ளான்.
"அளவற்ற அருளாளனுக்கு ஸஜ்தாச் செய்யுங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்படும் போது "அது என்ன அளவற்ற அருளாளன்?
நீர் கட்டளையிடுபவருக்கு நாங்கள் ஸஜ்தாச் செய்வோமா?''
என்று கேட்கின்றனர். இது அவர்களுக்கு வெறுப்பை
அதிகமாக்கியது. (அல்குர்ஆன் 25:60).
குறைஷிக் காபிர்கள் றஹ்மான் றஹீம் என்பதைத்தான்
வெறுத்தார்கள். அல்லாஹ் என்று எழுதுவதை வெறுக்கவில்லை. ஆனால்
இன்றுள்ள முஸ்லிம்களில் ஒரு சாரார் நிலை என்ன? அல்லாஹ் என்பதையே வெறுக்கின்றார்கள். அல்லாஹ் என்று சொல்வதையும், எழுதுவதையும் வெறுக்கிறார்கள்.
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
என்பதற்குப் பதிலாக 786 என்று போட்டவர்களை விமர்சித்தார்கள்.
நபி ஸுலைமான்(அலை) அவர்கள் காலத்தில் இருந்த பெண்
ஆட்சியாளருக்கு நபி ஸுலைமான்(அலை) கடிதம்
எழுதினார்கள். அந்தக் கடிதம் எப்படி துவங்கி இருந்தது என்பதை அல்லாஹ் சொல்லிக்
காட்டி உள்ளான். ”இன்னஹு மின் சுலைமான வஇன்னஹு பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்” நிச்சயமாக இது ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது; இன்னும் நிச்சயமாக இது: “பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்” என்று (துவங்கி) இருக்கிறது (27:30)
நபி(ஸல்) அவர்கள் ஹபஷா,
எகிப்து, பாரசீகம், ரோம், பஹ்ரைன், யமாமா, ஒமான் ஆகிய நாட்டு மன்னர்களுக்கும் தங்களுக்கு கீழ் இருந்த ஆளுனர்களுக்கும் எழுதிய
கடிதங்களிலும் “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்” என்று துவங்கி இருந்தார்கள்.
இப்படி ஆதாரங்களைக் காட்டி பிஸ்மி…யை முழுமையாக எழுத வேண்டும் என்றவர்கள். அல்லாஹ் என்பதையே வெறுக்கிறார்கள். அல்லாஹ்வின் பெயரால் என்று எழுதாதே. இறைவனின் பெயரால் என்று மட்டும் போடு என்கின்றார்கள். அல்லாஹு அக்பர் என்று சொல்லாதே. வேறு ஏதாவது கோஷம் போடு. வேஷம் போடு என்கின்றார்கள். இந்த சிந்தனை எப்படி ஏற்பட்டது? எந்த ஷய்த்தானால் ஏற்படுத்தப்பட்டது? தமிழ் முஸ்லிம்களிடம் ஊடுறுவியது எப்படி?
ஜிஹாத் என்கிற அரபுச் சொல்லுக்கு மொழியியல் ரிதியாக நேரடி அகராதிப் பொருள் உழைப்பது, அயராது பாடுபடுவது விடா முயற்சி, கடின உழைப்பு இப்படி
பல பொருள்கள் உண்டு. இந்த பொருள்கள்தான் குர்ஆன் ஹதீஸ்
ஆதாரங்கள் மூலம் கிடைக்கக் கூடியவை.
இதற்கு மாற்றமாக ஜிஹாது என்பதற்கு போர்
செய்தல். இஸ்லாமிய விரோதிகளை தாக்குதல் ஜிஹாத் என்றாலே மற்ற மதத்தவர்களைக் கொல்லுதல்; தாக்கி அழித்தல்; அவர்கள் மீது போர் தொடுத்தல் என
தவறான விளக்கத்தை அளித்தான் ஒரு ஷய்த்தான். இளைஞர்களை தவறான செயல்கள் செய்ய துாண்டினான்.
துாண்டப்பட்டவர்கள் காவல்துறையால்
வட்டம் கட்டி பிடிக்கப்பட்டு சிறைக் கைதிகளாக ஆனார்கள். காவல் துறை அடுத்து போட்ட
வட்டம். துாண்டிய ஷைத்தானை பிடிப்பது என்ற வட்டம். காவல் துறை போட்ட வட்டம்
சுருங்கியது. துாண்டிய ஷைத்தானை நெருங்கியது.
இதிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள துாண்டிய ஷைத்தான் காட்டிக் கொடுத்தல் மாட்டி விடுதல் என பல வேலைகள் செய்தான். மேலும் தன்னை காக்க தன் பின்னால் மக்கள் சக்தியை திரட்ட வேண்டும் என்பதை
அறிந்தான். மக்கள் சக்தி வேண்டும் என்றால் ஒரு சாராரை மட்டும் திரட்டினால் அது
சக்தியாக இருக்காது. எனவே எல்லா மக்களையும் திரட்ட முடிவு செய்தான்.
எல்லா மக்களையும் திரட்டுவது
என்றால் அந்த மக்களுக்கு தக்கவாறு நாம் இறங்கி போக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை
உணர்ந்தான். பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
என்று போட்டால். இப்படி போடுவது கண்ணியக் குறைவு என்று எண்ணி 786 போடக் கூடிய முஸ்லிம்களில் ஒரு சாரார்
வர மாட்டார்கள். ஆகவே பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்று போடக் கூடாது என்று முடிவு செய்தான்.
முஸ்லிம்கள் மட்டும் நமக்கு பின்
பலமாக வந்தால் போதாது. முஸ்லிம் அல்லாதவர்களும் வர வேண்டும். எல்லாரும் வரா
விட்டாலும். முஸ்லிம் அல்லாதவர்களில் லட்டர் பேடு அமைப்புகளின் தலைவர்களாக
உள்ளவர்கள் கூட வந்தால் போதும் என்று எண்ணினான்.. முஸ்லிம் அல்லாதவர்களை அழைக்கும்போது
அல்லாஹ்வின் பெயரால் என்று போடக் கூடாது. அல்லாஹ் என்று போட்டால் அவர்களுக்கு
வெறுப்பாக இருக்கும் அதனால் வர மாட்டார்கள்.
அல்லாஹ் என்று போடாமல் இறைவன் என்று
போட்டால். இந்துவும் வெறுக்க மாட்டான். கிறிஸ்தவனும் வெறுக்க மாட்டான். முஸ்லிம்
அல்லாத யாருக்குமே வெறுப்பாக இருக்காது. எனவே இறைவனின் திருப் பெயரால் என்று போடுவோம்
என்று முடிவு
செய்தான். அந்த முடிவை ஏற்க வைக்க தனது பேச்சுத் திறமையை பயன்படுத்தினான். தனது பேச்சுத் திறமையால் ஏற்கவும் வைத்தான்.
இன்று அல்லாஹ் என்று
போடுவதை யார் வெறுக்கிறார்களோ இல்லையோ முஸ்லிம்கள் வெறுக்கும் நிலை வந்து விட்டது. யூதர்களின் கைக் கூலியான ஷய்த்தானின் சதித் திட்டம் வெற்றி பெற்று விட்டது.
1926 ல் வெளியான தாவூத்ஷாவின் முதல் மொழி
பெயர்ப்பு முதல் இன்று வரையிலான எந்த தர்ஜுமாவிலும் தப்ஸீரிலும் அல்லாஹ் என்ற பெயருக்கு அல்லாஹ் என்றுதான்
போட்டு உள்ளார்கள். அதற்கு இறைவன் என்றோ கடவுள் என்றோ யாரும்
மொழி பெயர்த்தது கிடையாது. 1995க்குப் பிறகுதான் அல்லாஹ் என்ற
பெயருக்கு இறைவன் என்றோ கடவுள் என்றோ மொழி பெயர்த்து போட்டு வருகிறார்கள். இது சரியா? தவறா சிந்தியுங்கள்.
இனியும் ஷய்தானுக்கு கட்டுப்பட்டு அல்லாஹ் ரஹ்மான் ரஹீம் என்று எழுதுவதை வெறுக்கப் போகிறீர்களா?
Comments