பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் ஒன்றாவது வசனம் என்பதற்கு நபி வழியில் ஆதாரம் உண்டா?
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
என்பதுதான் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் முதல் வசனம் ஆகும். சூரத்துல் பாத்திஹாவில் அல்ஹம்து லில்லாஹி ரப்பில்
ஆலமீன் என்பது இரண்டாவது வசனம்தான்.
ஒவ்வொரு அத்தியாயத்திலும்
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்பது அதைச் சார்ந்த ஒரு வசனம்தான். அதுதான் முதல்
வசனம். இதற்கு ஆதாரமாக
அலி (ரலி) அவர்கள் கூறிய பதிலைக் கண்டோம்.
இதே
மாதிரிதான் எல்லா அத்தியாயத்திலும் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்பது முதல் வசனம்
ஆகும். நடைமுறையில் முதல் வசனம்
என அடையாளம் இடப்பட்டுள்ள அனைத்துமே இரண்டாவது வசனம்தான். அத்
தவ்பா என்ற அத்தியாயத்தைத் தவிர. இதற்கு நபி வழியில் தெளிவான
ஆதாரம் உண்டா? என்பதைப் பார்ப்போம்
அல்லாஹ்வின்
துாதர் முஹம்மது (ஸல்) அவர்கள் பள்ளியில் எங்களுடன் இருந்தார்கள். அப் போது சிறிது நேரம் தலை கவிழ்ந்து விட்டு பின்னர் சிரித்தவர்களாகத் தம் தலையை உயர்த்தினார்கள்.
அல்லாஹ்வின் தூதரே! எதற்காகச் சிரிக்கின்றீர்கள்? என்று நாங்கள் கேட்டோம். சற்று முன் எனக்கு ஒரு அத்தியாயம் அருளப்பட்டது. அதில் எனக்கு பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருக்கின்றது. அதனால் மகிழ்ச்சி அடைந்து சிரித்தேன் என்று கூறினார்கள்.
பிறகு, பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் இன்னா அஃதைனாகல் கவ்ஸர்... என்று ஓதிக் காட்டினார்கள் என்று அனஸ் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் : முஸ்லிம் என்ற நுாலில் இடம் பெற்றுள்ளது.
அல்
கவ்ஸர் என்ற அத்தியாயம் அருளப்பட்டது என்று கூறிய நபி(ஸல்) அவர்கள், பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்பதை சேர்த்தே அதை ஓதிக் காட்டி உள்ளார்கள்.
ரசூல் (ஸல்) அவர்களின் குர்ஆன் ஓதுதல் எவ்வாறு இருக்கும்? என்று அனஸ் (ரலி) அவர்களிடம் விசாரிக்கப்பட்டது அப்போது ரசூல் (ஸல்) அவர்கள் நீட்டி, நிறுத்தி ஓதுவார்கள் என்று கூறினார்கள்.
பின்னர் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம் என்பதில் ரஹ்மான், ரஹீம் என்ற வார்த்தைகளைக் நீட்டி ஓதிக் காட்டினார்கள் என்று கத்தாதா(ரஹ்) அவர்கள் கூறும் செய்தி புகாரியில் இடம் பெற்றுள்ளது.
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் என்று ஒவ்வொரு வசனமாக ஓதுவார்கள் என்று உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறியுள்ளது அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது.
அல்லாஹ்வின்
துாதர் முஹம்மது (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதை சேர்த்தே அத்தியாயங்களை ஓதி இருக்கிறார்கள். எனவே 113 அத்தியாத்தியாயங்களிலும்
உள்ள பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்பது அந்த அந்த அத்தியாத்தியாயங்களைச்
சார்ந்ததுதான். ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் அதுதான் முதல் வசனம் என்று நபி வழியில்
தெளிவாகி விட்டது.
அடுத்த கேள்வி
அடுத்த கேள்வி
இன்று எங்கு பார்த்தாலும் ஆக்ஸிடண்டு நடக்கிறதே ஏன்?
முந்தைய கேள்வி
ஏழு வசனங்கள் எவை? அலீ (ரலி) அவர்களின் பதில்
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்பதில் மட்டும் ஏன் நம்பர் போடப்படவில்லை?
Comments