கேப்டன் பிரபாகரனின் மகனை என்ன செய்தார்கள்?

அநியாயமாக எந்தக் காரணமும் இல்லாமல் யார் ஒரு அடியான் உடைய உயிரை பறிக்கிறானோ அவன் அல்லாஹ் உடைய பார்வையில் மனித சமூகத்தையே கொன்றவனைப் போல் ஆவான். காரணம் எல்லாருமே அல்லாஹ் உடைய அடியார்கள். எல்லாருமே அல்லாஹ்வால் படைக்கப்பட்ட மக்கள்.


யாராவது அநியாயமாக எந்தக் காரணமும் இல்லாமல் ஒரு உயிரைப் பறித்தால் எப்படிப்பட்ட குற்றத்திற்கு உரியவனாக அல்லாஹ் உடைய நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுவான்? உலக மக்கள் அனைவரையும் கொன்றவனைப் போல் குற்றவாளியாக விசாரிக்கப்படுவான். ஒரு உயிரை நீங்கள் இந்த பூமியில் வாழ வைத்தால் உலக மக்கள் அனைவரையும் நீங்கள் வாழ வைத்தவர்கள் போல் ஆவீர்கள் என்று சொன்ன மார்க்கம் இஸ்லாம். (அல்குர்ஆன் 5;32) இப்படிப்பட்ட வசனம் வேறு எந்த வேதத்திலாவது உண்டா?

முஸ்லிம்களுடைய ஆட்சியின் கீழ் பிற மதத்தவர்கள் யாராவது இருந்து. அவர்கள் அநியாயமாக கொலை செய்யப்பட்டால். அந்த முஸ்லிம்கள் சொர்க்கத்துடைய வாசனையைக் கூட நுகர முடியாது என்று சொன்ன மார்க்கம் இஸ்லாம்  (புகாரி 6914) 

இது போல் சொன்ன மதங்கள் உலகில் உண்டா? அப்படி சொன்ன மதம் உண்டு என்றால் அது இஸ்லாம் மார்க்கம் மட்டுமே. இது மட்டும் அல்ல. போர் நெறிமுறைகளை உலகுக்கு கற்றுத் தந்தது நமது மார்க்கம். இஸ்லாமிய சாம்ராஜ்யம் ஏக இறைவனான அல்லாஹ்வுடைய துாதர் முஹம்மது(ஸல்) அவர்கள் கையில் இருந்தது. அப்படி இருந்தும் மதத்தை பரப்ப போர் செய்யுங்கள் என்று துாண்டிய ஏதாவது ஒரு ஹதீஸை சொல்ல முடியுமா? ஒரு வசனத்தை திரு குர்ஆனிலிருந்து காட்ட முடியுமா?

சமாதான உடன்படிக்கை செய்த மக்களின் ஒப்பந்தத்தை துாக்கி வீசி விட்டுகிழித்து எறிந்து விட்டு. ஒப்பந்தத்திற்கு எதிராக, ஒப்பந்தம் செய்த மக்களை எதிர்த்து போர் செய்ய சொன்னதாக ஏதாவது ஒரு ஹதீஸை காட்ட முடியுமா? ஒரு இறை வசனத்தைத்தான் திரு குர்ஆனிலிருந்து காட்ட முடியுமா? முடியாது

போர் நேரங்களில் கூட பெண்களை கொள்ளக் கூடாது. குழந்தைகளை கொள்ளக் கூடாது. மத குருமார்களை கொள்ளக் கூடாது. வயதில் மூத்தவர்களை பாதுகாக்க வேண்டும். வழிபாட்டுத் தலங்களை தகர்கக் கூடாது. போரில் கொல்லப்ட்டவர்களின் உடல்களை சிதைக்கக் கூடாது. இப்படி போர் நேரத்தில் கூட போர் தா்மத்தை கற்றுக் கொடுத்த மார்க்கம் இஸ்லாம்

கேப்டன் பிரபாகரனின் மகனை என்ன செய்தார்கள்? அண்டை நாடான இலங்கையில் தமிழ்புலிகளை கொன்றார்கள், கொல்லப்பட்ட பின் உடல்களை சிதைத்தார்கள். பெண்கள் சீரழிக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள். இப்படிப்பட்ட அநியாயங்களை கண்டித்து போர் வெறியை வெறுத்த மார்க்கம் இஸ்லாம். போர் நெறிமுறைகளை வகுத்துக் கொடுத்த மார்க்கம் இஸ்லாம்.

போரில் சரண் அடைந்து விட்டால், பணிந்து அபயம் தேடி உங்களிடத்தி அடைக்கலம் கேட்டு விட்டால் ஒன்றும் செய்யக் கூடாது என்ற நியாயமான சட்டங்கள் எல்லாம் இஸ்லாத்தில்தான் காண முடியும். இந்த மார்க்கத்தை முஸ்லிம்கள் எல்லாரும் சரியான முறையில் ஏற்றுக் கொள்ள உள்ள தடைகளை நீக்க வேண்டும். அநியாயம் ஒரு பகுதியிலும் நடக்கக் கூடாது. ஒரு பகுதியில் உள்ள ஆட்சியாளன் அந்த மக்களின் உழைப்பை, பொருளை திண்ணக் கூடியவனாக இருக்கக் கூடாது. இந்த மாதிரி நிலைக்குத்தான் இஸ்லாமிய வரலாற்றில் போர்கள் நடந்துள்ளன. 

ஆகவே எந்த நாட்டில் நாம் மார்க்கத்தை சொல்வதற்கும் அதை செயல்படுத்துவதற்கும் தடை இல்லையோ. அங்கு போர் என்பது முஸ்லிம்களுக்கு அனுமதிக்கப்படவில்லை என்பதை வரலாற்றிலிருந்து நாம் தெரிந்து புரிந்து விளங்கி செயல்பட வேண்டும்.

எதிரிகளை கைது செய்து விட்டால். அவர்களிடமிருந்து ஈட்டுத் தொகை பெற்றுக் கொண்டு விட்டுவிடலாம். அல்லது பெருந்தன்மையாக கருணைகாட்டி விட்டுவிடலாம்(47;4) என்று சொன்ன மார்க்கம் நம் மார்க்கம். 

சிந்தித்துப் பார்க்க வேண்டும். எந்தக் காலத்திலேயும். போரில் பிடிக்கக் கூடிய கைதிகளை உடனடியாக யாருமே அவ்வளவு எளிதில் விட்டுவிட மாட்டார்கள். போர்க் களத்தில் போரிடும்போது அவர்களை வெட்டுங்கள் என்று சொன்ன அல்லாஹ். கைது செய்தவர்களை சிறையில் போட்டு வையுங்கள். அந்தக் கால முறைப்படி அடிமைகளாக வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை. ஈடு பெற்று விட்டுவிடுங்கள் என்றே கூறி உள்ளான்.

ஈட்டுத் தொகை கொடுப்பதற்கு எல்லாரிடமும் வசதி இருக்குமா? இருக்காது. பொருளாதாரம் இல்லாதவன் இருப்பான். அப்படிப்பட்டவர்களிடம் பெருந்தன்மையோடு கருணைகாட்டி விட்டுவிடுங்கள் என்கிறான். இல்லாதவனிடம் கருணை காட்டி விட்டால் என்ன நடக்கும்? விடப்படுவன் யார்? 

நேற்று வரை நம்மோடு வாழ்ந்தவன்தான். புதிதாக எங்கு இருந்தும் வந்தவன் அல்ல. வேற்று கிரகவாசிகள் என்பது கிடையாது. வேறு ஒரு கண்டத்திலிருந்து வந்திருக்கவும் மாட்டான். நம்மோடு அண்ணன் தம்பிகளாக இருந்தவன்தான், தெரிந்தவன் தான் சண்டைக்கு வருவான். பொதுவாக கும்பலோடு கும்பலாக என்பது மனித நிலைதான். போராடுவோம் போராடுவோம் என போராடுபவர்களை பார்க்கிறோம். அவர்களில் வழி காட்டுதல் இல்லாதவர்களிடம் கும்பலோடு கும்பலாக சேரும்போது ஒரு விதமான வெறி வரும். பத்து பேருடன் சேர்ந்து விட்டாலே கா கூ என கத்துவான். தனியாக விட்டால்  அண்ணே ஒன்னுமில்லே அண்ணே என இழிப்பான்.

இந்த சுபாவம் சிறு பிள்ளையாக இருக்கும் காலத்திலேயே ஏற்பட்டு விடும். எல்லா வீடுகளிலும் பார்க்கலாம். ஒரு குழந்தையை தனியாக வைத்தால் அது பாட்டுக்கு இருக்கும். அதனுடன் இன்னொரு குழந்தை சேர்ந்து விட்டால் சேட்டைகள் செய்ய ஆரம்பித்து விடும். வீடு அமர்களம் ஆகி விடும். அந்த வயதுக்கு அதுதான் போர்க்களம். ஒரு பிள்ளை ஒரு சாமானை கீழே போட்டு உடைத்தால். அதைப் பார்த்த இன்னொரு பிள்ளை இரண்டு மூன்று என கீழே போட்டு உடைக்கும். ஏன் எதற்கு என்று தெரியாது. அது செய்தது நானும் செய்தேன் அவ்வளவுதான். குழந்தை பருவத்தில் ஏற்பட்ட இந்த செயல் தான், ஒன்றைப் பார்த்தால் அதைப் போல் தானும் செய்தல் என்பதுதான். கடைசி வரையில் மனிதர்களிடம் குடி இருக்கிறது.

காவிரிக்காக, முல்லைப் பெரியாருக்காக கர்நாடகாவும் கேரளாவும் தமிழகத்தை எதிர்க்கிறார்கள். கூடங்குளம் போன்றவற்றுக்காக தமிழகத்துக்குள்ளேயே எதிர்க்கிறார்கள். இப்படி காரணங்கள் கிடைக்காத பார தீய அணியினர் அவர்களே அவர்களது ஆட்களை கொலை செய்து (அ)நீதிக்காக போராடுகிறோம் என்கிறார்கள்.  இப்படி போராடக் கூடிய களவாணிகளை நாடு காரி துப்பிக் கொண்டிருக்கிறது. அவன்களை விட்டுவிடுவோம். குடி இருப்பு வீடுகள் மீது கல்லை வீசி கண்ணாடிகளை உடைப்பதைக் காண்கிறோம். அந்த வீட்டுக்காரனுக்கும் அந்த பிரச்சனைகளுக்கும் எந்த சம்பந்தமும் உண்டா? கிடையாது. இப்படி செய்பவர்கள் எல்லாம் டீன் ஏஜ்களாகத்தான் இருப்பார்கள். எதற்கு கல்லை விடுகிறான்? எந்த புத்தியும் கிடையாது. கூட ஒரு கூட்டம் இருப்பதால் ஏதாவது செய்யணும் என செய்வான்.

பஸ் போன்ற பொது சொத்துக்களை எரித்தல் எப்படி நடக்கிறது? தனி நபராக போய் செய்வானா? செய்ய மாட்டான். கூட்டமாக போனால் ஒன்றும் தெரியாது. அது போல குப்பலோடு கும்பலாக போருக்கு வந்திருப்பவர்களும் இருப்பார்கள். நாலு நாள் நல்லா ஜாலியாக சுற்றி விட்டு வரலாம் என கொள்கையற்று வந்தவனும் இருப்பான். அவன்தான் ஈட்டுத் தொகைக்கு வக்கற்றவனாகவும் இருப்பான். அவனை பிடித்து வைத்து இருப்பதில் என்ன பயன்? கருணையுடன் விட்டுவிடுங்கள் என்கிறான் அல்லாஹ். இல்லாதவனிடம் கருணையோடு விடும்போது அவன் சிந்திப்பதற்கும் திருந்துவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. யாரிடத்தில் ஈட்டுத் தொகை  பெற வேண்டும்? யாரிடத்தில் கருணை காட்ட வேண்டும்? என்பதை சம்பந்தப்பட்ட அவர்களின் முடிவுக்கு அல்லாஹ் விட்டு விடுகிறான். இஸ்லாத்தில் எந்த ஒரு குற்றவியல் சட்டத்தை எடுத்துக் கொண்டாலும். பாதிக்கப்பட்டவனிடம் கருத்து கேட்கச் சொல்கிறது இஸ்லாம். ஏன்?
 அடுத்த தலைப்பு
ஒஜீர்களும் ராம்குமார்களும் நமது வரலாற்றில் உண்டா?
முந்ததைய தலைப்பு

(கோவை போன்ற ஊர்) கொடுமைக்காரர்கள் பற்றி அல்லாஹ் என்ன சொல்லி உள்ளான்? 

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு