பத்ரு என்ற பெயர் எப்படி வந்தது?

பத்ருப் போரை திட்டமிட்டது அல்லாஹ்தான். மற்றவையெல்லாம் காரண காரியங்கள். அவ்வப்போது பத்ருப் போர் என அபுஜஹ்ல்களை கத்த வைத்தவனும் அல்லாஹ்தான்


இரவிலும் போர் துவங்கும் போதும் இருந்தது போலவே போர் நடந்து கொண்டு இருக்கும்போதும் அபுஜஹ்லின் பின்னால் உள்ளவர்களை முஸ்லிம்களின் கண்களுக்கு குறைவாகவே காட்டினான். அதன் மூலம் முஸ்லிம்களுக்கு நம்பிக்கையை ஊட்டினான். ஆனால் அபுஜஹ்ல் கூட்டத்தின் நிலையையோ மாற்றமாக ஆக்கினான்.


போர் துவங்கும் வரை அபுஜஹ்ல் கூட்டத்தின் கண்களுக்கு முஸ்லிம்களை 300ஐ விட குறைவாகவே களத்தில் காட்டினான். போர் துவங்கியதும் அவர்களின் கண்களுக்கு முஸ்லிம்களை இரண்டாயிரமாகக் காட்டினான். (3;13) இதனால் அவர்கள் உள்ளங்களில் பீதியை ஏற்படுத்தினான். 

போர் துவங்கிய பின் அபுஜஹ்ல்களின் கண்களுக்கு முஸ்லிம்களை இரு மடங்காக காட்டி பீதியை ஏற்படுத்திய அல்லாஹ். முதலிலேயே இப்படிக் காட்டி இருந்தால். அவர்களிடம் கலக்கம் ஏற்பட்டு இருக்கும். போருக்கு வராமல் பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடி இருப்பார்கள். அல்லாஹ்வின் நோக்கம் இதுவாக இருந்திருந்தால். இப்படித்தான் செய்து இருப்பான்.

போர் நடந்தே தீர வேண்டும். முஸ்லிம்கள் வெற்றி அடைந்தே ஆக வேண்டும். அபூஜஹ்லும் அவனை பின்பற்றுபவர்களும் மண்ணைக் கவ்வியே ஆக வேண்டும். இதுதான் அல்லாஹ்வின் நோக்கமாக இருந்தது. எனவே ஆரம்பத்திலேயே இப்படி செய்யவில்லை. ஆகவே அபூஜஹ்லைவிட மோசமானவன்களுக்கு இப்படித்தான் தங்கள் கூட்டத்தை பெரியதாக காட்டிக் கொண்டு இருப்பான். 

ஆக இப்படி (3;13) மட்டும் காட்டப்படவில்லை என்று சொன்னால். நீங்கள் தைரியம் இழந்திருப்பீர்கள். போர் விஷயத்தில் ஒருவருக்கொருவர் முரண்பட்டிருப்பீர்கள் என்றும் (8;43) சொல்லிக் காட்டி உள்ளான். அதாவது போர் என்ற நிலை இல்லாமல். அதில் கருத்து முறிந்து போய் இருப்பார்கள். கருத்து முறிந்து போனால் என்ன ஆகும்.? 8 முயற்சிகள் மாதிரி 80 முயற்சிகள் நடந்து கொண்டே இருக்கும். மக்காவுக்கும் மதீனாவுக்கும் உள்ள பிரச்சனைகள் ஓயாது. நிரந்தரமாக வேறு செயல்களில் ஈடுபடுவதற்கும் முடியாது.

இந்த பிரச்சனைகள் முடிந்தால்தான் அடுத்தக் கட்ட நடவடிக்கைகளுக்குப் போக முடியும். இது உள் விவகாரமாக இருந்து கொண்டு இருக்கிறது. அதனால் அல்லாஹ் என்ன செய்கிறான். பத்ரு என்ற இடத்தில் போர் என அல்லாஹ்தான் தீர்மானிக்கிறான். அல்லாஹ்தான் போரின் எண்ணத்தை ஏற்படுத்துகிறான்

பத்ரு என்று சொல்வதும் ஒரு இடத்தினுடைய பெயர்தான். எல்லா போர்களிலும் இடத்தினுடைய பெயர்தான் போருக்கு பெயராக வந்துள்ளது. மதீனாவுடைய தென் மேற்கு பகுதியிலே. சுமார் 100 கி.மீ.க்கு அந்தப் பக்கம். பத்ரு என்ற இந்த இடம் இருக்கிறது. இது மலைகளை ஒட்டிய பகுதி



பத்ரு பின் நாரின் என்ற பெயருடைய ஒருவர் அந்தக் காலத்தில் பொது மக்களுக்காக ஒரு கிணறு வெட்டி இருக்கிறார். அது பிற்காலத்தில் பத்ரு என்ற பெயரில் ஒரு ஊர் உருவாக காரணமாக ஆயிற்று. தண்ணீர் எங்கு வந்தாலும் மக்கள் அங்கே குடி இருக்க வந்து விடுவார்கள்.

தண்ணீர் எங்கு இருக்கிறதோ அங்குதான் மக்கள் உயிர் வாழ முடியும். அங்குதான் பெரும்பாலான மக்களின் நடைமுறை வாழ்க்கை நடந்து கொண்டிருக்கும். மக்காவில் வாழக் கூடிய மக்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகத்தான் இருக்கிறது. என்ன காரணம்? இன்றும் மக்கா ஜனத் தொகையில் வளர்ச்சி பெறவில்லை காரணம். அல்லாஹ் அங்கு தண்ணீரை இல்லாமல் ஆக்கி விட்டான். கஃபாவை சுற்றி உள்ள பகுதிகளிலெல்லாம் ஆயிரம் மீட்டருக்கு போர் போட்டாலும் சாம்பல்தான் வரும்.

ஆனால் அதற்கு நடுவிலே அல்லாஹ் zஸம் zஸம் என்ற ஊற்றை வரச் செய்தான். அதிலிருந்து வரக் கூடிய தண்ணீரை ஹஜ், உம்ரா செய்ய போகக் கூடிய அனைவருக்கும் பயன்படச் செய்கிறான்

இந்த ஆண்டு அரசு அனுமதியுடன் வந்தவர்கள் 14 லட்சம் என்பது கணக்கு. அனுமதி இன்றி மதீனா வழியாக வரக் கூடியவர்களை தடுப்பது பாவம் என்று எண்ணக் கூடிய அதிகாரிகள் இன்றும் இருக்கிறார்கள். ஆக இந்தத் தலைமுறையில் 20 லட்சம் பேர் ஹஜ் செய்கிறார்கள் என்றால் அடுத்த தலைமுறையில் 30 லட்சம் ஆகலாம்ரமழானில் உம்ரா செய்ய வருபவர்களின் எண்ணிக்கையும் அதே அளவில்தான் உள்ளது. அத்தனை லட்சம் மக்களும் zஸம் zஸம்மில் ஒலுச் செய்கிறார்கள். குடிக்கிறார்கள், குளிக்கிறார்கள்.

அது மட்டுமல்ல. அங்கிருந்து மதீனா வரை 500 மைலுக்கு பைப் லைன் போட்டு விட்டிருக்கிறார்கள். அதன் மூலம் மஸ்ஜிதுன் நபவியில் தொழக் கூடியவர்களுக்கும் குடிப்பதற்கு இந்த zஸம் zஸம் தண்ணீரை கொடுக்கிறார்கள். மேலும் ஹஜ், உம்ரா செய்ய வந்தவர்கள் அவரவர் நாட்டுக்கும் கொண்டு போக கொடுக்கிறார்கள். இந்த பயன்பாடுகள் எல்லாமே  ஆண்டு முழுவதும் நடந்து கொண்டே இருக்கிறது. நேரலையில் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

அல்லாஹ்வுடைய ஆற்றலைப் பாருங்கள். சுற்றி இருக்கக் கூடிய பகுதிகளிலெல்லாம் ஆயிரம் மீட்டர் ஆழத்திற்கு போர் போட்டாலும் தண்ணீர் இல்லை. ஆனால் அந்த ஒரு பகுதியில் மட்டும் தண்ணீர் வருகின்றது. வந்து கொண்டே இருக்கின்றது என்று சொன்னால். இது அல்லாஹ் உடைய மிகப் பெரிய ஆற்றலுக்கு, அற்புதத்திற்கு ஒரு எடுத்துக் காட்டாக உள்ளது

அல்லாஹ்வுடைய துாதர் (ஸல்) அவர்கள் ஹஜ் செய்தபொழுது உடன் இருந்த மக்கள் ஒரு லட்சத்தை  தாண்டி இருந்தாலும். அவர்களுக்காக உரை ஆற்றிய ரசூல் (ஸல்) அவர்கள் மக்காவிலேயே ஒரு பகுதியில் நின்று உரை நிகழ்த்தி இருக்கலாம். ஆனால் அல்லாஹ் அங்கிருந்து 9 மைல்களுக்கு அப்பால் போகச் செய்துள்ளான். அரபா என்ற இடத்திற்கு போகச் செய்து. அங்கு உரை நிகழ்த்தச் செய்துள்ளான்.

ரசூல்(ஸல்) அவர்கள் எந்த இடத்தில் உரை நிகழ்த்துகிறார்களோ அது மார்க்கத்தில் கடமையாக சுன்னத் எனும் வழி முறையாக ஆகி விடும். 9 மைல்களுக்கு அப்பால் போய் ரசூல்(ஸல் அவர்கள் உரை நிகழ்த்திய அந்த இடம். இன்று ஐம்பது லட்சம் பேர் போனாலும் கூடாரம் போட்டு இருப்பதற்கு போதுமானதாக இருக்கிறது

அந்த அரபா மைதானத்திலும் தண்ணீர் என்பது இல்லை. பக்கத்திலே ஒரு மலை இருக்கிறது. இன்றளவும் இருக்கிறது. அந்த மலையை அப்புறப்படுத்தினாலும், கூடாரம் போட வசதியாக மலையை சரி செய்தாலும் இன்னும் இருபது லட்சம் பேர் அமரும் வண்ணம் கூடாரம் போடலாம். அப்படியானால் அந்த பகுதிகளிளெல்லாம் தண்ணீர் இல்லாமல் அல்லாஹ் ஏன் ஆக்கினான்? தண்ணீர் இருந்தால் மக்கள் குடியமர்ந்து விடுவார்கள். zஸம் zஸம் கிணறு வந்த பிறகுதான் மக்காவில் மக்கள் வசிக்க வந்தார்கள்.

தண்ணீரைப் பார்த்தால் பறவைகள் வந்து விடும். பறவைகள் வட்டமிடுவதைப் பார்க்கும் பாலைவனப் பயணக் கூட்டத்தினர் அதை நோக்கி வருவார்கள். தண்ணீர் இருக்கிறதே என்று தங்கி விட்டு போவார்கள். இப்படி வந்து போகின்றவர்களிடம் வியாபாரம் பண்ணலாம் என்று நாயர் போன்ற ஒருவர் வியாபாரக் கடை ஆரம்பிப்பார். அதைப் பார்த்து மற்றவர்கள் ஆரம்பிப்பார்கள். கடையை வைத்தவர்கள். நாம் ஏன் போய் வந்து இருக்க வேண்டும் என்று அங்கு வீட்டை கட்டுவார்கள். ஆக தண்ணீர் வந்து விட்டால் ஊர் உருவாகி விடும். தண்ணீரைக் கொண்டுதான் ஊர் உருவாகும். பத்ரு என்ற இடத்தில் ஒரு கிணறு வெட்டியதால் அங்கு ஒரு ஊர் உருவாகி விட்டது. பத்ர் என்ற பெயரும் நிலை பெற்று விட்டது.
தொடரும் இன்ஷாஅல்லாஹ் http://mdfazlulilahi.blogspot.ae/2016/10/blog-post.html 

அடுத்த தலைப்பு
ஒரே குடும்பத்தைச் சார்ந்த இரண்டு பேர் பலி

முந்ததைய தலைப்பு

ஹிஸ்புல்லாஹ்க்களா? ஹிஸ்புஷ் ஷய்த்தான்களா?

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு