(கோவை போன்ற ஊர்) கொடுமைக்காரர்கள் பற்றி அல்லாஹ் என்ன சொல்லி உள்ளான்?

அந்தக் காபிர்களுக்கு வலிமை (சக்தி) இருந்து முடியும் என்றால் உங்களை மார்க்கத்திலிருந்து திருப்பி அனுப்பும் வரை உங்களிடத்தில் போர் செய்து கொண்டே இருக்க தயாராக இருக்கிறார்கள் (2;217) என்று அல்லாஹ் தெள்ளத் தெளிவாக சொல்லிக் காட்டி உள்ளான். அவர்களது மன நிலையை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளான்.

இந்தக் கொடூர மனம் படைத்தப் பாவிகள். ஒரு வருடம் அல்ல இரண்டு வருடம் அல்ல. 15 வருடங்களாக தொடர்ந்து சொல்ல முடியாத அளவு தொல்லைகள் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். அப்பொழுதெல்லாம் பொறுமை நபி நாதர் போதித்தது என்ன? 

இன்னல்லாஹ மஅஸ்ஸாபிரீன். பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான் என்பதுதான். எப்படிப்பட்ட பொறுமை? சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் பத்ரு பத்ரு என்று அலைபவர்கள் சிந்திக்க வேண்டும். இதுவெல்லாம் முன்னாள் சென்ற சமுதாயத்தினருக்கு ஏற்பட்ட சோதனைகள்தான். சோதனைகளை தாங்குங்கள். உறுதியான ஈமானுடன் இருங்கள்.

முழு பொறுப்பையும் அல்லாஹ்விடத்தில் ஒப்படையுங்கள். அல்லாஹ் அவர்களை பார்த்துக் கொள்வான். இப்படித்தான் இறைத்துாதர் முஹம்மது(ஸல்) அவர்கள் போதித்தார்கள். ஒரு நாள் அல்ல. இரண்டு நாட்கள் அல்ல. 10,15 நாட்கள் அல்ல.  15 வருட காலமாக இதைத்தான் இறைத்துாதர் போதித்தார். இவரா மனித நேயத்துக்கு எதிரானவர். இவரா மனித நேயத்தை மதிக்கத் தெரியாதவர். இவரா வாள் முனையில் இஸ்லாத்தை பரப்பியவர்அந்தக் கொடுமைக்காரர்கள் விஷயத்தில் அல்லாஹ் என்ன சொல்லி உள்ளான்

”(நபியே) காபிர்களுக்கு அவகாசம் அளிப்பீராக! சொற்ப அவகாசம் அளிப்பீராக! (திரு குர்ஆன் 86;17) 

இதுதான் 15 ஆண்டு காலம் அல்லாஹ்வுடைய போதனை. குர்ஆன் மூலம் செய்த வழிகாட்டல் இதுதான்.

மீண்டும் மீண்டும் நமது கவனத்தில் பதிய வேண்டும். பத்ருப் போரை பொறுத்த வரை. பத்ரு பத்ரு என்று படையை திரட்டி வந்தது அபுஜஹ்ல் கூட்டம்தான்.  ரசூல்(ஸல்) அவர்கள். மதினாவிலிருந்து கிளம்பும்பொழுது போர் செய்கிற நோக்கத்தோடு கிளம்பவே இல்லை. அபுஸுப்யான் மக்கா போய் சேர்ந்து விட்டார் என்ற தகவல் கிடைத்தது. உடன் ரசூல்(ஸல்) அவர்கள் நாமும் திரும்பி விடுவோம் என்று. மதினா திரும்புவதற்கு தயார் ஆனார்கள். அப்பொழுதுதான் செய்தி கிடைத்தது., பத்ரு என்ற இடத்திற்கு பெரிய படை பட்டாளத்துடன். அபுஜஹ்ல் வந்து விட்டான். முஸ்லிம்களை பயமுறுத்த வேறறுக்க போர் தொடுக்க வந்து  அமர்ந்து விட்டான் என்று.

ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். முஸ்லிம்கள் என்ன குற்றம் செய்தார்கள்? மதத்தின் பெயரால் பிரச்சனைகளை உண்டு பண்ணி. செல் போன் கடைகளை சூறையாடுவதுடன் பிரியாணி அண்டா, குண்டாக்களையும் துாக்கிச் செல்லும் குண்டர்களைப் போல.  யாருடைய சொத்துக்களையாவது சூறையாடினார்களா?   

யாருடைய உரிமையையாவது பரித்தார்களா? யாரையாவது மான பங்கப்படுத்தினார்களா? உள்நாட்டிலே புரட்சி செய்து கலகம் செய்தார்களா? இந்தக் கொள்கையை ஏற்றே ஆக வேண்டும் என்று யாரையாவது நிர்ப்பந்தப்படுத்தினார்களா? யாருடைய உடம்பிலிருந்தாவது ரத்தம் சிந்தினார்களா? உயிர் சேதத்தை உண்டாக்கினார்களா? இல்லை ஒன்றும் இல்லை. ஆனால் 450 கி.மீ தொலைவில் இருக்கின்ற மதீனாவை நோக்கி வந்து விட்டார்கள். சுமார் 300 கி.மீ. (பத்ரு) வரை படை பட்டாளத்தோடு அபுஜஹ்ல் வந்து விட்டான்.

அந்த நேரத்தில்தான் முஸ்லிம்கள் அநியாம் செய்யப்பட்டிருக்கிறார்கள். முஸ்லிம்களெல்லாம் பாதிக்கப்பட்ட மக்களாக இருக்கின்றார்கள் என்ற காரணத்தினால். அப்பொழுது அவர்களை எதிர்த்து போரிடுவதற்கு அல்லாஹ் அனுமதி கொடுத்தான். (அல் குர்ஆன்22;39) 

போர் செய்ய அனுமதி கொடுத்தது  15 வருடங்களுக்குப் பிறகுதான். மூர்க்கத்தனமாக துாதரையும் துாதரைப் பின் பற்றிய மக்களையும் தாக்குவதற்காக படை பட்டாளத்தோடு பத்ரு என்ற இடம் வரை நெருங்கி விட்டான். விட்டால் ஊருக்குள் புகுந்து அடிக்கிற ஒரு நிலை வருகின்றபொழுது. ஒரு நாட்டினுடைய ஒரு மன்னருக்கு, ஜனாதிபதிக்கு தன்னுடைய நாட்டு மக்களைக் காப்பாற்றுவது அவருடைய கடமை. ஆகவே எதிர்த்துப் போர் செய்ய உங்களுக்கு அனுமதி என்று அல்லாஹ் சொன்னான்.

காரணத்தையும் அல்லாஹ்வே சொல்லிக் காட்டி உள்ளான். எப்படிப்பட்ட அநீதி முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டிருக்கிறது? எதற்காக முஸ்லிம்கள் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்? எதற்காக முஸ்லிம்கள் சொந்த ஊரை விட்டு துரத்தப்பட்டார்கள்? என்பதைக் கூறி. எந்த குற்றமும் செய்யாத முஸ்லிம்களுடைய நன்னடத்தையையும் பொறுமையையும் பாராட்டியுள்ள அல்லாஹ். போர் செய்ய அனுமதியும் வழங்கினான்.  (அல் குர்ஆன்22;40) 

அனுமதி வழங்கிய அல்லாஹ். போரிலும் கூட அத்து (வரம்பு) மீறக் கூடாது. வரம்பு (எல்லை) மீறுபவர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான் என்று எச்சரித்துள்ளான். (அல் குர்ஆன் 2:190)  எப்படிப்பட்ட மார்க்கம் இஸ்லாம்.

போருக்கு அனுமதி கொடுக்கும்போது கூட நீங்கள் போர் செய்யுங்கள் என்று சொல்லவில்லை. போருக்கு வருவோருடன் போர் செய்யுங்கள் (2:190)   

உங்களுடன் போருக்கு வராதவரை போர் செய்யாதீர்கள். போருக்கு வந்தால் அவர்களைக் கொள்ளுங்கள் (2:191). 

அதாவது போரில் கூட முஸ்லிம்களே! முதலில் வெட்டுங்கள் என்று சொல்லவில்லை. அவன் உங்களை வெட்ட வந்தால். வெட்ட வந்தவனை வெட்டுங்கள் என்று சொன்ன மார்க்கம்தான் இஸ்லாம்.

அங்கிருந்து புறப்படுகிறான் அபுஜஹ்ல். புறப்படுகிற அவனுடைய ஏற்பாட்டை  பற்றியும் அல்லாஹ் அடையாளம் காட்டினான் (8;47). அவன் அநியாயக்காரன் மக்களுக்கு காண்பிக்கவே போர் செய்ய இதோ அவன் புறப்பட்டு வந்து விட்டான் என்று துாதருக்கு வஹி மூலம் அறிவித்துக் கொடுத்தான்

காபிர்கள் அபுஜஹ்ல் தலைமையில் பத்ர் என்ற இடத்திற்கு வந்து விட்டார்கள். இஸ்லாமிய வரலாற்றில் வெட்டுங்கள் அவர்களை பிடியுங்கள் என்பதெல்லாம். போர்க் காலத்தில் போர்க் களத்தில் இறக்கப்பட்ட வசனங்கள். இவை நீங்கலாக மீதமுள்ள அல்லாஹ்வுடைய வசனங்கள் என்ன சொல்கின்றன? அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டவர்களாக இருந்தாலும் சரி. ஏற்றுக் கொள்ளாத காபிர்களாக இருந்தாலும் சரி. காபிர்கள் உட்பட உலக மக்கள் அனைவரும் அல்லாஹ்வுடைய அடியார்கள்தான். அந்த அடியார்கள் இந்த உலகத்தில் சாந்தி சமாதானத்தோடு. பகைமை உணர்வு இல்லாமல் சகோதரத்துவத்தோடு. வாழ வேண்டும் என்பதுதான் ஏக இறைவனான அல்லாஹ்வின் சட்டம்.

ஆகவேதான் ஏக இறைவனான அல்லாஹ் பகைவர்களை பகைவர்களாகவே நீங்கள் பார்க்காதீர்கள். தீமை செய்த பகைவர்களுக்கு கூட நன்மையைச் செய்யுங்கள். அதன் மூலம் பகைவர்கள் உங்களுக்கு நண்பர்களாக மாறலாம் என்று நல்லுபதேசம் செய்துள்ளான்

நன்மையும், தீமையும் சமமாக ஆகி விடாது. தீமை செய்தவர்களுக்கு தீமை செய்யாதீர்கள். தீமை செய்த மக்களுக்கு நன்மை செய்தால். யாருக்கும் யாருக்கும் இடையே பகைமை இருந்ததோ அந்த பகைமை உணர்வு நீங்கி விடும். உங்களுக்கு மத்தியில் நட்புறவு ஏற்பட்டு விடும். இப்படி சொன்ன மார்க்கம்தான் இஸ்லாம். (அல்குஆன் 41;34)


உலகில் எந்த வேதத்திலும் பார்க்க முடியாத ஒரு வசனம். எந்த வேதத்திலும் இப்படிப்பட்ட அறைகூவலை பார்க்க முடியாத ஒரு வசனம். எந்த வேதத்திலும் இப்படிப்பட்ட எச்சரிக்கையை பார்க்க முடியாத ஒரு வசனம். திரு குர்ஆனில் உள்ளது.

உலகில் எந்த தலைவர்களிடத்திலும் பார்க்க முடியாத ஒரு வழிகாட்டல். எந்த ஒரு ஆட்சியாளர்களும்  செய்யாத ஒரு எச்சரிக்கை. எந்த மன்னர்களிடத்திலும் பார்க்க முடியாத ஒரு நற்குணம். மாமன்னர் முஹம்மதுநபி(ஸல்) மணிமொழியில் உள்ளது. இது பற்றி எழுதுவதாக இருந்தால் எழுதி முடியாது. எழுதிக் கொண்டே இருக்கலாம். இருந்தாலும். இன்னும் இரண்டுடன் இதழுடன் முடிக்க உள்ளோம். 
http://mdfazlulilahi.blogspot.ae/2016/10/blog-post_17.html
அடுத்த தலைப்பு
கேப்டன் பிரபாகரனின் மகனை என்ன செய்தார்கள்?

முந்ததைய தலைப்பு

ஒரே குடும்பத்தைச் சார்ந்த இரண்டு பேர் பலி

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு