சிறிய ஹஜ். பெரிய ஹஜ் சின்ன பத்ரா? பெரிய பத்ரா?
ஹிஜ் ரி 2, ரபீவுல் அவ்வல் (கி.பி. 623 செப்டம்பர்) மாதம் ”பூவாத் “ நடந்தது . இ தற்கு செல்லும் போது மதீனாவில் ஸஅது இப்னு முஆத் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் பிரதிநிதியாக நியமித்தார்கள். ஒவ்வொரு முறையும் உடன் செல்பவர்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டே போனது. எப்படியாவது போர் வராமல் முறியடிக்க வேண்டும் என்பது ரசூல்(ஸல்) அவர்களுடைய எண்ணமாக இருக்கிறது. ஆனால் எல்லா முயற்சிகளும் ஏதோ ஒரு காரணத்தினால் தட்டி கழித்து போய்க் கொண்டே இருக்கிறது. எல்லாம் அல்லாஹ் உடைய நாட்டம்தான். இதற்கு 200 தோழர்களுடன் நபி(ஸல்) அவர்கள் சென்றார்கள். எதிர் தரப்பில் 2500 ஒட்டகங்களும் 100 குதிரைகளும் வந்தன. மிகப் பெரிய வாணிபக் கூட்டம் அது. மக்கத்து குறைஷிகளில் முக்கிய பிரமுகரான உமய்யா இப்னு கலஃப் . இந்த வியாபாரக் கூட்டத்தி ன் தலைவராக இருந்தார். ‘ ரழ்வா ’ என் று சொல்லப்படும் மலைக் கு அ ருகில் தான் ‘ பூவாத் ’ என் று சொல்லக் கூடிய இடம் உள்ளது. இது எல்லாமே ஷாமுக்கும் மக்காவுக்கும் போகின்ற வழியில் உள்ளதுதான். ஷாம்(சிரியா)வுக்கும் மக்காவுக்கும் வருகின்ற போகின்ற வழியில் மதீனா வராது. ரோடுகள் ...