ஷைத்தானிய கொள்கை என்ன செய்யும்?
அல்லாஹ்வின் துாதர் (ஸல்)
பிரச்சனைகள் வேண்டாம். இவர்களோடு சண்டை வேண்டாம்.
நமக்கு என ஒரு இடம் கிடைத்தால் அங்கே இருந்து நமது பிரச்சாரப் பணிகளை
செய்து கொண்டு இருந்து விடுவோம். இப்படித்தான் மதீனாவுக்கு போனார்கள்.
மதீனாவுக்கு போனதும் அவர்கள் விரும்பியது என்ன? அமைதி.
நமக்கு என்று ஒரு இடம் இருக்குமேயானால். அங்கு இருந்து
நாம் வந்த வேலையை நம்மால் இயன்ற அளவு செய்து நிம்மதியாக இருப்போம். இந்த எண்ணத்தைத் தவிர வேறு எதுவும் அவர்களின் எண்ணமாக இருக்கவில்லை.
ஆனாலும் மக்காவாசிகள் விடவில்லை. மக்காவாசிகளுக்கு முஹம்மது நபி(ஸல்) அவர்கள் நிம்மதியாக வாழ்வது பிடிக்கவில்லை.
நம்மால் வெறுக்கப்பட்டவர், நம்மால் தலைமைக்கு தகுதி இல்லாதவர் என்று
நம்மால் ஒதுக்கப்பட்டவா். இப்படிப் போய் ஒரு இடத்தில் சிறந்த ஆட்சியை, சாம்ராஜ்யத்தை
அமைக்கப் போகிறாரே என்ற பொறாமை. மேலும் வளர்ந்து விடுவார் என்ற அச்சம் அவர்களுக்கு
ஏற்பட்டது.
அதனால் அல்லாஹ் உடைய துாதர் முஹம்மது(ஸல்)
அவர்களை மக்காவாசிகள் அந்த மாதிரி நிம்மதியாக வாழ விடவில்லை.
அவர்களுக்குத் தொல்லை கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். தொல்லைகள் கொடுப்பதை தொழிலாக ஆக்கிக் கொண்டார்கள். இதில்
முக்கியமானவர் மதீனாவில் வாழ்ந்த அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு சலுால். மதீனாவாசிகளுக்கு தலைவர் மாதிரி இருந்தவர் அப்துல்லாஹ் இப்னு உபை.
இவரை மக்காவாசிகள் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள். ஏன்? அல்லாஹ்வின் துாதர் முஹம்மது(ஸல்) அவர்கள் மதீனா சென்று அங்கு சுமார் ஓராண்டுகள் மார்க்கத்தை
எடுத்து சொல்லச் சொல்ல. மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.
அங்கு ஏற்கனவே இஸ்லாத்தை ஏற்று இருந்தவர்கள்
இருந்தார்கள். அவர்களுடனும். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட மக்களோடும்,
ஏற்றுக் கொள்ளாத மக்களோடும் அல்லாஹ்வின் துாதர் (ஸல்) அவர்கள் நடந்து கொண்ட பண்பு யூதர்களையும் கவர்ந்து
ஈர்த்தது. அதனால் யூதர்களோடு ஒப்பந்தம் ஏற்பட வைத்தது.
அந்த ஒப்பந்தத்தை முன்பு பார்த்து விட்டோம். இந்த
ஒப்பந்தத்திற்குப் பிறகு அல்லாஹ்வின் துாதர் (ஸல்) அவர்கள்தான் ஆட்சி அதிகாரத்துக்கு உரியவர் என்று மதீனாவில் உள்ள எல்லோராலும் ஏற்றுக்
கொள்ளப்பட்டவராக ஆகி விட்டார்கள். அதனால் அப்துல்லாஹ் இப்னு உபை ஓரங்கட்டப்படுவராக ஆகிறார். இவர் யார்?
யூதர்களுக்கு தலைவராக இருந்தவர். மதீனா மக்களுக்கு தலைவர் மாதிரி இருந்தவர். ஓரங்கட்டப்பட்ட
உடன் எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற மாதிரி மக்காவாசிகள் பயன்படுத்திக் கொள்ள முயற்சி
செய்தார்கள். சீண்ட ஆளில்லாதவர்களுக்கு சீட் கொடுத்து இஸ்லாத்திற்கு
எதிராக பயன்படுத்துவது போல.
அப்துல்லாஹ் இப்னு உபைக்கு மக்காவாசிகள்
கடிதம் ஒன்று எழுதினார்கள். எப்படி? ”நீங்கள் எங்கள் ஊரைச் சார்ந்த ஒருவருக்கு
அங்கே இடம் அளித்து உள்ளீர்கள்”
அவர் இடம் கொடுத்தவர் அல்ல.
அவர் இடம் கொடுக்கவும் இல்லை. இருந்தாலும் ஐஸ்
வைத்து கடிதத்தை அப்படி. ஆரம்பிக்கிறார்கள். நீங்கள் இடம் கொடுத்து இருக்கிறீர்கள். இது இறைவனின்
மீது சத்தியம். நிச்சயமாக நீங்கள் அவரோடு போர் புரிய வேண்டும்.
யூதர்களையும் முஸ்லிம்களையும் மோத விட்டால் மக்காவாசிகளுக்கு எளிதாக
ஆகி விடும். அதற்காகத்தான் இந்த துாண்டல் வார்த்தை.
இந்தியாவில் ஆட்சியை வேறுான்றச் செய்ய
ஆங்கிலேயர்கள் செய்த சதி மாதிரி. ஒரு பகுதியிலே இருக்கிற இரண்டு அணியை மோத விடுவார்கள். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்களே அது போல. ஊர் ஒன்றாக
இருந்தால் ஒரு இடத்தில்தான் கூத்து நடத்த முடியும். ஒரு இடத்தில்தான் கூத்து நடக்கும்.
ஒரு வசூல்தான் கிடைக்கும். ஊர் இரண்டுபட்டால் இங்கு ஒரு நாள் கூத்து நடந்தால் அவன்
இங்கு வரமாட்டான். அங்கு ஒரு நாள் கூத்து நடத்த வேண்டும்.
ஆக கூத்தாடிகளுக்கு இரண்டு கூத்து போடுவதற்கான இடம் கிடைத்து விடும்.
இரண்டு வசூல் நடக்கும் என்பதுதான். அது அந்தக் கால அனுபவ பழமொழி. ஊர் இரண்டுபட்டால் மீடியாக்களுக்கு கொண்டாட்டம் என்பது இந்தக் கால அனுபவ புதுமொழியாக
உள்ளது.
ஆங்கிலேயர்கள் திட்டம் என்ன நம்மை கண்காணிப்பதற்கு
மக்களுக்கு நேரம் இருக்கக் கூடாது. அவர்களுக்குள்ளேயே அடித்துக் கொண்டால்
நம்மை எங்கு கண்டு கொள்ளப் போகிறார்கள். நமது தேவைகளை வந்த நோக்கங்களை
நாம் நிறைவேற்றிக் கொள்ளலாம். எனவே ஆங்கிலேயர்கள் இந்துக்களுக்கும்
முஸ்லிம்களுக்கும் இடையே சண்டை மூட்டி விட்டார்கள். அதனால் இரு
சாராரும் கலவரத்தில் ஈடுபட்டு அடித்துக் கொண்டிருந்தார்கள். அதை
பயன்படுத்தி ஆங்கிலேயர்கள் எங்கே என்ன என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தார்கள். திட்டமிட்டு
செய்ததால் 200 ஆண்டுகள் அசைக்க முடியாத அளவுக்கு ஆங்கிலேயர்கள் ஆட்சியை இந்தியாவில்
வேறுான்றச் செய்திருந்தார்கள்.
அன்று ஆங்கிலேயர்கள் செய்தார்கள்.
இன்று ஆட்சியாளர்களும் அரசியல் கட்சிகளும் செய்து கொண்டிருக்கின்றன. இது போதாது
என்று திரு குர்ஆனில் விளையாடும் யூதர்களின் கைக் கூலிகளோ முஸ்லிம்களுக்குள்ளேயே அடித்துக்
கொண்டால் நல்லது என்ற முடிவில் உள்ளார்கள். எனவே முஸ்லிம்களுக்குள் சண்டை மூட்டி விட்டுக்
கொண்டிருக்கிறார்கள். யூதக்கைக் கூலிகளின் திட்டப்படி செயல்படுபவர்களை அழைத்து
நேரில் சந்தித்து தங்கள் ஆதரவையும் வாழ்த்தையும் கூறி உட்சாகமூட்டிக்
கொண்டிருக்கிறார்கள். இதுதான்
ஷைத்தானிஸம். இதுதான் ஷய்த்தானின் பாலிஸி.
ஷைத்தானியயிஸம் உலகம் முழுவதும் ஒரே மாதிரிதான் இருக்கும். ஷைத்தானிய கொள்கை என்ன
செய்யும்?
”அல்லரீ யுவஸ்விஸு பீ ஸுதுாறின்னாஸ்.
அவன் மனிதர்களின் உள்ளங்களிலே தீய எண்ணங்களை, வீண்
சந்தேகங்களை உண்டாக்குகிறான். மினல் ஜின்னதி வன்னாஸ்” இப்படிப்பட்டவர்கள் ஜின்களிலும் இருக்கிறார்கள். மனிதர்களிலும் இருக்கிறார்கள். பள்ளிப் பாலர்களுக்கும்
பாடமான ஆயத்துக்கள் இவை. எனவே நம்பர் குறிப்பிட தேவை இல்லை.
இந்த வசனங்களுக்கு பக்கம் பக்கமாக தப்ஸீர் எனும் விளக்கம் எழுதுவார்கள்.
மணிக்கணக்கில் விளக்கஉரை ஆற்றுவார்கள். அப்படிப்பட்ட
அவர்களையே ஷய்த்தான் தனது பிரிவினை பணிகளுக்கு ஏஜெண்டாக தேர்வு செய்வான். அமைப்புகளையும் ஜமாஅத்துகளையும் பிளவுபடுத்தும் வேலைகளுக்கு பயன்படுத்துவான்.
ஏனெனில் அப்படிப்பட்டவர்களை பயன்படுத்தினால்தான் ஷய்த்தானின் திட்டங்கள்
எளிதாக நிறைவேறும்.
ஒரு இயக்கத்தில் ஒரே அணியாக இருக்கக் கூடியவர்களின்
உள்ளங்களிலே வஸ்வாஸை ஏற்படுத்தி விட்டால். அவர்கள் அடித்துக் கொண்டு கிடப்பார்கள்.
நம்ம வேலை எளிதாக முடிந்து விடும். இதுதான் ஷய்தான் பிடித்தவர்கள் செய்யும்
வேலை.
அது மாதிரிதான் அப்துல்லாஹ் இப்னு உபையை வைத்துக்
கொண்டு காய் நகர்த்த பார்க்கிறார்கள் மக்காவாசிகள். நீங்கள் இடம் கொடுத்து இருக்கிறீர்கள்.
இது இறைவனின் மீது சத்தியம். நிச்சயமாக நீங்கள்
அவரோடு போர் புரிய வேண்டும். அல்லது அவரை வெளியாக்கி விட வேண்டும்.
என்ன சொல்கிறார்கள்?
ஒன்று முஹம்மதை எதிர்த்து போர் செய்ய வேண்டும். அல்லது ஊரை
விட்டு வெளியேற்றி விடுங்கள் என்கிறார்கள். ஏனெனில் அங்கிருந்து
வெளியாக்கினால் வேறு போக்கிடம் கிடையாது. திரும்பவும் மக்காவுக்குத்தான்
வர வேண்டும். எனவே அங்கே வந்தால் நாம் பார்த்துக் கொள்வோம்.
என்பது மக்காவாசிகள் நினைப்பு. எனவே முதலில் புகழ்ந்து
ஐஸ் வைத்து எழுதியவர்கள் தொடர்ந்து என்ன எழுதி உள்ளார்கள்.
”இவ்வாறு
நீங்கள் செய்யவில்லை என்றால். நாங்களெல்லாம் ஒன்று சேர்ந்து உங்கள்
ஊருக்கு படை எடுத்து வருவோம். வந்து உங்கள் வீரர்களை கொன்று விடுவோம்.
உங்கள் பெண்களின் கற்புகளை சூறையாடுவோம்” என்று
மிரட்டி எழுதி உள்ளார்கள். இந்த கடித விபரம் ஸுனன் அபுதாவூதில்
இடம் பெற்றுள்ளது.
குறைஷிகளின் கடிதம் வந்த பிறகு அப்துல்லாஹ்
இப்னு உபைக்கு வேறு வழி தெரியவில்லை. ஏற்கனவே தனக்கு கிடைக்க இருந்த ஆட்சி
பொறுப்பு போனதால் உள்ள எதிர்ப்பு உணர்வுகள் மனதில் கொதித்துக் கொண்டு இருந்தது.
இருந்தாலும் செயல்படுத்த அவருடன் ஆட்கள் இல்லை. எந்த ஒரு திட்டங்களை தீட்டினாலும்
உடன் நான்கு பேர் இருந்தால்தான் செய்ய முடியும். தனி நபர் என்றால் யாராலும்
ஒன்றும் செய்ய முடியாது. எனவே கூட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேகரித்தார்.
சேகரித்த கூட்டத்தைக் கொண்டு எதிர்க்க
ஆயத்தமானார்கள். அவர்கள் எதிர்த்து போர் செய்ய தயாராகி விட்ட செய்தி உண்மையான மக்கள்
தலைவர் மாநபி(ஸல்) அவர்களை வந்தடைந்து விடுகிறது. அல்லாஹ்வின் துாதர்(ஸல்) அவர்கள்
என்ன செய்தார்கள்?
தொடரும் இன்ஷாஅல்லாஹ்
நன்றி ; மக்கள் உரிமை
மே 6-12,2016
அடுத்த தலைப்பு
Comments