இஸ்லாமிய பெயருடைய எம்.எல்.ஏ.க்கள் அல்லாஹ்வின் பெயரால் பதவி ஏற்காதது ஏன்?


15ஆவது சட்ட மன்றம் கூடியது. .தி.மு..வினர் அனைவரும் ஆத்திகர்கள். கடவுள் உண்டு என்ற கொள்கை உடையவர்கள். தி.மு..வினர் அனைவரும் நாத்திகர்கள். கடவுள் இல்லை என்ற கொள்கை உடையவர்கள். இதை அவர்களது பதவி ஏற்பு தெளிவுபடுத்தியது.

.தி.மு..வைச் சார்ந்த எம்.எல்..க்கள் அனைவரும் கடவுளின் பெயரால் என்றும், தி.மு..வைச் சார்ந்த எம்.எல்..க்கள் அனைவரும் உளமாற என்றும் பதவி ஏற்றார்கள். இது இந்த வாரம் தினப் பத்திரிக்கைகளில் வந்த செய்தி.

அல்லாஹ்வை மறந்த தி.மு. முஸ்லிம்கள் என்ற தலைப்பில் 1996 ஆம் ஆண்டு ஒரு வார பத்திரிக்கையில் செய்தி வந்தது. அது மேலப்பாளையத்து கவுன்சிலர்களை குறி வைத்து எழுதப்பட்ட விமர்சனம் ஆகும். அதில், சங்கரலிங்கத்துக்கு இருக்கும் சமய உணர்வு கூட இந்த முஸ்லிம்களுக்கு இல்லை என்றும் எழுதி இருந்தார்கள்.

அந்த வார இதழ் ஆசிரியர் அதில் மார்க்கத்தை எழுத மாட்டேன். இது மார்க்க பத்திரிக்கை அல்ல என்று பிரகடனப்படுத்தி இருந்த காலம் அது. மார்க்க ரீதியாக எதுவும் எழுதக் கூடாது என்று யாரும் அவரது கைகளை கட்டவில்லை. அவரது சுய நலத்திற்காக அந்த முடிவை அவர் அப்பொழுது எடுத்துக் கொண்டார்இப்பொழுது அவரது சுய லாபத்திற்காக அதை மார்க்க பத்திரிக்கையாக பயன்படுத்தி வருகிறார்.

அந்த வார இதழ் மார்க்க பத்திரிக்கை அல்ல என்று சொன்ன அந்த காலத்தில்  சமய உணர்வு ரீதியாகவே விமர்சித்து எழுதி இருந்தார். இதை மற்ற கட்சியினர் மார்க்க “பத்வா“ வாக திசை திருப்பினார்கள். அப்படி திசை திருப்பி கேட்பதுதான் அந்த ஆசியரியருக்கு அன்று பாதகமானதாக இருந்தது. எனவே உளமாற என்று கூறுவதற்கு மார்க்கத்தில் தடை உள்ளதா? என்றும் கேட்டார்கள். அந்த ஆசியர் அதைக் கண்டு கொள்ளவே இல்லை.

அதை சமுதாய உணர்வை துாண்டும் பத்திரிக்கையாக மட்டுமே பயன்படுத்தினார். எனவே மார்க்க ரீதியாகவும் தவறு என்பதை அதன் ஆசிரியர் அன்று எழுத தயாராக இல்லை. பதவி பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் ஆகிய இரண்டுமே அரசுக்கு சத்தியம் செய்து கொடுக்கும் வாக்கு மூலம் ஆகும். நாம் சத்தியம் செய்கிறோம் என்பதே பதவி ஏற்கும் பலருக்கும் தெரியாது என்றே எண்ணத் தோன்றுகின்றது.

அதனால்தான் பதவி ஏற்றதும் சத்தியத்திற்கு முரணாக நடக்கிறார்களோ என்னவோ தெரியவில்லை. இது முஸ்லிம் பெயருடைய உறுப்பினர்களுக்கும் தெரியாது. அதனால்தான் அவர்களும் எல்லோரையும் போல் நடந்து கொள்கிறார்கள்.

சத்தியம் அல்லாஹ்வின் பெயரால் மட்டுமே செய்ய வேண்டும் என்று உணர்ந்து இருக்க வேண்டும். அல்லது உணர்த்த வேண்டிய இஸ்லாமிய அமைப்புகள் உணர்த்தி இருக்க வேண்டும். சத்தியம் செய்து பதவியை ஏற்றுக் கொள்ளுதலையே பதவி பிரமாணம் என்று சொல்லப்படுகிறது. இதையும் உணர்த்தி இருக்க வேண்டும். உணர்த்தி இருந்தால் இந்த தவறு பரவாது ஓரளவு குறைந்து இருக்கும்.

இஸ்லாமிய அமைப்புகள் வலுப் பெற்று இருக்கின்றன. இஸ்லாம் வலுப் பெறவில்லை என்பதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. காலத்துக்கு ஏற்ற தலைப்புகளில் இஸ்லாமிய அமைப்புகள் பிரச்சாரக் கூட்டம் போடுகிறார்கள். முஸ்லிம்கள் அல்லாஹ்வின் பெயரால்தான் பதவி ஏற்க வேண்டும் என்பதை உணர்த்தி ஒருவரும் கூட்டம் போடவே இல்லை.

அல்லாஹ்வை மறந்த தி.மு. முஸ்லிம்கள் என்று 1996இல் எழுதியவர்கள். அதன் பிறகு ஓட்டுப் பிச்சைக் கேட்டு தெருத் தெருவாக அலைந்துதான் இருக்கிறார்கள். அவர்கள் கொள்கைவாதியாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள்

நமக்குள் தொகுதி உடன்பாடு என்பது கிடையாது. நீங்கள் முஸ்லிம் பெயருடையவர். எனவே அல்லாஹ்வின் பெயரால்தான் பதவி பிரமாணம் செய்ய வேண்டும் என்று கூறி ஒப்பந்தம் செய்து இருப்பார்கள். குறைந்த பட்சமாக உபதேசமாவது செய்து இருப்பார்கள் என்ன செய்தார்கள்?

எங்கள் தொண்டர்கள் உங்களுக்கு ஓட்டுப் பிச்சைக் கேட்டு தெருத் தெருவாக திரிவார்கள். நபர் ஒன்றுக்கு 200 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் வரை தகுதிக்கு தகுந்த பிச்சை போட வேண்டும். அதற்குத் தேவையான லட்சங்களை தந்து விட வேண்டும். லட்சியத்திற்காக ஓட்டுப் பிச்சைக் கேட்டு தெருத் தெருவாக அலைவதாக நாங்கள் வெளியில் சொல்லிக் கொள்வோம்.

நோட்டீஸ்களை நாங்கள் சொல்லும் ஆளிடம்தான் அச்சிட்டு தர வேண்டும். இந்த ஒப்பந்தம்தான் செய்து இருந்தார்கள். அதுதானே அவர்கள் லட்சியம்.

இதனால்தான் முஸ்லிம் பெயருடைய எம்.எல்.ஏ.க்கள் அல்லாஹ்வின் பெயரால் பதவி ஏற்பது இல்லை. இவர்களிடம் லட்சங்களைப் பெற்ற ரகசிய கூலிகளோ இவர்களை முஸ்லிம் பெயர் தாங்கிகள் என்பார்கள். இதுதான் அவர்களது துாய வடிவம்.

அல்லாஹ்வையும் ரசூலையும் விட அரசியல் கட்சி தலைவர்கள் மீதுதான் அளவற்ற பிரியம் உடையவர்களாக அடிமட்டத் தொண்டர்கள் உள்ளார்கள். எனவே இஸ்லாமிய பெயருடைய எம்.எல்..க்கள் என்ன செய்கிறார்கள். கஃபாவுக்கு இணையாக கட்சித் தலைவர்களின் வீட்டை ஒப்பீடு செய்து பேட்டி அளித்து குளிர்விக்கிறார்கள்.

தி.மு..வின் தலைமை அரங்கத்தில் தங்களை நாத்திகவாதிகளாக காட்டிக் கொள்கிறார்கள். அந்தரங்கத்தில் ஆத்திகர்கள்தான். ஒரு கோயில் விடாமல் செல்கிறார்கள் என்பது தனி விஷயம். அதனால் உளமாற என்று பதவி ஏற்கிறார்கள். அதைப் பின்பற்றி முஸ்லிம் பெயருடைய எம்.எல்..க்கள் பதவி ஏற்றுள்ளார்கள்.

பல கடவுள் கொள்கை உடையது அ.தி.மு.. தலைமை. பல கடவுள்களில் எந்தக் கடவுள் பெயரைச் சொல்வது? எனவே கடவுள் அறிய என்றார்கள். எம்.எல்..க்கள் முஸ்லிம்களாக இருந்தால் ஏகன் அல்லாஹ்வின் பெயரை சொல்ல என்ன தயக்கம்?


பர்தா அணிந்து சட்டசபைக்குள் செல்லும் முதல் பெண்மணி நிலோபர் கபில் என பலர் வாழ்த்து சொல்லி உள்ளார்கள்

தள்ளு வண்டியில் பழங்கள் வியாபாரம் செய்து கொண்டிருந்த வயதான பிற மத பெண்ணிடமிருந்து பழக் கூடைகளை பிடிங்கி ரோட்டில் கொட்டித் தள்ளிய நிலோபர் கபில் செயலைப் பார்த்த கண்கள் அழுகின்றன. இப்படியும் ஒரு முஸ்லிம் பெண்ணா? என்று.

15ஆவது சட்ட மன்றத்தில் யாராவது அல்லாஹ்வின் பெயரால் பதவி ஏற்று இருந்தால். வீடியோ கிளிப் தாருங்கள் வெளியிட ஆசையாக உள்ளது.









Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு