சஅது(ரலி) அவர்களிடம் இருந்த பெரிய ஆயுதம் எது தெரியுமா?

சஅது இப்னு முஆத்(ரலி) அவர்களைப் பார்த்து கோபக் குரலுடன் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி மிரட்டினான் அபுஜஹ்ல். சஅது இப்னு முஆத்(ரலி) பயந்து விடுவார் என்று நினைத்துக் கொண்டு மிரட்டினான்.


சஅது இப்னு முஆத்(ரலி) எப்படிப்பட்டவர். உடம்பு முழுவதும் நுாற்றுக்கும் மேற்பட்ட வெட்டு, குத்துக்களை வாங்கிக் கொண்டு உயிருடன் வாழ்ந்தவர். அந்த அளவு மனத் திடம் உடையவர். எண்ணி முடியாத காயங்களை உடலில் கொண்டிருந்த ஸஹாபி. அபுஜஹ்லுக்கு பயந்து விடுவாரா? அவர் அபுஜஹ்லை விட கடுமையான குரலில். 


நீ அறிந்துகொள்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீ தவாஃப் செய்வதிலிருந்து என்னைத் தடுத்தால், இதை விட உமக்கு மிகக் கடினமாக இருக்கும் ஒன்றை நான் தடுத்து நிறுத்துவேன். நீ வியாபாரத்திற்காக மதீனாவின் வழியை பயன்படுத்த விடமாட்டேன்என்று எச்சரித்தார். ( புகாரி)


நீ என்ன என்னை மிரட்டுவது? நான் உம்ரா என்ற ஒரு விஷயத்திற்காகத்தான் இங்கு வந்தேன். இல்லை எனில் வந்திருக்க மாட்டேன். இந்த பக்கத்தை நோக்கி என்னுடைய வாழ்வாதாரம் அமையவில்லை. மக்காவசியாகிய உனக்கு இந்த பகுதியில் வாழ்வாதாரம் அமையவில்லை. நீ வியாபாரத்துக்காக ஷாமுக்கு போக வேண்டும். என் ஊரை கடந்துதான் நீ போக வேண்டும். அப்படி கடந்து போவதை நீ கனவில் கூட நினைக்க முடியாத  அளவுக்கு நான் பண்ணி விடுவேன். இந்த பொருள்பட பதிலுக்கு மிரட்டினார். உடன் அபுஜஹ்ல் அடங்கிப் போய் விட்டான்.


சஅது இப்னு முஆத்(ரலி) அவர்கள் தனி ஒரு நபராக இருந்தாலும் அவர்களுடைய அந்த வீரம். அந்த சூழலை உணர்ந்து இந்த சம்பவத்தை படித்தால் நமது உடல் புல்லரிக்கும். தனி ஒரு நபர். எதிரில் இருப்பது அபுஜஹ்ல். சஅது இருப்பது அபுஜஹ்லின் ஊரில். அவனது கோட்டைக்குள். அபுஜஹ்லுக்கு எதிராக இருப்பவர் கூட உதவி செய்வார் என்று சொல்ல முடியாது. அந்த மாதிரியான கால கட்டத்தில் தனி ஒரு நபராக உம்ரா செய்து விட்டு வருகின்றார். சிங்கம் என்ற மிருகத்தை அதன் குகைக்குள் சந்தித்த மாதிரி.


சிங்கத்தை அதன் குகைக்குள் சந்தித்த மாதிரி என்றுதான் சொல்வார்கள். அதை அப்படியே பயன்படுத்தினால் அபுஜஹ்ல் என்ற அசிங்கத்தை சிங்கம் என புகழ்ந்த மாதிரி ஆகி விடும். அதனால்தான் சிங்கம் என்ற மிருகத்தை என வாசகம் அமைத்துள்ளோம். இந்த மாதிரி இடங்களில் வாசகங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். இல்லை என்றால் நவீன  அபுஜஹ்ல் அதைப் பிடித்து தொங்கி விடுவான்.


அப்படியானால் சஅது அவர்களது தைரியத்தை எப்படி பாராட்டுவது? இந்த தைரியம்தான் பத்ரிலும் உஹதிலும் அல்லாஹ்வின் துாதருக்கு துணை புரியச் செய்தது. ஏனெனில் இயல்பாகவே மதீனாவாசிகளுக்கு போரிடும் குணம் கிடையாது. அன்சாரிகள் எப்படிப்பட்டவர்கள்? மனித இயல்புப்படி சூழல்படி குடும்பம் குடும்பமாக சண்டை போட்டுக் கொள்வார்கள். போர் செய்து பழக்கம் உடையவர்கள் அல்ல.


போருக்குப் போய் ஓரளவு பயிற்சி உடையவர்கள் மக்காவாசிகள்தான். மதீனாவாசிகள் விவசாயத்தை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தவர்கள். ரொம்பவும் சாதரணமான வாழ்க்கை வாழக் கூடிய மக்களாகத்தான் இருந்தார்கள். அவர்கள் உள்ளத்திலே ஈமான் புகுந்த பிறகு வீரம் மேலோங்கி விட்டது. பத்ரில் உயிர் நீத்த ஷஹீதுகளில் அன்சாரிகளின் எண்ணிக்கைதான் அதிகம். இந்த அளவுக்கு வீரம் மேலோங்கி நின்ற அன்சாரிகளின் தலைவர் சஅது இப்னு முஆத்(ரலி). அவர்களுடைய வீரத்தை வெளிப்படுத்தக் கூடிய இந்த நிகழ்ச்சியில் நம்மை பல் வேறு படிப்பினைகள் பெறச் செய்கின்றது.


தனிப்பட்ட ஒரு நபர். அல்லாஹ் உடைய கடமையை நிறைவேற்றுவதற்காக நாம் போகிறோம் என்று சொன்னால். எவ்வளவு எதிர்ப்புகள் இருந்தாலும் அல்லாஹ் நம்மோடு இருப்பான் என்ற ஈமான். இன்னல்லாஹ மஅஸ்ஸாபிரீன். அன்னல்லாஹ மஅல் முத்தகீன் என்று அல்லாஹ் திருமறையில் சொல்லிக் காட்டி உள்ளதை அறிவோம்

இறையச்சம், உள்ளச்சம் உடையவர்களுடன் அல்லாஹ் இருக்கிறான். பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான். இப்படி தாங்கள் படித்தறிந்த ஆயத்துக்கள் மீது வைத்து இருந்த அசைக்க முடியாத உறுதியான நம்பிக்கை. அவர்களால் அபுஜஹ்ல் போன்றவர்களை எதிர் கொள்ள முடிந்தது


அபுஜஹ்ல் குரலைக் கேட்டாலே எல்லாரும் பயந்து விடுவார்கள். அந்த மாதிரி கடுமையான ஆள் அபுஜஹ்ல். அவனை எதிர்த்து பேசுகின்ற அளவுக்கு இவருக்கு தைரியம் எப்படி வந்தது, எங்கிருந்து வந்தது? அவர்கள் கொண்டிருந்த ஈமானில் இருந்துதான் அந்த தைரியம் வந்தது. இவரிடம் இருந்த பெரிய ஆயுதம் எது? உம்ராவுக்கு போகும்போது ஆயுதத்தையா கொண்டு போவார்கள்? அல்லது படை பலத்துடன் போனாரா? ஒன்றும் கிடையாது. 

தனி நபர்தான். அபுஜஹ்ல் தனி நபராகத்தான் வந்தான் என்றால் அது அவனது ஏரியா. சஅது(ரலி) அவர்களிடம் இருந்த பெரிய ஆயுதம் எது தெரியுமா? அது அவரது ஈமான்தான். அவருடைய வீரத்துக்கு காரணம் அவரது ஈமான்.

குறைஷிகளோ மிகப் பெரிய தீமை ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற உறுதியில்  இருந்தனர். அதாவது, அனைத்து முஸ்லிம்களையும் குறிப்பாக நபி (ஸல்) அவர்களையும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்று தீவிரமாக ஆலோசித்தனர். இது வெறும் கற்பனையோ அல்லது யூகமோ அல்ல! 

குறைஷிகளின் இந்த வஞ்சக சூழ்ச்சியினால் நபி (ஸல்) அவர்கள் இரவில் தூக்கமில்லாமல் இருந்தார்கள். ஸஹாபாக்களின் பாதுகாப்பில் இரவைக் கழித்தார்கள். குறைஷிகளுடைய மிரட்டல்கள் எந்த அளவுக்கு முஸ்லிம்களை பாதித்து இருந்தது? என்பது பற்றி அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.  புகாரியில் இடம் பெற்றுள்ளது.


நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் இருக்கும்பொழுது ஓர் இரவில் எனது தோழர்களில் யாராவது என்னுடைய பாதுகாப்புக்கு இருந்தால் நன்றாக இருக்குமே என்றார்கள். தங்கள் வாழ்நாளில் நபி(ஸல்) அவர்கள் இந்த மாதிரி சொன்னதே இல்லை. அந்த அளவுக்கு கொன்று விடுவார்களோ என்ற அச்சம் மேலோங்கியது

அதனால் ரசூல்(ஸல்) அவர்களும் அன்னை ஆயிஷா(ரலி) அவர்களும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். அப்பொழுது ஆயுதத்தின் சப்தத்தை கேட்கிறார்கள். ஆயுதத்துடன் ஒரு ஆள் வருவதை உணர்கிறார்கள். உடனே ரசூல்(ஸல்) அவர்கள் யாரது? என்று கேட்கிறார்கள். வந்தவர் நான்தான் ஸஅது இப்னு அபீவக்காஸ்(ரலி) என்றார். இவர் ஒரு நபித் தோழர்.

நீங்கள் ஏன் வந்தீர்கள் என்று அல்லாஹ்வின் துாதர் கேட்டார்கள். அதற்கவர் உங்களுக்கு ஆபத்து ஏதும் நிகழ்ந்து விடுமோ என்ற எண்ணம் என் உள்ளத்தில் தோன்றியது. அந்த அச்சத்தால் உங்களது பாதுகாப்பு கருதி வந்திருக்கிறேன்என்றார். நபி(ஸல்) அவர்களின் எண்ணமும் ஸஹாபியின் எண்ணமும் ஒன்று போல் இருக்கிறது. அந்த அளவுக்கு குறைஷிகளின் மிரட்டல்கள் இருந்தது. ஊரினுள் மாறு வேஷத்தில் வந்து எப்படியாவது இஸ்லாமிய பிரச்சாரப் பணிகளை முடக்கி விட வேண்டும் என்று குறைஷிகள் செய்த முயற்சிகள் பாதுகாப்புக்கு வடிவமைத்தது.


நபி(ஸல்) அவர்களுடைய அந்த அச்சமும் எண்ணமும் ஸஹாபாக்களுடைய எண்ணமும் ஒன்றுபோல் இருந்துள்ளது. அந்த நேரத்தில் ரசூல்(ஸல்) அவர்கள் ஸஅது இப்னு அபீவக்காஸ்(ரலி) அவர்களுக்காக பிரார்த்தனை செய்தார்கள். ரசூல்(ஸல்) அவர்கள் நினைக்கும் எந்த ஒரு காரியத்தையும் ஸஹாபாக்கள் செய்தால். நன்றி உள்ளவர்களுக்கு முன் மாதிரியான நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடத்தில் அவர்களுக்காக உடனே பிரார்த்தனை செய்வார்கள்.

இவருடைய காரியத்தை எளிமையாக ஆக்கி வை யா அல்லாஹ் என்றும். நல்லவர்களில் இவரை சேர்த்து வைப்பாயாக என்றும் அல்லாஹ்வின் துாதர் பிறருக்காக துஆச் செய்துள்ளதை ஹதீஸ்களில் காண்கிறோம். நன்றியுள்ளவர்களின் நல்ல செயல் இதுதான். இன்று நன்றிக்குரிய செயலாக எது இருக்கிறது தேங்ஸ். இதனால் என்ன பயன்? தேங்ஸ் என்பதன் மூலம் யாருடைய வழிமுறையை பின்பற்றுகிறோம்?


நன்றி ; மக்கள் உரிமை

தொடரும் இன்ஷாஅல்லாஹ் http://mdfazlulilahi.blogspot.in/2016/05/blog-post_22.html 


முந்தைய தலைப்பு 

வரட்டுக் கவுரவம் பார்ப்பது நியாயமா?

அடுத்த தலைப்பு

நபி(ஸல்) கோட்டை கொத்தளங்களில் ஒளிந்து கொண்டிருந்தார்களா?


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு