ஹராமான காரியத்தைச் செய்த செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன்? காதிர் கனி எம் எஸ் சீ

    அல்லாஹ்வின் திருப்பெயரால்...........
 அன்புள்ள சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்........
   சமீப காலமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைச் சார்ந்தவர்கள் தங்களின் கொள்கைகளை மறந்து மாநிலத்திலிருந்து சாதாரண சின்ன கிளைகள் வரையிலும் தற்போது ரவுடிகளாக மாறிவிட்டது கண்டு இவர்கள் எங்கே போய்க்கொண்டிருக்கிறார்கள் மார்க்கத்தைவிட்டு தூரமாகிவிட்டார்களா? என்று எண்ணத் தோன்றுகின்றது. 

இயக்கங்களிலேயே தூய்மையான இயக்கம் என்று வேறுசொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.சகோதரர்களே! அவர்களிடமே நாம் சில கேள்விகளைக் கேட்போம் அவர்கள் பதில் சொல்லட்டும்.
       அன்பார்ந்த த த ஜ கொள்கை சகோதரர்களே!உங்களின் மீது இறைச் சாந்தி உண்டாவதாக! நான் கேட்கும் கேள்விகளுக்கு கடும் வார்த்தைகளால் திட்டாமல் பதில் தாருங்கள்.ஏனென்றால் நாங்கள் தூய்மையான மார்க்கத்தை எடுத்துச் சொல்லுகிறோம் என்று சொல்லும் நீங்கள் உங்களின் நடைமுறையைப் பார்த்தால் மார்க்கத்தை விட்டுவிட்டு ரவுடிகளாக மாறிவிட்டீர்களோ என்று தோன்றுகிறது. அதன் விபரத்தைத் தருகிறேன்.
                 சென்னையில்நடந்தது என்ன? ...................
     ஷம்சுத்தீன் காஸிமி என்பவர் இடஒதுக்கீடுக்குப் போகக்கூடாது?ஆண்களும் பெண்களும் ஒன்றோடு ஒன்றாக உரசிச் செல்லும் நிலை ஏற்படுகிறது,மஹ்ரம் இல்லாமல் ஒரு பெண் சென்றால் அவள் விபச்சாரியாகிவிட்டாள் என்று நபி(ஸல்)அவர்கள் சொன்னதாக ஒரு ஹதீஸை சொன்னார் இன்னும் சில வார்த்தைகளையும் கூறினார்.

அவர் சொன்ன ஹதீஸ் சரியானதோ அல்லது பலவீனமானதோ ஏதோ ஹதீஸை சொன்னார்.

அவர் பேசிய பேச்சு உங்களுக்கு வெறியைத் தூண்டியது.கருத்துக்கு கருத்தால் பதில்சொல்லாமல் அவர் ஊரில் இல்லாதபோது அவர் வீட்டிலுள்ள பெண்களிடம் அசிங்கமான வார்த்தைகளைக் கொண்டு அர்ச்சனை செய்து (காபிர்கள் வழியில்) விளக்குமாற்றால் அடித்து அதற்குமேல் மாட்டுச்சாணத்தை எடுத்து வீசியிருக்கிறீர்கள்.


பத்துமாத குழந்தையை கையில் வைத்துக்கொண்டிருக்கும்  அந்தப் பெண்மீதும் அந்த குழந்தையின் மீதும் சாணத்தால் வீசி துடப்பத்தால் அடிப்பது எந்த குர்ஆன்,ஹதீஸில் வந்துள்ளது? 

எய்தவர் இருக்க அம்பை நோவானேன் என்ற பழமொழிக்கேற்ப இருக்கிறது உங்களின் செயல்பாடு .இஸ்லாத்தை அழிக்கவந்த எதிரிகளின் பெண்கள் குழந்தையைக்கூட நோவினை செய்யாதீர்கள் என்று நபி அவர்கள் சொல்லியிருக்க ஒரு சாதாரண விசயத்திற்கு நாங்கள் நபியைப் பின்பற்றக்கூடியவர்கள் என்று சொல்லும் நீங்கள் இந்த நபி மொழியை புறக்கணித்து இவ்வளவு மோசமான செயல்களில் இறங்கியிருப்பது ரவுடியிசமா?மார்க்கமா? சொல்லுங்கள் சகோதரர்களே!

     ஷம்சுத்தீன் காஸிமி பேசியதற்கு பதிலாக,பதிலாக என்று சொல்வதை விட அதற்குமேலாக மாநில நிர்வாகி செய்யது இப்ராஹீம் அவர்கள் பேசிய பேச்சு எப்படி சமமாகும்? ஷம்சுத்தீன் காஸிமியை விட்டுவிட்டு அவரின் மனைவியை தரக்குறைவாக விமர்சனம் செய்தது எந்த விதத்தில் நியாயம்? 

அந்தப் பெண்ணை தவறாக சொன்னதற்கு( எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதைநிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள் (24:4) நான்கு சாட்சிகள் கொண்டுவந்தீர்களா? குர்ஆன்,ஹதீஸைப் பின்பற்றுகிறவர்கள் இதைத்தான் செய்திருக்கவேண்டும்.எந்த விதத்தில் இது நியாயம்?பதில் சொல்லுங்கள் சகோதரர்களே!

              கடையநல்லூரில் நடந்தது என்ன? .........

      கடையநல்லூரில் மஸ்ஜித் முபாரக் நிர்வாகியை தரக்குறைவாக பேஸ் புக்கில் எழுதியதினால் அதைக் கேட்கச் சென்ற நாற்பதுக்கும் மேற்பட்ட வாலிபர்களுடன் மோதல் ஏற்பட்டு அவர்கள் உங்களையும் நீங்கள் அவர்களையும் தாக்கிக்கொண்டீர்கள்.இது நடந்தது ஜனவரி 28 க்கு சில நாட்களுக்கு முன்னால் பெரிய இயக்கம் என்று சொல்லக்கூடிய நீங்கள் அடி வாங்கிய பிறகு அவர்களிடம் மன்னிப்புக்கேட்டீர்கள் காரணம் என்ன இப்போது பிரச்சனையானால் இடஒதுக்கீடுக்கு வரமாட்டார்கள் பின்பு பார்த்துக்கொள்ளலாம் என்ற நோக்கம்தானே?

      சிறை நிரப்பு போராட்டம் நடக்கும் அன்றிரவு நீங்கள் ஒட்டிய வால்போஸ்டர்களை கிழித்தார்கள் என்று சில இளஞ்சர்களை அடித்தீர்கள் அதனால் பிரச்சனை வந்து சமாதானமாகிவிட்டீர்கள்.

பின்பு போராட்டம் அன்று காலையில் அந்த இளஞ்சர்களை அழைத்தீர்கள் அவர்கள் வரவில்லை இது அவர்களின் சுதந்திரம்.போராட்டத்தை முடித்துவிட்டு நேராக அந்த இளைஞ் சர்களிடம் தகராறு செய்து ஏன் போராட்டத்திற்கு வரவில்லை என்று அவர்களை கடுமையாக தாக்கினீர்கள்.ரத்தக் காயங்களோடு முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகிகளிடம் சென்று முறையிட அவர்கள் மருத்துவ மனையில் சேர்த்து போலீஸ் ஸ்டேசனில் புகாரும் கொடுக்கப்பட்டது. இது ரவுடியிசமா? இல்லையா? 

இவ்வளவும் செய்த நீங்கள் அந்த கேஸை திரும்ப பெறுவதற்கு இவ்வளவு பெரிய இயக்கம் என்று சொல்லும் நீங்கள் பட்டபாடு என்ன தெரியுமா?அடிபட்டவர்களின் வீட்டிற்குப் போய் காலில்விழாக்  குறையாக மன்றாடுனீர்கள் எந்த அளவுக்கு என்றால் ஒரு வீட்டில் என் பையன் என் பேச்சைக் கேட்க மறுக்கிறான் நானென்ன செய்ய என்று சொல்ல நீங்கள் என்ன சொன்னீர்கள் தெரியுமா? நீ கேஸை திரும்ப பெற வில்லைஎன்றால் தற்கொலை செய்து விடுவோம் என்று சொல்லுங்கள் என்று மார்க்கத்திற்குப் புறம்பான விசயங்களை உபதேசம் செய்துள்ளீர்கள் .

அதுமட்டுமா?எதற்காக அடித்தோம் என்றால் தெருவில் வரும் பெண்களை கேலி செய்கிறார்கள் அதற்காகத்தான் அடித்தோம் என்று அப்பட்டமாக வரம்பு மீறி மகாபெரிய பொய்யைச் சொன்னீர்கள்.இதுதான் நீங்கள் கொண்டுள்ள தவ்ஹீதா? .அல்லாஹ் தான் உங்களைக் காப்பாற்ற வேண்டும்.எதிலும் ஒத்துவரவில்லை என்று தெரிந்ததும் நீங்கள் எங்கு சென்றீர்கள் தெரியுமா இளம்பிறை தரைதட்டிய கப்பல் கரைசேராது என்று சொன்னீர்களே அந்தமுஸ்லிம் லீக் சங்கத்திற்குச் சென்று மன்னிப்புக்கேட்டு அவர்களிடமும் இந்த கேஸை திரும்பப்பெருங்கள் என்று மன்றாடினீர்கள்.

(யாரையும் சாதாரணமாக எடை போடாதீர்கள்) உதாரணத்திற்கு காரியம் கழிய வேண்டுமென்றால் கழுதையின் காலைக்கூட பிடிப்பார்கள் என்ற. உதாரணத்திற்கேற்ப நடந்துகொண்டீர்கள்..இந்த நிலை உங்களுக்குத் தேவைதானா? காரணம் என்ன ரவுடியிசம்தான் வேறென்ன சொல்லுங்கள் சகோதரர்களே?
                  நெல்லை செங்கோட்டையில் நடந்தது என்ன?.........
    செங்கோட்டையில் சுலைமான் நபி பள்ளிவாசல்(சுன்னத் ஜமாஅத்தைச் சார்ந்தது) வக்பு செய்யப்பட்டது அங்கு வக்ப்போர்டு அதிகாரியின் முன்னிலையில் பொறுப்பாளர்கள் தேர்வு செய்வதற்காக மனுக்கள் பெறப்பட்டுக்கொண்டிருந்தது ஒவ்வொரு மனுவுக்கும் குறிப்பிட்ட தொகை வசூல் செய்வார்கள்.இதுதான் அங்கு நடைமுறையில் இருந்து  கொண்டிருக்கிறது.

இப்படி மனுக்களைப் பெற்றுக்கொண்டிருக்கும் போது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைச் சார்ந்த நெல்லை மாவட்ட செயலாளர் பைசல் தலைமையில் சிலபேர்கள் திமு திமுவென புகுந்து அந்த அதிகாரியைத் தாக்கி அவரிடமுள்ள 75 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து மனுக்களைஎல்லாம் கிழித்து எறிந்துவிட்டு சென்றிருக்கிறார்கள். நாளிதழில் வந்த செய்தியை அட்டாச் பைலில் பார்க்கவும் 


அடுத்தவர் பொருளை அபகரிப்பது குற்றமான செயல் என்றிருக்கும்போது குர்ஆன்,ஹதீஸைப் பின்பற்றக்கூடிய நீங்கள் இப்படி செய்யலாமா?இது ரவ்டியிசமில்லையா?

       அதுமட்டுமா வக்போர்ட் அதிகாரி ததஜாவின் மாவட்ட செயலாளர் பைசல் உள்பட சிலர்கள் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். தாமும் சுன்னத் ஜமாஅத்தார்கள் மீது புகார் கொடுத்தால் தம்மீதுள்ள புகாரை திரும்ப பெற்றுக்கொள்வார்கள் என்ற பயமுறுத்தலின் காரணமாக இவர்களும் புகார் கொடுத்துள்ளார்கள்.ஆனால் அவர்கள் புகாரை திரும்ப பெறவில்லை .கேஸ் பதிவு செய்யப்பட்டுவிட்டது. இது ரவ்டியிசமில்லையா?

      உண்மையான இயக்கம் ஹராம் ஹலாலை பேணி நடக்ககூடிய இயக்கம் தொண்டர்கள் வேண்டுமென்றால் இதற்கு விதிவிலக்காக இருக்கலாம் ஆனால் நிர்வாகத்திலுள்ளவர்கள் பத்திரைமாத்துத் தங்கம் என்று சொல்லக்கூடியததஜ சகோதரர்களைக் கேட்கிறோம். 

நெல்லை மாவட்ட செயலாளர் போலீசில் கொடுத்த புகாரில் என்னுடைய கழுத்தில் கிடந்த இருபத்தி ஐந்து கிராம் சங்கிலியை பறித்து சென்றார்கள் என்று எழுதப் பட்டுள்ளது.அட்டாச் பைலை பார்க்கவும்.தங்கம் ஆண்களுக்கு ஹராம் என்று அல்லாஹ், ரசூல் சொல்ல செயலாளர் பைசலுக்கு மட்டும் எப்படி ஹலால் ஆனது? காலம் காலமாக ஒரு மாவட்ட செயலாளர் கழுத்தில் மூன்று பவுனுக்கு மேல் சங்கிலி போட்டுள்ளார் என்றால் இந்த தூய்மையான இயக்கத்தைப் பற்றி என்ன சொல்வது? ஹராமான ஒரு காரியத்தைச் செய்த மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன்? 

    .இருபத்தி ஐந்து கிராம் சங்கிலி என்பது வெள்ளியாக இருக்கலாமல்லவா என்ற வாதத்தையும்வைப்பார்கள்.வெள்ளி கிராம் 48 ரூபாய்தான்.சுன்னத் ஜமாஅத்தார்கள் 75 ஆயிரம் ரூபாய் திருடிவிட்டார்கள் என்று போட்டு விட்டார்கள் அதற்கு நிகராக வெள்ளி விலை இருக்காது.ஆகையால் அது வெள்ளியுமல்ல என்பது வெளிச்சமாகிறது.

    சுன்னத் ஜமாஅத்தார்கள் வரம்பு மீறினார்கள் அதேப்போல் நாங்களும் வரம்பு மீறுகிறோம் என்று ஒருவாதத்திற்கு வைத்துக்கொண்டாலும் அதற்கு ததஜ செயலாளர் கழுத்தில் கிடக்கிற தங்கச் சங்கிலிதான் வரம்பு மீறுதலா? வேறொன்றும் கிடைக்கவில்லையோ? 

உதாரணத்திற்கு ஒருவன் ஒரு பெண்ணை கெடுத்துவிட்டான் என்று வைத்துக்கொள்வோம் கெடுக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் வரம்பு மீறவேண்டும் என்ற நோக்கில் கெடுத்தானே அவனுடைய வீட்டுப்பெண்ணை கெடுப்பது என்பது எப்படியோ அதேப்போல் உள்ளதாகத்தான் இருக்கிறது.

மிசேஜ் கொடுத்தால் ஐயாயிரம் பேர் வருவார்கள் என்பது பில்டப்புதான். உங்களால் துணிந்து நிற்க முடியவில்லை என்பதுதான் உண்மை. தங்கச்சங்கிலி செயலாளர் கழுத்தில் கிடக்க பொய்யான குற்றச்சாட்டு சொல்வது பொய்யல்லவா?பொய்யர்கள் மீது அல்லாஹ்வுடைய சாபம் உண்டாகுக!என்று அல்லாஹ்வின் தூதரின் சொல்லுக்குடையதாக இருக்கிறதல்லவா?  இந்த நடைமுறை ரவ்டியிசமில்லையா?
                         காரைக்காலில் நடந்தது என்ன?
     காரைக்காலில் சலீம் என்ற சகோதரர் இடஒதுக்கீடு அவசியம். போராட்டம் எப்படி நடத்தவேண்டும் என்ற முறையில் ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்தார் அதை தடுக்கவேண்டும் என்ற முறையில் பல முஸ்தீபுகள் செய்து தோற்றுப் போனதால் அத்துடன் போராட்டத்திற்கு கூட்டம் சேராமல் போராட்ட இடத்தைமாற்றியும் கூட்டம் சேராமல்அந்த வெறியில் போராட்டம் முடிந்ததும் அப்பகுதியிலுள்ள மக்களை கடுமையான ஆயுதத்தால் பயமுறுத்தி போராட்டத்திற்கு வரமுடியாமல் சலீம் செய்துவிட்டார் ஆகவே அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று போலீசில் பொய்யான புகார் செய்தீர்களே! இது நியாயமா? ரவ்டியிசமா? 

நெல்லை செங்கோட்டையில் வரம்பு மீறினார்கள் அதனால் நாங்களும் வரம்பு மீறினோம் என்று சொன்ன நீங்கள் காரைக்காலில் என்ன வரம்புமீறினார்கள்? சகோதரர்களே! குர்ஆன்,ஹதீஸ் மட்டும்தான் எங்களுடைய குறிக்கோள் வேறு எதுவும் கிடையாது என்று சொல்லிக்கொண்டே பைலாவையும் பின்பற்றுகிற உங்களை மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் அடுத்தவர்கள் மீது அதாவது உங்களுக்குப் பிடிக்காதவர்கள்மீது.அநியாயமாக நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுக்கள் ,வரம்புமீறுதல்கள், பொய்கள் அடுத்த வர்களையோ,அடுத்த இயக்கத்தையோ இழிவாக,சாதரணமாக எடை போடாதீர்கள்.இந்த மாதிரி எத்தனை ஊர்களில் நடக்கின்றதோ?அல்லாஹ்அறிவான் அல்லாஹ் கண் காணித்துக்கொண்டிருக்கிறான் என்ற இறை அச்சத்தோடு உங்களின்பணிகளைதொடருங்கள்.அல்லாஹ் போதுமானவன்.                                                                                                                               இப்படிக்கு 
                              காதிர் கனி எம் எஸ் சீ

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு