இட ஒதுக்கீடு போராட்டம் சம்பந்தமான சந்தேகமும் உண்மை பேசும் தொண்டனின் பதிலும்.
பேரம் பேசி சூட் கேஸ் வாங்குவது எங்கள்
தலைமையின் தொழில்.
இதை வெளியிட்டவர்கள் ரவுடிகளின் அமைப்புக்கு பயந்து உள்ளாா்கள் என்பது உண்மை.
சந்தேகம் -1. எந்த முஸ்லிமுக்கு இட ஒதுக்கீடு? முஸ்லிம்கள்
என்றால் யார்? ஷிர்க் வாதிகள் முஸ்லிம்களா? தர்கா, தரீகா வாதிகள் கப்ர் வணங்கிகள்
முஸ்லிம்களா? கப்ர் வணங்கிகள் ஷிர்க் வாதிகளுக்காக இட ஒதுக்கீடு போராட்டம் குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்தின்படி கூடுமா?
உ.பே.தொ. விளக்கம்-
எப்பொழுது அவர்களெல்லாம் எங்களுக்குத் தேவையோ அப்பொழுதெல்லாம் முஸ்லிம்கள்
என்போம். எதற்கு தேவையோ அதற்கு தகுந்தவாறு ஆயத்து ஹதீஸ்களை வளைக்கும் திறமையான
பேச்சாளர்கள் எங்களிடம் உண்டு. எனவே தேவைப்படும்போது முஸ்லிம்களே! என்று அழைத்து
பயன்படுத்துவோம். காரியம் முடிந்ததும் காபிர்கள் என்போம்.
சந்தேகம் -2. முஸ்லிம் ஒரு
முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்றான ஜனாஸா தொழுகைகளில் கூட கலந்து
கொள்ளக் கூடாது. கண்டால் ஸலாம் கூட சொல்லக் கூடாது. என்று சொல்லி விட்டு
அவர்களுக்காக ஏன் இட ஒதுக்கீடு தேவைதானா?
விளக்கம்- முதல்
கேள்வியிலேயே பதில் இருக்கிறது.
சந்தேகம் -3. போராட்ட
காட்சிகளைக் காட்டி எந்த அரசியல் கட்சியிடமும் பேரம் பேசியது இல்லை. இனியும் பேரம்
பேச மாட்டோம். கடந்த காலங்களில் பெட்டி வாங்கியது இல்லை. இனியும் பெட்டி வாங்க
மாட்டோம் என்று சத்தியம் செய்யத் தயாரா?
விளக்கம்- பொய் சத்தியம்
செய்து பொய் சாட்சி சொல்லும் வேலைகளையெல்லாம் தேவைக்கு ஏற்ப எங்கள் தலைவர்கள்
செய்வார்கள். நான் உண்மையை மட்டுமே சொல்வேன்.
ஒவ்வொரு முறையும் தேர்தல்கள்
நெருங்கியதும் முஸ்லிம்களின் பொதுக் கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம் என
அறிவிப்பதை எங்கள் தலைமை வழக்கமாக ஆக்கிக் கொண்டது. அப்பாவி சுன்னத்
ஜமாஅத்தினர்களை ஏமாற்றி அழைத்துச் சென்று கூட்டத்தை காட்டுவது எங்களது வேலை.
சுன்னத் ஜமாஅத்தினர்களையும் தவ்ஹீது கூட்டம் என்று சொல்லி உளவுத் துறை மூலம்
அரசியல் கட்சிகளிடம் பேரம் பேசி சூட் கேஸ் வாங்குவது எங்கள்
தலைமையின் தொழில்.
சந்தேகம் -4. சிறை செல்லும்
போராட்டம் என்றால் என்ன? என்ன நடக்கப் போகிறது? சிறை செல்லுதல் என்றால் எந்த சிறை?
மத்திய சிறையா? சப் ஜெயிலா? சிறுவர் சீர் திருத்த சிறையா?
விளக்கம்- சிறை என்ற பெயரால்
கல்யாண மண்டபங்களுக்குள்தான் போவோம். எந்த திருமண மண்டபத்தில் எங்களை வைக்க
வேண்டும். 11 மணிக்கு மேல்தான் மண்டபத்துக்குள் வருவோம். அங்கே மதிய உணவு
சாப்பிடுவோம். அதன் பிறகு விட்டு விட வேண்டும். என்பதை முதலிலேயே போலீஸில் ஒப்பந்தம் செய்தோம்.
தேர்தலில் போட்டியியிடும் கட்சிகளின் மாவட்ட பொறுப்பாளர்களை அணுகி மதிய
உணவுக்கு – பிரியாணிக்கு வழி செய்தோம். இதுதான் கடந்த காலங்களில் நடந்தது. அதுதான்
இப்பொழுதும் நடக்கும். ரிமாண்ட் செய்து சிறையில் தள்ளப்படும் போராட்டம்தான் உண்மையான சிறை நிரப்பும் போராட்டம். அந்த போராட்டம்
என்றால் எங்கள் தலைவர்களே வர
மாட்டார்கள்.
சந்தேகம் -5. தனி மனிதன்
திருமணங்களில் சுன்னத்தான வலீமாவிற்காக அணுமதித்த அளவில் சொந்தமாக செலவு செய்தால்
ஆடம்பரம், எளிமைக்கு புறம்பானது. என்கிறீர்கள். தெருத் தெருவாக வசூலித்த பொதுப்
பணத்தில். உங்கள் தலைவர்கள் பாஷையில் சொல்வதாக இருந்தால் தெருத் தெருவாக பிச்சை எடுத்த பணத்தில். கட்அவுட்கள், வால் போஸ்ட்டர்கள், பிட் நோட்டீஸ்கள், பிம்ப நோட்டீஸ்கள்,
டிஜிட்டல், கலர் கிளாஸ் என அரசியல்வாதிகளையும் மிஞ்சி விட்டீர்களே? இதுதான் நபி
வழியா? அளவுக்கு மிஞ்சிய விளம்பரச் செலவு ஹராம் இல்லையா?
விளக்கம்- பிறர் செலவு
செய்தால் இஸ்ராப், ஹராம் என்று சுற்றி வளைத்து நிரூபித்து விடுவோம். நாங்கள் செய்தால் அதையும் நியாயப்படுத்த எங்களிடம்
நாவன்மைமிக்கவர்கள் இருக்கிறார்கள்.
சந்தேகம் -6. உங்கள்
கொள்கைப்படி தேசிய கொடிக்கு சல்யூட் அடிப்பது ஷிர்க். தேசிய கீதம் பாடுவது ஷிர்க். தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது ஷிர்க். அதற்காக
எழுந்து நிற்பது ஷிர்க். இது போன்ற நிகழ்ச்சிகளில்
கலந்து கொண்டால் தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்த பின்தான் நிகழ்ச்சிக்கு போக
வேண்டும். தேசிய கீதம் பாடும் முன் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்து விட வேண்டும்.
அணிவகுப்பு மரியாதை செய்வதும். ஏற்பதும் ஷிர்க். சின்ன அதிகாரி பெரிய
அதிகாரிகளுக்காக எழுந்து நிற்பது ஷிர்க். I.A.S, I.P.S. போன்ற அரசு அதிகாரிகள்
செய்யும் ஏராளமான செயல்களை ஷிர்க். என்கிறீர்கள். ஷிர்க். செய்தவனுக்கு நிரந்தர நரகம் என்கிறீர்கள். அப்படி
என்றால் உங்கள் போராட்டம் முஸ்லிம்களை நிரந்தர நரகில் தள்ளுவதற்காகவா?
விளக்கம்- எங்கள் அமைப்பினர்
யாரும் ஷிர்க் செய்ய படித்து தரும் I.A.S, I.P.S. போன்ற படிப்புகளை படிக்க
மாட்டார்கள். எனவே போலீஸாகவோ, கலக்டர்களாகவோ அது போன்ற அதிகாரிகளாகவோ ஆக
மாட்டார்கள். எங்களின் இந்த போராட்டதின் மூலம் முஸ்லிம்களை சிறைக்கு அழைத்துச்
செல்வதோ அதன் மூலம் அவர்களது வாழ்வை முன்னேற்றுவதோ எங்கள் தலைவர்களது நோக்கம்
அல்ல. எங்களை எதிர்க்கும் சுன்னத் ஜமாஅத்தினரை மேலும் ஷிர்க்க செய்ய வைத்து
நரகத்துக்கு அனுப்புதே எங்களின் நோக்கம்.
சந்தேகம் -7. நீங்கள்
போராட்டம் நடத்திய பிறகும் இட ஒதுக்கீடு அறிவிக்கப்படா விட்டால் எந்தக்
கட்சியையும் ஆதரிக்காமல் தேர்தலை புறக்கணிப்பீர்களா?
விளக்கம்- ஹஹ்ஹஹ்ஹா இன்னுமா
எங்களை புரியவில்லை. தேர்தலில் ஏதாவது ஒரு கட்சியை ஆதரித்தால்தானே எங்கள்
தலைமையின் நோக்கம் நிறைவேறும். இட ஒதுக்கீட்டை அறிவிக்காததால் தேர்தலை புறக்கணிக்கிறோம்
என்றால் யார் பெட்டி தருவார்கள். அரசியல் கட்சிகளை விட கூடுதலாக யாராவது பெட்டி
தந்து தேர்தலை புறக்கணிக்கச் சொன்னால் அது பற்றி தலைமை முடிவு செய்யும்.
வெளியீடு - மீலாது கமிட்டி
Comments