கபரஸ்தான் கேட்டு சந்துாக்கை துாக்கி வந்த முஸ்லிம்கள்.


நெல்லை கொக்கிர பாலத்தின் மத்தியில் வந்து நின்ற வாகனங்களிலிருந்து முஸ்லிம்கள்  இறங்கினார்கள். வாகனத்திலிருந்த சந்துாக்கை துாக்கி கொண்டு நடந்தார்கள்.  இதைப் பார்த்து பாய்மார்கள் ஜனாஸாவை கொண்டு போகிறார்கள் என்று எண்ணிய காவல் துறை அதிகாரிகள் போக்கு வரத்தை சரி செய்தார்கள். சிறிது துாரம் சென்ற பின் கோஷத்தை கேட்ட பிறகுதான் சுதாரித்துக் கொண்டு தடுக்கும் பணியில் ஈடுபட்டார்கள். 
போலீஸார் சந்துாக்கை பிடித்து தொங்கியும் மறித்தும் தடுத்தார்கள். அதையும் மீறி கலெக்டர் ஆபீஸுக்கு முன்பாக சந்துாக்கை கொண்டு போய் வைத்து விட்டார்கள்.





மயான
விவகாரம் தொடர்பில் முஸ்லிம்கள் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் http://www.dinamani.com
By முருகன், திருநெல்வேலி
First Published : 03 February 2014 11:52 AM IST
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியில், அந்தப் பகுதி ஜமாத்துக்குச் சொந்தமான முஸ்லிம்களின் மயான இடத்தை, 2008ல் தங்க நாற்கர சாலைத் திட்ட விரிவாக்கத்துக்கு அளித்திருந்தனர். அப்போது அரசுத் தரப்பில் வேறு இடத்தை வழங்குவதாகக் கூறியிருந்தனர். அதன்படி அவர்கள் ஒதுக்கிய இடம், கிறிஸ்தவர்களுக்கு சொந்தமான மயான பூமி என்பதால், தங்களுக்கு வேறு இடம் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தனர். இந்தப் பிரச்னையில் இன்று தீர்வு காண வலியுறுத்தி, அந்தப் பகுதி முஸ்லிம்கள் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திவருகின்றனர்.


 நெல்லை கலெக்டர் அலுவலகம் முற்றுகை
http://www.dinamalar.com/district_detail.asp?id=909250 
திருநெல்வேலி : நெல்லை கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி, தாழையூத்து சங்கர்நகர் பகுதியில் நான்குவழிச்சாலை அமைக்கும்போது,
ஒரு வழிபாட்டு தலத்திற்கு சொந்தமான மையவாடி நிலத்தை கையகப்படுத்தியிருந்தனர்.
அதற்கு பதிலாக வேறு இடம் தருவதாக அதிகாரிகள் கூறியிருந்தனர். நிலம் தராததை கண்டித்து,
நேற்று பல்வேறு அமைப்பினர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இறந்தவர்களை தூக்கிச்செல்லும் சந்தூக்கு எனப்படும் பெட்டியையும் கலெக்டர் அலுவலகத்திற்குள் தூக்கி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீண்டநேர முற்றுகையை தொடர்ந்து,
அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு