கொள்ளைக்கூட்டம் தா.தா.சாவுசெய்த கபட நாடகத்திற்கு இரண்டறைக் கோடிக்கு மேல் செலவா?

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்........
அன்புள்ளம்கொண்டோர்களே!அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்..
    தா.தா.சாவினர் நடத்திய இடஒதுக்கீடு சிறை செல்லும் போராட்டம் பற்றிய ஓர் ஆய்வை நாம் பார்ப்போம்.

சகோதரர்களே! இந்த இடஒதுக்கீடுக்காகவும்,அரசியல் கட்சிகளிடம் தங்களின் பலத்தைக் காட்டுவதற்காகவும் இதற்கு முன்னால் பல ஆர்ப்பாட்டங்கள்,மாநாடுகள் என்று தேர்தல் நெருங்கும் நேரத்தில் எல்லா கட்சிகளைப் போல தா.தா.சாவினர் நடத்திக்காட்டினார்கள்.

அதில் ஒன்றை குறிப்பிடுகிறேன். 2010 ம் வருடம் சென்னையில் தீவுத்திடலில் சைபுல்லாஹ் தலைமையில் ஒரு மாநாடு நடந்தது. அந்த மாநாட்டிற்காக சுமார் ஆறு ஏழு மாதங்களாக உள் நாட்டிலும், வெளிநாடுகளிலும் வசூல் வேட்டை நடந்தது. இந்த மாநாட்டிற்காக எவ்வளவு வசூல் செய்யலாம் எவ்வளவு செலவாகும் என்று மாநாட்டுக்குழு முடிவு செய்து வெளிநாட்டு மண்டலங்களுக்கு ஒரு தபால் அனுப்பினார்கள் அட்டாச் பைலில் பார்க்கவும்.


அதில் அவர்கள் நிர்ணயித்த தொகை ஒரு கோடியே இருபத்தேழு லட்சத்து பதினைந்தாயிரம் ரூபாயாகும். வசூல் நடந்தது எவ்வளவோதெரியவில்லை இது அல்லாஹ்வுக்குத்தான் தெரியும்.

ஏனென்றால் இவர்கள்தான் கணக்குக் காட்டமாட்டார்களே! கேட்டால் திறந்த புத்தகம் நேரடியாக வந்து பார்க்கலாம் என்று சொல்லுவார்கள். ஒரு நேர்மையான இயக்கம் என்றால் பொதுக்குழுவிலே வரவு செலவைக் காட்டி தன்னுடைய வார இதழில் போடலாம் இதுவரைக்கும் அது நடந்தது இல்லை. இந்த தவறுகளுக்கெல்லாம் சைபுல்லாஹ்வும் துணை போனதுண்டு.  ஒரு கோடியே இருபத்தேழு லட்சத்து பதினைந்தாயிரம் மட்டும்தான் வசூல் செய்திருப்பார்களா? சகோதரர்களே உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

    ஜனவரி 28 சமீபத்தில் நடந்த சிறைசெல்லும் போராட்டத்திற்கான செலவு  தீவுத்திடல் மாநாட்டைவிட அதிக செலவாகும். எனக்கு நெல்லை மாவட்டம்  கடையநல்லூரிலிருந்து வந்த செய்தியைப் பார்க்கும்போது தலை சுற்றுகிறது. வீண் விரையம் இல்லையா? பொதுவாக ஆர்ப்பாட்டம்,போராட்டம் என்றால் ஒருசில இடங்களில்தான் சுவர் விளம்பரம், பேனர் வைப்பார்கள். முக்கியமாக  மக்களை அழைத்து செல்வதிலேயே குறியாக இருந்து அதற்காகவே தொகையை சேமிப்பார்கள்.

ஆனால் இந்த ஜனவரி 28  க்காக இவர்கள் செய்த செலவைப் பாருங்கள்.சுவர் விளம்பரம் சுமார் முப்பதுக்கும் அதிகமாக இருக்கும் ஒரு சுவர் விளம்பரத்திற்கு குறைந்த பச்சம் 2500 ரூபாயும் பெரிய சுவருக்கு 5000 ரூபாயாகும் நாம் குறைந்த அளவு 2500 என்றே வைத்துக்கொள்வோம் முப்பது சுவருக்கு 75000 ரூபாயும், நான்குக்கு எட்டு டிஜிடல் பேனர் ஒன்றுக்கு நட்டுக்கூலி உள்பட 1700 ரூபாய் வீதம்17 இடத்தில் 28900 ரூபாய் இந்த இரண்டுக்கு மட்டும் ஒரு லட்சத்து மூவாயிரத்து தொள்ளாயிரம் ரூபாய்கள் (103900)சுமார் ஒருமாதகாலமாக ஒவ்வொரு வகையிலும் வாரத்திற்கு இருமுறை வால் போஸ்டர்கள், நூற்றி ஐம்பதுக்கு மேல் சிறிய டிஜிடல் பேனர்கள், மின்  கம்பத்தில் ஒட்டுவதற்கு  ஆயிரத்திற்கும் மேல் போஸ்டர், .சைக்கிள் பேரணி நடத்தினார்கள் (அதற்கு கூட்டம் எப்படி வந்தது என்று அவர்களே வெக்கித் தலை குனியும்படி இருந்தது)

சைக்கிள் பேரணிக்காக செலவுகள்  அவர்கள் சொன்னதின் பிரகாரம் சுமார் பத்தாயிரம் ருபாய், போராட்டத்திற்கு செல்வதற்காக 145  வேன்களுக்கு(இதில் பெரிய வண்டிகளும் அடங்கும்) சுமார் 2500  வீதம் 362500  ரூபாய் இதற்கிடையில் போராட்டத்திற்குப் போனவர்களுக்கு ஊசிப்போன சாப்பாடு,

போராட்டத்திற்கான திடலில் பொதுக்கூட்டம், மக்காநகரிலுள்ளஆட்களை அழைத்துச்செல்ல நபர் ஒன்றுக்கு இருநூறு ரூபாய் வீதம் கொடுத்தது ஆக மொத்தம் ஐந்து லட்சத்திற்கு மேல் செலவு செய்துள்ளார்கள். இது கடையநல்லூரில் மட்டும் அடங்கும்.

அதுமட்டுமில்லை குடும்பத்திற்கு ஒருவேனாம் இதை அவர்களே தங்களின் இணையதளத்தில் போட்டுள்ளார்கள் ஒருகுடும்பத்தில் ஐந்து நபர்கள் இருந்தால் அவர்களுக்கு ஒரு வேன்.

இது நானே கண்கூடாகப் பார்த்தது. முன்னாள் பொருளாளர் வீட்டிற்கு ஒருவேன் அந்த வேனில் இருபது நபர்கள் இருக்கலாம் ஆனால் ஏழு பேர்கள்தான் சென்றார்கள் நான் கடையநல்லூர் புதிய பேரூந்து நிலையத்திலிருந்து கண்டது என்று ஒருவர் சத்தியமடித்து தகவல் தந்துள்ளார்.

பொதுமக்களிடம் வசூல் செய்து இப்படி அநியாயமாக செலவு செய்துள்ளீர்கள்.வேன்களின் எண்ணிக்கை அதிகமாக காட்டவேண்டும் என்ற நிலைதான். கடையநல்லூர் தா.தா.சாவின் சகோதரர்களே இந்த போராட்டத்திற்கான வரவுசெலவுகளை வெளியிடுங்கள் பார்க்கலாம். இதற்கெல்லாம் அல்லாஹ்விடம் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

இப்படியே தமிழ் நாடு முழுவதும் கணக்குப்பார்த்தால் இரண்டறைக் கோடிக்கு மேல் செலவானதாக தகவல்.அல்லாஹ் அறிவான்.

      நடந்து முடிந்து சுமார் ஒரு மாதகாலம் ஆகிறது இந்த தூயவர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் மக்களிடம் வசூலித்த தொகைக்கும்,அதற்கான கணக்கையும் காட்டவில்லை. சமீபத்தில் துபாயில் தா.தா.சாவின் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது அதில் போராட்டத்திற்கான கடையநல்லூர் வரவு,செலவுகள் சரிபார்க்கப்பட்டது என்று எழுதியுள்ளார்கள்.

சரிபார்க்கப்பட்ட வரவு செலவு என்ன என்பது யாருக்காவது தெரியுமா? உங்களின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடலாமே?ஏன் போடவில்லை? நீங்கள் மட்டும்தான் பணம் கொடுத்தீர்களா? வெளியில் எவ்வளவு பொதுமக்களிடம் வசூல் செய்தீர்கள் அவர்களுக்கு கணக்கு காட்டவேண்டாமா? இதற்காக தாங்கள் உழைத்துக் கொடுத்த வசூல் செய்து கொடுத்த சகோதரர்களே கணக்குக் கேளுங்கள். அப்போதுதான் இவர்களைப் பற்றி நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.   

     சகோதரர்களே மேற்கண்ட தொகை தோராயமாகத்தான் கணக்கிடப்பட்டுள்ளது. தா.தா.சாவின் சகோதரர்கள் வால்போஸ்டர் ஒட்டினார்கள். அதில் சர்க்கார்கமிசன் அறிக்கைப்படி மேல்படிப்பு படித்த முஸ்லிம்கள் 0.4 சதவீதம் தான் என்று அந்த போஸ்டரில் போடப்பட்டுள்ளது. 0.4 சதவீதம் போக மீதி முஸ்லிகளின் நிலை என்ன?படிக்காதவர்களா இல்லையே?

நம் சமுதாயத்தில் மேல் படிப்பு படிக்கும் எண்ணமுள்ளவர்கள் ஏராளம் இருக்கிறார்கள். பொருளாதார வசதி இல்லாமல் மேல்படிப்பு படிக்க முடியாமல் மன வேதனையுடன் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். .இவ்வளவு செலவு செய்யும் இந்த தா.தா.சாவின் இந்த பொருளாதாரத்தை இவர்களுக்காக பயன்படுத்தினால் இவர்களின் வாழ்க்கை முன்னேற்றம் அடையுமல்லவா?

 இவர்கள் படித்து என்ன பிரையோஜனம் வேலை கிடைக்க வேண்டுமல்லவா? என்ற கேள்வி கேட்டாலும் கேட்பார்கள்? இந்த கேள்விக்கேற்ப இவர்களின் போராட்டம் வீரியமாக நடந்ததா? என்றால் அதுதான் இல்லை.காரணம் ஒருபோராட்டம் என்றால் அதில் வீரியம் வேண்டும்.

உதாரணத்திற்கு நெல்லை மாவட்டம் தாழையூத்தில் சுன்னத் ஜமாஅத் பள்ளி இடம் விசயமாக தமுமுக,சுன்னத் ஜமாஅத்தார்கள் இணைந்து ஒரு சந்தூக்கை தூக்கிக்கொண்டு மாவட்ட ஆட்சியாளரை முற்றுகையிட்டனர்.காவல் துறை எவ்வளவோ தடுத்தும் முண்டியடித்து எங்களுக்கான இடம் வேண்டும் என்ற உறுதியோடு இருந்ததினால் ஏற்பாடு செய்கிறோம் என்று மாவட்ட ஆட்சியாளர் உறுதி கூறியதற்குப் பிறகு கலைந்து சென்றார்கள். இதை அட்டாச் பைலில் பார்க்கவும்.

இந்த பிரச்சனைக்குப் போனவர்கள் நூறு பேருக்குள்தான் இருக்கும் இதுதான் வீரியமான போராட்டம் இது நம் கண் முன் நடந்தது. ஆனால் தா.தா.சாவின் போராட்டம் நடப்பதற்கு முன்னால் இவர்கள் காவல் துறை உயர் அதிகாரிகளை சந்தித்து நாங்கள் போராட்டம் நடத்துகிறோம் உங்களுக்கு எந்த கஷ்டமும் கொடுக்கமாட்டோம், எங்களுக்காக வரும் மக்களை நீங்கள் ஒன்றும் செய்துவிடவேண்டாம் என்று வேண்டி கேட்டுக்கொள்வார்கள்.

அதன் பிறகுதான் போராட்டம் நடக்கும். காவல்துறை வா என்றால் வருவார்கள் போ என்றால் போவார்கள். அதையும் மீறி கூட்டம் லேசான முறையில் முண்டியடித்தால் தா.தா.சாவின் உயர் பதவியில் இருப்பவர்கள் மேடையில் நின்றுகொண்டு காவல்துறைக்கு சிரமத்தைக் கொடுக்காதீர்கள் என்று அறிவுப்பு செய்துகொண்டிருப்பார்கள். இதனால் அரசாங்கத்திற்கு என்ன லாபம், என்ன நஷ்டம் ஒன்றும் கிடையாது

உளவுத்துறை கூட அரசு உயர் அதிகாரிகளிடம் வந்தார்கள் கலைந்து சென்றார்கள் என்ற தகவலைத்தான் சொல்லுவார்கள். ஆக இவர்கள் இப்படித்தான் என்ற நிலை ஏற்படும். இதனால் எந்த சத்தும் சாரும் கிடையாது. என்றாவது ஒருநாள் தொலைக் காட்சியில் பேட்டி கொடுக்கும் போது நாங்கள் அமைதியான முறையில் கூடுவோம், அமைதியாக கலைந்து செல்வோம். எங்களால் யாருக்கும் எந்த கஷ்டமும் கொடுக்கமாட்டோம் என்று பெருமைப்பட்டுக்கொள்வார்கள். இதனால் எந்த பிரயோஜனமும் கிடையாது

காலையில் பதினோரு மணிக்கு நடந்து பனிரெண்டு மணிக்கு முடிந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இதற்காக இவ்வளவு செலவு செய்து எந்த பிரயோஜனமும் கிடையாது. வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் கஷ்டப்பட்டு உழைத்துக் கொடுத்தவர்களின் பணம் கானல் நீராகிப்போய்விட்டது. மண்டபத்தில் அடைக்கவுமில்லை, இருக்ககூடிய மண்டபங்கள் பத்தாமல் இடம் கிடைக்காமல் திணறியது காவல்துறை. என்ற செய்தியும் இல்லை. எல்லாமே அரசுக்கு துணையாக இருந்திருக்கிறதே தவிர வேறொன்றுமில்லை. அரசும் தா.தா.சாவும் சேர்ந்து செய்த கபட நாடகம்.

   இதில் பெரிய விஷயம் என்னவென்றால் இவர்கள் குர்ஆன்,ஹதீஸ் கொள்கையைப் பின்பற்றவில்லை கூட்டம், கூட்டம், கூட்டம் தான் பெரிதாக்கப்பட்டது. காரணம் ஜும்ஆ அன்று அவர்கள் இடத்தில் தொழுகை நடந்து கொண்டிருக்கும் போது ஜும்ஆ தொழாமல் நோட்டீஸ் கொடுக்கும் கொள்கைகள் அவர்களின் இடத்தை விட்டுவிட்டு மற்றைய சுன்னத் ஜமாஅத், இவர்களுக்கு எதிரான ஜமாஅத்தைச் சார்ந்த பள்ளிகளுக்கு முன்னால் நின்றுகொண்டு நோட்டீஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். என்னே கொள்கைப்பற்று?

அதுமட்டுமா போராட்டத்திற்காக வெளியூரிலுள்ள இவர்களின் கொள்கையற்ற பள்ளிவாசலுக்குப் போய் அழைப்புக்கொடுக்கிறார்கள்.அப்படி அழைப்புக்கொடுக்கப்பட்ட பள்ளிதான் பாலமார்த்தாண்டபுரம் என்ற ஊர். ஹனபி ஜமாஅத்தைச் சார்ந்த பள்ளி இந்த பள்ளியின் இமாம் மௌலிது ஓதுவார், தர்ஹாவுக்கும் தொடர்ந்து செல்லக்கூடியவர்.

இந்த பள்ளிக்கு கடையநல்லூர் தாயிக்கள் என்று தா.தா.சாவால்  சொல்லக்கூடிய சதாம் ஹுசைன்,பக்கீர்லெப்பை காலித்,மற்றும் கடையநல்லூர் தா.தா.சாவின் தந்தை என்று வர்ணிக்கப்படும் தா.தா.சாவின் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் அப்துன்னாசரின் தங்கையை திருமணமுடித்த மஸ்தான் ஆகியோர்கள் ஹனபி பள்ளியில் இந்த இமாமுக்குப்பின்னால் மஃரிப் தொழுகையை முடித்துவிட்டு போராட்டத்திற்கு அழைப்புக் கொடுத்தார்கள் என்றால் இவர்கள் கொள்கையை விட்டுவிட்டு கூட்டத்தைப் பார்த்தார்களா? இல்லையா?அல்லது நாங்கள் இந்த இமாமுக்குப் பின்னால் தொழவில்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் அடித்து சொல்லுவார்களா? சகோதரர்களே!இவர்கள் கொள்கைக்காக இல்லை கூட்டத்திற்காகத்தான் என்பது தெளிவாகிறதல்லவா?எ ப்படி தவ்ஹீத்வாதிகள் என்று தன்னை சொல்லிக்கொண்டார்கள்?              
     
      சகோதரர்களே! இப்போது சிந்தியுங்கள் இதனால் யாருக்கு லாபம். எங்களின் போராட்டத்தில் எவ்வளவு பேர்கள் வந்துள்ளார்கள் இவ்வளவு ஓட்டுக்கள் இருக்கிறது என்று தெரியப்படுத்தவேண்டும் என்ற நோக்கமே தவிர வேறொன்றுமில்லை.

இதே வேளையில் பதினைந்து நாட்கள் ரிமாண்ட் என்று சொல்லிப்பாருங்கள் எவ்வளவு பேர்கள் வருகிறார்கள் என்று தெரியும் இது தா.தா.சாவின் மனநிலை அப்படித்தான் வேறொன்றுமில்லை. ஏனென்றால் எத்தனையோ முற்றுகைப் போராட்டம் அறிவித்துவிட்டு பின்வாங்கி ஓடியது தெரியாதா?

இந்தகூட்டம் தா.தா.சாவுக்கு வந்த கூட்டமில்லை பொதுவான காரியத்திற்காக வந்துள்ளார்கள் இதற்காக யாரு கூட்டினாலும் மக்கள் வரத்தான் செய்வார்கள். ஏனென்றால் இது மக்களுக்கு அத்தியாவசியமான ஒன்று. ஆக ஒட்டுமொத்தத்தில் தா.தா.சாவால் நடத்தப்பட்ட இந்த சிறை செல்லும் போராட்டம் உப்புச்சப்பில்லாத வீரியமற்ற போராட்டம்.

இதற்குப் பிறகு அறை சதவீதமோ அல்லது அதற்கு அதிகமாகவோ இடஒதுக்கீடு கிடைத்தால் தா.தா.சாவுதான் காரணம் என்று சொல்லமுடியாது. சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்த தமுமுக தான் காரணமாக இருக்கமுடியும்.

       சகோதரர்களே!இந்த தா.தா.சாவு ஒரு நல்லகாரியத்திற்காக போராட்டம் நடத்தினார்கள். (வீரியமோ வீரியமில்லையோ) இதை விட வீரியமிக்கவகையில் சட்டமன்ற புறக்கணிப்பு நடந்தது. இந்த சட்டமன்ற புறக்கணிப்பு எல்லா நாளிதழ்களிலும் ததஜவின் போராட்டத்தைவிட அதிக முக்கியத்துவம் கொடுத்ததினால் வெறி கொண்டு தா.தா.சாவின் மாநில தலைவர் அவர்கள் மாநில நிர்வாகி ஒருவரை இவர்களுக்கு எதிராக பேசவிட்டுள்ளார்கள்.

இதுக்காகவாவது சட்டமன்ற புறக்கணிப்பு செய்தார்கள் என்ற சந்தோசம் இல்லாவிட்டால் அமைதியாக இருக்கலாமல்லவா? இவர்களைவிட இது அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததினால் பொறாமையின் காரணமாக இப்ராஹீமை வைத்து இப்படி இழிவாக பேச வைப்பது எந்தவிதத்தில் நியாயம் சகோதரர்களே சிந்தியுங்கள்.

       தா.தா.சாவின் போராட்டம் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை என்பது தற்போதைய தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் அதிமுக வின் தேர்தல் அறிக்கையில் கண்டுகொள்ளலாம்.சிறு துரும்பைக்கூட அதாவது அறை சதவீதம் கூட அதிகப்படுத்தித் தரவில்லை. தேர்தல் அறிக்கையில் அதிகப்படுத்தவில்லை என்பதை வைத்து எங்களின் போராட்டம் அரசுக்கு எதிராகத்தான் நடந்தது என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் தா.தா.சாவின் சிறைநிரப்புப் போராட்டம் அரசை எந்த சங்கடத்திலும் ஆழ்த்தவில்லை. சிறு கஷ்டத்தைக் கூட கொடுக்கவில்லை. 
          அரசியல்வாதிகளை அதிரவைக்கும் பொதுக்குழு என்றும், ஒருவாரம் தவணை கொடுக்கப்பட்டுள்ளது என்று செயற்குழுவில் முடிவு செய்யப்படும் என்றும்  பொதுக்குழுவில் தீர்மானம் போடப்பட்டதாக  உணர்வில் வந்துள்ளது.

இவ்விடத்தில் ஒன்றை மட்டும் நாம் புரிந்துகொள்ளவேண்டும் திமுகவோ,அதிமுகவோ ஆத்திகவாதி என்று சொல்லிக்கொண்டாலும் அவர்கள் ஆத்திகவாதி இல்லை அவர்களும் சகுனம் ஜோசியம் பார்ப்பவர்கள்தான். அவர்கள்  இதுவரை  தா.தா.சாவு எந்த கட்சியிடம் கூட்டு சேர்ந்ததோ அந்த கட்சி தோற்றுப்போகும் என்ற ஒன்றை அனுபவப்பூர்வமாக தெரிந்திருக்கிறார்கள்.

இந்த முறையும் அவர்களை நம் கூட்டணியில் சேர்த்தால் நம் நிலையும் அதோ கதிதான் என்று சிந்திக்க மாட்டார்களா? அதனால்தான் தா.தா.சாவு நடத்திய சிறைநிரப்புப் போராட்டம் எந்த கட்சியினரையும் அதிரவைக்கவில்லை என்பதும் உண்மைதான். அல்லாஹ்வே போதுமானவன்.
                                           இப்படிக்கு
              காதிர்கனி எம்ஐஎஸ்சீ   

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.