தண்ணீர் நின்று கொண்டு குடிக்கலாமா? அல்லது இருந்துதான் குடிக்கனுமா?


நின்று கொண்டு நீர் அருந்தலாம் என்றும் கூடாது என்றும் இரண்டு விதமாக ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளன. இரண்டுமே ஆதாரப்பூர்வமான செய்திகளாக இருப்பதால் இரண்டையும்இணைத்தே முடிவுக்கு வரவேண்டும்

ஒருவர் நின்று கொண்டு தண்ணீர் அருந்துவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல் : முஸ்லிம் 3771

அலீ (ரலி) அவர்கள் (கூஃபா நகர் பள்ளிவாசலின்) விசாலமான முற்றத்தின் வாசலில் இருந்தபோது அவர்களிடம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. (அதை) அவர்கள் நின்று கொண்டே அருந்தினார்கள். பிறகு, "மக்களில் சிலர் நின்று கொண்டு அருந்துவதை வெறுக்கின்றார்கள். ஆனால் நான் செய்ததை நீங்கள் பார்த்ததைப் போன்றே நபி (ஸல்)அவர்கள் செய்ததை நான் பார்த்தேன்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர் : நஸ்ஸால் பின் சப்ரா,நூல் : புகாரி 5615, 5616

முதலாவது ஹதீஸ் நின்று கொண்டு தண்ணீர் அருந்துவதைத் தடை செய்கின்றது. இரண்டாவது ஹதீஸ் நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டு தண்ணீர் அருந்தினார்கள் என்று தெரிவிக்கின்றது.

ஒரு விஷயம் தடை செய்யப்பட்டு அதை நபி (ஸல்) அவர்கள் செய்தார்கள் என்று ஹதீஸ்கள் காணப்பட்டால் தடையையே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே அந்த அடிப்படையில் நின்று கொண்டு அருந்துவது கூடாது.

எனினும் நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டு நீர் அருந்தினார்கள் என்று பல ஹதீஸ்கள் இருப்பதால், தவிர்க்க முடியாத சமயத்தில் நின்று கொண்டு அருந்தினால் தவறில்லை என்று இதை எடுத்துக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் ஸம்ஸம் நீரை நின்று கொண்டு அருந்தினார்கள் என்ற செய்தி புகாரியில் (5617) இடம் பெற்றுள்ளது. இதை வைத்து ஸம்ஸம் நீரை மட்டும் நின்று கொண்டு அருந்த வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இவ்வாறு பிரிப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஏனெனில் அலீ (ரலி) அவர்களின் மேற்கண்ட ஹதீஸில் பொதுவாக நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டு அருந்தினார்கள் என்றே இடம் பெற்றுள்ளது. எனவே பொதுவாக நீர் அருந்துவதற்கு என்ன சட்டமோ அது தான் ஸம்ஸம் நீருக்கும் உரிய சட்டமாகும்.

உங்களில் யாரும் நின்று கொண்டு அருந்த வேண்டாம். மறந்து (அருந்தி) விட்டால் வாந்தி எடுக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் 3775

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ரு பின் ஹம்ஸா என்பவர் பலவீனமானவர். எனவே இந்த ஹதீஸை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது. முஸ்லிம் நூலில் மிகப் பெரும் அளவுக்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களே இடம்பெற்றிருந்தாலும் மிகக் குறைந்த அளவு பலவீனமான ஹதீஸ்களும் உள்ளன. அவற்றில் இந்த ஹதீசும் ஒன்றாகும்.

நன்றி http://masoodkdnl.blogspot.ae/2012/02/blog-post_1161.html

அலீ (­) அவர்கள் (கூஃபா நகர் பள்ளிவாச­ன்விசாலமான முற்றத்தின் வாச­ல் இருந்த போது அவர்களிடம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. (அதைஅவர்கள் நின்று கொண்டே அருந்தினார்கள்பிறகு, ''மக்களில் சிலர் நின்று கொண்டு அருந்துவதை வெறுக்கிறார்கள்ஆனால் (இப்போதுநான் செய்ததை நீங்கள் பார்த்ததைப் போன்றே நபி (ஸல்அவர்கள் செய்ததை நான் பார்த்தேன்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்நஸ்ஸால்
நூல்புகாரீ (5615)
நபி (ஸல்அவர்கள் நின்று கொண்டு 'ஸம்ஸம்கிணற்றி­ருந்து (நீர்பருகினார்கள்.
அறிவிப்பவர்இப்னு அப்பாஸ் (­)
நூல்புகாரீ (5617)
இதே கருத்தில் பல ஹதீஸ்கள் இருந்தாலும் இதற்கு மாற்றமாகநின்று கொண்டு அருந்துவதை நபி (ஸல்அவர்கள் தடை செய்தார்கள் என்றும் ஹதீஸ்கள் வந்துள்ளன.
எனவே முடிந்த அளவு அமர்ந்து அருந்த வேண்டும் என்றும்முடியாத போது நின்று கொண்டு அருந்தலாம் என்றும் இரண்டு வகையான ஹதீஸ்களையும் இணைத்து அறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.

நன்றி http://tntjmgm.blogspot.ae/2012/11/blog-post_2409.html


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

2. அக்கிரமக்காரர்கள் ‏ ழாலிமீன் ‏ -அநியாயம் செய்தவர்கள் - لظّٰلِمِيْن