தஸ்கியா என்றால் சூஃபிசமாம்! தரீக்காவாதியின் பிதற்றல்



from: Khaleel Baaqavee, K-Tic 
reply-to: K-Tic-group-owner@yahoogroups.com
to: "k-tic-group@yahoogroups.com"
date: Thu, Apr 18, 2013 at 9:14 AM
subject: [K-Tic] சூஃபிஸம், தசவ்வுஃப், தரீக்கா என்பது
இஸ்லாத்தின் அடிப்படை மேற் கண்ட
மெயிலுக்கு  பதில் விளக்கமாக வே
இதனையும் பதிகிறோம். அல்லாஹ்
நாடியவர்களுக்கு மட்டுமே நேர் வழி கிடைக்கும்


வினாக்களுக்கு பதில் இல்லை. ஆகவே அவற்றைப் பகிரங்கப்படுத்துகிறோம்.

கேப்டன் அமீருத்தீன்
‘அமீர் வில்லா’
26, ஜானகிராம் காலனி,
அரும்பாக்கம், சென்னனை – 16.
செல் : 9381027061, போன் : 044 – 24752608 நாள் : 11:08:2008
பெறுநர்:
மெளலவி. இனாமுல் ஹுசைன்
முதல்வர் அன்னை பாத்திமா(ரழி) அரபி கல்லூரி
ஹதீபு தெரு, தோப்புத்துறை – 614 809.
தொடர்பு : தோப்புத்துறை சின்னப்பள்ளிவாசலில் கடந்த 06.06.08-ல் ஜும்ஆவுக்கு முன் நீங்கள் செய்த ‘பயான்’
அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
கடந்த 06.06.08-ல் தோப்புத்துறையில் நடைபெற்ற ஒரு திருமணத்திற்கு நான் வந்திருந்தேன். அப்போது சின்னப் பள்ளிவாசலில் ஜும்ஆவுக்கு முன் நீங்கள் செய்த பிரசங்கத்தை கேட்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. அதில் எனக்கு எழுந்த சந்தேகங்களை உங்களை நேரில் சந்தித்து கேட்பதற்கு எனக்கு அவகாசமில்லை. ஆகவே, இக்கடிதம் மூலம் அவைகளை கேட்டிருக்கிறேன். பதில் அளிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் சொற்பொழிவில் ஒரு குர்ஆன் வசனத்தை நீங்கள் ஓதிக்காட்டினீர்கள். அது எந்த வசனம் என்பது நினைவில் இல்லை. ஆயினும் அது தொடர்பாக நீங்கள் கொடுத்த விளக்கம் இதுதான்.
அல்லாஹ் இந்த வசனத்தின் மூலமாக நபியவர்களுக்கு 4 கட்டளைகள் பிறப்பித்தான். அந்த கட்டளைகள் இறைவன் நபி மூசா(அலை) அவர்களுக்கு பிறப்பித்த 10 கட்டளைகளைப் போன்றது. அவைகளாவன:

1. குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்டு பாதுகாக்கப்பட்டவேண்டும்.
2. நபிமார்களின் (சொல், செயல், அங்கீகாரம் முதலிய) ஹதீஸ் பாதுகாக்கப்பட வேண்டும்.
3. குர்ஆன் மக்களுக்கு விளக்கப்படவேண்டும்.
4. இந்த வசனத்தில் வரும் ‘தஸ்கியா’ என்ற சொல்லுக்கு ‘சூஃபிஸம்’ என்பதே பொருள். அந்த ஆன்மீக பாதை வழியே மக்கள் ‘இறைநெருக்கம்’ அடைய வேண்டும்.

இறைவனிடமிருந்து மேல்கண்ட 4 கட்டளைகளை பெற்ற நபியவர்கள் அவைகளை நடைமுறைப்படுத்த 4 சகாபாக்களை ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக நியமித்தார்கள். அந்த பணிகளுக்கு முறையாக நியமிக்கப்பட்டவர்கள் கீழ் வருமாறு.
1. ஜைத் இபுனு தாபித்(ரழி)
2. அபு ஹுரைரா (ரழி)
3. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரழி)
4. அலீ(ரழி)
மேற்கண்ட கருத்தும் விளக்கமும் தான் நீங்கள் செய்த பயானின் சுருக்கமாகும். இதனை நீங்கள் மறுக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். வாதத்திற்காக உங்கள் கருத்தையும் விளக்கத்தையும் ஏற்றுக் கொள்வதாக இருந்தாலும் அதனால் எனக்கு எழும் சந்தேகங்களுக்கும், வினாக்களுக்கும் முறையான பதில் தரும்படி தங்களை கேட்டுக் கொள்கிறேன்.

வினாக்கள்:
1. வஹீ’ மூலம் நபியவர்களுக்கு குர்ஆன் வசனங்கள் அவ்வப்போது அருளப்பட்டபோது ஜைத் இபுனு தாபித்(ரழி) மட்டும்தான் அதை எழுதும் பணியில் நியமிக்கப்பட்டிருந்தார்களா? அல்லது வேறு பல எழுத்தர்களும் அந்த பணியை செய்தார்களா? வேறு பலரும் இருந்தார்கள் என்றால் அந்த பணியில் ஜைத் இபுனு தாபித்(ரழி)க்கு இருந்த சிறப்பு என்ன?

2. அபு ஹுரைரா(ரழி) ஹதீஸ்களை பாதுகாக்கும் பணிக்காக நபியவர்களால் பிரத்தியேகமாக நியமிக்கப்பட்டதால் மற்ற சகாபாக்கள் – ஆயிஷா(ரழி) உள்பட – அறிவிக்கும் ஹதீதுகள் பலஹீனமானவை’ என்ற நிலைக்கு தள்ளப்படுகிறதே; அது சரிதானா?

3. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரழி) குர்ஆனை விளக்குவதற்காக நியமிக்கப்பட்டதால் அவரால் எழுதப்பட்ட ‘தப்ஸீர்’ எதுவும் இருக்கிறதா? இல்லையென்றால் முழு குர்ஆனையும் அவருடைய விளக்கம் இல்லாமல் நாம் எப்படி விளங்குவது? மேலும் அவர் தமக்கு கொடுத்த பொறுப்பை சரியாக செய்யாமல் விட்டு விட்டார் என்று கூறுகிறீர்களா?

4. ’தஸ்கியா’ என்னும் குர்ஆன் வசனத்தில் வரும் சொல்லுக்கு ‘சூஃபிஸம்’ என்று தாங்கள் பலமுறை உங்கள் பயானில் பொருள் சொன்னீர்கள். இந்த பொருளும் அதற்கான ஆன்மீக விளக்கமும் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் சொல்லிய விளக்கம்தானா? மேலும் நீங்கள் உங்கள் பயானுக்கு ஆதாரமாக எடுத்துக் கொண்ட 4 கட்டளைகள் பற்றிய குர்ஆன் வசனத்துக்கு நீங்கள் கூறிய விளக்கமும் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரழி) கூறியதுதானா? ஆம் என்றால் ஆதாரம் காட்டுங்கள்.

மேல்கண்ட 4-வது வினா எழுவதற்கு நியாயமான காரணம் உண்டு. உங்கள் கருத்துப்படி குர்ஆனுக்கு விளக்கம் சொல்ல நபியவர்கள் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரழி)யை நியமித்த பிறகு அந்த தகுதி வேறு யாருக்கும் இல்லை என்றாகிறது. அந்த பட்டியலில் நீங்களும், உங்களின் உஸ்தாதும் அடங்குவீர்கள். ஆகவேதான் அந்த கேள்வி.

5. மேலே க்ணட 4 தார்மீக கடமைகளுக்கு தகுதியானவர்களை நியமிக்கும்படி கட்டளையிட்ட வல்ல அல்லாஹ், நபியவர்கள் காலத்திலேயே அரபு தீபகற்பம் முழுவுத் பரவிவிட்ட இஸ்லாமிய சாம்ராஜ்யத்துக்கு அவர்களுக்குப் பின் ஒரு ஆட்சியாளரை – அதாவது கலீபாவை நியமிக்கும்படி கட்டளையிட மறந்து விட்டான் என்று கூறுகிறீர்களா? இல்லை அந்த பூமியை நீங்கள் நபியவர்கள் மீது போடுகிறீர்களா?

6. ’சூஃபிஸம்’ எனும் ஆன்மீகப் பாதையை மக்களுக்கு போதிக்க நபியவர்களால் அலீ(ரழி) நியமிக்கப்பட்டார்கள் என்று நீங்கள் உங்கள் பயானில் கூறினீர்கள். ஆனால், நபியவர்கள் மரணப்படுக்கையில் கிடந்தபோது ஆட்சியாளராக அவர்களுக்குப்பின் யார் வருவது என்பதை அவர்களிடமே நேரில் கேட்டுவிட துணிந்து அப்பாஸ்(ரழி) அவர்கள் அலீ(ரழி)யை அழைத்தபோது ‘நபியவர்கள் இப்போது என்னை நியமிக்க மறுத்துவிட்டால் பின் எப்போதும் நான் அந்த பதவிக்கு வரமுடியாது’ என்று காரணம் கூறி அழைப்பை அலீ(ரழி) ஏற்க மறுத்தார்கள் என்று ஹதீதும் வரலாறும் கூறுகிறது. இதிலிருந்து அலீ(ரழி)க்கு ‘கிலாபத்’ பதவி ஏற்க விருப்பமிருந்தது என்பதை நாம் அறிய முடிகிறது. நபியவர்கள் கொடுத்த ஆன்மீகப் பொறுப்பை தட்டிக்கழித்துவிட்டு அலீ(ரழி) கிலாபத் பதவிக்கு ஆசைப்பட்டார் என்று நீங்கள் கூறுகிறீர்களா?

7. நபியவர்கள் மரணித்தபோது அலீ(ரழி) சுமார் 34 வயதுடையவர். நபியவர்களுக்கு பின் அபூபக்கர்(ரழி) 2 ஆண்டுகள், உமர்(ரழி) 11 ஆண்டுகள், உதுமான்(ரழி) 11 ஆண்டுகள் ஆக மூன்று கலீபாக்களின் ஆட்சி 24 ஆண்டுகள் நீடித்தது. ஆக தொடர்ந்து 24 ஆண்டுகள் அலீ(ரழி) அரசியல் ஆட்சி அதிகாரத்திலிருந்து ஒதுங்கியே இருந்தார். உங்கள் கருத்துப்படி அந்த காலங்களில் அவர் சூஃபிஸ ஆன்மீகப் பாதைக்கு மக்களை அழைப்பதில் ஈடுபட்டிருந்தார் என்றே எடுத்துக் கொள்வோம். ஆனால் உதுமான்(ரழி) கொலை செய்யப்பட்டவுடன் அலீ(ரழி) தமது 58-வது வயதில் கிலாபத்துக்கு போட்டி போட்டார் என்பதும் வரலாற்று உண்மை. அவரின் கிலாபத்தை ஏற்க மறுத்த ஆயிஷா(ரழி)யுடனும், முஆவியா(ரழி)யுடனும் அதற்காக அவர் போர்புரியவும் தயங்கவில்லை. ஆன்மீக பக்குவம் நிறைந்த 58-ம் வயதில் ஆன்மீகப் பாதையை துறந்து அரசியல் அதிகாரத்துக்கு போட்டிபோட்ட அலீ(ரழி)யின் செயல் தவறு என்று நீங்கள் கூறுகிறீர்களா?

8. ஒவ்வொரு ‘தரீக்கா’வும் அதாவது ஆன்மீகப் பாதையும் அலீ(ரழி)யுடன் சென்று சேர்வதாகவும் உங்கள் சொற்பொழிவில் கூறினீர்கள். சூஃபிஸ ஆன்மீகப் பாதையை இடையில் கைவிட்டு ‘கிலாபத்’ எனும் அரசியல் சார்ந்த பதவிக்கு போட்டி போட்ட அலீ(ரழி)யின் தரீக்கா ஈடேற்றத்தை கொடுக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

இந்த கேள்விகள் எல்லாம் உங்களுடைய பயானில் நீங்கள் எடுத்த நிலைபாபாடுகளால் எழுகிறதே தவிர அவை எதுவும் எனது சொந்த விருப்பு வெறுப்புகளால் ஏற்பட்டது அல்ல. அப்படியே சகாபா பெருமக்களைப் பற்றிய விமர்சனத்துக்கும் உங்களின் பயானே காரணமாகும் என்பதை தெளிவுபடுத்தி இதனை முடிக்கிறேன். தங்களின் பதிலுடன் பயானில் குறிப்பிட்ட குர்ஆன் வசனத்தையும் எனக்கு தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
எஸ்.எச். அமீருத்தீன்

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு