இஜ்மாஃ இல்லைன்டா . குர்ஆனே இல்லை.ஸைபுத்தீன் ரஷாதி 6ஆவது உரை


இஜ்மாஃவும் மார்க்கத்தின் ஆதாரம் என்று பேச வந்த  ஸைபுத்தீன் ரஷாதி அவர்கள்,    குர்ஆன் ஹதீஸிலிருந்து இஜ்மாவுக்கு நேரடியாக ஆதாரம் காட்ட முடியுது முடியல்லங்கிறது அடுத்த விஷயம் என்று கூறி நழுவுகிறார். மவுலவி ஸைபுத்தீன் ரஷாதி அவர்களின் கைப் பேசி எண் 0-9916500979. 

(இஜ்மாஃவுக்கு குர்ஆன் ஹதீஸ்களிலிருந்து ஆதாரத்தை வைத்து விட்டு அதைத் தான்  விளக்கிச் சொல்ல வேண்டும். அது தான் உண்மையாளர்களின், அறிவாளிகளின் பண்பாகும். முதலில் 12 நிமிஷத்தைக் காரணம் காட்டினார். திசையை திருப்பிக் கொண்டு போகலாம் என்று பார்க்கிறார்கள் என்று இப்பொழுது ஜோசியம் சொல்கிறார்.)

(இதற்கு பல முறை பதில் விளக்கம் சொல்லப்பட்டு விட்டது.  ஒருவன் ஆய்வு செய்து சொல்லி விட்டானேயானால். அது கரக்டாக இருக்குமேயானால் அது ஓ.கே. ஒரு ஆயிரம் பேர் சேர்ந்து சொல்கிறார்கள். ஆய்வு செய்து சொல்கிறார்கள் ஏற்றுக் கொள்வோம். எதற்காக வேண்டி ஆயிரம் பேருக்காக ஏற்றுக் கொள்ளவில்லை. கரக்டாக இருக்கிறதற்காக வேண்டி.

ஆயிரம் பேர் சொல்கிறார்கள் அவர்கள் சொல்கிற வசனத்திற்கும் அவா்கள் முடிவுக்கும் சம்பந்தமில்லை அப்ப என்ன சொல்வோம் இது தப்பு என்று சொல்லி விடுவோம். அப்ப நம்பரை வைத்து தீா்மானம் இல்லை என்று . அதன் பிறகும் மீண்டும் மீண்டும் இந்த புராணத்தை வாசிக்கிறார் என்றால்  மவுலவி ஸைபுத்தீன் ரஷாதியிடம் பண்டம் இல்லை என்று அர்த்தமா? … டையில் இல்லை என்று அர்த்தமா?)

(எது இஜ்மாஃ? எதுக்கு பேரு இஜ்மாஃ? என்பது அல்ல தலைப்பு. இஜ்மாஃவும் மார்க்கத்தின் அடிப்படைதான் என்பதற்கு குா்ஆன் ஹதீஸ்களில் ஆதாரம் உண்டா என்பது தான் அதற்கு பதிலைக் காணோம்)
போன்றவை நமது விமர்சனங்கள் ஆகும்.
ஸைபுத்தீன் ரஷாதி 6ஆவது உரை
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு. கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! 

நேரம் குறிப்பிடப்பட்டிருக்கிறதனாலே ஒரு விஷயத்தை முடிவு செய்ய முடியவில்லை. பூர்த்தி செய்ய முடியவில்லை. நான் அவுங்க அந்த இஜ்மாவுடைய முன்னால் சென்றிருந்து நம்முடைய முன்னோர்கள். ஒட்டு மொத்தமாச் செய்த விரவுரைக்கு மாற்றமாக, கருத்துக்களுக்கு முரணாக, தன்னிச்சையாக பொருள் செய்ய கிளம்பியதின் காரணத்தினால் குழப்பம் தான் மிஞ்சும். 

அதில் ஈமானோ தீனோ மிச்சமிருக்காது என்கிற கருத்தை நான் உங்களுக்குச் சொல்லிக் கொண்டு இருந்தேன். அதைச் சொல்லி விட்டு நான் சில விஷயங்களை இன்ஷாஅல்லாஹ் அவர் சொன்னதற்கு நான் பதில் சொல்கிறேன்.

அடுத்து நம்ம புறத்திலிருந்து நிறைய கேள்வி இருக்கிறது. கேட்போம் ஆதாரமும் சொல்லுவோம். சொல்லாமல் இல்லை. ஆதாரங்கள் சொல்லுகின்ற போது அப்படியே திசையை திருப்பிக் கொண்டு போகலாம் என்று பார்க்கிறார்கள். அதனால் இஜ்மாஃ என்ன என்பதை உங்களுக்கு ஆரம்பத்திலிருந்தே விளக்கிச் சொல்லிக்கிட்டு இருக்கிறேன்.

(இஜ்மாஃவுக்கு குர்ஆன் ஹதீஸ்களிலிருந்து ஆதாரத்தை வைத்து விட்டு அதைத் தான்  விளக்கிச் சொல்ல வேண்டும். அது தான் உண்மையாளர்களின், அறிவாளிகளின் பண்பாகும். முதலில் 12 நிமிஷத்தைக் காரணம் காட்டினார். திசையை திருப்பிக் கொண்டு போகலாம் என்று பார்க்கிறார்கள் என்று இப்பொழுது ஜோசியம் சொல்கிறார்.)

ஒரு ஆளு தனியா ஆய்வு செஞ்சாலே அங்கீகரிக்கணும்னு சொன்னா. அன்றைய காலத்தில் இருக்கக் கூடிய அனைவரும் சேர்ந்து ஒரு பொருளை சொல்கிறாங்கண்டா அதை ஏத்துக்கிட முடியாதுன்னு சொல்லக் கூடிய வினோதமாத் தெரியுது நமக்கு.

(இதற்கு பல முறை பதில் விளக்கம் சொல்லப்பட்டு விட்டது.  ஒருவன் ஆய்வு செய்து சொல்லி விட்டானேயானால். அது கரக்டாக இருக்குமேயானால் அது ஓ.கே. ஒரு ஆயிரம் பேர் சேர்ந்து சொல்கிறார்கள். ஆய்வு செய்து சொல்கிறார்கள் ஏற்றுக் கொள்வோம். எதற்காக வேண்டி ஆயிரம் பேருக்காக ஏற்றுக் கொள்ளவில்லை. கரக்டாக இருக்கிறதற்காக வேண்டி.

ஆயிரம் பேர் சொல்கிறார்கள் அவர்கள் சொல்கிற வசனத்திற்கும் அவா்கள் முடிவுக்கும் சம்பந்தமில்லை அப்ப என்ன சொல்வோம் இது தப்பு என்று சொல்லி விடுவோம். அப்ப நம்பரை வைத்து தீா்மானம் இல்லை என்று . அதன் பிறகும் மீண்டும் மீண்டும் இந்த புராணத்தை வாசிக்கிறார் என்றால்  மவுலவி ஸைபுத்தீன் ரஷாதியிடம் பண்டம் இல்லை என்று அர்த்தமா? … டையில் இல்லை என்று அர்த்தமா?)

அஜ்தஹிது பிரஅஃய்யி அந்த ஹதீஸை ஏக்றேன் சொன்னாங்க. அத ளயீபுன்னு இருந்தாலும் கூட நாங்க ஏத்துக்கிறேன் சொல்றாங்க. அந்த இடத்துலே ஏத்துக்கிடக் கூடிய தேவையும் வந்திடுச்சு. ஏத்துக்கிட்டாங்க.

(வாதத்துக்காக ஏற்றுக் கொள்வோம் என்றாலே அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தான் அர்த்தம். இது பாமரனுக்கும் தெரிந்த ஒன்று இந்த பண்டிதருக்கு ஏன் தெரியாமல் போனதோ?)

அத வைச்சு அத இஜ்மாவுக்கு முரணாக அத எடுத்துக் காட்னாரு. அங்கே ரசூலுல்லாஹ் சொல்றாங்க. ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். குர்ஆன்லேயும் ஹதீஸிலேயும் கிடைக்கலைன்னனா நான் ஆய்வு செய்கிறேன். நீ ஆய்வு செஞ்சுக்க.

முஆது இப்னு ஜபல் ரலியல்லாஹு அன்ஹுக்கு எடுத்து சொல்றாங்க ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். அப்ப ஹஸரத் முஆது சொல்றதை நபி அங்கீகரிக்கிறாங்க. அப்ப முஆது தனியாக இருந்து ஒரு கருத்தை சொல்றாருண்டா அதை அங்கீகரிக்ணும், ஏத்துக்கணும் சரியாத்தான் இருக்கும் ரசூலுல்லாஹ் சொல்றாங்கன்னா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.

முஆது போன்ற மற்ற ஸஹாபாக்களும் சோ்ந்து ஒரு கருத்தை வெளியிலே மக்களுக்கு சொல்றாங்க. அதற்கு எதிராக யாருமே கருத்து சொல்லலை. அப்டீங்கும்போது. அத்தனை ஸஹாபாக்களும் அங்கீகரிச்சாங்கதானே. அதை ஏக்கதானே வேணும். எல்லா ஸஹாபாக்களும் அங்கீகரிச்சிட்டாங்கன்னு கிடைக்கும் போது அந்த பொருளை ஏக்க தானே வேணும். இதுக்கு பேருதான் இஜ்மா? வேற இஜ்மாங்கக் கூடியது எல்லாம் மீட்டிங் போட்டு பாஸ் பண்றதுக்கு பேரு அல்ல. அப்படீன்னு விளக்கியும் சொன்னேன்.இதே கருத்தை அவுங்களும் சொல்லி இருக்கிறாங்க.

(எது இஜ்மாஃ? எதுக்கு பேரு இஜ்மாஃ? என்பது அல்ல தலைப்பு. இஜ்மாஃவும் மார்க்கத்தின் அடிப்படைதான் என்பதற்கு குா்ஆன் ஹதீஸ்களில் ஆதாரம் உண்டா என்பது தான் அதற்கு பதிலைக் காணோம்)

அவுங்களும் சொல்லி இருக்கிறாங்க. இன்னைக்கு சும்மா மாறிக்கிட்டே இருக்கிறாங்களே தவிர நான் எதிலே மார்னே. திடீர்னு கேட்டா? அபுஹனீபா எத்தனைல மாறுனாறு. அபுஹனீபா இங்கிருந்திருந்தா அவர்கிட்ட நாம கேட்டிருப்போம். இந்த கருத்தைச் சொன்ன பி.ஜே. இங்கே இருக்கிறதுனாலே நாங்க கேட்கிறோம். விளங்குதா.

அவர் நீங்க சொல்லிக்கிட்டு இருக்கிறீங்களே அதனாலே என்ன காரணம்னு கேட்கிறோம். அபுஹனீபாவை கேட்பியான்னு கேட்டா எங்கிருந்து போட்டு நான் கேட்கிறது. கபுருஸ்தானில் நின்டுதான் நான் கேட்க முடியும். அதனாலே அந்த இத நீங்க உவமானமா வைக்க கூடாது. எல்லாரும் சொன்னாங்க. அதுக்கு மாறுபட்டும் கூட இருக்கலாமே. இமாமே ஷாபி அப்படி சொல்லிட்டாங்கன்னு இப்ப சொல்ல வர்ராங்க. 

ஆனால் இதே நபர்கள். இதுக்கு முன்னாலே மார்ச் மாதம் 1990 இருபத்தி நாலாவது பக்கம் அல் ஜன்னத்திலே எழுதும்பொழுது. ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பெயரைச் சொல்லும்பொழுதோ  பெயரை கேட்கும்பொழுதோ ஸலவாத்து சொல்ல வேண்டும் என்று ஹதீஸிலே இருக்குது. நபி பேர்லே ஸலவாத்து சொல்லணும்.

ஆனால் நபி பேர்லே ஸலவாத்து சொல்லறதா இருந்தா ஸலவாத்து எதுவா இருக்கணும் நபி சொல்லிக் கொடுத்த ஸலவாத்தாத்தான் இருக்கணும். தன் இஷ்டத்துக்கு ஸலவாத்துன்னு சொன்னா ஏகப்பட்ட ஸலவாத்துகளெல்லாம் இருக்குது. ஆகையினால் தன் இஷ்டத்துக்கு ஸலவாத்து சொல்லக் கூடாது. நபியால் கூறப்பட்ட கற்பித்து கொடுக்கப்பட்ட நமக்கு எடுத்து வழங்கப்பட்ட அந்த ஸலவாத்துதான் சொல்லணுட்டு பல இடங்கள்லே எழுதி இருக்கிறாங்க.

பல இடங்கள்லெ அது. தன்னுடைய புறத்திலிருந்து எந்த ஸலவாத்தையும் உண்டாக்கக் கூடாது உருவாக்க கூடாது என்ற கருத்தை சொல்லி இருக்கிறாங்க. அதே நேரத்திலே ஒருத்தர் கேள்வியா  கேட்கிறாரு தொன்னுாறுலே அல் ஜன்னத்திலே கேட்கிறாரு. ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று ஸலவாத்து நம்ம ஓதுறோமே இதுக்கு நன்மை கிடைக்குமா?  

நன்மை கிடைக்குமான்னா இது நபி வழியிலே சொன்னதாக ஆகுமா? இத அங்கீகரிக்கலாமா? ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த வாசகம், இந்த சொற்றொடர் எந்த ஹதீஸிலேயாவது வந்திருக்குதா? எங்கேயாவது? 

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். அல்லாஹும்ம ஸல்லி சொல்லிக் கொடுத்தாங்க. ஸல்லி அலா முஹம்மதின் கமா ஸல்லைத்த சொல்லிக் கொடுத்தாங்க. எத்தனையோ ஸலவாத்தை சொல்லிக் கொடுத்திருக்காங்க நாம ஓதிக்கிட்டு இருக்கிறோம். தொழுகையிலும் ஓதுகிறோம், தொழுகைக்கு வெளியயேவும் ஓதுறோம்.

ஒரு ஸலவாத்தை இன்றைக்கு முழு இஸ்லாமிய சமுதாயமும் சொல்லிக்கிட்டு இருக்கு. அதுக்கு யாரும் மறுப்பும் சொல்லலை. இதைத்தான் நாம இஜ்மாஃ என்கிறோம். யாருமே மறுப்பு சொல்லாமே மாக்கமாக அங்கீகரிச்சுக்கிறாங்க. ஏன்னா சொன்னா நன்மை கிடைக்கணும். இதைச் சொன்னாத்தான் நபி உடைய பேரைச் சொன்னதுக்கு பிறகு ஸலவாத்து சொன்னதுடைய அந்தஸ்து பெறுவான். சொல்லாம இருக்கக் கூடிய குற்றத்தை விட்டும் தவிர்ந்துக்கிடுவான். அப்ப இந்த ஸலவாத்தை சொன்னாலே போதுமாங்கக் கூடிய கேள்விக்கு இவங்களே எழுதுறாங்க சொல்லலாம்.

இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லத்துக் கிட்டே இருந்து இது ஊர்ஜிதமாகலே. இருந்தாலும் கூட ஸஹாபாக்களெல்லாம் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. ஆகையினால சொல்றது தப்பு இல்லை. இதுக்கு பேரு என்னான்னு நான் கேட்கிறேன். அனைத்து ஸஹாபாக்களும் சொன்னார்கள்னு சொல்லி எழுதி இருக்கிறீங்களே. இந்த அனைவரும்லே எத்தனையோ பேர் வாயை மூடிக்கிட்டு இருந்தா என்ன செஞ்சிருப்பீங்க. தப்புன்னு நினைச்சுக்கிட்டே இருந்திருந்தா என்ன செஞ்சிருப்பீங்க.

அப்ப அனைவரும் இங்கக் கூடிய வார்த்தையை போட்டது எப்படி அங்கே சரியாகும். எழுதும்போது சொல்றாரு ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று நபித் தோழர்கள் அனைவரும் பயன்படுத்தி உள்ளனர். ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லிக் கொடுத்தாங்கன்னுட்டு இல்லை.

கால ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இன்ன ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கான ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதுவே உதாரணமா எழுதுறாரு அவரு. எழுதிட்டு சொல்றாரு. நபித் தோழர்கள் அனைவருமே இதை பயன்படுத்தி இருக்கிறதினாலே. இதை நாம தாரளமாகச் சொல்லலாம் இதிலே எந்த தடையுமல்ல. இப்படி சொல்றதினாலே நன்மையும் கிடைக்கும். அப்படீன்னு சொன்னா இது இஜ்மாஃ ஆகாதா? நீங்களே அங்கீகரிக்கிறீங்களே.

நாங்க சொன்னதை ஏன் ஆதாரமாக காட்டுரீங்கன்னு சொல்லக் கூடாது. அங்கீகரிக்கிறீங்க, செயல்படுறீங்க, எப்படி கியாஸு உண்டுக்குண்டு ஏத்துக்கிட்டீகளோ பேரைச் சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டீங்க. இஜ்மாஃவை செயல்படுத்திட்டிருக்கிறீங்க. பேரைத்தான் மறுத்துட்டிருக்கிறீங்க.

பேரைத்தான் மறுத்துட்டிருக்கிறீங்களே தவிர உண்மையிலே செயல்படுத்திட்டுதான் இருக்கிறீங்க. நீங்க ஆயிரம் அதற்குண்டான விளக்கம் சொன்னாலும். இஜ்மாஃவுக்கு ஆதாரம் காட்டலைன்னு அதே பல்லவியை பாடினாலும். ஒவ்வொரு தொடரிலேயும் இன்னும் ஆதாரம் காட்டலை. இன்னும் ஆதாரம் காட்டலை இன்னும் ஆதாரம் காட்டலைன்னு சொல்லிக்கிட்டே இருந்தாலும் கூட. உண்மையிலே என்னா இருக்குது நடை முறையிலே இருந்துச்சு.

ஒரு விஷயத்தைச் சொல்றேன். என்னை மன்னிக்கனும். குர்ஆன் ஹதீஸிலிருந்து நேரடியா இஜ்மாஃவுக்கு ஆதாரம் சொல்ல முடிகிறதோ இல்லையோ. அடுத்த விஷயம். இந்த குர்ஆனும் ஹதீஸும் இஜ்மாஃவை வைத்துதான் முடிஞ்சுது. இஜ்மாஃ இல்லைன்டா குர்ஆனும் இல்லை. குர்ஆனே இல்லை. எப்படி குர்ஆனை ஏத்துக்கிறது. தகவலாக, தகவலாகத்தான் அங்கீகரிச்சீங்களா இல்லையா?

குர்ஆன் நபி சொன்னாங்க. சரி நபி சொன்னாங்க நம்ம கேட்டோமா? ஸஹாபாக்கள் சொன்னாங்க கேட்டோமா? தாபியீன்கள் சொல்லி வச்சாங்க கேட்டுக்கிட்டோமா? வாழையடி வாழையாக ஒரு தகவல் பரிமாறப்படுது அந்த தகவலை அப்படியே அங்கீகரிச்சுக்கறோம். இது இஜ்மாஃ இல்லையா? ஆகையினால தான் சொல்றேன் குர்ஆன் ஹதீஸிலிருந்து இஜ்மாவுக்கு நேரடியாக ஆதாரம் காட்ட முடியுது முடியல்லங்கிறது அடுத்த விஷயம்.

இந்த குர்ஆனே ஹதீஸே கூட இஜ்மாஃ என்ற அடிப்படையிலேதான் அது ஊர்ஜிதமாகுது. அந்த இஜ்மாஃ என்பது இல்லை என்று சொன்னால். எல்லாரும் புகுந்து விளையாடுவான். அவுங்க அவுங்க நினைச்சதை சொல்ல ஆரம்பிச்சுடுவாங்க.

அருமைச் சகோதரர்களே! அது மட்டுமல்ல. குர்ஆனுடைய தொகுப்புலே. தொகுப்புரையிலே பி.ஜே. எழுதி இருக்கிறார். அதிலே சுத்தமா எழுதுறார். ஒவ்வொரு கட்டுரைகளும் எழுதப்படும்பொழுது. இது ஆரம்பத்தில் எல்லாரும் மறுத்துக்கிட்டு இருந்தாலும் கூட. அதிலேயும் பெரிய கொடுமை என்னான்னு சொன்னா. இப்ப சமீப காலத்தில் பேசும்பொழுது. குர்ஆன் கூட அனைவராலும் அங்கீகரிக்கப்படலை என்கிறாரு.

குர்ஆனும் கூட நபித் தோழர்கள் அனைவராலும் அங்கீகரிக்கப்படலை. நபித் தோழர்கள். அதில் நாற்பதுக்கும் அதிகமாக கருத்து வேறுபாடுகள் இருந்தது. ஹஸரத் இப்னு மஸ்ஊது ரலியல்லாஹு அன்ஹு தெளிவாகச் சொன்னாங்க. குர்ஆன்லே நுாத்தி பனிரண்டு(112) சூரா தான். கடைசி வரைக்கும் ஒத்துக்கிட மாட்டேன்னுட்டாரு. கடைசி வரைக்கும் நுாத்தி பதினாலு (114) இல்லை. குல் அவூது பிரப்பில் பலகுமில்லை. குல் அவூது பிரப்பின் நாஸுமில்லை. என்ற கருத்தை இப்னு மஸ்ஊது ரலியல்லாஹு அன்ஹு கடைசி வரைக்குமே மறுத்துக்கிட்டிருந்தாங்க. அப்படீன்டு பேசி இருக்கிறார். அந்த கிளிப் போடுவாங்க. அந்த குர்ஆனுடைய கிளிப்புரைய பாருங்க. அதுக்குப் பிறகு நான் சொல்றேன்.
பி,.ஜே. உரை போட்டு காட்டப்படுகிறது.
எல்லாரும் சோ்த்து அமுல்படுத்துறது என்பது வேற. குர்ஆன்லே இல்லாத ஹதீஸ்லே இல்லாத ஒரு விஷயத்திலே. ஸஹாபாக்கள் அத்தனை பேரும். ஒருமித்த கருத்துக்கு வந்தார்கள் என்று சொன்னால். அதுக்கு ஒரு உதாரணம் காட்ட இயலாது. காட்றதா இருந்தா. இந்த குர்ஆனை அவுங்க தான் தொகுத்தாங்கன்னு காட்டுவாங்க. அதுவே தவறு. என்ன தவறு?

குர்ஆன் வந்து இஜ்மாவாக ஏற்றுக் கொள்ளப்படவே கிடையாது. இதை இப்னு மஸ்ஊது ரலியல்லாஹு அன்ஹு அவுக குர்ஆனை எழுதக் கூடிய எழுத்தாளர்கள்லே அவர் ஒரு ஆளு. அவருடைய குர்ஆன்லே வந்து நுாத்தி பனிரண்டு(112) சூரா தான். இப்னு மஸ்ஊதுடைய தொகுத்த குர்ஆன்லே எத்தனை சூரா நுாத்தி பதினாலு (114) கிடையாது. கடைசி ரண்டு சூரா வந்து குர்ஆனே கிடையாதுன்னுட்டாரு அவரு. கடசி வரைக்கும். கடசி வரையிலும். என்ன பண்ணிட்டாரு.

ஸைபுத்தீன் ரஷாதி தனது உரையை தொடர்கிறார்.
குல் அவூது பிரப்பில் பலக் வந்து குர்ஆன் கிடையாது. . குல் அவூது பிரப்பின் நாஸுங்கிறது குர்ஆன் கிடையாது. குல் ஹுவல்லாஹு அஹதோட முடிஞ்சிடுச்சு குர்ஆன் என்பாரு. அப்ப அவருடைய குர்ஆன்..
அப்ப கேட்டுக்கிட்டீங்களா? இப்னு மஸ்ஊது ரலியல்லாஹு அன்ஹு கடைசி வரைக்கும் ஒத்துக்கிடவே இல்லை. எவ்வளவு ஆணித் தரமா பேசுறார் பாருங்கள். இப்ப பேசினது, சமீப காலங்களில் பேசினது. ஆனா(ல்) அந்த தொகுப்புரையிலே என்ன எழுதி இருக்கிறார் தெரியுங்களா? தொகுப்புரையிலே எழுதும்பொழுது. எந்த அளவிற்கு அதை அவர் அங்கீகரிச்சு எழுதுறாரு.
உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய இந்த ஏற்பாட்டை (அதாவது) குர்ஆனை ஒன்று சேர்த்ததனுடைய ஏற்பாட்டை அன்றைய சமுதாயத்திலிருந்த நபித் தோழர்களிலும் நல்லோர்களிலும். யாருமே ஆட்சேபிக்கவில்லை. இதுக்கு பேரு என்ன? உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு ஒன்று சேகரித்து கொடுத்த குர்ஆனை ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் செய்யாத செயலை. ஏன்டா இந்தக் குர்ஆனை ஒன்று சேர்ப்பதற்காக வேண்டி சொல்லப்பட்டபொழுது, உமர் அவர்களால் ஆலோசனை சொல்லப்பட்டபொழுது. அபுபக்கா்  ரலியல்லாஹு அன்ஹு சொல்லி மறுத்ததற்குண்டான காரணம் என்ன?

நபி செய்யாத செயலை நான் எப்படி செய்வேன்? நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அப்படி செய்து கொடுக்கலீலே. செய்யச் சொல்லல்லீலே குர்ஆனை சேகரிச்சு வையுங்கோன்னு நமக்கு கட்டளை இடலியே. செயலாலும் செய்யலே. சொல்லாலையும் செய்யலியே அப்படிப்பட்ட செயலை நான் எங்கிருந்து செய்யப் போறேன் புகாரியிலே ரிவாயத்து இருக்குது.

இன்னைக்கு புகாரி உடைய கதியும் அதோ கதியாப் போச்சு. மறுக்கக் கூடிய நிலையும் வந்திடுச்சு சகோதரா்களே. பல ஹதீஸ்கள் நுாற்றுக் கணக்கான ஹதீஸ்கள. இப்ப சமீபத்திலே ஒருத்தர் கூட அவருடைய குரூப்லே உள்ளவர் பேசுறார். எங்களுக்கு மனசிலே பட்டா ஏத்துக்கிடுவோம். மனசிலே படலைன்னா அந்த ஹதீஸை நிராகரித்து விடுவோம். பிராக்டிக்கலா ஒத்து வந்தா எடுத்துக்குவோம். அஜ்வாவ்லே, ஹப்பத் ஸவ்தாவ்லே கறுஞ் சீரகத்தினுடைய விஷயத்திலே சொல்ல வர்றாரு.

நான் அந்த விஷயத்துக்கு வரலே. இங்கே அவரு எழுதும்பொழுது சொல்றாரு. உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு உடைய இந்த புதிய ஏற்பாட்டை. நபி அவா்கள் செய்யாத செயலை இவங்க செஞ்சதுக்குப் பிறகு. யாருமே ஆட்சேபிக்கலை. ஸஹாபாக்கள்லே யாருமே ஆட்சேபிக்கலை. இது தேவையான சரியான ஏற்பாடுதான் என்பதை ஒப்புக் கொண்டனர்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மட்டும் தம்முடைய பழைய பிரதியை எரிக்க முதலில் மறுத்து விட்டார். இத தன்னுடைய நுாலை எரிக்கலை. என்னுடையதிலேதான் இருப்பேன்னு சொன்னார். பிறகு தனது முடிவை மாற்றிக் கொண்டு உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உடைய இந்த பணியின் முக்கியத்துவத்தையும் நியாயத்தையும் அறிந்து இதற்கு கட்டுப்பட்டு விட்டார். 

ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயம் மற்றும் நல்லறிஞர்களின் ஏக மனதோடு, ஏக மனதான முடிவோடு, அனைவரின் கண்காணிப்பிலும் குர்ஆன் பாதுகாக்கப்பட்டது.     
 
அப்ப உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உடைய காலத்திலே செஞ்சதை இப்னு மஸ்ஊது ரலியல்லாஹு அன்ஹு ஆரம்பத்திலே அந்த ரண்டு சூராவை பத்தி கருத்து வேறுபாடு சொல்லி இருந்தாங்க. அது விளக்கம் கருத்து வேறுபாடு குர்ஆன்லே இல்லே இறக்கப்படலேன்னு சொல்லலே. 

எழுதப்படணுமா இல்லியான்னு சொன்னாங்க. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எழுதுங்கன்னு சொன்னா எழுதி வப்போம். இல்லாட்டி எழுத மாட்டோம்னு சொன்னாங்க. இத இப்னு ஹஜர் ரஹ்மதுல்லாஹ் தெளிவா பத்ஹுல் பாரியிலே புகாரி உடைய விரிவுரையிலே தெளிவா எழுதுறாரு.
அப்ப அவுங்களுயை விளக்கப்படி. இப்னு மஸ்ஊது ரலியல்லாஹு அன்ஹு ஆரம்பத்திலே.
(நேரம் முடிந்து விட்டது)




Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு