ரஷாதி 7ஆவது உரை அழு குரலில் உங்களுக்கு எம்பதுகளிலிருந்து கேட்கிது நமக்கு எம்பதிலிருந்துதான் கேட்குது
கண்ணியத்திற்குரிய
சகோதரர்களே! அவருடைய
நுால்கள்லே எழுதப்பட்டிருந்த வாசகங்களை எடுத்துக் காட்டி நீங்களும் செயல்பாட்டில் ஏத்துக்கிட்டு
தானே இருக்கிறீங்க. அப்பறம் ஏன் நீங்க அந்த பேரை மறுக்கிறீங்க. பேரோடு உங்களுக்கு என்ன
விரோதம். செயல்பாட்டில் அங்கீகரிச்சு இருக்கிறீங்க. அனைவராலும் ஏத்துக் கொள்ளப்பட்டதுன்னு
சொல்றீங்க.
குர்ஆன் விஷயத்தை சொல்றீங்கன்னா.. குர்ஆனை கருத்தாகவா ஏத்துக்கிட்டோம்.
தகவலா ஏத்துக்கிட்டோம். அது இஜ்மா இல்லியா? தகவலா சொல்றது வர்ரது இஜ்மா இல்லியா? ங்றேன். எல்லாரும் சேர்ந்து இந்த
தகவலை அங்கீகரிச்சுக்கறது. நான் சொன்னேன்லே இஜ்மாவுக்கு ரண்டு வகை இருக்கு.
ஒன்று
ஆய்வோட சம்பந்தப்பட்டது. இன்னொன்னு அங்கீகாரத்தோட சம்பந்தப்பட்டது. அங்கீகாரத்தோட சம்பந்தப்பட்ட
இஜ்மாஃதானே அதுவும். அதை எல்லாருமே அந்த தகவலை நபி சொன்னாங்க ங்றதுக்குத்தான் ஏத்துக்கறோம்.
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்ன காரணத்தாலே ஏத்திருக்கிறோம். ரண்டு ஸஹாபி
சொன்னா கூட ஏத்துக்குடுவோம்தான்.
ரண்டு
ஸஹாபி ங்கிற இடத்திலே ரண்டாயிரம் ஸஹாபிகள் சொல்லி இருக்கிறாங்கன்னா. அதை ஏக்றோம்னு
சொன்னா. அது இஜ்மாஃ ஆகாதா? மாறுபட்ட கருத்து இல்லாமல் ஒன்றுபட்ட கருத்தோடு ஒரு தகவலைத்
தர்ராங்க. ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லத்திடமிருந்து
எத்தனை தகவல்கள். மாறுபட்ட கருத்தோ வந்திருக்கிறது. ஏராளமான கருத்துக்கள் அப்படி வந்திருக்கிறது.
இது அப்படியே அங்கீகரிக்கப்பட்டிருக்கே. இதை சொல்றதுலே என்ன தவறு. இதைத்தான் நான் உங்களுக்கு
முன்னாலே எடுத்து வைக்கிறோம்.
இது
அல்லாமல் அவர்களுடைய நுால்களிலிருந்தே எடுத்துக் காட்டியும் கூட நாங்க சொன்னதெல்லாம்
ஆதாரம் ஆயிடுமா? அட நீங்க சொல்றது ஆதாரம் என்றா எடுத்துக் காட்றோம். அங்கீகரிச்சிருக்கிறீங்களே
இப்ப ஏன் மாறுபட்டு பேசுறீங்க மறுத்து ஏன் பேசுறீங்க. இதுக்குத்தான் அதை எடுத்துக்
காட்டினோமே தவிர. உங்களைப் போய் யாராவது ஆதாரமா காட்டுவாங்களா?
அப்படி
ஆதாரம் காட்டப்படுற அளவிற்கு நாமெல்லாம் உயர்ந்து போகல்லே. எடுத்துக் காட்டா காட்றோம்.
இந்த மாதிரி நீங்களே செஞ்சிருக்கிறீங்க. அப்புறம் மறுத்து பேசுறீங்களேன்னு.
இன்னொன்னு
சொன்னாரு. நாங்கள் எம்பதுகளிலிருந்து என்றுதான் சொல்லி இருக்கிறேன். எம்பதிலிருந்து
என்று சொல்லவில்லை. எம்பதுகளிலிருந்து என்று சொன்னால் எம்பதிலிருந்து தொண்ணுாறு வரைக்கும்
உள்ளது கட்டுப்படும். ஆகையினாலே எம்பத்தி ஆறிலே நான் எழுதி இருந்தாலும் கூட அதுவும்
அதிலே கட்டுப்படும்.
இதுவே
இவ்வளவு பெரிய கூட்டத்திலே கிளிப்ஸ் போட்டுக் காட்டி பச்சையாக எடுத்துச் சொன்னதற்குப்
பிறகு. இப்படி ஒரு பல்டியா? நீங்களே கேளுங்கள் திரும்ப. எம்பதிலிருந்து (என்று) சொல்றாரா? எம்பது களிலிருந்து (என்று) சொல்றாரா?
(போடுப்பா
(என்று கிளிப்பை போடச் சொல்கிறார் போடப்படுகிறது. பி,ஜெ. பேச்சு ஒலிக்கிறது. ரஷாதியின் 5 ஆவது உரையில் போடப்பட்ட அதே சி.டி.தான். எனவே அப்பொழுது நான் எழுத்து வடிவாக்கிhttp://mdfazlulilahi.blogspot.ae/2013/03/5_31.htmlபிளாக்ரில்
போட்டதை அதிலிருந்து காப்பி எடுத்து போடுகிறேன்.)
ஸஹாபாக்களை பின் பற்றக் கூடாது. அஸ்ஹாபி அஸ்ஹாபி என்கிற இந்த
ஹதீஸ்களையெல்லாம் எப்போ சொல்லி இருக்கிறோம். இந்த பிரச்சாரத்தை ஆரம்பிக்கிற (19)80களில்
இருந்து சொல்கிறோம்.
(என்று
இதுவே ஒலிபரப்பானது)
ரஷாதி:-எம்பதுகளிலிருந்து அல்ல எம்பதிலிருந்து
(என்று அவர்கள் சொன்ன உடன்
பார்வையாளர்கள்:- எண்பதுகளிருந்து
(என்று பார்வையாளர்கள் சப்தம் போடுகிறார்கள். மீண்டும் சி.டி. போடப்படுகிறது.)
இப்ப சொன்ன விஷயங்கள் எதுவுமே. இந்த பிரச்சாரத்தை ஆரம்பிக்கிற (19)80களில்
இருந்து சொல்கிறோம்.
(பார்வையாளர்கள்
பகுதியிலிருந்து) எண்பதுகளிருந்து (என்று
மீண்டும் சப்தம் வருகிறது ரஷாதி அவர்கள்) எம்பதிலிருந்து
(என்கிறார். பார்வையாளர்கள் பகுதியிலிருந்து) எண்பதுகளிருந்து (என்று மீண்டும் மீண்டும்
சப்தம் ஒலிக்கிறது)
(ரஷாதி அவர்கள் அழு குரலில்) சரி உங்களுக்கு எம்பதுகளிலிருந்து கேட்கிது
போலே இருக்கு. நமக்கு எம்பதிலிருந்துதான் கேட்குது. சரி நீங்க ஒண்ணும் சத்தம் போட வேணாம்.
கேளுங்க அமைதியா இருந்தா அல்ஹம்துலில்லாஹ்.
ஏத்துக்கடலைன்னா
எம்பதுகளிலிருந்து என்றால் என்ன எம்பதிலிருந்தது என்றுதானே அர்த்தம். அதை ஏன் மாத்தி
பேசணும். ஏத்துட்டு போக வேண்டியதுதானே. அதுக்கு முரணா பேச வேண்டிய தேவை என்ன வந்திச்சு.
அப்படீங்கிறதுக்குத்தான் நான் அதை எடுத்துக் காட்டினேன்.
அதே
மாதிரி தலாக் உடைய விஷயத்திலே சொன்னாரு. மூணு தலாக்கை இதுக்கு முன்னாலே இமாம் ஷாபி
ரஹ்மதுல்லாஹி உடைய சொல்லை. ஷாபி, அவடு, அவுங்க சொல்லு, இவங்க சொல்லு எல்லாம் பேரைச்
சொல்லக் கூடாதுன்னு சொல்லி இருக்கிறோம். இருந்தாலும் எடுத்துக் காட்டிக்கிட்டு இருக்காங்க.
நம்மளும் அந்த மாதிரி எடுத்துக் காட்னா அவுங்க சகிச்சுக்கிடனும்.
நான்
பொறுப்பு ஏத்துக்கிறேன்னு சொல்றாரு. பொறுப்பு ஏக்றது, பொறுப்பு ஏக்காதது அல்ல. பிறருடைய
அறிவிப்பபாளருடைய அலசலுக்கு மட்டும்தான் மற்றவங்களுடைய இமாம்களுடைய பேரைச் சொல்லணும்னு.
நம்ம கண்டிஷன்லே எழுதி இருக்கிறோம். இருந்தாலும் சொல்றாரு. நான் அதை குறையா சொல்லலை.
கண்டிஷனுக்கு மாத்தமா நடக்குறாரு. நம்மளும் யாருடைய பேரச் சொன்னாலும் சகிச்சுக்கங்க
ங்றதுக்காக வேண்டி அதைச் சொல்றேன்.
இமாம்
ஷாபி ரஹ்மதுல்லாஹி அலைஹி உடைய அவுங்களுடைய சொல்லைச் சொன்னாங்க. அபுபக்கர் ரலியல்லாஹு
அன்ஹு அடிமைகளுக்கு ஒரு வகையாக பங்கிட்டாங்க. உமர் மாத்தமான கருத்து வச்சிருந்தாரு.
ஆகையினாலே அபுபக்கருடைய காலத்துக்குப் பிறகு உமர் தன்னுடைய கருத்தை செஞ்சாரு. உமர்
தன்னுடைய கருத்தின்படி அலி அதுக்கு முரணா இருந்தாரு. இருந்தாலும் அமைதியா இருந்து கேட்டுக்கிட்டாங்க.
ஹஸரத்
உமருக்குப் பிறகு அலியா? உஸ்மானா? அவுங்க அலி மாத்னாங்க. இப்படி ஒரு மூன்று காலங்கள்லே
மாறுபட்ட கருத்து இருந்தும் கூட அதை மாத்தி அமைதியா கேட்டுக்கிட்டே இருந்திருக்கிறாங்க.
ஆகையினாலே உமர் மூன்று தலாக்கை மூன்று என்று சொல்லி மற்றவர்களெல்லாம் அமைதியா கேட்டுக்கிட்டு
இருந்த காரணத்தினால். மற்றவர்களும் அதை அங்கீகரிச்சுக்கிட்டாங்க ங்ற கருத்து வைக்கக்
கூடாதுன்டு அவர் வாதிக்கிறார்.
நீங்களே
மொதோ சொன்னீங்க பயந்துகிட்டு எல்லாரும் அங்கீகரிச்சுக்கிட்டாங்க என்று. எல்லாருமே ஜனாதிபதி
ங்ற காரணத்தினாலே அங்கீகரிச்சுக்கிட்டாங்க ங்கக் கூடிய வாதத்தைத்தானே வச்சிருக்கிறீங்க.
இப்ப அங்கீகரிக்க வேண்டிய அவசியமில்லைன்னு எப்படி சொல்றீங்க. முரண்படுறீங்களா இல்லையா?
நீங்களே சொன்னீங்க. எல்லாரும் பயந்துகிட்டு ஜனாதிபதி ங்ற காரணத்தினாலே பயந்துகிட்டு
இதை அங்கீகரிச்சாங்க. ஏத்துக்கிட்டாங்க. பல இத அப்படியே அங்கீகரிச்சு இருக்காங்க. இப்ப
நீங்க அதுக்கு உதாரணத்தைக் காட்டி இவங்கள்லாம் மாறுபட்ட கருத்து கூட இருந்திருக்கலாம்.
இருந்திருந்தும் கூட அமைதியா இருந்திருப்பாங்க ஜனாதிபதி சொல்றாரு அப்படீங்கிறதுக்காக
வேண்டி இருந்திருப்பாங்க. அப்ப அங்கீகரிக்கல்லே என்று அர்த்தம்.
கேட்டுக்கிட்டாங்க
பயந்துகிட்டு சும்மா இருந்துட்டாங்க. அப்ப ரண்டும் முரண்படுதா இல்லையா? நிச்சயமா முரண்படுது.
அப்ப இந்த மாதிரி மாறுபட்ட கருத்துக்களை ஏன் சொல்லணும். நான் கேக்றேன். இந்த மூன்று
காலத்திலே ஹஸரத் அபுபக்கர் சொன்னதை உமர் மாத்தினார். மாறுபட்ட கருத்து இருந்த காரணத்தினாலே.
உமர் சொன்ன கருத்தை ஹஸரத் அலி மாத்னாங்க. மாறுபட்ட கருத்து வைத்திருந்ததாலே.
அதே மாதிரி
தலாக்குடைய விஷயத்திலே என்ன நடந்திருக்ணும். மாறுபட்ட கருத்து இருந்திருக்குமேயானால்
ஹஸரத் உமர் போட்ட சட்டத்தை ஹஸரத் உஸ்மான் மாத்தி இருக்கணும். ஹஸரத் உஸ்மான் போட்ட சட்டத்தை
ஹஸரத் அலி மாத்தி இருக்கணும். அல்லது மற்றவர்களிலிருந்து யாராவது ஒரு ஸஹாபியாவது மாறுபட்ட
கருத்தை சொல்லி இருக்கணும். எங்கேயுமே சொல்லப்படலியே.
அப்ப
எல்லாருமே அங்கீகரிச்சிருக்காங்கக் கூடிய அர்த்தத்திலேதானே அது வந்திருக்கிறது. அதை
ஏன் மறுக்கணும். ரண்டாவது பாருங்க. இது ஹதீஸாக இல்லை. அந்த காலத்திலே நடந்த தகவலாக
இப்னு அப்பாஸ் சொல்றாங்க. ரலியல்லாஹு தஆலா அன்ஹு நபியுடைய காலத்திலும் அபுபக்கர் ரலி
காலத்திலும் ஹஸரத் உமர் உடைய முந்திய இரண்டு ஆண்டு காலங்களிலும் மூன்றை ஒன்றாக கருதப்பட்டது.
மூன்று ஒன்றாக கருதப்பட்டுக்கிட்டு இருந்துச்சு.
நபி
சொன்னாங்கண்டு இல்லே. அபுபக்கர் சொன்னாங்கண்டு இல்லே. ஹஸரத்து உமர் வந்து ஆரம்பத்தில்
சொன்னாங்கண்டு இல்லே. அந்த காலத்திலே நடந்த நிகழ்வாக காட்டப்பட்டது. இந்த நிகழ்வு.
ஏதாவது ஒரு வரலாறைக் கொண்டு நிரூபிச்சிருக்கணும். இந்த இடத்திலே தலாக் கொடுத்தாங்க.
இப்ப மூனா விட்டாங்க. அதை ஒன்றுன்னுதான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆக்குனாங்க அல்லது
அபுபக்கர் ஆக்குனாறு. ஹஸரத் உமரும் ஆக்கிட்டு இருந்தாங்க. இப்படி ஏதாவது ஒரு நிகழ்வு.
இத்தனைக்கும்
ஸஹாபா அபுபக்கர் காட்சி அல்ல நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில்
கூட மூன்று தலாக்குகள் விடப்பட்டது. அதை மூன்றாகத்தான் அங்கீகரிக்கப்பட்டது. வரலாறு
இருக்கு. ஹதீஸுகள் இருக்குது.
நான்
சொல்ற ஒரு ஹதீஸு தாரகுத்னியிலே வருது. நான் ஸனதுகளுடைய அதனுடைய ஊர்ஜிதங்களையும் நான
எழுதி இருக்கேன் பதிஞ்சு இருக்கேன். அதை விவாதத்திலே
சொல்ல முடியாது. வேணும்ணா காகிதத்தை தர்ரேன். உங்களுக்கு படிச்சு பாக்கலாம். ஹதீஸிலே
வருது. (அரபியில் உள்ளதை படித்துக் காட்டுகிறார்)
அப்துர்றஹ்மான்
இப்னு அவ்பு தமது மனைவி துமாஃளரி என்ற பெண்ணை
அவர்கள் தலாக்கு விட்டார்கள். மூன்று தலாக்குகள் விட்டார்கள். ஒரே வார்த்தையைக் கொண்டு.
உனக்கு மூன்று தலாக்கு. உனக்கு முத் தலாக்கு. அப்படீன்றிருக்கணும். அல்லது ஒரே கலிமாண்டா
தலாக்கு தலாக்கு தலாக்கு.
ஒரே
வாசகத்தைக் கொண்டு வார்த்தையைக் கொண்டு மூன்று
தலாக்கை அப்துர்றஹ்மான் இப்னு அவ்பு தமது மனைவி துமாஃளருக்கு தலாக்கு கொடுத்தார்கள்.
இந்த ஹதீஸை அறிவிக்கக் கூடிய அபுஸலமா இப்னு
அப்துர்றஹ்மான் சொல்றாங்க. இது தலாக்கு விட்டாரு. ஆனா(ல்) எந்த ஸஹாபியும் இதை குறைபடுத்தலே.
கொற சொல்லலே.
மூணு
தலாக்கு விட்டாரு அப்படீங்கிறதுக்காக வேண்டி குறையும் சொல்லலே. மூணு தலாக்கு விடலாம்.
தேவைப்பட்டால் ஒரே இடத்தில் விடலாம். விடப்பட்டிருக்குது. ஒரே வார்த்தையைக் கொண்டு
முத்தலாக்குகள் விடப்பட்டது. இதை மறுத்து பேசலே யாருமே. ஒரே தலாக்கா இருந்திருந்தா
மறுத்து பேசி இருப்பாங்க. ஏப்பா
மூனு விட்டே ஒன்ன வச்சுக்கோண்ணு சொல்லி இருக்கணும். மூன்றை ஒரு வார்த்தையாக விடுறார்.
அதே தாரகுத்தினியிலே. இன்னொரு ரிவாயத்திலே வருது. ஹஸரத் ஹப்ஸ் இப்னு முகைரா ரலியல்லாஹு
அன்ஹு. தனது மனைவி பாத்திமாவை நபியுடைய காலத்தில் தலாக்கு விட்டார்கள். ஒரே வார்த்தையில்
முத்தலாக்கை கொடுத்தார்கள். அந்த மனைவியை கணவனை விட்டு நபி பிரித்து வைத்தார்கள். அந்த
பெண்ணை பிரித்து விட்டார்கள். கணவனை விட்டும் நபி பிரித்து வைத்தார்கள்.
நபி
அவர்கள் மீது கடிந்து கொள்ளவில்லை. கோபம் கொள்ளவில்லை. குறை காணவில்லை. வரலாற பாருங்க.
நபியுடைய காலத்திலே மூன்று தலாக்கு விடப்பட்டிருக்கா இல்லையா? ஒரே கலிமாவைக் கொண்டு
விடப்பட்டிருக்கா இல்லையா? நபி பிரிச்சு வச்சுட்டாங்களா இல்லையா? அப்ப பிரிச்சு வச்சதிலிருந்து
தெரியுது அந்த தலாக்கு மூன்றாக இருந்தாதானே? ஒரு தலாக்கா இருந்திருந்தா பிரிக்க முடியுமா?
அதிலேயும் லாஜிக்கா அவுக பேசுறாக
அவுங்க
பேச்சிலே பாத்தீங்கன்னு சொன்னா? இவர் லாஜிக்க கேளுங்க. ஒரு தலாக் விட்டுட்டாலே அவ மனைவி
இல்லேண்டு ஆயிட்டா? திரும்ப தலாக் எப்படி விடுவே அப்படீன்னு கேட்கிறாரு.
(பி,ஜெ.
பேச்சு கிளிப் போட்டு காட்டப்படுகிறது)
பதில்
சொல்லணுமா இல்லையா? ஒருத்தன் மூனு தலாக்குன்னு சொன்னா ஒரு தலாக்குண்டு ரசூலுல்லாஹ்
சொன்னாங்க. உமர் என்ன பண்றாரு.
(இதை கட் செய்து விட்டு பி,ஜெ. பேசிய வேறு
கிளிப் போட்டு காட்டப்படுகிறது)
மக்கள்
வந்து முத்தலாக்கு முத்தலாக்கு என்று கேலி பண்ணின காரத்தினால் உமர் ரலியல்லாஹு அன்ஹு.
என்ன பண்றாரு இனிமே யாராச்சும் முத்தலாக்குன்னு சொன்னீங்க. மூனு தலாக்குன்னு ஆக்கி
போடுவேன் என்கிறாரு. ஆக்கி விட்டு அவரு சட்டமாக்கினாருன்னு வருது. உமர் ரலியல்லாஹு
அன்ஹு. செஞ்சாலும் தப்பு தப்புதான். அல்லாஹ்வுடைய ரசூல் சொல்லாத ஒன்றை. உமர் ரலியல்லாஹு
அன்ஹு என்ன பண்றாரு. ரசூலுல்லாஹ் காலத்திலே இப்படித்தான் இருந்திச்சு. அவர் என்ன பண்றாரு.
எல்லாரும்
மூனு தலாக்கு மூனு தலாக்கு என்கிறீங்க. முத்தலாக் முத்தலாக் என்கிறீங்க. இனிமேல் இந்த
மாதிரி ஒருத்தன் யூஸ் பண்ணக் கூடாது என்பதற்காக வேண்டி நான் சட்டத்தை மாத்துறேன் அப்படி
சொல்லி விட்டு. முஸ்லிமில் அப்படி இருக்கிறது. அப்படி சொல்லிக்கிட்டே என்ன செய்கிறார்
என்று கேட்டால் இனிமேல் யாராவது முத்தலாக் என்று சொல்வீர்களேயானால் நீங்கள் மூன்று
தலாக் சொன்னதாக நாங்கள் எடுத்துக் கொள்வோம். அப்படி என்று சொல்லி ஜனாதிபதியாக இருந்த
காரணத்தினாலே அவர் ஆடர் பண்றாரு. அந்த ஆடர் தப்பு
(பி.ஜே.யின் இந்த கிளிப்புடன் நேரம் முடிந்து விட்டது).
Comments