காயல்பட்டிணம் கல்விச் சங்கம் ஹாமித் பக்ரி மோசடி செய்தாரா?
த.த.ஜ.வைச் சார்ந்த குவைத் அப்துல் நஸீா் அவா்களே! நீங்கள் எழுதுவதை உங்கள் குழுமம் வெளியிடுகிறது. நமது பதிலை வெளியிடுவதில்லை. நியாயமான குழுமத்தினா் இதனை வெளியிடுவார்கள்.
த.த.ஜ. அப்துல் நஸீா் அவா்களே! இட்டுக் கட்டி பொய்யான குற்றச் சாட்டுக்களை பரப்புவது. அந்த பொய்யை நிலை நாட்ட முபாஹலாவுக்குத் தயாரா என்று சவடால் விடுவது . முஸ்லிம்களுக்குள் முபாஹலா இல்லை என்பவா்களை நோக்கி வா வா என்று விரட்டிப் பிடிப்பது. சவாலை சந்திக்க தயாராக இருக்கும் என்னைப் போன்றவா்கள் வெளிநாட்டில் இருக்கும் போது முபாஹலாவுக்குத் தயாரா? என்று சவடால் விடுவது. தாயகத்திலிருந்தால் காவல் துறையை அணுகி முபாஹலா இல்லை என்பது. இதுவே உங்கள் லுஹாவின் நிலைமை.
பீ.ஜை.என்னை ஏமாற்றினார்.
எனவேதான் உங்கள் கூற்றுக்களுக்கு சத்தியம் செய்யுங்கள் என்கிறேன். உங்கள் கூற்று உண்மை என்றால் சத்தியம் செய்வீா்கள். உண்மை இல்லை என்றால் உங்களால் சத்தியம் செய்ய முடியாது. லுஹா மொழி பெயா்ப்பதாகச் சொன்ன அபுதாவூது நுாலை வெளியிடுவதாகக் கூறி பீ.ஜைனுல் ஆபிதீன் என்பவா் 1990இல் என்னிடம் கடன் வாங்கினார். பிறகு முன்னுக்குப் முரணாக கடிதங்கள் எழுதி பீ.ஜை.என்னை ஏமாற்றினார். இதற்கு ஆதாரமாக பீ.ஜைனுல் ஆபிதீன் என்பவா் கைப்பட எழுதிய கடிதங்களை வெளியிட்டுள்ளேன்.
உங்கள் தலைவரால் பதில் சொல்ல முடியவில்லை.
அது போல் பீ.ஜைனுல் ஆபிதீன் என்பவா் வெளியிட்டுள்ள தா்ஜுமாவில் “இன்ன” “அன்ன” பற்றி உள்ள முரண்பாடுகளை, அதில் செய்துள்ள முனாபிக்தனங்களை ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளேன். உங்கள் தலைவரால் பதில் சொல்ல முடியவில்லை. உங்களாலும் பதில் பெற்றுத் தர முடியவில்லை என்பது தனி விஷயம்.
குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரத்தை வெளியிடுங்கள்.
குற்றச்சாட்டுக்களை ஆதாரத்துடன் கூறியுள்ளேன். ஆதாரம் வெளியிட முடியாதவற்றுக்கு அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறியுள்ளேன். இது போல் நீங்கள் என் மீது கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரத்தை வெளியிடுங்கள். அல்லது அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு கூறுங்கள். உங்கள் கூற்று பொய்யானது என்று நான் மறுத்தால் நானும் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு மறுப்பேன்.
உங்கள் கூற்று உண்மையானால்
இதில் யார் உண்மையாளா்களோ அவா்கள் மீது அல்லாஹ்வின் அருள் உண்டாகும். உண்டாகட்டும் என நானும் துஆச் செய்கிறேன். நடுநிலையாளா்களும் துஆச் செய்வார்கள். உங்கள் கூற்று உண்மையானால் நீங்களும் துஆச் செய்வீர்கள். யார் கூறியது இட்டுக் கட்டிய பொய்யாக இருந்தாலும் அவா்களை அல்லாஹ் பார்த்துக் கொள்வான்.
கதைகளையும் அவிழ்த்து விட்டுள்ளார்.
இப்பொழுது உங்கள் தலைவரான பீ.ஜைனுல் ஆபிதீன் என்பவா் காயல்பட்டிணம் இஸ்லாமிய கல்விச் சங்கம் பெயரால் அவதுாறுகளை மீண்டும் எழுதியுள்ளார். காயல்பட்டிணம் கல்விச் சங்கத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் காட்ட கட்டுக் கதைகளையும் அவிழ்த்து விட்டுள்ளார். அவரது தொண்டா்கள் அதனை பரப்பி வருகின்றனா். ஆகவே கல்விச் சங்கத்திற்கும் பீ.ஜை.க்கும் உள்ள உறவுகளை, கல்விச் சங்க வளா்ச்சிக்கு பீ.ஜை. அளித்துள்ள பங்களிப்புகளை அதன் உண்மை நிலையை அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு எழுதுகிறேன்.
காரணம் பொருளாதார பிரச்சனைதான்.
பீ.ஜை. என்பவரது அணியை ஆதரிக்கும் தவ்ஹீது மவுலவிகளுக்கு சரியான வருவாய் இல்லை. அதனால் பீ.ஜை. என்பவா் அணியிலே மவுலவிகள் அதிகம் இல்லை. பெரும்பாலும் ஜாக்கில்தான் இருக்கிறார்கள். காரணம் பொருளாதார பிரச்சனைதான். ஜாக்கில் “தாஇ”களுக்கு சம்பளம் கொடுக்கிறார்கள். பீ.ஜை. அணியும் சம்பளம் கொடுத்தால் பெரும்பாலான மவுலவிகள் பீ.ஜை. அணி பக்கம் வரத் தயாராக உள்ளனர். அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஸி ஜாக்கில்தான் இருந்தார். அவரது சம்பளத்திற்கு பொறுப்பு எடுத்த பின்தான் பீ.ஜை. அணி பக்கம் வந்தார்.
ஏமாற்று திட்டத்துக்கு சமாதானம் கூறிக் கொண்டார்கள்.
தவ்ஹீது “தாஇ”களுக்கு என்று உதவுவதாக இருந்தால். அரபுநாட்டு நிறுவனங்கள் ஜாக் மூலம்தான் உதவும். எனவே நடைமுறையில் முஸ்லிம் அல்லாதவா்களை இஸ்லாத்திற்கு அழைத்தல் என்ற பொருளில் பயன்படுத்தப்படும் தஃவாப் பணி என்ற திட்டத்தை கல்விச் சங்கம் பெயரால் அறிவித்தார்கள். தஃவா என்று சொன்னால் அழைப்புப் பணி. குராபிகளை தவ்ஹீதின் பால் அழைப்பதும் தஃவாதான். முஸ்லிம் அல்லாதவா்களை இஸ்லாத்தின் பால் அழைப்பதும் தஃவா தான். கல்விச் சங்கம் இங்கு பொய் சொல்லவில்லை. தஃவா என்ற வார்த்தையை சொல்லித்தானே வாங்குகிறது. என்று தங்கள் ஏமாற்று திட்டத்துக்கு சமாதானம் கூறிக் கொண்டார்கள்.
உதவி சம்பளம் கடன்
தஃவா என்று சொன்னால் வெளிநாட்டு நிறுவனங்களும் உதவும். பொதுமக்களும் உதவுவார்கள். தவ்ஹீது-ஜமாஅத் என்று பாராமல் சுன்னத்-ஜமாஅத்தினரும் குராபிகளும் உதவுவார்கள். இப்படி ஏமாற்றி இஸ்லாமிய கல்விச் சங்கம் மூலம் வசூலாகும் பொருளாதாரத்தைக் கொண்டு பீ.ஜை. அணியில் உள்ள மவுலவிகளுக்கு உதவி செய்வது. பீ.ஜை. அணியில் உள்ள மவுலவிகளுக்கு சம்பளம் கொடுப்பது. பீ.ஜை. அணியில் உள்ள மவுலவிகளுக்கு கடன் கொடுப்பது என்று முடிவு செய்தார்கள்.
பீ.ஜை. கல்விச் சங்கத்துக்கு வகுத்துக் கொடுத்த திட்டம்.
இந்தக் கல்விச் சங்கம் தஃவா பணிதான் செய்கிறது என்று காட்டி விளம்பரம் செய்வதற்காக பீ.ஜை. ஒரு திட்டம் வகுத்துக் கொடுத்தார். த.மு.மு.க.வின் முஸ்லிம் டிரஸ்ட் செய்து கொண்டிருக்கும் முஸ்லிம் அல்லாதவா்களை இஸ்லாத்திற்கு அழைக்கும் தஃவா பணியை 65-ஆயிரம் ரூபாய் கொடுத்து கல்விச் சங்கம் வாங்கிக் கொள்ள வேண்டும். அந்த தஃவா பணியைக் காட்டி வசூல் செய்யலாம். இதுதான் முஸ்லிம் டிரஸ்ட் தலைவர் பீ.ஜை. கல்விச் சங்கத்துக்கு வகுத்துக் கொடுத்த திட்டம்.
முஸ்லிம் டிரஸ்டு தஃவாப் பணியை விலைக்கு விற்றது
பீ.ஜை. வகுத்துக் கொடுத்த இந்த திட்டப்படி பீ.ஜை தலைமையிலான முஸ்லிம் டிரஸ்டு தஃவாப் பணியை விலைக்கு விற்றது. கல்விச் சங்கம் தஃவாப் பணியை விலைக்கு வாங்கிக் கொண்டது. இனி பீ.ஜை தலைமையிலான முஸ்லிம் டிரஸ்ட் தஃவாப் பணி செய்யாது என்று காயல்கட்டிணம் கல்விச் சங்கம் அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானதும்
பீ.ஜை. தான் ரூபாய் 65-ஆயிரத்துக்கு கொடுத்துள்ளார்.
அப்பொழுது த.மு.மு.க.வின் தலைவராக இருந்த ஜவாஹிருல்லாஹ் அவா்களிடம் விளக்கம் கேட்டோம். முஸ்லிம் டிரஸ்ட் பெயரில் த.மு.மு.க. செய்து வந்த முஸ்லிம் அல்லாதவா்களை இஸ்லாத்தின் பால் அழைக்கும் தஃவாப் பணியை இப்பொழுது செய்யவில்லையா? என்று. “செய்கிறோம்” என்றார் ஜவாஹிருல்லாஹ். காயல்பட்டிணம் கல்விச் சங்கம் த.மு.மு.க.விடமிருந்து தஃவாப் பணியை விலைக்கு வாங்கி விட்டது. அதனால் இனி த.மு.மு.க. தஃவாப் பணி செய்யாது என்கிறார்களே! என்று கேட்டோம். முஸ்லிம் டிரஸ்டுக்கு தலைவராக இருக்கும் பீ.ஜை. தான் ரூபாய் 65-ஆயிரத்துக்கு கொடுத்துள்ளார். அதுவும் ஒரு மாவட்டக் களப் பணியை மட்டுமே ரூபாய் 65-ஆயிரத்துக்குகொடுத்துள்ளார் என்றார்.
தஃவாப் பணி என்பது வியாபாரப் பொருளா?
வியாபாரக் கம்பெனிகள்தான் இப்படி ஒரு மாவட்டத்துக்கு இவ்வளவு என்று ரேட் நிர்ணயம் செய்து ஏஜெண்ட் உரிமையையோ தயாரிப்பு உரிமையையோ வழங்குவார்கள். அல்லது உரிமையை விடுவார்கள். ஒரு மாவட்டத்தின் உரிமையை 65-ஆயிரம் கொடுத்து வாங்குகின்றார்கள் என்றால், அந்த பகுதியைக் காட்டி இத்தனை லட்சம் சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தால்தான் 65-ஆயிரம் கொடுத்து வாங்குவார்கள். தஃவாப் பணி என்பது வியாபாரப் பொருளா? பி.ஜே. தலைமையிலான முஸ்லிம் டிரஸ்ட் விற்கவும், காயல்பட்டிணம் கல்விச் சங்கம் வாங்கவும். இவா்கள் வாங்கி விட்டதால், இனி அவர்கள் தஃவாப் பணி செய்ய மாட்டார்கள் என்கிறார்கள்.
மார்க்க பணியை விற்பனை செய்ய ஆதாரம் உள்ளதா?
தஃவாப் என்பது மார்க்கப் பணிகளில் ஒன்றாகும். மார்க்கப் பணி என்பது அமல் ஆகும். அமல் என்பது அல்லாஹ்விடம் மட்டுமே நன்மையை நாடி செய்யக் கூடிய ஒன்று. உடலால் ஆன அமல்களாகட்டும். பொருளால் ஆன அமல்கள் ஆகட்டும். எவ்வளவு செய்தாலும் அதற்குரிய கூலி அல்லாஹ்வால் மட்டுமே தர முடியும். யாரும் வந்து கேட்டால் அதற்கு உரியதை வாங்கி கொடுத்து விடுவோம் என்று அமல்கள் செய்ய மார்க்கத்தில் ஆதாரம் உள்ளதா? குர்ஆன் ஓதி முடிச்சு போட்டு விற்பவர்களை கேவலமாக விமர்சித்தீர்களே! அதைவிட இது மகாக் கேவலம் இல்லையா? அமல் செய்யும் பொழுது அந்த நோக்கம் இல்லை. அமல் செய்து முடித்த பின் பொருளாதார சிக்கல் ஏற்பட்டு விட்டது. அதை ஒட்டியாவது “இது மாதிரி மார்க்கப் பணி செய்தேன். எனக்கு பொருளாதார சிக்கல் ஏற்பட்டு விட்டது. எனவே அந்த பணிக்கு நான் செய்த செலவுக்குரியதை தந்து நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று மார்க்க பணியை விற்பனை செய்ய ஆதாரம் உள்ளதா?
லுஹா எத்தனை பேருக்கு அபிடவிட் எடுத்துள்ளார்?
முஸ்லிம் அல்லாதவர்களை இஸ்லாத்தின் பால் அழைப்பது என்பது எல்லோர் மீதும் உள்ள பொறுப்புதான். வாழ் நாளெல்லாம் செய்ய வேண்டிய பணிதான். அதை த.மு.மு.க.வின் முஸ்லிம் டிரஸ்டு செய்தால் அதோடு சேர்ந்து செய்ய வேண்டியதுதானே! நீங்கள் எல்லோரும் த.மு.மு.க.வின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் தானே! அப்படி இருக்க ஏன் இஸ்லாமிய கல்விச் சங்கம் என்ற தனி அமைப்பு கண்டீர்கள். கல்விச் சங்கத்தின் மூலம் இஸ்லாத்தில் இணைந்தவா்களுக்கு அபிடவிட் எடுக்கும் பணி லுஹா உடையது. அதற்காக லுஹாவுக்கு சம்பளம் என்றார்கள். லுஹா எத்தனை பேருக்கு அபிடவிட் எடுத்துள்ளார்?
தாருல் ஹதீஸ் -தவ்ஹீது பிரச்சாரக்குழு- கல்விச் சங்கம்
முறையாகப் பிரச்சாரப் பணிக்கு என்று தருவதை வாங்கமாட்டோம் என்று வரட்டுக் கவுரவம் பேசுவீர்கள். ஹலாலான அதை வாங்குபவர்களை அடிமையாக சித்தரித்து கீழ்த்தரமாக விமர்சிப்பீர்கள். பிறகு தாருல் ஹதீஸ், தவ்ஹீது பிரச்சாரக்குழு, கல்விச் சங்கம், மதரஸா,கிராமம் கிராமமாக முடுக்கி விடப்படும் பணி பள்ளி வாசல் கட்டிடப் பணி இப்படி ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு பெயரில் வசூலித்து ஹராமான முறையில் பங்கு போடுவீர்கள். கேட்டால் வார்த்தை விளையாட்டால் சத்தியம் செய்வீர்கள். இப்படி விமா்சனம் செய்த ஒரே ஆள் நான்தான்.
அடையாளம் காட்டி வருகிறார்கள்.
இந்தக் கல்விச் சங்கம் விஷயமாக 2009இல் எழுதிய பீ.ஜை. மவுலவி ஹாமித் பக்ரி மட்டும் தவறு செய்தது போலவும். மவுலவி சைபுல்லாஹ் ஹாஜா அவா்களும் சோ்ந்து மவுலவி ஹாமித் பக்ரியை கண்டித்தது போலவும் எழுதினார். பீ.ஜை. மொழி பெயா்த்த திர்மிதி நுாலுக்கு அரபியில் அணிந்துரை எழுதி வாங்கியுள்ளதன் நோக்கம் என்ன என்ற கேள்விக்கு எழுதிய பதிலில் மவுலவி ஹாமித் பக்ரியும் மவுலவி சைபுல்லாஹ் ஹாஜா அவா்களும் சோ்ந்து தவறு செய்தது போலவும் லுஹா உட்பட மற்றவா்களெல்லாம் கண்டித்தது போலவும் எழுதியுள்ளார். இரண்டுக்கும் உள்ள முரண்பாடுகளை முகவை அப்பாஸ் அவா்களும் அப்துல்முஹைமீன் அவா்களும் அடையாளம் காட்டி வருகிறார்கள்.
வாக்கு மூலம் தந்துள்ளார்.
அதில் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல எழுதியுள்ளார். என்னிடமும் லுஹாவிடமும் புகார் செய்தார்கள் என்கிறார். விசாரணையின் போது யார் மொழி பெயா்த்து தருவார்கள் என்று நம்பி அபுதாவுதை வெளியிடுவதாகக் கூறி ஷேர் சோ்த்தீா்கள் என்று கேட்டிருக்க வேண்டும். என்ன சொல்கிறார். இவா்கள் சொன்னபடி அபுதாவுதை வெளியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. லுஹா அவா்கள் 300 ஹதீஸ்கள் மட்டுமே மொழி பெயா்த்து வைத்து இருந்தார். மேலும் 700 ஹதீஸ்கள் மொழி பெயா்த்து தர 6 மாதங்கள் ஆகும் என்று லுஹா கூறினார் என்று வாக்கு மூலம் தந்துள்ளார்.
அபுதாவுது ஷோ் பணத்தைப் பெற்று ஏமாற்றியவா் லுஹாதான்
அபுதாவுது ஷோ் திட்டம் மூலம் வசூல் செய்த பணத்திலிருந்து ஒரு பெருந் தொகையை மொழி பெயா்த்து தருவதாகக் கூறி பெற்று ஏமாற்றியவா் த.த.ஜ. மேலாண்மைக் குழு தலைவராக உள்ள லுஹா. இது பற்றி நாம் ஏற்கனவே எழுதி விட்டோம். அபுதாவுது ஷோ் பணத்தைப் பெற்று ஏமாற்றியவா் லுஹாதான் என்பதை பீ.ஜை. தனது வாக்கு மூலம் வழியாக உறுதிப்படுத்தியுள்ளார். அல்ஹம்துலில்லாஹ்.
என்னையும் கல்விச் சங்கத்தில் சேர்க்க உத்தரவிட்டார்.
மவுலவிகள் மட்டுமே உள்ள அமைப்பு. மவுலவிகளுக்கு சம்பளம் கொடுக்க துவங்கப் பட்ட அமைப்பு என்று கல்விச் சங்கம் பற்றி நான் பீ.ஜை.யிடம் அவரது வீட்டில் வைத்து விமர்சித்தேன். அதனால் கல்விச் சங்கத்தின் ஒரிஜினல் தலைவரும், ஒரிஜினல் டைரக்டருமான பீ.ஜை. மவுலவி அல்லாத சங்கரன்பந்தல் சிராஜ், திருச்சி ஸபியுல்லாஹ்கான் போன்றவர்களையும் என்னையும் கல்விச் சங்கத்தில் சேர்க்க உத்தரவிட்டார்.
லுஹாவுக்கு கல்விச் சங்கம் சம்பளம் கொடுக்கும்
17-09-2000 ஞாயிறு அன்று காயல் பட்டிணம் கல்விச் சங்கத்தின் அங்கத்தினர்களான மவுலவி ஹாமித்பக்ரி, மவுலவி ஸைபுல்லாஹ் ஹாஜா, இன்றைய த.மு.மு.க. தலைவா் மவுலவி ஜே.எஸ்.ரிபாஈ, த.த.ஜ. மேலாகுழு தலைவா் மவுலவி ஷம்சுல்லுஹா, மவுலவி எம்.எஸ்.சுலைமான் ஆகியவா்கள் எனது வீட்டிற்கு வந்து பீ.ஜை. உத்தரவுப்படி சங்கரன்பந்தல் சிராஜ், திருச்சி ஸபியுல்லாஹ்கான் போன்றவர்களையும் என்னையும்கல்விச் சங்கத்தில் சேர்ப்பதாகக் கூறினார்கள்.என்னிடம் சம்பளம் பேசி தவ்ஹீது பிரச்சார வேலைக்கு வந்தவா்தான் லுஹா. அந்த லுஹாவுக்கு இனிமேல் காயல்பட்டிணம் கல்விச் சங்கம் சம்பளம் கொடுக்கும். எனவே நீங்கள் கொடுக்க வேண்டாம் என்று என்னிடம் சொன்னவா் பீ.ஜை. என்பவா்தான்.
தான் இறக்கி விட்டவா்கள் மீது பழி சுமத்தி கழண்டு விடுவார்.
இவையெல்லாம் காயல்பட்டிணம் கல்விச் சங்கம் என்பது பீ.ஜை.யின் அமைப்புதான் என்பதற்குரிய சான்றுகளாகும். பலவிதமான மோசடி திட்டங்களை வகுப்பது பீ.ஜை.யின் வேலை. அதை முடுக்கி விடுவார். தனது இமேஜுக்கு பாதிப்பு வருகிறது என்றதும் தான் இறக்கி விட்டவா்கள் மீது பழி சுமத்தி கழண்டு விடுவார்.
கல்விச் சங்கத்தின் மூல கர்த்தவாக பீ.ஜை. இருக்கிறார்.
அன்றைக்கு பீ.ஜையுடன் இருந்த போதிலும் உண்மைக்கு புறம்பான பீ.ஜை.யின் இது போன்ற அந்தரங்க திட்டத்திற்கு துணை நிற்கவில்லை. அதே நேரம் ஹிக்மத்தாக முறியடிக்கவும் செய்தேன். அபூதாவூது வெளியிட ஷேர்த் திட்டம் உட்பட கல்விச் சங்கத்தின் அனைத்து திட்டங்களும் பீ.ஜை.யின் அறிவில் உருவான திட்டங்கள்தான். சிலருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் அவை. கல்விச் சங்கத்தின் மூல கர்த்தவாக பீ.ஜை. இருக்கிறார். எனவே இதை அறிவுப் பூர்வமாகத்தான் முறியடிக்க வேண்டும். இதைப் பகிரங்கப்படுத்தினால் பீ.ஜை.யை கேவலப்படுத்திவிட்டோம் என்று இங்கு ஒரு எதிர் அணியை பீ.ஜை. உருவாக்கி விடுவார்.
ஹிக்மத்தாக முறியடிக்க முடிவு செய்தேன்.
பீ.ஜை.யின் மார்க்க விரோத செயலைக் கண்டித்தால் தவ்ஹீது ஜமாஅத்தை கேவலப்படுத்தி விட்டதாகவும் தவ்ஹீது ஜமாஅத்திற்கு எதிராக செயல்படுவதாகவும் பிரச்சாரம் செய்வார். எனவே மார்க்க முரணான இந்த செயலை ஹிக்மத்தாக முறியடிக்க முடிவு செய்தேன். இப்படி முடிவு செய்த நான் பீ.ஜை.க்கு போன் போட்டேன். நீங்கள் இப்படி வகுத்தளித்த திட்டம் சரியா என்று கேட்கவில்லை. மாறாக வந்துள்ளவா்கள் மீது பழி போட்டு இந்த மாதிரி தவறான திட்டத்துடன் வந்துள்ளார்கள். வந்துள்ள 2 மவுலவிகளும் உங்களுடன் நெருக்கமானவர்களாக இருக்கிறார்கள். இதனால் உங்களுக்குத்தான் கெட்ட பெயர் என்று கூறினேன்.
பீ.ஜை.யின் ஆலோசனைப்படி வந்தவர்களை கழட்டி விட்டு விட்டார்.
உடனே பீ.ஜை. தான் தப்பிப்பதற்காக இது சம்பந்தமாக பேக்ஸ் அனுப்பக் கூறினார். அத்துடன், பக்ரி மளிகைக் கடைக்கு ஷேர் சேர்த்து திருப்பி கொடுக்கவில்லை என்று கூறினார். இதையும் நீங்கள் கேள்விப்பட்ட மாதிரி குறிப்பிட்டு எழுதுங்கள் என்றும் கூறினார். அதன்படியே பேக்ஸ் அனுப்பினேன். 11.03.2000 அன்று நான் அனுப்பிய பேக்ஸுக்கு 13.03.2000. அன்று பதில் அனுப்பினார். அதில், “அந்த (இஸ்லாமிய கல்வி)ச் சங்கத்தில் நான் எந்த பொறுப்பும் வகிக்கவில்லை. அதில் உறுப்பினராகவும் இல்லை. எனது எழுத்து மூலமாக ஆதரவுக் கடிதம் இல்லாமல் யார் எந்த வசூல் செய்தாலும் அது என்னைக் கட்டுப் படுத்தாது. வெளிநாட்டவர்களிடம், வெளிநாட்டு அரசுகளிடம் உதவி பெறுவதை நான் ஆரம்பம் முதலே கடுமையாக எதிர்த்து வருகிறேன். இப்படி பேக்ஸ் அனுப்பி பீ.ஜை.யின் ஆலோசனைப்படி வந்தவர்களை கழட்டி விட்டு விட்டார்.
மோசடிப் பணங்களை பங்கு போட்டு திண்றவா்கள்
அபுதாவூது ஷோ்த்திட்டம், தஃவா பணி என காயல்பட்டிணம் கல்விச் சங்கம் பெயரால் மோசடி திட்டங்களை வகுத்தவா் பீ.ஜைனுல் ஆபிதீன் என்பவா்தான். அல்லாஹ் அருளால் அதை முறியடித்தது பழுலுல் இலாஹியாகிய நாம்தான். காயல்பட்டிணம் கல்விச் சங்கம் பெயரால் வசூலித்த மோசடிப் பணங்களை பங்கு போட்டு திண்றவா்கள் த.த.ஜ.வில்தான் உள்ளார்கள். அபுதாவூது ஷோ்த்திட்ட பணத்தைப் பெற்றுக் கொண்டு மொழி பெயா்க்காமல் ஏமாற்றியவருக்குத்தான் பீ.ஜை. மேலாண்மைக்குழு தலைவா் பதவி கொடுத்துள்ளார்.
திருத்தவும் முடியாது-காப்பாற்றவும் முடியாது.
இதுதான் உண்மை நிலை. இப்பொழுது சொல்லுங்கள். காயல்பட்டிணம் கல்விச் சங்கம் பணத்தை ஹாமித் பக்ரி மோசடி செய்தாரா? இன்று த.த.ஜ.விலுள்ளவா்கள் மோசடி செய்துள்ளார்களா? உண்மை நிலை இதுதான் என தெரிந்த பின்னரும் அவதுாறுகளை இட்டுக் கட்டி பரப்பி செய்த நன்மைகளை இழந்தும் பிறரது பாவச் சுமைகளையும் சோ்த்து சுமந்தும் முப்லிஸுகளாகத்தான் போவோம். நரகத்துக்கு அஞ்ச மாட்டோம் என்ற முடிவில் இருப்பவா்களை நம்மால் திருத்தவும் முடியாது. நரகில் இருந்து காப்பாற்றவும் முடியாது.
Comments