ChengisKhan - Tholugai illatha PJ(arcottar) தொழுகை இல்லாத பீ.ஜே
பீஜே அவர்களின் தொழுகை 12:18 AM செங்கிஸ்கான்........ அன்பிற்கினிய சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சகோதரர் பீஜே அவர்கள் தொழுவது இல்லை என்பதைப் பற்றி நாம் மண்ணடி பொதுக் கூட்டத்தில் பேசியதை சில சகோதரர்கள் விமர்சித்துள்ளார்கள். அவர்களின் விமர்சனத்திற்கான விளக்கங்களை கீழே தந்துள்ளோம். முதலாவதாக, பீஜே அவர்களின் தொழுகை பற்றி நாம் முதன் முதலாக விமர்சிக்கவில்லை! அபு அப்துல்லா தொடங்கி பாக்கர் வரை அவரோடு நெருங்கிப் பழகிய, அவரோடு பல பயணங்களில் பங்கேற்ற அனைத்து சகோதரர்களுக்கும் இது தெரியும். ஒரு முஃமின் தொழுகைக்கான நேரத்தை, வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்க வேண்டும். ஆனால் சகோதரர் பீஜே வாய்ப்பு கிடைத்தால், தொழுவாரே தவிர வலிந்து தொழ மாட்டார். மக்கள் நிறைந்திருக்கும் சபைகளில் வேறு வழியின்றி தொழுவாரேயன்றி விரும்பித் தொழ மாட்டார். பிரயாணங்களில் பெரும்பாலும் தொழமாட்டார் என்பதையும் அவருடன் பல நேரங்களில் பயணித்த ஒளிப் பதிவுக் குழுவினரான யூசுப் கான், யாஸிர், ரஃபிக் போன்றோர் கூறுகின்றனர். மற்றவர்கள் சொல்வதை வைத...