திருக்குர்ஆன் ஓதி முடித்ததும் ஸதக்கல்லாஹ§ல் அளீம் என்று கூறலாமா?
from Muqrin
date Jan 18, 2008 9:31 PM
திருக்குர்ஆன் ஓதி முடித்ததும் ஸதக்கல்லாஹ § ல் அளீம் என்று கூறும் பழக்கம் பலரிடமும் காணப்படுகின்றன. இதற்கு எந்த ஆதாரமும் இருப்பதாகத் தெரியவில்லை. எவரேனும் அவ்வாறு கூறுவது நபிவழி என்று கருதுவாரெனில் அது தவிர்க்கப்படவேண்டிய பித்அத் ஆகும்.
மேலும் ''குல் ஸதக்கல்லாஹ் '' என்ற ( 3:95) வசனம் அதற்கு ஆதாரமாக அமைந்ததல்ல. தவ்றாத்தும் இஞ்சீலும் எவ்வாறு இறைவேதமோ அதுபோன்றே இதுவும் அல்லாஹ்வால் அருளப்பட்டது , தவ்றாத்தும் இஞ்சீலும் மற்ற இறைவேதங்களும் தெளிவாக்கியவற்றை உண்மைப்படுத்துவதே இவ்வேதம் என்று யூத கிறித்தவர்களுக்குக் கூறுவதற்காக அவ்வசனம் அருளப்பட்டது.
தன் அடியார்களுக்கு இவ்வேதத்தை இறக்கியருளிய அல்லாஹ் மிகப்பரிசுத்மானவனும் மிக உண்மையாளனும் ஆவான். ஆனாலும் மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் திருக்குர்ஆன் முழுவதுமோ அல்லது ஒரு அத்தியாயத்தையோ அல்லது சில வசனங்களையோ ஓதிவிட்டு ஸதக்க ல்லாஹ § ல் அளீம் என்று கூறுவது விரும்பத்தக்க து என்று கூறுவது சரியல்ல.
இவ்வாறு நபி (ஸல்) அவர்களோ ஸஹாபாக்களோ கூறியதாக எந்த ஆதாரமும் கிடையாது. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் நான்காம் அத்தியாத்தை ஓதிக்காட்டினார்கள்.
அதன் 41 ஆம் வசனமான " எனவே (நபியே!) ஒவ்வொரு கூட்டத்தினரையும் (அவர்களுடைய) சாட்சியுடன் நாம் கொண்டுவரும்போது, நாம் இவர்கள் மீது சாட்சியாக உம்மையும் கொண்டு வந்தால் (உம்மை நிராகரிக்கும் இவர்களின் நிலைமை) எப்படி இருக்கும்?'' (4:41) என்ற வசனத்தை அடைந்ததும் நபி (ஸல்) அவர்கள் ' ஹஸ்புக' ( போதும்) என்றுதான் கூறினார்கள்.
இப்னு மஸ்வூது (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள் '' நான் நபி (ஸல்) அவர்களைப் பார்த்தபோது அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது." தான் சாட்சியாகக் கொண்டு வரப்படும் அந்த மகத்தான நீதிமன்றத்தை அவர்கள் நினைத்து அவர்கள் அழுதுவிட்டார்கள்.
ஆக திருக்குர்ஆன் ஓதி முடித்ததும் ஸதக்கல்லாஹ § ல் அளீம் என்று கூறுவதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் கிடையாது. நபி (ஸல்) அவர்களோ ஸஹாபாக்களோ இவ்வாறு கூறியிருக்கவில்லை. சாதாரணமான நிலையில் ஒருவர் ஸதக்கல்லாஹ §ல் அளீம் என்று கூறுவது குற்றமில்லை. தூய்மையாளனும் உயர்ந்தவனும் ஆகிய அல்லாஹ் எல்லாவற்றிலும் மிகவும் உண்மையாளனே தான். ஆனால் இன்று பலரும் செய்து வருவது போல ஒவ்வொருமுறை குர்ஆன் ஒதி முடிக்கும்போதும் அவ்வாறு கூறுவது மேற்கூறப்பட்டதைப்போன்று அடிப்படையற்றதாகும்.
Source : Fatawa Ibn Baz
--
அன்புடன்
முக்ரின்

Comments