அரசின் இட ஒதுக்கீடு.

from Abdul Jabbar
அறக்கட்டளையின் தலைமை மொழீபெயர்ப்பாளர் ஹஸ்ரத் முகம்மது கான் பாகாவியின் மகனின் திரு
மண வைபவம் தேனீயில் நடைபெற்றது. தமிழக முஸ்லிம் சமூக-கலாச்சார-இலக்கியப் பிரமுகர்கள் பலர்
வருகை தந்திருந்தனர். விழா அராங்கம் மவுலவிகள் மாநாடு போலவே கட்சியளித்தது சிறப்பு

அன்று மாலை உத்தமபாளையம் ஹாஜி கறுத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி வளாகத்தில், கல்லூரியின்
தாளாளரும் செயலருமான ஹாஜீ தர்வேஷ் மொஹிதீன், தலைவர் ஹாஜி ஷேக் மொஹிதீன் தலைமையில்
தேனீ மாவட்டத்தைச் சேர்ந்த 65 ஜமா'அத்துகளின் கூட்டமைப்புக் கூட்டம் நடைபெற்றது.

கவிக்கோ அப்துர்ரஹுமான், எஸ்.எம்.,ஹிதாயத்துல்லாஹ் மற்றும் நான்,சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து
கொண்டோம். பேராசிரியர் அப்துல் சமது வரவேற்றார். அமைப்பின் செயலர் ஜனாப் பொன்ராஜ் கொந்தாளம்
செயல் திட்டங்களை விரித்துரைத்தார்.

கவிகோவும், ஹிதாயத்துல்லாவும் மத்திய - மாநில அரசுகள் எத்தகைய நலத் திட்டங்களை அறிவித்துள்ளன.
அறியாமை காரணமாக நாம் எதையெல்லாம் தவற விட்டு விட்டோம். இனி எவ்வாறு விழிப்புடனிருந்து
இவற்றின் பயன் பாட்டை முழு அளவில் எப்படிப் பெற்றுக் கொள்வது என்பன பற்றியெல்லாம் எடுத்துச்
சொன்னார்கள் - தன்களது நீண்ட, உணர்ச்சி மிகு உரைகளில் !.

உடனடியாக, அரசின் இட ஒதுக்கீடு காரணமாக, வரும் கல்வியாண்டில் ச்மார் 70 மருத்துவப் படிப்பு இடங்களும் சுமார் 700 பொறியியல் படிப்பு இடங்களும் முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.
ஆனால் இந்தச் சலுகைகளைப் பெற்றுக் கொள்ள முஸ்லிம் சமூகம் எந்த அளவுக்குத் தயார் என்பது
கேள்விக்குறியாகவே உள்ளது.

இருட்டை சபிப்பதை விட ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது உத்தமம் என்ற கூற்றுக்கு ஏற்ப,
தமிழகமெங்கும் இதுவரை ஏழு மாவட்டங்களில் PLUS-2 மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்
பட்டுள்ளன. தேனீ மாவட்டத்தில் மட்டும், கம்பம், போடி, தேனி, உத்தமபாளையம்,சின்னமனூர் ஆகிய
ஊர்களில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இவை பள்ளி வளாகங்களில் வைத்து நடத்தப்
படுகின்றன. ஆகவே நம் மக்கள் மாத்திரமே வருகிறார்கள். எல்லோருமே தொழும் வழக்கத்தையும்,
பெண்கள் புர்கா அணிவதையும் கடைப்பிடிக்கிறாகள். அல்ஹம்துலில்லாஹ். நல்ல் ஏற்பாடு.

PLUS-2 பரீட்சைக்கு ஏறக்குறைய இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. இந்த்க் கால. அளவு போதுமா
என்பது சந்தேகமே. என்றாலும் ஒன்றை ஆரம்பித்து வைத்து விட்டால் இந்த ஆண்டில் இல்லாவிட்டாலும்
இனி வரும் காலங்கள் இவை சிறப்பாக்ச் செயல் பட ஏதுவுண்டு.

மத்திய - மாநில அரசுகளிடமிருந்து முஸ்லிம்கள் எத்தகைய சலூகைகளைப் பெறமுடியும் என்பதை பிறகு
எழுதுகிறேன். இப்போது உதாரணத்துக்கு ஒன்று:

Auto-rikshaw/ Taxi/ Van/ Mini-bus ஆகியவை வாங்க சில நிபந்தனைக்கு உட்பட்டு தகுதி அடிப்படையில் மத்திய
அரசு 85% ம் மாநில அரசு 10% ம் மான்யம் வழங்குகின்றன. நம் முதலீடு 5% தான். இந்த 5% ஐயும் கடனாகாத்
தர வங்கிகள் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட சலுகைகளை முஸ்லிம்கள் படுத்தாததால் சென்ற ஆண்டு சுமார் 110 கோடி ரூபாய் மத்திய அரசுக்கே திரும்பஅனுப்பப் பட்டு விட்டதாக ஹிதாயத்துல்லாஹ் கூட்டத்திலேயே ஒரு தகவலைச் சொன்னார்.

ஒருவனுக்கு மீனைத் தின்னக் கொடுப்பதைவிட மீன் பிடிக்கக் கற்றுக்கொடுத்தால் அவன் வாழ்நாள் முழுக்கப்
பிழைத்துக் கொள்வான் என்று ஒரு சொலவடை உண்டு. ஆகவே, வெளிநாடுகளில் வாழும் அன்பர்களுக்கு ஓர்
வேண்டுகோள்;

உங்கள் ஊர்களில் உள்ள ஏழைகளுக்கு இயன்றபோதெல்லாம் நீங்கள் உதவி வந்திருக்கக் கூடும். ஆனால்
அதை விட அவர்களுக்கு ஒரு வாழ்வு ஆதாரத்தைக் கை காட்டி விட்டீர்களென்றால் கியாமத் நாள் வரை
அது பயனுள்ளதாக - பலன் தருவதாக இருக்கும்.

விதவைகள் மற்றும் முதியோர் ஓய்வு ஊதியம் மாதம் 400/- ஓய்வு பெற்ற உலமாக்களுக்கு மதம் 750/-
பிரசவ உதவி 6,000/- திருமண உதவி 15,000/- இப்படி எத்தனையோ. இதில் சோகம் என்னவென்றால்
சம்பந்தப் பட்டவர்களுக்கே இப்படி சில இருப்பது தெரியாது

எனவே, உங்கள் ஊர்களில் சில அமைப்புகளை ஏற்படுத்துங்கள். அருகதைப் பட்டவர்களைத் தேடிப் பிடியுங்கள்
அவர்களுக்கு இந்த உதவிகள் கிடைப்பதற்கான ஆவன செய்யுங்கள். ஆண்டவன் உங்கள் தலைமுறை -
தலைமுறைக்கும் நல் அருள் பாலிப்பான்.

வஸ்ஸலாம். ஹுதா ஹாஃபிஸ். சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு