60 ஆண்டு சுதந்திர இந்தியாவில் கழிப்பறை கட்டியதில் தான் முஸ்லிம்கள் முன்னேறி இருக்கிறார்கள். தலித்களைவிட கல்வி வேலை வாய்ப்பு இட ஒதுக்கீடு போன்றவற்றில் மிக, மிக பின் தங்கி உள்ளனர். இதற்கு காரணம் தகுதியற்ற தலைமைத்தனம் என்ற பிரண்ட்லைன் கூற்றை மறந்துவிட முடியாது. முஸ்லிம் லீக்கை குறை சொல்லி உரிமை, உணர்வு என வார்த்தைகளில் உஷ்ணத்தை ஏற்றி ஆர்ப்பாட்டம், போராட்டம், என போலி வேஷம் போட்டு ஆரவாரத்தோடு புறப்பட்ட த.மு.மு.க விழலுக்கு இறைத்த நீராய் 60 ஆண்டு முஸ்லிம் லீக்கின் ஏமாற்றும் வேலையை கச்சிதமாய் செய்து இருக்கிறது. ஆம் 2 சீட்டுக்கு திராவிட கட்சிகளிடம் அடகு வைக்கும் சாதனையை வெற்றிகரமாய் நிகழ்த்தி இருக்கிறது. கோவை 19 உயிர்கள் பலி, கப்ருஸ்தான் இடிப்பு, பள்ளி உடைப்பு, மீரட், மண்டைக்காடு, கான்பூர், குஜராத், என சமூகத்தின் அவலங்களை காட்சி பொருளாய் கடை விரித்து, இளைஞர்களை தவறான வழிக்கு அழைத்துச் சென்றவர்கள்.... இன்று அரசியல் சூழ்ச்சிக்காரர்களின் சூது வலையில் சிக்கி, உருட்டல் மிரட்டல்களுக்கு பயந்து அரசியல் இல்லை, தேர்தல் ஆதரவு, புறக்கணிப்பு, அந்தர்பல்டி, இட ஒதுக்கீட்டு துரோகத்திற்கு பாராட்டு, அரசியல் ஹராம்...