"சுதந்திரம்" என்பதுகூட அல்லாஹ் ஒரு மனிதனுக்கு வழங்கியிருக்கும் மாபெரும் அருட்கொடை.

அன்புள்ள சகோதரர் திருச்சி அமானுல்லாஹ் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ

{,
நேற்று (22-07-2008) நீங்கள் அனுப்பிய ஈ மெயிலை பார்த்ததும் ---------- தவறாக புரிந்து கொள்ளக்கூடிய மனிதரிடமிருந்து வந்திருக்கிறதோ என்கின்ற எண்ணம்தான் உண்டானது. எழுத்தில் கோபம் தெரிகிறது, ஆனால் ஏன்? எதற்கு என்பதுதான் புரியவில்லை.

"

உங்கள் கோபத்துல அல்லாஹ் தண்ணிய ஊற்றுவானான, வயிற்றெரிச்சலில் பாலை பாலை ஊற்றுவானாக" என்ற ஆரம்ப வார்த்தைகளே நீங்கள் எதையோ படித்துவிட்டு தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அறிய முடிந்தது.
"

ஐடிஎம்கே" அண்ணே! என்றுவேறு எனக்கு அறிமுகமில்லாத ஒரு கட்சியின் உரிப்பினராகவே என்னை ஆக்கி விட்டீர்கள். இதுவரை எந்த அரசியல் கட்சியலும் இருந்ததில்லை, ஆனால் அரசியலை சென்னை பல்கலைக்கழகத்தில் ஒரு பாடமாக எடுத்து படித்தவன்தான். அதுமட்டுமல்ல உலக அரசியலையும் ஓரளவு படித்ததிருக்கிறேன். காரணம் ஐரோப்பாவில் பல ஆண்டுகள் இருந்தவன், உலகிலுள்ள ஏராளமான பத்திரிகைகளை படிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கப் பெற்றவன். இன்னும் சொல்லப்போனால் இன்று இருக்கும் பல கட்சியின் தலைவர்களுக்கு அரசியல் பாடத்தையே கற்றுக் கொடுக்கக்கூடிய அளவுக்கு அல்லாஹ்வால் கல்வி ஞானத்தை கொடுக்கப் பெற்றவன்தான்.
தமுமுக வின் மீது எமக்கு நல்ல அபிப்ராயம் உண்டு. அதுபோன்று தௌஹீத் ஜமாஅத்தார்கள் மீதும் நல்ல அபிப்ராயம் உண்டு. பொதுவாக உலகிலுள்ள எந்த மனிதரையும் வெறுக்கச் கொல்லி இஸ்லாம் சொல்லவில்லை. இன்று உலகில் வாழும் அத்தனை பேருமே பெருமானார் ஸல்லல்லாஹ

{ அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத்துகள் தான் (அவர்கள் எந்த மதத்தை எந்த இனத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் சரியே!) என்பதை மனிதில் ஆழமாக பதிய வைத்துக் கொண்டீர்களானால் மற்றவர்கள் மீது எந்தவிதமான வெறுப்பும் வராது. அவர்கள் காஃபிராக இருந்தாலும் சரியே! ஏன் அவர்களும் அல்லாஹ்வின் படைப்புதானே!
ஆனால் இன்று என்ன நடக்கிறது. முஸ்லிம்களுக்குள்ளேயே போட்டி, பொறாமை, வெறுப்பு! இதைவிட கொடுமை வேரென்ன இருக்க முடியும்? என்ன காரணமாக இருக்க முடியும் என்று கொஞ்ச நேரம் அமைதியாக யோசித்துப் பாருங்கள். இஸ்லாத்தைப்பற்றி சரியாக புரிந்து கொள்ளாத சமூகத்தினராக இன்றைய முஸ்லிம்கள் வாழ்வது முக்கிய காரணம்.

தமுமுக வில் சேருமாறு அழைப்பு விடுத்திருக்கிறீர்கள். நன்றி. ஆனால் பலவிதமான மனிதர்களை படைத்துள்ள அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் பொருப்புகளை அளித்துள்ளான். தகுதிகளை வழங்கியுள்ளான். அவரவர்களின் வழியில் எது சிறந்தது என்பதை தேர்வு செய்து வாழும்போதுதான் அது அவர்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். அதைவிடுத்து தமுமுக வில் நான் சேரும் பட்சத்தில் எனது கல்வி ஞானம் முதற்கொண்டு மற்ற செயல்பாடுகளும் அதன் தலைமைக்கு கட்டுப்பட வேண்டிய நிலைக்கு ஆளாக நேரிடும்.

"சுதந்திரம்" என்பதுகூட அல்லாஹ் ஒரு மனிதனுக்கு வழங்கியிருக்கும் மாபெரும் அருட்கொடை. அதை எதற்காக ஒரு கட்சியில் சேர்ந்து கொண்டு நான் இழக்க வேண்டும்?
இன்றைய கட்சிகளையும், இயக்கங்களையும் மேலோட்டமாக பார்த்தாலே ஒரு விஷயம் தௌ;ளத் தெளிவாக புரியும்.

ஜமாஅத்தே இஸ்லாமியா? மௌதூதி அவர்களின் கொள்கைதான் அவர்களுக்கு அஸ்திவாரம்.

தௌஹீத் ஜமாஅத்தா? பி.ஜே. என்ன சொல்கிறாரோ அது மட்டும்தான் அவர்களுக்கு இஸ்லாம்.

சுன்னத்துவல் ஜமாஅத்தா? நாங்கள் செல்வது மட்டும்தான் இஸ்லாம். நீங்களாக சிந்திக்க அனுமதி கிடையாது! (சிந்திக்க தூண்டுகின்ற மார்க்கத்தில் சிந்தனைக்கு 144 போடுகின்றவர்கள்.)

தரீக்கா குரூப்பா? முஸ்லிம்களை முஷ்ரிகீன்களாக ஆக்கியே தீர்வது என்ற முடிவோடு இருப்பவர்கள்.

தப்லீக் ஜமாஅத்தா? தொழுகை ஒன்றே போதும். வீட்டில் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் சரி 40 நாள் ஜமாஅத்துக்கு வா எல்லாம் சரியாகிவிடும் என்று நினைப்பவர்கள். அதுமட்டுமின்றி ஒருசில விஷயங்களை மட்டும் உள்வாங்கிக்கொண்டு பெரிய ஆலிம்களுக்கு இணையாக தங்களை நினைத்துக் கொள்பவர்கள்.

மேலே சொன்ன

இவர்கள் எவரிடமும் நடுநிலைப்போக்கு இல்லை. அதன் காரணமாக எங்கு பார்த்தாலும் முஸ்லிம்களுக்கிடையே வெறுப்பு, போட்டி, பொறாமை அத்தனையும் கண்கூடாக இன்று சமுதாயத்தில் காணமுடிகிறது. இவ்வளவையும் மீறி ஒருசில இயக்கங்களால் நன்மை விளையத்தான் செய்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.
நீங்கள் தமுமுக வில் இருக்கிறீர்கள். அதில் இருப்பதன் வாயிலாக சமுதாயத்துக்கு நல்லது செய்யு முடியும் என்று நம்புகிறீர்கள். உங்கள் நிய்யத்தை அல்லாஹ் கபூல் செய்வானாக, ஆமீன். ஆனால் நடுநிலை போக்குடன் இருந்தால்தான் இம்மையிலும், முக்கியமாக மறுமையிலும் வெற்றயடைய முடியும் என்பது எனது கருத்தாக இருக்கிறது. (இந்த சமுதாயத்தை அல்லாஹ் திருக்குர்ஆனில் நடுநிசை;சமுதாயம் என்று குறிப்பிடுவதை நினைவில் கொள்ளுங்கள்) அதுமட்டுமின்றி எந்த இயக்கத்தில் சேர்ந்தாலும் தலைமைக்கு கட்டுப்படவேண்டிய கட்டாயத்தில் எனது சுதந்திரம்

பாதிக்கப்படலாம். தேவையா எனக்கு இது! அவரவர்கள் விரும்பிய இடத்தில் முழு மனத்தூய்மையோடு பணியாற்றினாலே எல்லா வெற்றியையமு; அல்லாஹ் கொடுப்பான். வஆகிருதஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.


எம்.ஏ.முஹம்மது அலீ

Comments

Unknown said…
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்புள்ள கொள்கை சகோதரர்களுக்கு, சகோதர் பாக்கர் அவர்களை ஒரு காபிரோடு ஒப்பிட்டு நீங்கள் அனுப்பிய மெயில் கண்டு வேதனையடைந்தேன். இயக்கத்தின் மீதுள்ள பற்றை விட்டுவிட்டு அல்லாஹ்வின் மீதும் அவனுடைய ரசூல் மீதும் வைத்து சொர்க்கத்தில் உன்னதமான் நிலையடைய பாடுபடுவோம்.சகோதரர் பாக்கர் தவறே செய்திருந்தாலும் இது போன்ற விமர்சனங்களை கண்டு வேதனையோடு அல்லாஹ்விடத்தில் கையேந்திவிட்டால் நம்முடைய நிலை என்னவாகும்?????




இயக்கத்தை இஸ்லாமாக்கும் தாயிக்கள்

தனிமனிதன் புகழ்பாடி அழியும் ஒரு கூட்டம், தான் இருக்கும் இயக்கமும் அதன் சித்தாந்தமுமே சரி என வாதிடும் மற்றொரு கூட்டம், எனது அமீர் சொல்வதை அப்படியே பின்பற்றுவேன், எனது மர்கஸில் சொல்லப்பட்டதை அப்படியே நம்புவேன் என்று வாதிடும் மற்றொரு கூட்டம், சேகு நாயகம், வாப்பா நாயகம் ஆகியோரின் கூற்றே வேத வாக்கு என்று நம்பும் பிறிதொரு கூட்டம். எகிப்தின் ஆலிம்களை அச்சாணிகள் போல் நம்புகின்ற மற்றொரு கூட்டம், இவ்வாறு தஃவாக்களத்தை துவம்சம் செய்யும் பல கூட்டங்களை களத்தில் இனம் காண முடிகின்றது.
அல்லாஹ்வும், அவனது தூதரும் சொன்னதை நம்பினேன், அதன்படி நடப்பேன் என்ற கூட்டத்தில் இணையாத அனைத்துக் கூட்டமும் வழிகேட்டின், தக்லீதின், பித்அத்தின் மறுவடிவங்களாகவே இருக்கும்.

குறைகளைத்தேடும் தாயிக்கள்

ஒரு மனிதனின் மானம், மரியாதை, அந்தஸ்து யாவற்றையும் புனிதமானது என இஸ்லாம் கூறி இருக்கின்றது. கலிமாவை இறை திருப்தியை நாடிக்கூறிய அனைவரின் மானம் மரியாதை என்பது இதன் விளக்கமே தவிர தவ்ஹீத் அடிப்படையைக் கொண்ட தாயிக்களின் மானம், மரியாதை என்பது பொருள் அல்ல.
ஆனால் இதற்கு மாறாக பிறரது குறையைத் தேடித்திரியும் தாயிக்கள் தவ்ஹீத் அமைப்பிலேயே அதிகம் காணப்படுகின்றார்கள். தாயிக்கள் சீர் திருத்தவாதிகளாக இல்லாமல் சீரழிப்பவர்களாக மாறுகின்ற போது இந்நிலை ஏற்படுகின்றது.
சகோதர முஸ்லிமின் மானத்தை காற்றில் பறக்கவிடுவதையும், சீடிக்களாக, நோட்டீஸ்களாக வெளியிடுவதையும் தஃவாப் பாதையில் ஒரு மைல் கல்லாக நினைத்து செயற்படும் தாயிக்கள். இருக்கின்றார்கள்.
عَنْ عَبْدِ اللَّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلَكَ الْمُتَنَطِّعُونَ قَالَهَا ثَلَاثًا
எல்லை மீறிச் (சிந்திப்பவர்கள், செயற்படுபவர்கள்) அழிவார்கள் (ஆதார நூல்: முஸ்லிம்) என நபி (ஸல்) அவர்கள் கூறியதை உண்மைப்படுத்தும் தாயீகளாக குர்ஆன் சுன்னாவைப் போதிப்பதாகக் கூறுவோரின் களம் மாற்றம் பெற்றுள்ளதை யாராலும் மறுக்க முடியாது

நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக்கொள்ளுங்கள். சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள். உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள். உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தை சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் பாவத்திலிருந்து மீள்வதை ஏற்றுக்கொள்பவன். நிகரற்ற அன்புடையோன்.’ (அல் குர்ஆன்- 49:11,12)

ஒவ்வொரு முஸ்லிமும் பிற முஸ்லிமின் மீது அவருடைய இரத்தம், கண்ணியம், பொருள் இவற்றை களங்கப்படுத்துவது ஹராமாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(நூல்-முஸ்லிம்)
முஸ்லிம்களில் எவர் சிறந்தவர் என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்ட போது எவருடைய நாவினாலும், கரத்தினாலும் ஏனைய முஸ்லிம்கள் பாதுகாப்பு பெறுகிறாரோ அவரே என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (நூல்-புகாரி)

ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் தமது உரையின் போது உள்ளத்தில் இல்லாது உதட்டால் நம்பிக்கை கொண்டவர்களே முஸ்லிம்களைப் பற்றியும் புறம் பேசாதீர்கள் அவர்களது குறைகளைத் ஆராய்ந்து கொண்டிராதீர்கள் யார் மற்றவர்களின் குறைகளைத் தேடி திருகின்றாரோ அவர்களது குறைகளை அல்லாஹ் பின் தொடர ஆரம்பிப்பான். யாருடைய குறைகளை அல்லாஹ் பின் தொடர ஆரம்பிக்கின்றானோ அவர்கள் தமது வீட்டில் செய்யும் குறைகளையும் பகிரங்கமாக்கி அவர்களை இழிவுபடுத்தி விடுவான். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் (நூல்-அஹ்மத்)

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.