நாங்கள் அப்பாவிகள்: அப்துல் கபூர்-ஹீரா பேட்டி
நெல்லை: நெல்லையில் டைம் பாம் வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ஹீராவும், அப்துல் கபூரும் நாங்கள் அப்பாவிகள் என கூறியுள்ளனர்.
http://thatstamil.oneindia.in/news/2008/08/02/tn-we-are-innocent-says-heera-abdul-gafoor.html
நெல்லையில் டைம்பாம் குண்டு தயாரித்ததாக கைது செய்யப்பட்ட ஷேக் அப்துல் கபூரும், ஹீராவும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கோர்ட் வளாகத்தில் போலீஸ் வாகனத்தில் காத்திருந்த அவர்கள் இருவரும் அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம் பேசினர்.
அப்துல் கபூர் கூறுகையில், அப்பாவியான என் மீது டைம்பாம் உபகரணங்கள் தயாரித்ததாக போலீசார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். டைம் பாம் குண்டு, எலக்டாரனிக் சர்கியூட் குறித்து எனக்கு எதுவும் தெரியாது.
சென்னை ஆலந்தூரில் ஒரு குறிப்பிட்ட அமைப்பின் நிர்வாகியாக நான் உள்ளேன். இதை அந்த அமைப்பினர் தற்போது மறுப்பது ஏன் என்று தெரியவில்லை. ஒரே ஊர்க்காரர்கள் என்ற முறையில் எனக்கும், ஹீராவுக்கும் பழக்கம் உண்டு.
சென்னையில் நான் பணியாற்றிய செருப்பு கடைக்கு அவர் அடிக்கடி வருவார். இரு அமைப்பினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் ஒரு தரப்புக்கு ஆதரவாக நான் செயல்பட்டதாக கருதி சிலர் தூண்டுதலின் பேரில் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அல்லா எனக்கு துணையாக உள்ளார். வழக்கை சட்டப்படி சந்தித்து நிரபராதியாக வெளியே வருவேன் என்றார்.
ஹூரா கூறும்போது, நான் தேசப்பற்று மிகுந்தவன். சென்னையில் பெயிண்டராக இருந்தேன். துவக்கத்தில் இறைவன் ஒருவனே என்ற இயக்கத்தில் இருந்தேன். தற்போது அந்த இயக்கத்தில் இல்லை. இந்து முண்ணனி தலைவர் ராமகோபாலனை கொலை செய்ய முயன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஜெயிலில் இருந்து சில நாட்களுக்கு முன்பு நிபந்தனை ஜமீனில் வெளியே வந்தேன். அதற்குள் இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர்.
நான் தீவிரவாதி கிடையாது. வெடிகுண்டு சதி குறித்து எனக்கு எதுவும் தெரியாது. பூனையாக இருந்த என்னை புலியாக சித்தரிக்கின்றனர். என்னை தீவிரவாதியாக கருதி தனிமை சிறையில் அடைத்தது வேதனை அளிக்கின்றது.
சிறையில் இருந்தபோது அலி அப்துல்லாவிடம் பழக்கம் உண்டு. அடுத்த மாதம் என் தங்கையின் திருமணம் நடக்கிறது. நான் பொதுப் பணிகளில் ஆர்வம் உள்ளவன். இதுவரை 15க்கும் மேற்பட்ட முறை இந்து மக்களுக்கும் ரத்த தானம் செய்துள்ளேன் என்றார் அவர்.
10 நாள் போலீஸ் காவல்:
இதற்கிடையே சென்னை புழல் சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் நெல்லைக்குக் கொண்டு வரப்பட்ட அலி அப்துல்லாவும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பின்னர் அப்துல் கபூர், அலி அப்துல்லா, ஹீரா ஆகியோரை போலீஸ் காவலில் அனுமதிக்க கோரி போலீஸ் தரப்பில் மனு செய்யப்பட்டது. மனுவைப் பரிசீலித்த நீதிபதி 3 பேரையும் 10 நாள் காவலில் எடுத்துச் சென்று விசாரிக்க அனுமதி அளித்தார்.
வரும் 11ம் தேதி மூவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும். 2 நாட்களுக்கு ஒருமுறை மூவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும். 2 நாட்களுக்கு ஒரு முறை அரை மணி நேரம் அவர்களுடைய வக்கீல்களுடன் பேச அனுமதிக்க வேண்டும். விசாரணைக்கு வெளியூருக்கு அழைத்து செல்லக் கூடாது என மஜீஸ்திரேட் போலீசாருக்கு நிபந்தனை விதித்தார்.

Comments