வெளிச்சத்துக்கு வந்த நஜ்முன்னிஸாவும் தான் உறுதிபடுத்தாத ஒன்றை பிறரிடம் சொன்னவன் முஸ்லிமா?

வார்த்தையால் விளையாடுவதில் மன்னனான திருவாளர் பி.ஜெ. கடலூரில் செய்த முபாஹலா முதல் பாகத்தின் வார்த்தைகளை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை தந்துள்ளோம்.

த.த.ஜ. தலைமை நடத்தும் மதரஸாவில் ஆசிரியையாக உள்ள நஜ்முன்னிஸா என்ற ஆலிமா தலையில் எல்லாவற்றையும் கட்டி விட்டதைப் பாருங்கள்.

பி.ஜெ. கடலூரில் செய்த முபாஹலா முதல் பாகத்தின் வார்த்தைகள்.

இறைவா பாக்கர் தொடர்பாக லால் பேட்டையிலே நான் சொல்லும்பொழுது பாக்கரைப் பற்றியோ யாரைப் பற்றியோ விபச்சாரம் செய்தார்கள் என்று குற்றம் சுமத்துவது மார்க்கத்திலே 4 சாட்சிகள் இல்லாமல் சொல்லக் கூடாது என்ற குர்ஆன் வசனத்தைச் சொல்லி அதை தெளிவாகச் சொன்னதை நீ அறிவாய்.

இதை சிதம்பரத்திலே நடத்திய பொதுக்குழுவில் நேரடியாகவே நான் சொன்னதை கேட்ட இரண்டு சாட்சிகளே முன் மொழிந்ததை இறைவா நீ அறிவாய். இதிலே நான் சொன்ன ஒரு விஷயத்தை சொல்வில்லை என்று இவர்கள் பொய் சொல்லி இருந்தால் பொய் சொன்னவர்கள் மீதும் அவர்களுடைய குடும்பத்தினர் மீதும் உன்னுடைய சாபத்தை இறக்குவாயாக என்று உன்னுடைய திருக்குர்ஆனுடைய போதனைகளின் அடிப்படையிலே நான் துஆச் செய்கிறேன்.

அடுத்ததாக பாக்கர் அவர்கள் சில செய்திகளை பாக்கர் சம்பந்தமான சில செய்திகளை நஜ்முன்னிஸா என்ற ஒரு பெண் இப்படியெல்லாம் சொல்கிறாள் இது எந்த அளவுக்கு உண்மை என்று எனக்குத் தெரியாது ஆக இப்படியெல்லாம் தகவல்கள் வருகின்றது என்றுதான் நான் சொன்னேனே தவிர ஆனால் சந்தேகத்தின் வாசல் திறந்திருக்கிறது என்று சொன்னேனே தவிர நானே உறுதிப்படுத்தி சொல்லவில்லை என்று

அந்த பெண்ணுடைய பெயரைச் சொல்லாமல் ஒரு பெண் என்றும் அவர் ஒரு ஆசிரியை என்றும் அவர்கள் தான் இந்த மதுரை சம்பவத்திலிருந்து பல செய்திகளை சொன்னார்கள் என்றும் அவர்கள் ஒரு நோக்கத்தில் சொல்லி இருக்கலாம் என்றும் இறைவா நான் சொன்னதை நீ அறிவாய். நானே அதைப் பார்த்து உறுதி செய்தது போல சொன்னதாக இவர்கள் சொல்லுவது பொய்.

அவர்கள் எந்த அளவுக்கு உண்மை சொல்கிறார்கள் என்பது அவர்களுக்கும் அல்லாஹ்வுக்கும் தெரியும் என்பதையும் சேர்த்துதான் இறைவா நான் சொன்னேன். இதையும் நீ அறிவாய். 

இந்த விஷயத்திலே இவர்கள் உண்மையை முன்னிறுத்தி பொய் சொல்லி இருப்பார்களேயானால் உன்னுடைய திருக்குர்ஆனுடைய வழிகாட்டுதல் பிரகாரம் அவர்கள் மீதும் அவர்களுடைய குடும்பத்தார் மீதும் அல்லாஹ்.. என் மீதும் என்னுடைய குடும்பத்தார் மீதும் நான் பொய் சொல்லி இருந்தால் உன்னுடைய சாபம் இறங்கட்டும் என்று நான் துஆச் செய்கிறேன்.

தெளிவாக இன்னொரு தடவை இறைவா நான் நினைவுபடுத்துகிறேன். பாக்கர் விபச்சாரம் செய்து விட்டார் என்ற வார்த்தையை நான் சொல்லவில்லை. அப்படி யாரைப் பற்றியும் சொல்லக் கூடாது என்று சூரத்துல் நூரில் இருக்கிற குர்ஆன் வசனத்தை எடுத்துக் காட்டி நான் சொன்னேன். அப்படி சொல்லி இருக்கும்பொழுது அதையும் மறுத்திருக்கிறார்கள் இச் சபையிலே இதில் நீ சாட்சியாக இருந்து கொள் என்பதுதான் இந்த விஷயத்திலே நான் உன்னிடத்திலே வைக்கிற முறையீடு

மேலே உள்ள வார்த்தைகளால்தான் பி.ஜெ. பாக்கர் விஷயத்தில் முபாஹலா செய்துள்ளார். வார்த்தையால் விளையாடுவதில் மன்னனான பி.ஜெ. வார்த்தை விளையாட்டுகளால்தான் முபாஹலா செய்துள்ளார் என்பதை அவரது முபாஹலா வார்த்தைகள் சாட்சி அளிக்கின்றன.

பாக்கரைப் பற்றியோ யாரைப் பற்றியோ விபச்சாரம் செய்தார்கள் என்று குற்றம் சுமத்துவது மார்க்கத்திலே 4 சாட்சிகள் இல்லாமல் சொல்லக் கூடாது என்ற குர்ஆன் வசனத்தைச் சொல்லி (விட்டுத்தான்) அதை (பாக்கர் சம்பந்தமான குற்றச்சாட்டுச் செய்திகளை) தெளிவாகச் சொல்லி உள்ளதாக முபாஹலாவில் பி.ஜெ. கூறி உள்ளார். பாக்கர் சம்பந்தமான அந்த குற்றச்சாட்டுச் செய்திகள் என்ன என்ன?

1. ஹஜ்ஜுப் பெருநாளுக்கு மறுநாள் பாக்கர் ஒரு பெண்ணுடன் சொகுசு பஸ்ஸில் சென்னையிலிருந்து நெல்லைக்கு பக்கத்து பக்கத்து சீட்டில் உட்கார்ந்தும் ஒருவருக்கொருவர் மடியில் படுத்துக் கொண்டும் பிரயாணம் செய்ததை பார்த்தவர்கள் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள் மூலமாக எங்களுக்கு தெரிவித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்னார்கள். பாக்கரை விசாரித்தோம் முதலில் அல்லாஹ் மீது சத்தியம் செய்து இல்லை என்று மறுத்தார். பல ஆதாரங்களை நாங்கள் காட்டி பேசும்போது ஆமாம் என்று ஒப்புக் கொண்டார்.

பாக்கர் பற்றி இந்த முதல் குற்றச்சாட்டை பி.ஜெ. டெலிபோன் மூலம் சொல்லி உள்ளார். எனவே இது லால்பேட்டையில் என்ற வாசகத்தில் அடங்காது. இந்த முதல் குற்றச்சாட்டில் உள்ள வாசகங்களைக் கூறியோ அதை மறுத்தோ பி.ஜெ. முபாஹலா பண்ணவில்லை.

2. அழகு நிலையம் நடத்தும் நந்தினி என்ற பெண்ணை பாக்கர் த.த.ஜ. தலைமை நடத்தும் மதரஸாவில் சேர்த்தார். மதரஸாவில் எந்தப் பெண்ணுக்கும் செல் போன் வைத்துக் கொள்ள அனுமதி கிடையாது. செல் போன் வைத்துக் கொள்ள தடை இருந்தும். அந்த பெண் நந்தினி செல் போன் வைத்துக் கொள்ள பாக்கர் தனது செல்வாக்கை பயன்படுத்தியுள்ளார்.

3. பாக்கர் நந்தினிக்கு பட்டுப் புடவை வாங்கி கொடுத்திருக்கிறார்.

4. பாக்கர் நந்தினியை காரில் அழைத்துச் சென்றிருக்கிறார்.

5. பாக்கர் நந்தினியை தனியாக வைத்து குடும்பம் நடத்த சென்னையில் தனி வீடு பார்த்திருக்கிறார்.

6. பாக்கரிடம் நந்தினி இப்படி என்னிடம் தவறாக உறவு வைத்துள்ளீர்களே! உங்கள் மார்க்கத்தில் இது தவறு இல்லையா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு இருவரும் மனம் ஒத்து செய்தால் மார்க்கத்தில் தவறில்லை என்று பாக்கர் நந்தினியிடம் கூறி இருக்கிறார். இதை த.த.ஜ. தலைமை மதரஸாவில் ஆசிரியையாக இருக்கும் (நஜ்முன்னிஸா என்ற) ஆலிமாவிடம் நந்தினி கூறி இருக்கிறார். இதை (நஜ்முன்னிஸா என்ற) அந்த ஆலிமா பி.ஜெ.யிடம் சொன்னார்.

7. மதுரையில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியின் போது பாக்கர் 24 மணி நேரம் காணாமல் போனார். காணாமல் போன அந்த நேரத்தில் நந்தினி வீட்டில் பாக்கர் தங்கி இருந்தார். இதை அந்த ஆலிமா (நஜ்முன்னிஸா என்ற) பெண்ணிடம் நந்தினியே கூறி இருக்கிறார். இதை அந்த ஆலிமா (நஜ்முன்னிஸா என்ற) பெண் பி.ஜெ.யிடம் சொன்னார்.

இப்படி ஆயக்கலைகள் 64 என்பது போல் பாக்கரின் மீதான குற்றச்சாட்டுக்களை 16 தலைப்புகளில் பி.ஜெ. பட்டியலிட்டுள்ளார். பாக்கர் விஷயத்தில் தெளிவாக வார்த்தைக்கு வார்த்தை சொல்லி மறுக்க முடியாத பி.ஜெ. வார்த்தை விளையாட்டுகளால் தப்பி இருக்கிறார். பி.ஜெ.யின் கூற்றுப்படி பாக்கர் என்ற இடத்தில் பி.ஜெ. பெயரை போட்டுப் பாருங்கள்.

பி.ஜெ. சம்பந்தமான சில செய்திகளை நஜ்முன்னிஸா என்ற ஒரு பெண் இப்படியெல்லாம் சொல்கிறாள் இது எந்த அளவுக்கு உண்மை என்று எனக்குத் தெரியாது ஆக இப்படியெல்லாம் தகவல்கள் வருகின்றது என்றுதான் நான் சொன்னேனே தவிர ஆனால் சந்தேகத்தின் வாசல் திறந்திருக்கிறது என்று சொன்னேனே தவிர நானே உறுதிப்படுத்தி சொல்லவில்லை.

இப்படி பாக்கர் என்ற ஒவ்வொரு இடத்திலும் பி.ஜெ. பெயரையோ த.த.ஜ.விலுள்ள ஒவ்வொரு மவுலவிகளின் பெயரையோ பயன்படுத்திப் பாருங்கள். அவர்கள் ஒரு நோக்கத்தில் சொல்லி இருக்கலாம். சந்தேகத்தின் வாசல் திறந்திருக்கிறது நானே உறுதிப்படுத்தி சொல்லவில்லை. அவர்கள் எந்த அளவுக்கு உண்மை சொல்கிறார்கள் என்பது அவர்களுக்கும் அல்லாஹ்வுக்கும் தெரியும் என்றெல்லாம் சொல்லி விட்டு பாக்கரிடம் நந்தினி, நந்தினியிடம் பாக்கர் என்று சொன்ன மாதிரி சொல்லிப் பாருங்கள் ஏற்றுக் கொள்வார்களா?

தான் உறுதிபடுத்தாத ஒன்றை பிறரிடம் சொல்பவன் ஒரு முஸ்லிமா? அவன் ஒரு சராசரி மனிதனா? அவன் ஒரு தாஇயா? என மானமுள்ள முஸ்லிம்கள் கேட்பார்கள். மானங்கெட்ட கழுதைகள் இது போன்றதுகளைத்தான் தலைவர்களாக ஏற்றுக் கொள்ளும். இதற்கு எடுத்துக் காட்டுதான் த.த.ஜ. என்பதை பி.ஜெ. செய்த முபாஹலா நிரூபித்து விட்டது.


Comments

ta said…
1. un akkaavo OR thankachiyo OR un ammaavo Bakar kuda bus la poi yirunda ni ennada solve?

2. Enda paradesi naaye, Islam la evvalavo kaariyangal seiyavendiyathu yirukka, nee enda yinda maadri maama velai yellam pandra.

3. ni mirror munnala ninnukitu unnai keluda, ni Muslim kuuda venaam ni manusana nu.

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.