பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். 07-11-2005 J.A.Q.H. மாநில தலைமைக்கு, மேலப்பாளையம் கிளைச் செயலாளர் M.A.S.. செய்யது அஹமது ஸலபி எழுதிக் கொள்வது. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. மேலப்பாளையம் J.A.Q.H. கிளை அழைப்பாளராகவும் மஸ்ஜிதுர் றஹ்மான் கட்டிட பொறுப்பாளராகவும் பணியில் அமர்த்தப்பட்ட சம்சுல் லுஹா றஹ்மானி என்பவர். அவர் சுய நல நோக்கோடு அமைப்புக்கும் அமைப்பின் தலைமைக்கும் எதிராக செயல்பட்டு பல்வேறு ஊழல்கள் செய்துள்ளார். இதை நமது கிளையின் முந்தைய நிர்வாகிகள் மாநில தலைமையின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். மாநில தலைமையின் அனுமதியோடு சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்க முந்தைய நிர்வாகிகள் முயற்சிகள் செய்த போதெல்லாம் சமாதான பேச்சு வார்த்தை எனும் பெயரால் திறமையான முறையில் ஏமாற்றி காலத்தை கடத்தி வந்துள்ளார் சம்சுல் லுஹா. எனவே, நான் கிளைச் செயலாளராக பொறுப்பேற்ற பின் சட்ட ரீதியான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும...