அல்லாஹ்வுக்காக.
கண்ணியத்திற்குரிய சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ஆதம் எனும் பெயரால் மொட்டைக் கடிதம் அனுப்புபவர் யார் என்பதை முன்பே அடையாளம் காட்டி விட்டோம்.
அவர் நேற்றும் ஒரு மொட்டைக் கடிதம் அனுப்பியுள்ளார். நமக்கும் நேரில் வந்தது. அதை மற்றொருவர் இன்று நமக்கு பார்வேடு பண்ணி இருந்தார். இன்னும் பலரிடமிருந்து பார்வேடு பண்ணப்படலாம். இனி இது மாதிரி மொட்டைக் கடிதங்கள் வந்தால் யாரும் நமக்கு பார்வேடு பண்ண வேண்டாம்.
ஜன. 07-13,2004 உணர்வு வார இதழுக்கு எனது தரப்பிலான பதிலை சுமார் 35 பக்கங்களில் 9-1-05 அன்றே எழுதி முடித்து விட்டேன். அந்த இதழ் துபையில் மிக மிக தாமதமாகவே தமிழ் பகுதிகளில் வெளியாகி இருந்தது.
05-01-05 அன்றே ஸ்கேன் செய்யப்பட்டு நமக்கு வந்து விட்டது. 35 பக்கங்களை மொத்தமாக அனுப்பினால் பெரிய பைலாக இருக்கும் என்பதாலும் வேறு சில நோக்கங்களுடனும் 6,4,2 ஆகிய பக்கங்களாக பிரித்து வெவ்வேறு தலைப்புகளில் அனுப்பி இருந்தோம். மீதமுள்ள தலைப்பை ஒரு குறிப்பிட்ட பொதுத் தலைப்பின் கீழ் அனுப்பவதாக அறிவித்து இருந்தோம்.
இந்த நிலையில் 9 ஆம் தேதியன்று சகோதரர் ரபி அஹ்மது அவர்கள் நம்மை சந்திக்க விரும்புவதாக போன் செய்தார்கள். ஏற்கனவே நவம்பர் 20, 2004 ல் வேறு விஷயமாக சந்தித்தபோது இது மாதிரியான விஷயங்களுக்கு தீர்வு பற்றி பேசிக் கொண்டதையும் நினைவு கூறிக் கொண்டோம். இன்ஷா அல்லாஹ் வருகிறேன் என்றேன்.
மீண்டும் 12-1-05 அன்று ரபிஅஹ்மது அவர்கள் போன் செய்து நமது இடத்திற்கு வருவதாக கூறினார்கள். 13-1-05 அன்று நாமே அவர்களது இடத்திற்கு சென்றோம். சமுதாய நல அக்கறையுடன் அவரும் அவரது நண்பர்களும் கருத்து வேறுபாடு உடையவர்களை சந்தித்து அவர்கள் செய்து வரும் நல்ல முயற்சிகளைப் பற்றி கூறினார்கள்.
அந்த அடிப்டையில் நாம் வெளியிட்டு வரும் விமர்சன மெயில்களை சமுதாய நலன் கருதி அல்லாஹ்வுக்காக நிறுத்தி விட வேண்டும் என்று கோரினார்கள். காலை 9.30க்கு சென்ற நாம் 12 மணிக்குத்தான் திரும்பினோம்.
அவரது பிஸியான அலுவல்களுக்கிடையில் நீண்ட நேரம் எடுத்து அல்லாஹ்வுக்காக என்று கூறியதால் சமுதாய நலன் கருதி அவர் எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பதாக நாமும் வாக்குறுதி அளித்து விட்டு வந்தோம்.
ஜன. 07-13,2005 உணர்வு துபையில் தாமதமாக வெளியானது ஏன்? என்பது பற்றிய விமர்சனங்கள்,
அந்த இதழின் 14 ஆம் பக்கம் நிர்வாகிகள் கவனத்திற்கு என்பதில் இடம் பெற்றிருந்த முஸ்லிம்களின் சமூக அரசில் இயக்கம் என்பது பற்றிய விமர்சனங்கள்,
ஹஜ் பயண அழைப்பு விளம்பரமும் வந்தவர்களும் ஆகியவற்றுடன் 50க்கும் மேற்பட்ட உட் தலைப்புகளுடன் 25 பக்கங்களுக்கு எழுதி அனுப்ப தயாராக வைத்திருந்தோம்.
நாம் வாக்குறுதி அளித்து விட்டதால் அந்த பைலை டெலிட் செய்து ரீ சைக்கிலிருந்தும் டெலிட் செய்து விட்டோம். அந்த நேரத்தில் ஆதம் என்ற பெயரால் உள்ள மொட்டை மெயிலை இரு இடங்களிலிருந்து பார்வேடு பண்ணி இருந்தார்கள்.
உடனே ரபி அவர்களுக்கு போன் செய்து நாம் டெலிட் செய்து விட்ட விபரங்களையும் மொட்டை கடிதம் வந்துள்ளது பற்றியும் 13-1-05 அன்று 12-30க்கு கூறினோம். நான் கவனம் செலுத்துகிறேன் என்றார்.
எனவே ஆதம் என்ற பெயரில் வந்து கொண்டிருக்கும் கடிதங்களுக்கு பதில் வெளியிடாமல் இருப்பது இயலாமையில் அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த சந்திப்பு இயலாமையின் கற்பனை என யாரும் விமர்சித்தால் ஜம்இய்யத்து தவ்ஹீது (ஜே.டி). துணைத் தலைவர் கீழை ஜமீல் அவர்களிடம் கேட்டு உறுதிபடுத்திக் கொள்ளட்டும். வஸ்ஸலாம்.
Comments