பல்ஆம் இப்னு பாவூராவா? மிர்ஸாவா? ரஷhது கலீபாவா? முப்லிஸா?

அபு அவ்ன் எனும் குன்ய பெயரில் மெயில் அனுப்பியுள்ள கண்ணியத்திற்குரிய அண்ணன் அவர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி சத்திய நேசன் என்ற புனைப் பெயரில் மெயில்களில் உலவி வருபவன் ஷய்த்தான் தான் என்பதில் சந்தேகமே இல்லை. அண்ணன் பி.ஜே. கொள்கைப் பிரச்சனையில் சமரசம் செய்யாமல் விலகியவர் போல் நீங்கள் எழுதியுள்ளீர்கள்.

சமாதானக் குழுவினரிடம் பி.ஜே. வைத்த 3 கோரிக்கைகள்.

கொள்கைப் பிரச்சனையால் விலகியதுபோல் உணர்வு மூலம் விளம்பரத்தை துவக்கினார் அண்ணன் பி.ஜே. கொள்கைப் பிரச்சனையால் விலகியது உண்மை என்றால் சமாதானக் குழுவினரிடம் அண்ணன் பி.ஜே. வைத்த 3 கோரிக்கைகளில் கொள்கைப் பிரச்சனை எங்கே இருக்கிறது? 

இந்தக் கேள்வியை ஆரம்பம் முதல் கேட்டு வருகிறோம். 30.5.2004 அன்று ம.ப. ரசூல் மைதீன், எம்.ஜெஹபர் அஹ்மது, அதிராம் பட்டிணம் பாரூக் ஆகியவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்திலும் கேட்;டுள்ளோம். இதுவரை இதற்கு பதில் இல்லை. நீங்களும் சிந்தியுங்கள்.

எந்த கொள்கையின் அடிப்படையில்? இதற்குரிய ஆயத்து ஹதீஸ் எது?

சமாதானப் பணியில் ஈடுபட்டவரைப் பார்த்து நீ மாமா வேலை பார்க்கிறாயா? என்று அண்ணன் பி.ஜே. அவர்கள் கேட்டுள்ளார்களே! இது எந்த கொள்கையின் அடிப்படையில் கேட்டுள்ளார்? இதற்குரிய ஆயத்து ஹதீஸ் எது? 

துபை முனிசிபாலிட்டியில் வேலை செய்பவன் திருச்சி கார்ப்பரேஷன் ஊழியர்கள் கூட்டத்தில் ராஜினாமா செய்கிற மாதிரி, ராஜினாமா செய்த அறிவாளிகள் கலந்து கொண்ட கூட்டம் திருச்சியில் நடந்ததை அறிவீர்கள். அந்தக் கூட்டத்தில் பாக்கர், பி.ஜே, அலாவுதீன் ஆகியோர் போட்டி போட்டுக் கொண்டு கூறிய அசிங்கமான வார்த்தைகள் எந்த கொள்கையின் அடிப்படையிலானது? இதற்குரிய ஆயத்து ஹதீஸ் எது?

பி.ஜே. அவர்களை யாரேனும் எதிர்த்து கேள்வி கேட்டால்?

பி.ஜே. அவர்களை யாரேனும் எதிர்த்து கேள்வி கேட்டாலோ, அல்லது அவரது தனிப்பட்ட செயல்பாடுகளை விமர்சனம் செய்து கட்டுரை எழுதினாலோ, பேசினாலோ, அச்செயல் செய்தவர் தவ்ஹீத் கொள்கையை எதிர்த்தவர் போலவும் - தவ்ஹீது ஜமாஅத்தை எதிர்ப்பது போலவும் தனது பேச்சாற்றல் மூலம் பி.ஜே. அவர்கள் கொண்டு வந்து விடுவார்கள். 

பி.ஜே. அவர்களை விமர்சிப்பது ஒட்டு மொத்த தவ்ஹீது கொள்கையினை விமர்சனம் செய்வது போன்ற மாயையை உருவாக்கி விடுவார் என்பதை கடந்த கால நிகழ்வுகள் அனைத்தையும் அறிந்தவர்களால் மறுக்க முடியாது.. ..

பி.ஜே. கண்கள் சிவக்க

புத்தகம் ஒன்று போடுகிறேன் என வேலூர் இபுறாஹீம் என்பவரிடம் ஹாமித் பக்ரி பணம் வாங்கிக் கொண்டு இதுவரை புத்தகமே போடவில்லை. அந்த பணம் என்ன ஆனது என தெரியவில்லை என ஒரு பொய்யை அண்ணன் பி.ஜே. தெரிந்தே கூறினார். நான் உடனே மறுப்பு தெரிவிக்க பி.ஜே. கண்கள் சிவக்க அதெல்லாம் தெரியாது.. என்கிறார்...

ஸாஜிதா புக் சென்டர் ஜக்கரிய்யா எழுதி அந்நஜாத் ஜுலை 2004 இதழின் 23-25 பக்கங்களில் இடம் பெற்றவற்றிலிருந்து மேற்கண்ட 2 பாராக்களை தந்துள்ளேன். 

அதில் லெப்பைத் தம்பி பி.ஜே.க்கு கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஆலோசனை சிந்திக்கத் தக்கது. அண்ணன் பி.ஜே. அவர்கள் மீது உண்மையான பிரியம் வைத்துள்ளவர்கள் அவர் செய்யும் தவறுகளை பகிரங்கமாக சுட்டிக் காட்டுவது நல்ல நோக்கத்தில்தான். 

இம்மையில் பல்ஆன் இப்னு பாவூராவாகவோ, மிர்ஸாவாகவோ, ரஷாது கலீபாவாகவோ மறுமையில் முப்லிஸாகவோ ஆகி விடக் கூடாது என்பதற்காகத்தான். அல்லாஹ் அனைவரையும் காப்பாற்றவானாக ஆமீன்.
அன்புடன்:
கா.அ.முஹம்மது பழுலுல் இலாஹி,

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.