ஒரு கீழ்தரமான காரியத்தை செய்த லுஹா.

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம் 06.03.2004

மதிப்பிற்குரிய வெளிநாட்டில் உள்ள மேலப்பாளையம் தவ்ஹீத் சகோதரர்களுக்கு, கொள்கை சகோதரன் Brother in belief இமாம் எழுதுவது அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்!
மஸ்ஜித் தக்வா ஆரம்பித்திருப்பது தேவைதானா? உள்ளே இருந்தே போராடியிருக்கலாமே என்று சில சகோதரர்கள் கேட்கிறார்கள். ஒன்றுபட்டு இருந்தவர்கள் இப்படி பிளவுட்டு போவது நமது பிரச்சாரத்தை பாதிக்காதா என்பதும் அவர்களது ஆதங்கம். இதற்கு பதில் அளிக்கவே இக்கடிதம் எழுதுகிறேன்.
உள்ளே இருந்து போராடுவது (Infighting) என்பது மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும். தினமும் சண்டை சச்சரவு ஏற்படும். தொழவருகிறவர்கள் இன்று என்ன சண்டை ஏற்படப்போகிறதோ என்ற எண்ணத்திலேயே தொழநேர்ந்தால் அது நமது பள்ளியை அல்லாவின் அருள்விட்டும் மிகத் தூரத்தில் வைத்துவிடும்.
மேலும் 26.01.2004 அன்று நடந்த பொதுக்குழு கூட்டம் சம்சுல் லுஹாவும் அவரால் அழைக்கப்பட்ட மக்களும் (12 வயது சிறுவன் கூட அழைக்கப்பட்டிருந்தான். அவன் ஓட்டெடுப்பிலும் கலந்து கொண்டான்). எந்த ஒரு நிலைக்கும் செல்லக் கூடியவர்கள் என்ற அச்சத்தைத்தான் எங்களுக்கு ஏற்படுத்தியது. நாங்கள் அந்த கூட்டத்திற்கு சென்றது P.J. மேல் உள்ள நம்பிக்கையில்தான். தவறுகள், அநாகரிகங்கள் நடக்க அவர் அனுமதிக்கமாட்டார் என்று நம்பினோம். அவரும், முதலில் 'தவ்ஹீது மக்கள் கண்ணியத்தையும், ஒழுங்கையும் கடைபிடிக்கும் மக்களாக இருக்கவேண்டும்' என்றுதான் கூறினார்.
ஆனால் நான் அவரிடம் கேள்வி கேட்கும்போது பலர் என்னை உட்காரச் சொல்லி கூச்சல் போட்டார்கள். சிலர் எனது சட்டையை பிடித்து இழுத்து உட்கார வைக்க முயன்றார்கள். இதெல்லாம் P.J. வின் கண் முன்னாடி 10 அடி தூரத்தில் தான் நடந்தது. ஆனால் நம்ம P.J. அதை தடுக்கவும் இல்லை. ஒரு வார்த்தை கண்டிக்கவும் இல்லை. மாறாக அவரும் சேர்ந்து என்னை பார்த்து 'நீங்கள் குழப்பம் செய்ய வந்திருக்கீங்க அதனால் நீங்க என்னை பார்த்து உட்காருங்க' என்று கூறியது மனதிற்கு வேதனை அளிக்கிறது.
இப்போது சொல்லுங்க, எப்படி இவர்களுடன் சேர்ந்து இருந்து இவர்கள் தவறுகளை சுட்டிக் காட்டுவது என்று. செய்வது தவறு என்று தெரியாமல் செய்பவர்கள்தான் அதை சுட்டிக் காட்டினால் கேட்பார்கள். ஆனால் தெரிந்தே தவறு செய்பவர்கள் பிறர் கேட்டால், அவர்கள் நம்புவதற்கு ஏற்றபடி ஒரு பதிலை சொன்னால் போதும் என்ற நினைப்பில் இருப்பவர்களிடம் தவறுகளை சுட்டிக் காட்டுவது வீண் வேலை.
இப்பொழுது கூட சம்சுல் லுஹா, தான் செய்த காரியங்களுக்கு கூறும் ஒரே பதில், 'அப்பாஸ் ஹில்மி தவ்ஹீத் ஜமாத்தை ஹைஜாக் செய்ய முயற்சி செய்தார். அதனால்தான் நான் இம்மாதிரியான காரியங்களை செய்தேன்' என்பது தான்.
எவ்வளவு தவறுகள் செய்தாலும் அதை சகித்துக் கொண்டு நமது பிரச்சாரங்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக அமைதியாக இருந்தால், 'ஒரு தவறு நடந்தால் அதை கையால் தடு, அல்லது நாவால் தடு, முடியவில்லை என்றால் அந்த தவறை வெறுத்து விலகிவிடு' என்ற ஹதீஸை பின்பற்றுவதை விட்டும் தவ்ஹீதுகாரர்களுக்கு விலக்கு ஏதும் அளிக்கப்பட்டுள்ளதா? முதலில் நாம் அப்படி ஏதும் இருந்தால் நம் முயற்சிகளுக்கு அல்லாஹ் வெற்றியைதான் கொடுப்பானா?
ஒற்றுமை முக்கியம் என்றால், அது மிகவும் அவசியமாக தேவைப்பட்ட காலத்தில் P.J. அபூ அப்துல்லாஹ்வை விட்டு பிரிந்தது, பின்பு S. கமாலுதீன் மதனியை விட்டு பிரிந்தது ஏன்?.
இப்பொழு கூட சென்ற ரமலானில் நாகூரில் P.J. ஆதரவாளர்கள், அங்கு ஒரு ஜாக் பள்ளி இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அதிலிருந்து பிரிந்து அதற்கு மிக அருகிலேயே இன்னொரு தனி பள்ளியை (அதுவும் வாடகை கட்டிடம் தான்) ஆரம்பித்து இருக்கிறார்களே, அது ஏன்?.
இவ்வளவு நாளும் நடந்த தவறுகளை ஜமாத்தின் கௌரவம் பாதிக்கக் கூடாது என்றுதான் அமைதிகாத்தார்கள். சகித்துக் கொண்டார்கள். ஆனால் எல்லா விஷயத்திற்கும் ஒரு Braking Point என்று ஒன்று உண்டு. சம்சுல் லுஹா P.J. வை துணைக்கு அழைத்துக் கொண்டு நடத்திய அந்த அசிங்கமான பொதுக்குழு கூட்டம் தான், இனிமேல் இவர்களே பொறுத்துக் கொள்ள முடியாது என்ற நிலைக்கு நம்மையெல்லாம் தள்ளியது.
ஒற்றுமை குழைந்து போகக் கூடாது என்ற கவலை சம்சுல் லுஹாவுக்கு கொஞ்சமாக இருந்தால் யார் பதவியை விரும்புகிறார்களோ அவர்களுக்கு பதவியை கொடுக்கக் கூடாது என்ற ஹதீஸை மேடையில் பேசிவிட்டு, தானும், தன்னை எதிர்த்து கேள்வி கேட்காதவர்கள் பதவிக்கு வரவேண்டும் என்பதற்காக இப்படி ஒரு கீழ்தரமான காரியத்தை அவர் (லுஹா) செய்வாரா?
மேலப்பாளையத்தில் சம்சுல் லுஹாதான் தவ்ஹீத், தவ்ஹீத் என்றால் அது சம்சுல் லுஹாதான் என்ற ஒரு நிலையை லுஹா ஏற்பட்டுத்தி வைத்திருக்கிறார். தம்மை எதிர்ப்பவர்களுக்கு மஸ்ஜித் ரஹ்மான் தவிர வேறு போக்கிடம் கிடையாது என்ற மமதை தான். அவரின் இம்மாதிரியான இறையச்சம் இல்லாத செயல்களுக்கு காரணம். அதை ஒழிக்க வேண்டும். தவ்ஹீதை நாகரிமான முறையில் பிறரை ஷிர்க் வாதி, கஃபிர் என்றெல்லாம் ஃபத்வா கொடுக்காமல், 'யார் ஒருவர் தன்னை கஃபிர் என்று அறிவிக்காதவரை அவரை நீங்கள் கஃபிர் என்று கூறாதீர்கள். அப்படி கூறினால் இரண்டு பேரில் ஒருவர் கஃபிராக ஆகிவிடுவீர்கள்' என்ற நபிமொழிக்கு அஞ்சி பிரச்சாரம் செய்வதற்கு இன்னொரு களம் தேவை என்பதை உணர்ந்து தான் மஸ்ஜித் தக்வா பள்ளியை ஆரம்பித்து இருக்கிறோம்.
பதவிக்கு ஆசைப்பட்டு நாங்கள் இந்த பள்ளியை ஆரம்பித்து இருப்பதாக லுஹா பிரச்சாரம் செய்து வருகிறார். J.S. ரிபாய் ஏற்கெனவே தனது பொருளாளர் பதவியை ராஜினாமா செய்திருப்பவர். இனாயத்துல்லாவும் தனது உடல்நிலை சரியில்லை என்று கூறி தனது செயலாளர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்து இருப்பவர். மஸ்ஜித் தக்வாவில் கூட ரிபாயியை தாயியாகவும், இனாயத்துல்லாவை ஆலோசராகவும் போடவேண்டும் என்றுதான் முடிவு செய்து இருக்கிறோம்.
மஸ்ஜித் ரஹ்மான் பள்ளிக்கு அருகில் உள்ள நூர்சேட் இடத்தை வாங்குவதற்கு வசூலித்த ரூ.10 லட்சம் பணத்தை அணைத்து தவ்ஹீத் கூட்டமைப்பின் பொருளாளர் அன்வர் பாஷாவிடம் கொடுத்து வைக்கும்படி P.J. நமது பள்ளி நிர்வாகத்தை வற்புறுத்தியபோது அதை மறுத்து தடுத்து நிறுத்தியவர் இனாயாத்துல்லா தான். இதை லுஹா P.J. விடம் தெரியப்படுத்தி இனாயத்துல்லா மீது P.J. விற்கு இருந்த நல்ல எண்ணத்தை குறைத்துள்ளார்.
அந்த ரூ.10 லட்சம் பணத்தில் ரூ.1½ லட்சம் பணத்தை லுஹா ஏற்கெனவே செலவு செய்துவிட்டார். மீதி பணத்தை பலரிடமும் பிரித்து கொடுத்து வைத்திருக்கிறார். அதில் ஒரு நபர் கூட நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் கிடையாது. R.R. ஸ்டோர் உரிமையாளரிடம் ரூ.2 லட்சம் பணம் கொடுத்து வைக்கப்பட்டுள்ளது. அவர் ஏகத்துவம் துணை ஆசிரியர் இப்ராஹிம் உடைய மாமனார் என்ற தகுதியை தவிர, வேறு எந்த தகுதியும் கிடையாது. தவ்ஹீதிற்காகவோ, மஸ்ஜித் ரஹ்மானுக்காகவோ என்ன செய்திருக்கிறார் என்பது அல்லாஹ்விற்குத்தான் வெளிச்சம்.
சென்ற ஹஜ் பெருநாள் கொத்பாவில் சம்சுல் லுஹா தவ்ஹீத் தாயிக்கள் மிகவம் சிரமப்படுவதாக கூறி அவர்களுக்கு மக்கள் பொறுப்பேற்றவேண்டும் என்று கூறினார். கடந்த ஜும்மாவில் கூட மஸ்ஜித் ரஹ்மான் பள்ளியின் இமாம் மசூத் நான்கு குழந்தைகளை வைத்துக் கொண்டு மிகவும் கஷ்டப்படுவதாக கூறி அவருக்கு உதவி செய்ய வேண்டுகோள் விடுத்தார்.
மேலப்பாளையத்திலேயே அதிக சம்பளம் வாங்கும் இமாம் மஸ்ஜித் ரஹ்மான் பள்ளியின் இமாம் தான். ரூ.4,500 சம்பளம்.
அல்-இர்ஷாத்தை சேர்ந்த M.S. சுலைமானின் சம்பளம் ரூ.7000.
நமது பள்ளியின் கட்டுமானத்தை முழுவதும் மேற்பார்வை செய்தவர் இனயத்துல்லா. ஆனால் அதற்கான ஊதியத்தை பெற்றுக் கொண்டவர் சம்சுல் லுஹா தான்.
பள்ளிக்கு என்று தனியாக போன் ஒன்று உள்ளது. இருந்தும் தனது மருமகன் பேரில் ஒரு தனிபோன் கனெக்ஷன் தனது வீட்டிற்கு வாங்கி கட்டணத்தைக் கூட பள்ளியின் பணத்திலிருந்து செலுத்தி வருபவர், இந்த காரியத்தை நிர்வாகத்தில் யாரிடமும் கலந்து கொள்ளாமல் செய்திருக்கிறார் லுஹா.
அவர் வீட்டில் ஏற்கெனவே 2 கம்யூட்டர்கள் உள்ளது. அது போக இன்னொரு லேப் டாப் வேண்டும் என்று பஸ்லுல் இலாஹியிடம் கேட்டவர். அப்போது அவர் உங்களிடம் தான் 2 கம்யூட்டர்கள் உள்ளதே என்று கூறியபோது P.J. விற்கு நீங்கள் லேப் டாப் வாங்கி கொடுத்திருக்கிறீர்களே, அவரைப்போல நானும் ஒரு தாயிதானே எனக்கும் கொடுக்கக் கூடாதா என்று கேட்டிருக்கிறார்.
ஆனால் மேடையில் தவ்ஹீத் தாயிக்கள் கஷ்ட ஜீவனம் நடத்துவதாக கூறியிருக்கிறார். இதையெல்லாம் நான் இவ்வளவு விரிவாக கூறுவதற்கு காரணம் அவருடை எந்த செயலிலும், சொல்லிலும் இறையச்சமும், இக்லாசும் இல்லை என்பதை தெரிவிக்கத்தானே தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை. கைர்.
நாங்கள் மஸ்ஜித் தக்வாவிற்கு நிலம் வாங்குவது சம்பந்தமாக 70 நபர்களை கூட்டி 03.03.2004 ஒரு கூட்டம் ஒன்றை நடத்தினோம். அல்ஹம்துலில்லாஹ்! 45 நிமிடம் நடந்த அந்த கூட்டத்தில் 2லட்சம் ரூபாய் வரை நன்கொடை தருவதற்கு வந்திருந்த மக்கள் ஒப்புக் கொண்டுள்ளார்கள். நிலத்தின் மொத்த மதிப்பு ஏறக்குறைய ரூ.6 லட்சம். உங்களைப் போன்ற சகோதரர்கள் நிலம் வாங்க உதவி செய்தால் இன்ஷா அல்லாஹ் கட்டுமானத்தை நாங்கள் உடனே ஆரம்பித்துவிடுவோம்.
Insha Allah will not elevate, exalt and execrate any human beings.
We will elevate, expound and enlighten the tenets of Islam.
Kindly help us to build P.J.-ism, Luha-ism and Jaqh-ism free Thowheed Masjid in Melapalayam.
Your feefback to :- thaqwampm@yahoo.com Personel references to :- imamcivil@yahoo.com.
For your information Email Id of Samsul Luha is :- almubeen@hotmail.com masjidurrahman@hotmail.com பள்ளி விரைவில் அமைய துஆ செய்யவும். மாஸலாம்.
இப்படிக்கு
அஹமது இமாம்.
60, ராவுத்தர் மேலத் தெரு, மேலப்பாளையம். செல் : 98420-44014.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு