ஜெஹபர் எம். அஹ்மத் அவர்களின் கடிதம்.

ஜெஹபர் எம். அஹ்மத் அவர்கள் கடிதத்தில் உள்ளவற்றைப் பார்ப்போம். த.மு.மு.கவினர் உங்களது நோட்டீஸ்களை காப்பிகளாக வினியோகித்தும் ஈ-மெயில்களாக அனுப்பியும் வருகிறார்கள். அந்த த.மு.மு.கவினர்தான் உங்களது பழைய நோட்டீஸ்களை குப்பைத் தொட்டிகளுக்கு அனுப்பினார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இனமாச்சர்யம் பார்ப்பதுதான் பி.ஜேயிஸம்.

அப்பொழுது த.மு.மு.க.வினர் அப்படிச் செய்யும்போது அவர்களுடன் பி.ஜே. வகையறாக்கள் இருந்தனர். பி.ஜே. வகையறாக்கள் யார்? எப்படிப்பட்டவர்கள்? குர்ஆன் ஹதீஸ்கள் அடிப்படையில் எழுதபட்ட எவ்வளவு உயர்ந்த நூலாக இந்தாலும் குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் உள்ள நூலாயிற்றே என்று பார்க்க மாட்டார்கள். எந்த தரப்பில் உள்ளவர் வெளியீடு என்று இனமாச்சர்யம்தான் பார்ப்பார்கள். இனமாச்சர்யம் பார்ப்பதுதான் பி.ஜேயிஸம்.

பி.ஜே. வகையறாக்கள் நடத்தும் மர்க்கஸ் நிலைப்பாடு.

'அல்ஜன்னத்' என்ற இஸ்லாமிய பத்திரிக்கை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலானது என்பது அனைவருக்கும் தெரியும். அந்தப் பத்திரிக்கையில் 10 வருடங்களாக ஆசிரியர் வேலை பார்த்தவர்தான் பி.ஜே. அந்த அல்ஜன்னத் பத்திரிக்கையை எடுத்துக் கொண்டு வரும் பிரச்சாரகரை உள்ளே விடுவார்கள். ஆனால் அவர் கொண்டு வரும் பத்திரிக்கையை வெளியில் வைத்து விட்டுத்தான் உள்ளே செல்ல வேண்டும். பி.ஜே. வகையறாக்கள் நடத்தும் மர்க்கஸ் நிலைப்பாடு இது.
அறிவுப்பூர்வமான கேள்விகள் எல்லாம் பி.ஜே. வகையறாக்களிடம் கேட்க முடியுமா?
அந்த மர்க்கஸில் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பேச வரும் ஷதாஇ| கொண்டு வரும் அல்ஜன்னத் குர்ஆன் ஹதீஸுக்கு விரோதமாக உள்ளதா? குர்ஆன் ஹதீஸுக்கு விரோதமான நூலையா அவர்கள் மர்க்கஸில் பேச வரும் 'தாஇ' எடுத்து வருகிறார்? என்ற அறிவுப்பூர்வமான கேள்விகள் எல்லாம் பி.ஜே. வகையறாக்களிடம் கேட்க முடியுமா?

இஸ்லாத்தைப் பேண வேண்டும் என்ற எண்ணம் உடைய முஸ்லிம்கள்.

சமீபத்தில் பி.ஜே. வகையறாக்கள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளது முஸ்லிம் பெண்மணி பத்திரிக்கையை. முஸ்லிம் பெண்மணியில் குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக என்ன வந்தது? இப்படி அல்லாஹ்வின் வார்த்தைகளாகிய குர்ஆனையும் நபி (ஸல்) மணிமொழிகளாகிய ஹதீஸ்களையும் தாங்கி வரும் பத்திரிக்கைகளையும் நூல்களையுமே இனமாச்சர்யத்தால் குப்பை கூடைகளுக்கு அனுப்பி விடுபவர்கள்தான் பி.ஜே. வகையறாக்கள். அந்த வகையறாக்கள் இருந்த போதுதான்இ சாதாரண மனிதனாகிய எனது எழுத்துக்களை புறக்கணித்து குப்பை கூடைகளுக்கு அனுப்பினார்கள். இனமாச்சர்யம் உடைய அந்த பி.ஜே. வகையறா வெளியேறி விட்டது. இப்பொழுது இஸ்லாத்தைப் பேண வேண்டும் என்ற எண்ணம் உடைய முஸ்லிம்கள் இருக்கிறார்கள் எனவே எனது பிரசுரங்களையும் வினியோகிக்கிறார்கள்.

இவர் புரியாமலே பதில் எழுதும் லிஸ்ட்டில் உள்ளவர்.

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று பலர் புரிந்து கொள்ளாமலே அல்லது நீங்கள் சொல்லி என்ன ஆகப்போகிறது என்ற எண்ணத்தில் உங்கள் அறிக்கைகள் எல்லாம் நேராக குப்பை வண்டியில் போட்டு வந்தனர்இ என்றும் எழுதி உள்ளார். புரியாததற்கு யாராவது பதில் எழுதுவார்களா? இதன் மூலம் இவர் புரியாமலே பதில் எழுதும் லிஸ்ட்டில் உள்ளவர் என்று ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் ஒன்றும் ஆகப் போகாததற்கு இவர் ஏன் விமர்சனம் எழுதினார். ஆத்திரத்தில் எழுதி விட்டாரோ?

பாக்கர் ஏன் அப்படி சொன்னார் என்று சிந்திக்க மறுப்பது ஏன்? என்று எழுதி உள்ள ஜெஹபர் எம். அஹ்மத் ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு என்றும் எழுதி உள்ளார். பாக்கர் கூறிய வார்த்தை தகாத வார்த்தைதான் என்று பாக்கரே ஒப்புக் கொண்டு விட்டார். சொன்னவரே தகாத வார்த்தை என்று ஒப்புக் கொண்டு விட்ட பிறகு அதை நியாயப்படுத்துவதுதன் மூலம் இவர் எப்படிப்பட்டவர் என்று தன்னை அடையாளம் காட்டி உள்ளார்.

யார் ஆத்திரக்காரன்? யாருக்கு புத்திமட்டு?

சொன்னவரே சொன்ன வார்த்தையை தவறு என்று ஒப்புக் கொண்டுவிட்ட பிறகு தவறு என்றும் சரி என்றும் எழுதுபவன் மாங்கா மடையனாகத்தான் இருக்க வேண்டும். பாக்கர் சொன்ன வார்த்தையை தவறு என்று விமர்சித்து நான் எழுதவில்லை. அவர்தான்இ தவறு என்று ஒப்புக் கொண்டு விட்டாரே. நான் எதை சுட்டிக் காட்டி எழுதி இருந்தேன் என்றால் பாக்கரே தவறு என்று ஒப்புக் கொண்டுவிட்ட ஒன்றை அல்லாஹ்விடம் அங்கீகரமானது என்றும் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலானது என்றும் பேசி உள்ளாரே அதைத்தான் விமர்சித்திருந்தேன். எனவே நான் எழுதியதை மீண்டும் படித்துப் பார்த்தால் யார் ஆத்திரக்காரன்? யாருக்கு புத்திமட்டு? என்பது தெளிவாகும்.

யாருடைய முகவரி அழிய இருந்தது?

ஹைதருக்கு முகவரி தந்தது யார்? முகவரி தந்தவரை முகம் சுளிக்க வைத்தது ஏன்? த.மு.மு.கவை வளர்த்து ஆளாக்கி தலை நிமிர்ந்து நிற்கும் நிலை வந்த பின்.. என்றெல்லாம் ஜெஹபர் எம். அஹ்மத் கேட்டுள்ளார். யாருடைய முகவரி அழிய இருந்தது? எந்த அறிமுகமான ஆள் அட்ரஸ் இல்லாமல் போக இருந்தார்? த.மு.மு.க.வுக்கு பி.ஜே. ஏன் வந்தார்? என்ற வரலாறு தெரிந்திருந்தால் ஜெஹபர் எம். அஹ்மத் இப்படி கேட்டிருக்க மாட்டார். இந்தக் கேள்வி அவரை வரலாறு இல்லாதவர் என்று அடையாளம் காட்டுகிறது.

பேச மறுத்து ஓடியது எந்த மகன்?

உண்மையை பேசுவோம்(?) என்று சி.டி வெளியிட்டால் மட்டும் போதாது! பேச வேண்டிய நேரத்தில்இ இடத்தில் (ஏப்ரல்-10ல்) நிர்வாக குழு கூட்டத்தில் பேசியிருக்க வேண்டும். ஏன் பேசவில்லை? பேசி ஹைதர்தான் அந்த மகன் என்பதை இல்லையென்று நிரூபிக்க வேண்டாமாஇ என்று ஜெஹபர் எம். அஹ்மத் கேட்டுள்ளார். நிர்வாக குழு கூட்டத்தில் 2 மாதம் ஆனாலும் பேசுவோம் என்றுதான் ஹைதர் அலி அவர்கள் பேச தயாராக இருந்தார்கள் என்பதும் பேச மறுத்து ஓடியது எந்த மகன்? என்பதும் ஊரறிந்த உண்மையாகி விட்டது.

அவர்களது விமர்சன வார்த்தைகள் அவர்களுக்கே திரும்புகின்றன.

ஒரு சமுதாய இயக்கம் பிளவுபடும் நிலையில் உள்ளது சமுதாயத்தில் அக்கரையுள்ள அனைவரும் பிளவுபடுவதை தடுக்க முயற்சிக்கும் வேளையில் ஏதேனும் செய்ய நீங்களும் சேர்ந்து முயற்சிக்காமல் பிரச்சினையை பெரிதாக்கி.. என்று எழுதி உள்ளார் சமாதானப் பேர்வழி போல் தன்னை காட்டி உள்ள ஜெஹபர் எம். அஹ்மத்.
அதுபோல் நீங்கள் சமுதாய நல விரும்பியாக இருந்திருந்தால் நல்லக் கண்ணோட்டத்துடன் இப்பிரச்சனையை நோக்கி இருந்தால் பிரிவினர்களுக்கிடையில் ஒற்றுமை முயற்சியல்லவா செய்திருக்க வேண்டும் என்று எழுதி உள்ளார் இன்னொரு சமாதான பேர்வழி அதிரை பாரூக். யாரையும் சாராமல் எழுதி இருந்தால் இவர்களை சமாதான பேர்வழிகள் என்று நம்பலாம். அவர்களின் எழுத்துக்கள் ஒரு பக்கம் சார்புடையதாக அல்லவா இருக்கிறது. எனவே அவர்களது விமர்சன வார்த்தைகள் அவர்களுக்கே திரும்புகின்றன. நான் ஏன் முயற்சிக்கவில்லை என்று கேட்டுள்ளார்கள். இதற்குரிய பதில் அவள் அவருக்கு முதல் மனைவி. அவளுக்கு அவர் 10 வது கணவர் என்ற தலைப்பில் அளித்த விளக்கத்தில் பதில் உள்ளது. இதை http://www.pjvstmmk.com என்ற வெப் சைட்டின் வாசகர் மடல்கள் பகுதியில் பார்க்கலாம்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு