அவள் அவருக்கு முதல் மனைவி. அவளுக்கோ அவர் 10 வது கணவர் To ஏ.ஆர். பரகத் அலி
கண்ணியத்திற்குரிய அண்ணன் முத்துப் பேட்டை ஏ.ஆர். பரகத் அலி அவர்கட்கு, கா.அ.முஹம்மது பழ்லுல் இலாஹியின் அஸ்ஸலாமு அலைக்கும்.
உங்கள் நோக்கம் நல்ல நோக்கம்.
தமு.மு.கவின் மாநில நிர்வாகிகள் மற்றும் பீ.ஜெய்னுல்ஆப்தீன், எஸ்.எம்.பாக்கர், ஏ. எஸ். அலாவுதீன் மற்றும் இதர சகோதரர்களுக்கு.. ... சைத்தானுடைய சூழ்ச்சிக்கு விலை போன அ(கே)வலத்தை பார்த்து மனம் வெதும்புகிறோம்... என்று மனம் வருந்தி நீங்கள் எழுதிய ஈமெயில் கிடைத்தது.
.... என்ற வெப் சைட்டிலும் பார்த்தேன். உங்கள் நிலையில் இருந்து நீங்கள் எழுதியது. நீங்கள் குறிப்பிட்டுள்ளது நடக்காத காரியம் என்பது எனது நிலையாகும். உங்கள் நோக்கம் நல்ல நோக்கம். ஒற்றுமைக்கு உங்கள் மனதில் பட்ட வழியை ஆலோசனையாக எழுதி இருந்தீர்கள்.
எனவே உங்களுடைய நல் எண்ணத்திற்கு மதிப்பளித்தும், இப்படிப்பட்ட சமுதாய உணர்வு உள்ளவர்களும் இருக்கிறார்கள் என்பதை பிறர் அறியச் செய்ய என்னிடம் உள்ள ஐ.டி.களுக்கு பார்வேடு பண்ணினேன்.
சுட்டுக் கொன்றாலும் தவறே இல்லை.
பாவிகளா உங்களை சுட்டுக் கொன்றாலும் தவறே இல்லை. என்ற வார்த்தை சமுதாய நிலையைக் கண்டு உங்கள் மனதில் ஏற்பட்ட பாதிப்பின் வெளிப்பாடு என்று விளங்கினேன். சுடுபவன் சொல்லி விட்டு சுட மாட்டான். நேரடி பொருளில் விளங்கி இருந்தால் மற்றவர்களுக்கு நான் பார்வேடு பண்ணி இருக்க மாட்டேன்.
விளங்குவதற்கும் விளக்குவதற்கும் உதாரணம்.
சுட்டுக் கொன்றாலும் தவறே இல்லை என்ற வார்த்தையை நேரடி பொருளில் விளங்கக் கூடாது. அது ஆதங்கத்தின் வெளிப்பாடு என்று பதில் அளித்த நீங்கள், விளங்குவதற்காக நெருப்பு என்று சொல்வதால் சுடப்போவதும் இல்லை. மிளகாய் என்று சொல்வதால் நாக்கு உறைக்கப்போவதும் இல்லை. என்று உதாரணங்கள் கூறி விளக்கி இருந்தீர்கள்.
விளங்குவதற்கும் விளக்குவதற்கும் உதாரணம் அவசியம் என்று உணர்ந்துள்ள நீங்கள் அனுப்பிய விளக்க மெயிலில், துபையிலிருந்து சகோதரர் பழ்லுல் இலாஹி செய்வதை போலவா செய்ய சொல்கிறீர்கள்.
இவருடைய பல பிரசுரங்களை படிக்க முடியாவிட்டாலும் சிலவற்றை படித்தேன். அவ்வாறு படித்ததில் த.மு.மு.க வில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு மேலப்பாளையம் காரணமா? என்ற பிரசுரமும் ஒன்று. அதில் அவர் ஒரு இடத்தில் நல்ல கருத்தை சொல்லியுள்ளார்.
அது, இரண்டு பேர்களுக்கு மத்தியில் சண்டை நடந்தால் மனித இதயம் உள்ள 3 வது ஆள் சமாதானம் செய்து வைக்கத்தான் முயற்சி செய்வார்கள். இவரிடம் தவறு குறைவு அவரிடம் கூடுதல் என்று கூறி இரு அணிகளாக ஆக்க மாட்டார்கள்........ என்று எழுதியுள்ளார்.
ஆனால் அவர் என்ன செய்து கொண்டு உள்ளார் என்பதனை நீங்கள் அறிவீர்கள். என்று எழுதி இருந்தீர்கள். அதற்குரிய விளக்கம் - நேரடி பதில் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான் என்றாலும் அதை எழுதுவதற்கு முன் விளக்குவதற்காக ஒரு உதாரணம்.
தலாக் வழக்குகளில் கூறிய 2 விதமான தீர்ப்புகள்.
50 வயது பெரியவரும் 20 வயது இளைஞரும் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அங்கு 25 வயதுக்கு உட்பட்ட கணவன் மனைவி வழக்கு வருகிறது. ஒருவர் பின் ஒருவராக வருகிறார்கள். இனி சேர்ந்து வாழ முடியாது தலாக்தான் சரியான முடிவு என்று 2 பேருமே கூறுகிறார்கள்.
அப்பொழுது 50 வயதுக்காரர் உங்கள் கணவர் உங்களை எவ்வளவு நேசிக்கிறார் தெரியுமா? உங்களது குணத்தை எவ்வளவ உயர்வாக புகழ்ந்தார். உங்களுக்காக எவ்வளவு தியாகம் செய்துள்ளார் என்று பொய்யான வார்த்தைகள் கூறி ஒற்றுமையாக வாழச் சொல்கிறார். அதே மாதிரி மனைவியைப் பற்றி அந்தக் கணவர் இடம் உயர்வாகக் கூறி சேர்ந்து வாழச் சொல்கிறார்.
அதே இளைஞருடன் இன்னொரு நாள் அந்த பெரியவர் இருக்கும் போது இன்னொரு கணவன் மனைவி வழக்கு வருகிறது. வந்த கணவர், 'எதற்கெடுத்தாலும் எப்பப் பார்தாலும் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் போய்விடுவேன், போய்விடுவென்' என்று சொல்லி வேதனை செய்து கொண்டிருந்த என் மனைவி போய் விட்டாள்.
நானாக தலாக் விட்ட மாதிரி எழுதி என்னிடம் கையெழுத்து வாங்கி போய்விட்டாள்' என்கிறார். அதற்கு அந்த முதியவர் உன்னை பிடித்திருந்த சனியன் தொலைந்து விட்டது என்று நிம்மதியாக இரு என்று சொல்லி விடுகிறார்.
அருகில் இருந்த இளைஞர் கடுங் கோபம் அடைந்து, நீங்கள் நீதியான நல்ல மனிதர் என்று எண்ணினேன். முன்பு வந்த கணவன் மனைவி இடம் சேர்ந்து வாழ வலியுறுத்தினீர்கள். ஒற்றுமை பற்றி மணிக் கணக்கில் பேசினீர்கள். இப்பொழுது என்ன செய்தீர்கள்? வந்தவரிடம் என்ன சொன்னீர்கள்? ஒற்றுமைக்கு முயற்சி செய்யாமல் அதற்கு முரணாக நடந்து கொண்டீர்களே! இது என்ன நியாயம் என்றார்.
அதற்கு அந்த முதியவர் சொன்னார் முதலில் வந்தவர்கள் இளம் தம்பதியினர். 2 பேருக்கும் மத்தியில் இதுதான் முதல் தகராறு.
2 வது வந்தாரே அவருக்கு அவள் முதல் மனைவி. அவளுக்கோ அவர் 10 வது கணவர். ஒவ்வொரு கணவனிடமிருந்தும் ஓரிரு குழந்தை பெற்றதும் தானாக பிரிந்து விடுவாள்.
வேறு ஒருவரை திருமணம் செய்து விட்டு முந்தைய கணவனை ஆண்மையற்றவன் என்று விமர்சித்து அசிங்கப்படுத்தி விடுவாள் அந்த ஈவு இறக்கமற்ற அரக்கக் குணமுடைய சுயநலக்காரி. புதிய கணவனை வரம்பு மீறி புகழ்வாள். இதை 20 வருடமாக பார்த்து வருகிறேன்.
இது வரை எந்த கணவனும் பெரிய மஹர் வைக்கவில்லை. தலாக்கை கணவனிடமிருந்து பெறாமல் தானாக பிரிந்து விடுவாள். கடைசி கணவர் பெரிய சொத்தை மஹராக வைத்துள்ததால், தானாக போனால் மஹர் சொத்து கிடைக்காது என்பதால் கணவன் தலாக் விட்ட மாதிரி எழுதி வாங்கிவிட்டு போய் விட்டாள் அந்த சண்டாளப் பாவி என்று விளக்கம் கூறினார்.
அது மாதிரிதான் காலித், சிபகத் விஷயத்தில் நான் எடுத்த ஒற்றுமை முயற்சி முதலில் வந்த தம்பதிகள் மாதிரி. பி.ஜே. விஷயம் இருக்கே 2 வது வந்த வழக்கு மாதிரி.
கொள்கைக்காக ஊரை உறவை எல்லாம் தியாகம் செய்திட்ட எழுச்சி.
1986 ஏப்ரலில் இருந்து சரியாக ஓராண்டு காலம் அந்நஜாத் மூலம் தவ்ஹீது எழுச்சி வரலாற்றில் நினைத்து பார்க்க முடியாத பரபரப்பு. ஆறு குளம் பாபர்ஷhப் என எங்கு பார்த்தாலும் அரசியல் பேசி வந்தவர்கள் ஹதீஸ் ஆயத்கள் பற்றி பேசினார்கள்.
அந்த ஹதீஸில் வரும் ராவி பலஹீனமானவராம் என்று அரபி கல்லூரிகளுக்குச் செல்லாதவர்களெல்லாம் பேசிய காட்சி, கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் கொள்கைக்காக ஊரை உறவை எல்லாம் தியாகம் செய்திட்ட எழுச்சி.
அறிஞர் அபு அப்துல்லாஹ்.
இந்த எழுச்சியின் போது அபு அப்துல்லாஹ் அவர்களை அறிஞர் என்று பாராட்டிய பி.ஜே. கொள்கை எழுச்சியைப் பற்றி கவலைப் படாமல் அந்நஜாத்தை விட்டு வெளியேறினார். அப்பொழுது ஏற்பட்டிருந்த எழுச்சி அப்படியே அமுங்கியது. அபு அப்துல்லாஹ்வுடன் ஒரு கூட்டம் இருக்க இவர் பின்னால் ஒரு கூட்டம் பிரிந்து வந்தது.
வரலாற்று நிகழ்ச்சியுடன் நீங்கள் ஒன்றி விட்டால் போதும்.
சுட்டுக்கொன்றாலும் தவறே இல்லை என்ற வார்த்தையை எப்படி உங்களின் ஆதங்கமாக எடுத்துக் கொண்டோமோ அது போலவே, எனது விமர்சனங்களில் வரும் வார்த்தைகளை ஆதங்கத்தின் வெளிப்பாடாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த நிபந்தனை வைத்து விட்டு, ஆங்காங்கு எமது ஆதங்கத்தில் வெளிவரும் கடுமையான வார்த்தைகளை எழுத முடியும். ஆனால் எந்த வார்த்தையையும் குறிப்பிடவில்லை. நான் குறிப்பிடும் வரலாற்று நிகழ்ச்சியுடன் நீங்கள் ஒன்றி விட்டால் போதும். சரியான தீர்வு ஏற்படும் இன்ஷாஅல்லாஹ்.
நபி வழியில் நம் ஜக்காத் நூலை எழுதியவர் ..
1987ல் இப்படி இரண்டு கூறுகளாக்கியவர் இக்பால் மதனியின் துபை ஐ.ஏ.ஸி கிளையை மதுரையில் துவங்கி புரட்சி மின்னல் பத்திரிக்கையில் எழுதி வந்தார். நபி வழியில் நம் தொழுகை, நபி வழியில் நம் ஜக்காத் ஆகிய சிறு நூல்களை எழுதிய பி.ஜே. இக்பால் மதனியை உயர்வு படுத்த அவர் எழுதியது போல் வெயிட்டார்.
இக்பால் மதனியின் ஐ.ஏ.ஸி.
1987ல் இக்பால் மதனி, அப்போதைய ஐ.ஏ.ஸி. தலைவர் கள்ளக் குறிச்சி சுலைமான் ஹாஜியார், மற்றும் துபை ஐ.ஏ.ஸி ஜமாஅத்மார்கள் பி.ஜே.யுடன் போனில் பேசி ரிக்கார்டு செய்து பொது மக்களுக்கு போட்டுக் காட்டி மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.
அந்நஜாத்திலிருந்து பிரிந்த அந்த புண் ஆறி வரும்பொழுது 1988ல் இக்பால் மதனியின் துபை ஐ.ஏ.ஸியை குறை கூறி ஒரு கடிதத்துடன் உறவை முறித்து பிரிந்தார்.
அந்த கடிதத்தை கண்ட துபை ஐ.ஏ.ஸி ஜமாஅத்மார்கள் இடிந்து போனார்கள். மனம் உடைந்து போய் இருந்த அவர்களின் அன்றைய நிலை இன்றும் கண்களில் நிற்கிறது. இதன் மூலம் ஒரு சிறு கூட்டத்தை கூறு போட்டு இக்பால் மதனியுடன் போக வைத்தார். பெருங் கூட்டத்துடன் ஐ.ஏ.ஸியில் இருந்து பிரிந்து வந்தார் அண்ணன் பி.ஜே.
கமாலுத்தீன் மதனிதான் அகில உலக அமீர்.
ஜாக்தான் இஸ்லாத்தின் அடிப்படையிலான முழுமையான அமைப்பு. கமாலுத்தீன் மதனிதான் அகில உலக அமீர் என்று புகழ்ந்தார். இவரது நடவடிக்ககைகளால் கடந்த காலங்களில் ஏற்பட்ட வீழ்ச்சிகளை மறந்து ஜமாஅத் மீண்டும் எழுச்சி பெற்று நல்ல வளர்ச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது அங்கிருந்தும் வெளியேறினார். இங்கேயும் ஜமாஅத்தை 2 கூறுகளாக்கி ஒரு கூட்டத்தை கமாலுத்தீன் மதனி பின்னால் இருக்க வைத்து விட்டு தன் பின்னால் ஒரு கூட்டத்தை பிரித்து வந்தார்.
மாவீரன் கோவை பாஷா.
கோவை பாஷாவை ஆதரிப்பதாக கூறி கமாலுத்தீன் கோழை, கோவை பாஷா மாவீரன் என்றார். அதுவரை கோவை பாஷா என்று அழைக்கப்பட்டு வந்தவரை பாய் என்று மட்டும் சொல்ல வைத்து கவுரவபடுத்தினார்.
இந்த நிலையில் குணங்குடி ஹனீபா அவர்களின் த.மு.மு.க.வில் சேர்ந்த அண்ணன் பி.ஜே. தவ்ஹீதுவாதிகள் த.மு.மு.க.வில் சேர வேண்டியதன் அவசியத்தை குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் விளக்கினார், த.மு.மு.க. வளர்ந்தது. அதன் மூலம் சன் டி.வி.யில் பேட்டி அளிக்க கிடைத்த வாய்ப்பை பாய் (கோவை பாஷா) க்கு அளித்து அவரை உயர்வு படுத்தினார்.
கீழே போட்டு மிதிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
"இப்படி யாரை புகழ்ந்து தூக்கி விட்டாரோ அவரை கீழே போட்டு மிதிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதே இவரது அகராதி" என்று அடிக்கடி லுஹா கூறுவார். அது போலவே கோவை பாஷாவை தூக்கிய வேகத்தில் தூக்கி வீசினார். கோவை பாஷா பின்னால் அல் உம்மா என்று இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் பிரிந்து செல்ல வைத்தார் அண்ணன் பி.ஜே.
அமைப்புகளின் தலைவர் ஹாமித்பக்ரி.
ஹாமித்பக்ரியை தலைவராகக் கொண்டு தவ்ஹீது பிரச்சாரக் குழு, இஸ்லாமிய கல்விச் சங்கம், தாருல் ஹதீஸ் இப்படி பல அமைப்புகள் துவங்கினார். சூழ்நிலைகளுக்கு ஏற்ப கட்டுப்பட்டிருக்கும் பினாமிகளில் தான் விரும்பியவர்களையே மக்கள் தலைவராக ஏற்க வேண்டும் என்பதே அண்ணன் பி.ஜே. அவர்களின் நிலைப்பாடு.
கூட்டமைப்பு துவக்க நிகழ்ச்சியில் கூடி இருந்தவர்களில் பெரும்பாலனவர்களின் பேராதரவால் ஹாமித்பக்ரி தலைவரானார். தன்னைத் தவிர யாரும் மக்கள் செல்வாக்குப் பெறுவதை விரும்பாத பி.ஜே. சந்தர்ப்பம் பார்த்து அவரை தலைமை பொறுப்பில் இருந்து கழட்டி விட்டார்.
முன்னதாக இமாம் அலி சகோதரியை திருமணம் செய்யச் செய்தார். இதை ஒட்டிய எல்லா விபரமும் ஹாமித் பக்ரி கைது பற்றி பி.ஜே. விளக்கம், ஹாமித் பக்ரியின் கைதுக்குப் பின்னால் உள்ள உதிரத்தை உரைய வைக்கும் சதி. ஆகிய தலைப்புகளில் வெளியான பிரசுரங்களில் உள்ளது. ஹாமித்பக்ரி கைதை காரணமாக்கி அவர் முழுமையாக கழட்டி விட்டார். அவர் பின்னால் ஒரு கூட்டமும் தாஇகளில் பெரும்பாலானவர்களும் செல்ல 2 கூறுகள் ஆகச் செய்தார் அண்ணன் பி.ஜே.
ஜமாஅத்கள் வளரும்பொழுதெல்லாம்.
ஜமாஅத்கள் வளரும்பொழுதெல்லாம் இப்படி ஒவ்வொருவருடனும் சிறு சிறு கூறுகளை போட்டு ஜமாஅத்களை பிரித்து பலஹீனப்படுத்தி வந்தார் அண்ணன் பி.ஜே. புரட்சி மின்னல் அப்துல்லாஹ், ரஹ்மதுல்லா இம்தாதி, முஹ்யித்தீன் உலவி, கோவை ஐயூப், முஸ்தபா கமால், சீனி நைனா முஹம்மது என்று பட்டியல் நீளுகிறது.
அதிலாவது உருப்படியாக இருந்தாரா?
தவ்ஹீது அமைப்புகளில்தான் இப்படி கொள்கை கோட்பாடுகள் பெயரால் கூறு போட்டார். கொள்கை வேறுபாடுகளையும் மனிதர்களிடம் உள்ள குறைகளையும் மறந்து முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் ஒன்றுபடுவோம் என்று சமுதாயம் த.மு.மு.க.வில் ஒன்றுபட்டது. அதிலாவது உருப்படியாக இருந்தாரா?
சமுதாயத்திற்குத் தெரிந்த இரு நிகழ்ச்சிகள்.
1997 திருச்சி பொதுக்குழுவில் மக்களிடம் கோபித்துக் கொண்டு அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்தையும் விட்டு ராஜினாமா செய்தார். அப்பொழுதும் சமுதாய எழுச்சியில் வீழ்ச்சி எற்பட்டது. அடுத்து மனம் திறந்த மடல் எழுதி ஒரு சோர்வை எற்படுத்தினார். பகிரங்கமான இந்த இரு நிகழ்ச்சிகள்தான் சமுதாயத்திற்குத் தெரியும்.
உயிருக்குத்தான் ஆபத்து என்பதில் சந்தேகம் உண்டா?
உடலில் ஒரு காயம் ஏற்பட்டால் அது அரிவாளால் வெட்டப்பட்ட மிகப் பெரிய காயமாக இருந்தாலும் வெட்டுப்பட்ட அந்த புண்ணுக்கு தையல்கள் போட்டு மருந்து கொடுத்து சரிபடுத்திவிட முடியும்.
மிக மிகச் சிரிய புண்ணாக இருந்து அது அழுகி விட்டால் அதை வெட்டி தூரே வீசி விட்டு மருந்து போட்டால்தான் உடல் குணமாகும். அழுகிய நிலையில் உள்ள அந்த பகுதி நம் உடலில் ஒரு பாகம் ஆயிற்றே என்று அப்புறப்படுத்த தயங்கினால் உயிருக்குத்தான் ஆபத்து என்பதில் சந்தேகம் உண்டா?
சமுதாயம் என்பது உடல் என்றால் தலைமை என்பது மூலையாகும்.
உடலில் எந்த ஒரு பாகத்திலும் எவ்வளவு பெரிய பாதிப்பு எற்பட்டாலும் மூலை அதை மேனேஜ் பண்ணிக் கொள்ளும். உடல் முழுவதும் நன்றாக இருந்து மூலைக்கு சிறு ஒரி என்றாலும் உடலின் செயல்பாடுகள் ஸ்தம்பிக்கும். சமுதாயம் என்பது உடல் என்றால் தலைமை என்பது மூலையாகும்.
ஒன்றா? இரண்டா? எழுத்தில் சொல்ல.
அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகிவிட்டேன் விலகிவிடுவேன் என்று சொன்னது பகிரங்கமாகிவிட்ட இந்த ஒரு முறைதான் என்று சமுதாயம் எண்ணுகிறது. இது முதல் முறை அல்ல சின்னச் சின்ன விஷயங்களுக்கும் இப்படி கூறி விடுவதும். தன்னுடன் யாரும் தொடர்பு கொள்ளக் கூடாது என்று வீட்டில் உள்ள போனை கீழே எடுத்து வைத்து விடுவதும், பிறகு தலைமையில் உள்ள ஒவ்வொருவரும் போய் கெஞ்சிக் கூத்தாடி காணிக்கை செலுத்தி சரி கட்டி கொண்டு வருவதுமான நிகழ்ச்சிகள் ஒன்றா? இரண்டா? எழுத்தில் சொல்ல.
சேனல், போலீஸ் ஸ்டேஷன் தன்மை, தவ்பா வாசல்.
இப்படி சின்னச் சின்ன விஷயங்களுக்கு வீட்டுக் கதவை மூடி விட்டு இருப்பதும் திறப்பதுமான நிகழ்ச்சிகளைத்தான் தவ்பா வாசல் மூடி இருக்கிறது.
தவ்பா வாசல் திறந்தாச்சு என்று கூட்டுடைப்பு மவுலவிகள் லுஹா, ஸைபுல்லா ஹாஜா, தென்காசி சுலைமான் போன்றவர்கள் சொல்வார்கள். இதைத்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 6-4-02ல் பி.ஜேக்கு எழுதிய கடிதத்தில் நான் குறிப்பிட்டிருந்தேன்.
பி.ஜே.யின் சேனல், போலீஷ் ஸ்டேஷன் தன்மை, தவ்பா வாசல் ஆகிய வார்த்தைகள். அந்த வார்த்தைகள் அன்று பலருக்குப் புரியாமல் இருக்கலாம். சேனல் என்றால் என்ன என்பதற்கு ஒரு வகை விளக்கத்தை சமீபத்தில் பி.ஜே. வெளியிட்ட 2 சி.டி.களிலும் பி.ஜே. கூறி உள்ளார். போலீஸ் ஸ்டேஷன் தன்மை என்ற வார்த்தை சமீபத்தில் வெளியாகி உள்ள சி.டி.களில் இடம் பெற்றுள்ளது என்றாலும் அது விளக்கப்படவில்லை. வரும் சி.டி.களில் விளக்கம் கிடைக்கலாம்.
பீஸ் நிகழ்ச்சிக்கு அனுப்பப்பட்ட தொண்டர்களை திரும்ப பெறாவிட்டால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகி விடுவேன் என்று கூறி இருக்கிறார். இதை முதல் சி.டி.யில் அண்ணன் பி.ஜே. அவர்களே ரிசைன் பண்ணி விடுவேன் என்று சொன்னதாக ஒப்புக் கொண்டு பேசி உள்ளார்.
திருச்சியில் பேசும்போது இந்த உண்மையை ஒப்புக் கொள்வது தனக்கு பாதமானது என்று உணர்ந்த அண்ணன் பி.ஜே. சுதாரித்துக்கொண்டார். எனவே அதை அவருடைய ஹிக்மத்படி வெளியில் போய்தான் சொல்ல வேண்டி வரும் என்று சொன்னதாக கூறி மக்கள் கவனத்தை திசை திருப்பி சமாளித்து உள்ளார்.
முஸ்லிம் பெண்மணி ஜக்கரிய்யா.
சின்னச் சின்ன விஷயங்களுக்கும் இது மாதிரி நடந்து கொண்டு யாரும் தொடர்பு கொள்ள முடியாத வண்ணம் அவரது வீட்டு போனை கீழே எடுத்து வைத்து விடும்போதெல்லாம் அவருக்கு தேவையான போன் என்றால் முஸ்லிம் பெண்மணி ஜக்கரிய்யாவிடம் சொல்லி வைப்பார்.
முஸ்லிம் பெண்மணி ஜக்கரிய்யாவுக்கு போன் வரும் அவர் மாடியில் உள்ள ஆபீஸில் இருந்து கீழே இறங்கி வந்து, இவர் இருக்கும் மாடிக்கு ஏறிச் செல்வார். அதே தெருவிலோ அடுத்தடுத்த தெருவிலோ எங்கு இருக்கிரோரோ அங்குபோய் சொல்வார். அப்படி அவருக்கு பணி செய்த அந்த ஜக்கரிய்யா அவர்களைத்தான் இன்று புத்தக வியாபாரி என்று கூறி உள்ளார்.
ஸாஜிதா புக் சென்டர் ஜக்கரிய்யா.
முஸ்லிம் பெண்மணி ஜக்கரிய்யா என்றுதான் பெரும்பாலானவர்களுக்குத் தெரியும். பி.ஜே. ஸாஜிதா புக் சென்டர் புத்தக வியாபாரி என்று கூறியதிலும் உண்மை இருக்கிறது. பி.ஜே. எழுதிய புத்தகங்களை வெளியிட்டு அதன் மூலம் ராயல்டி கொடுத்தவர் அல்லவா ஜகரிய்யா. அவரிடம் ராயல்டி பெற்ற பி.ஜே.க்கு ஸாஜிதா புக் சென்டர் புத்தக வியாபாரி ஜக்கரிய்யா என்றுதான் தெரியும்.
வாழ்வுரிமை மாநாட்டு மகிழ்ச்சியை அப்பொழுதே தொலைத்தவர்கள்.
வாழ்வுரிமை மாநாடு மகிழ்ச்சியில் இருந்து இன்று வரை மீளாதவர்கள் உண்டு. த.மு.மு.க. தலைமையினர் அந்த மகிழ்ச்சியை அப்போதே தொலைத்து விட்டனர் என்பது சமுதாயத்தில் எத்தனை பேருக்குத் தெரியும்?
மார்ச் பேரணி மகிழ்ச்சியை ஒட்டு மொத்தமாக எல்லாரும் தொலைத்து விட என்ன காரணமோ அதேதான் அன்று நடந்தது. அந்த வேதனையை தலைமையினர் மட்டும் அனுபவித்தனர். இதையெல்லாம் இன்னும் வெளியிடாமல் இருக்கிறார்களே அவர்களின் அந்த பொறுமைக்கும் எல்லை உண்டல்லவா.
தலைவர்களுக்கு நிம்மதி இருக்குமா?
குடும்பத்தில் மூத்த மருமகள்தான், கொழுந்தனுக்கு கல்யாணம் நடந்தாலும் கொழுத்தியாவுக்கு கல்யாணம் நடந்தாலும் வீட்டில் நடக்கும் ஒவ்வொரு மகிழ்ச்சியான நிகச்சியின் போதும் நான் தலாக்காகி போய் விடுவேன்;. இது எனக்கு பிடிக்கவில்லை நிறுத்தாவிட்டால் தெருவில் நின்று சப்தம் போடுவேன், இல்லை தலாக்காகி போய் விடுவேன் என்று சொன்னால், அந்த குடும்பத்தில் உள்ள பிள்ளைகளுக்கு ஒன்றும் தெரியாமல் இருக்கலாம் புரியாமல் இருக்கலாம். குடும்ப தலைவர்களுக்கு நிம்மதி இருக்குமா?
இதையெல்லாம் தெரிந்த ஒருவர் தானாக தலாக்காகி போய் விட்ட அவளை கூப்பிடுங்கள். குடும்பத்தில் சேர்த்து கொள்ளுங்கள் என்று சொல்ல முடியுமா? சொன்னால் அவரை அறிவு உள்ளவராக மனித உள்ளம் உள்ளவராக உண்மையை அறிந்தவர்கள் ஏற்பார்களா? வஸ்ஸலாம்.
அன்புடன்: கா.அ.முஹம்மது பழ்லுல் இலாஹி,துபை
தாயக முகவரி: 22ஏ.சமாயினா Nஷக் முஹம்மது மூப்பன் தெரு மேலப்பாளையம். 627005
முத்துப் பேட்டை ஏ.ஆர் பரகத் அலி அவர்களின் கடிதங்களையும் எமது கடிதங்களையும் மற்றுமுள்ளவர்களின் விமர்சனங்களையும் http://www.pjvstmmk.com என்ற வெப்சைட்டில் பார்க்கலாம்.
Comments