தமுமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளதா?
தமுமுக பொதுச் செயலாளருடன் முஸ்லிம் பெண்மணி மாத இதழின் நேர்கானல் முஸ்லிம் பெண்மணி – தமிழ் மாத இதழ் - மே 2004 – பக்கம் 19,20
த.மு.மு.கவில் பிளவு ஏற்பட்டுள்ளதா?
த.மு.மு.க பொதுச் செயலாளருடன் நேர்காணல்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செ. ஹைதர்அலி அவர்கள், தமு.முகவின் நிலைப்பாடுகள் பற்றியதான நமது கேள்விகளுக்கு நமது செய்தியாளரிடம் அளித்த பேட்டியிலிருந்து. . .
த.மு.மு.கவில் பிளவு ஏற்பட்டுள்ளதாவும் இதை தவிர்த்திருக்கலாமே என பலர் கருதுவது பற்றி உங்கள் கருத்து என்ன?
த.மு.மு.க பிளவுப்பட்டுள்ளது என கூறுவதே தவறாகும். சிலர் விலகிவிட்டார்கள் என்பதே சரியானதாகும்.
தமிழ்நாடு முஸ்லிம் முனனேற்றக்கழகம் என்பது எந்த ஒரு தனி மனிதருக்கும் சொந்தமானதல்ல. சமுதாயத்தில் கலிமா சொன்ன அத்தனை மக்களுக்குமான பேரியக்கம். இந்த இயக்கத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவரான R.M. அனிபா அவர்கள் விலகியபோதும் இந்த இயக்கம். தொடர்ந்து நல்ல முறையில் இயங்கிக் கொண்டு தான் இருந்தது. ஓரு சிலர் அவர்களாகவே முன்வந்து இயக்கத்தை விட்டு வெளியேரும் தருணத்தில் யாரையும் தடுக்க இயலாது. ஆரம்பத்திலிருந்தே இந்த இயக்கம் எந்த தனிநபரையும் சார்ந்திருக்கவில்லை. த.மு.மு.கவில் தற்போது பிளவு இல்லை .இது மக்களின் இயக்கம் மக்களுக்காக, அவர்களின் பிரச்சனைகளுக்காக சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் களத்தில் இறங்கி போராடி திர்வு பெறுவதும் இவ்வமைப்பின் நோக்கங்களில் ஒன்றாகும்.
த.மு.மு.க 'தவ்ஹீத்' கொள்கையை விட்டு விலகி விட்டதாக கூறப்படுவது உண்மையா?
குர்ஆனையும் - நபிமொழியையும் பின்பற்றக்கூடிய ஒவ்வொருவரும் தவ்ஹீத் வாதிதான்.
ஹைதர் அலியாகிய நான் தவ்ஹீத் கொள்கைக்கு சொந்தக்காரன், அதைபோலவே, இந்த இயக்கத்தில் உள்ள ஆயிரக்கனக்கான மக்களும் தவ்ஹீத்கொள்கைக்குச் சொந்தக்காரர்களே. 1998 நவம்பர் 6ம் நாள் சென்னை நேதாஜி நகரி நடந்த 'தவ்ஹீத்' பிரச்சனைக்காக நானும், S.M. பாக்கர் அவர்களும் களத்தில் நின்று செயல்பட்டதால்; கைது செய்யப்பட்டு 38 நாட்கள் சிறையிலிருந்தோம். ஆனால் அந்த பிரச்சனையில் நாங்கள் ஈடுப்பட்டது தவறு என்று அன்றைய த.மு.மு.க வின் அமைப்பாளரான அண்ணன் P.J. அவர்கள் எங்களை கண்டித்தார்கள். (நாங்கள் தவ்ஹீத் பிரச்சனையில் ஈடுபட்டதற்காக கண்டித்தவர்தான் இன்று நாங்கள் தவ்ஹீதை விட்டு விலகி விட்டதாக கூறுகிறார்) அத்தகைய நான் ஐரொப்பிய யூனியன் நடத்திய சிறுபான்மை மணித உரிமை கமிஷன் கூட்டத்திற்கு, ஸடர்பிக் நகருக்கு சென்று அங்கு என்னைப்போல் வந்த முஸ்லிம்களிடம் நான் ஒரு வஹாபி என அறிமுகம் செய்துகொண்டேன். அங்கு நான் ஒரு வஹாபி எனப் பேசியதை சென்னை அங்கப்பன் தெரு கூட்டத்திலும் பேசினேன். அக்கூட்டத்தில் வஹாபி என பேசியதை அண்ணன் P.J. அவர்கள் கண்டித்தார்கள் அத்துடன் அந்த பேச்சு T.V – யில் வராமலும் பார்த்துக் கொள்ள சொன்னார்கள். தவ்ஹீத் கொள்கை என்பது முஸ்லிம்களுக்கான அடிப்படை அதைவிட்டு எவரும் விலக மாட்டார்கள்.
இருதரப்பினருக்குமிடையே உரிய முறையிலான ஒப்பந்தம் செய்து கொண்டபின்னரும் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்துவருகிறதே? இதற்கு யார் காரணம்?
இந்த நிகழ்வுகளுக்கு முதற்காரணமே அண்ணன் P.J.அவர்கள் தான். ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு கையெழுத்து போடுவதற்கு முன்னதாகவே ஒப்பந்தத்தை (மீறி) உணர்வில் அறிவிப்பை போட்டு எப்போதும் போல் அவர் தான் ஒப்பந்தத்தை மீறினார்.
நிர்வாக குழுக் கூட்டத்தில் நட்பு ரீதியாக பிரிந்து கொள்வோம். ஓரு தரப்பினர் மறு தரப்பினரை விமர்சனம் செய்யக்கூடாது என முடிவு செய்தபின் ஒருவாரத்தில் நடந்த ஆலந்தூர் நிகழ்ச்சியில் நிர்வாக குழுவுக்கு மாற்றமாக 100 பேரை மட்டும் தனியாக அழைத்து தன்னிலை விளக்கம் அளிக்கிறேன் என்ற பெயரில் பிடிக்காதவர்களை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்து உடனே ஊ.னு, யை வெளியிட்டு விரும்பத்தகாத நிகழ்ச்சிகளை அண்ணன் P.J. தான் உருவாக்கினார்.
த.மு.மு.க தற்போது பலவீனப்பட்டுள்ளதா? இனி த.மு.மு.க வின் பணிகள் எப்படி அமையும்?
த.மு.மு.க பலவீனப்படவில்லை. அவரின் விலகலுக்கு பிறகு கூட நீலகிரி, தேனி, கருர் போன்ற மாவட்டங்களில் புதிய கிளைகள் பல தோற்றுவிக்கப்பட்டு என்றும் போல் இன்னும் வீரியத்துடன் அந்தந்த மாவட்ட நிர்வாகிகளின் தலைமையின் கீழ் நல்ல உற்சாகத்துடன் செயல் படுகின்றனர். த.மு.மு.க என்றும் போல் தனது பணிகளை வீரியத்துடன் தொடரும் . இன்ஷh அல்லாஹ்
த.மு.மு.க பொறுப்பாளர்கள் பலரும் இதனால் விலகி சென்றுவிட்டதாக செய்திகள் பரப்பப்படுகிறதே?
இது முழுக்க முழுக்க கற்பனை செய்தியாகும். நான் முன்னர் கூறியப்படி எல்லா பொறுப்பாளர்களும் முன்பை விட இன்னும் வீரியமாக, தனி மனிதரா? சமுதாயமா? என்றால் சமுதாயமே பெரிது என்ற எண்ணத்தில் செயல்படுகிறார்கள்.
நன்றி : முஸ்லிம் பெண்மணி – தமிழ் மாத இதழ் - மே 2004 – பக்கம் 19,20

Comments