தமிழக முஸ்லிம் பேரவைக் கூட்டம் D பிளாக்
கண்ணியதிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களான அருமைச் சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. காயல்பட்டணம் ஷேக் தாவூதாகிய நான் தலைவராகவும் திருப்பணந்தாள் தாஹா அவர்கள் செயலாளராகவும் இளையான்குடி அபுதாஹிர் பொருளாளரகாவும் ஜாவித் ஒருங்கிணைப்பாளராகவும் பொறுப் பேற்றப் பின் தமிழக முஸ்லிம் பேரவை சார்பில் இன்று(27-12-2002) நடைபெறும் முதல் பொதுகூட்டம் இது. கடந்த 1992 டிசம்பரில் பாபரி மஸ்ஜ்pத் இடிப்புக்குப்பின் பாதிப்புக்குள்ளான நமது சமுதாயத்தவர்களே தடாக் கைதிகளாக சிறையில் தள்ளப்பட்டு அநியாயமாக பாதிப்புக்குள்ளானார்கள். இந்த சமயத்தில்தான் 1995ல் தமிழக முஸ்லிம் பேரவை உருவாக்கப்பட்டு அதே வருடம் 1995ல் மேலப்பாளையத்தில் நடந்த தடா எதிர்ர்பு மாநாடு பேரணி நடத்துவதற்கு நமது தமிழகம் முஸ்லிம் பேரவைதான் பெரும் துணiயாக இருந்தது என்பது மறக்க முடியாத சம்பவம் என்பது தாங்கள் அனைவர்களும் அறிந்ததே. நமது பணியை மேலும் விரிவாக்கச் செய்வதற்க்கு 96 ஜனவரி முதல் தேதியன்று பார்துபை பிளாசா ச...