Posts

Showing posts from 2002

தமிழக முஸ்லிம் பேரவைக் கூட்டம் D பிளாக்

கண்ணியதிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களான அருமைச் சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..  காயல்பட்டணம் ஷேக் தாவூதாகிய நான் தலைவராகவும் திருப்பணந்தாள் தாஹா அவர்கள் செயலாளராகவும் இளையான்குடி அபுதாஹிர் பொருளாளரகாவும் ஜாவித் ஒருங்கிணைப்பாளராகவும்  பொறுப் பேற்றப்   பின் தமிழக முஸ்லிம் பேரவை சார்பில் இன்று(27-12-2002) நடைபெறும் முதல் பொதுகூட்டம்    இது.       கடந்த 1992 டிசம்பரில் பாபரி  மஸ்ஜ்pத்  இடிப்புக்குப்பின்  பாதிப்புக்குள்ளான நமது  சமுதாயத்தவர்களே தடாக் கைதிகளாக சிறையில் தள்ளப்பட்டு அநியாயமாக பாதிப்புக்குள்ளானார்கள்.  இந்த சமயத்தில்தான் 1995ல் தமிழக முஸ்லிம் பேரவை உருவாக்கப்பட்டு அதே வருடம் 1995ல் மேலப்பாளையத்தில் நடந்த தடா எதிர்ர்பு மாநாடு பேரணி நடத்துவதற்கு நமது தமிழகம் முஸ்லிம் பேரவைதான் பெரும் துணiயாக இருந்தது என்பது மறக்க முடியாத சம்பவம் என்பது தாங்கள் அனைவர்களும்  அறிந்ததே.  நமது பணியை மேலும் விரிவாக்கச்  செய்வதற்க்கு 96 ஜனவரி முதல் தேதியன்று பார்துபை பிளாசா ச...

ஹாமித் பக்ரியின் கைதுக்குப் பின்னால் உள்ள உதிரத்தை உரைய வைக்கும் சதி.

தமிழ் நாட்டில் முஸ்லிம்களில் யாராவது போலீஸாரால் கைது செய்யப்பட்டாலோ, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டாலோ உடனேயே, அவன் தீவிரவாதி அவனுக்கும் ஐ.எஸ்.ஐ.க்கும் தொடர்பு இருக்கிறது. முஸ்லிம் அமைப்பை தடை செய்ய வேண்டும், என்று ராமகோபாலன், ஸ்ரீதரன், இல.கணேசன் போன்றவர்கள் அறிக்கை வெளியிடுவார்கள். இப்படி அடிக்கடி அறிக்கை வெளியிடக் கூடிய இவர்கள் ஹாமித் பக்ரி கைது பற்றி எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. அப்படி இருந்தும் தவ்ஹீது ஜமாஅத்என்ற வார்த்தை. அதுபோல் தொலைக் காட்சிகள் மற்றும் பத்திரிக்கைகள் போன்ற மீடியாக்களும் அரசும் அரசு அதிகாரிகளும் முஸ்லிம்களில் யார் கைது செய்யப் பட்டாலும் அவர் எந்த முஸ்லிம் அமைப்புக்கும் சம்பந்தமில்லாதவராக இருந்தாலும் இவர் தீவிரவாத முஸ்லிம் அமைப்பை சேர்ந்தவர் என்று முஸ்லிம் ஏதாவது ஒரு அமைப்பை சம்பந்தப்படுத்தி குறிப்பிடத் தவற மாhட்டார்கள். இப்பொழுது கைது செய்யப் பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தவ்ஹீது ஜமாஅத்தை சேர்ந்தவர்கள். மவுலவி அப்துர் றஹ்மான் ஷpப்லி தவ்ஹீது ஜமாஅத்தின் முன்னணிப் பேச்சாளர்களில் ஒருவர். ஹாமித் பக்ரி தவ்ஹீது ஜமாஅத் மேலாண்மைக்குழு உறுப்பினர். அப்படி இருந்த...

ஹாமித் பக்ரி ஐ.எஸ்.ஐ. உளவாளி. பி.ஜே.பி க்காரன் சொல்லவில்லை பி.ஜே. சொல்லி உள்ளார்.

2.12.2002.ல் ஹாமித் பக்ரி போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவார் என்ற செய்தி வெளியானது. இந்தச் செய்தி வெளியான உடனேயே எங்களுக்கும் ஹாமித் பக்ரிக்கும் சம்பந்தமில்லை என அதிகாரிகளுக்குத் தெரிவித்தது பி.ஜே. கட்சி.  இப்படி பி.ஜே. கட்சி கூறி இருப்பதை கேள்விப் பட்டவர்களெல்லாம் நம்ப மறுத்தார்கள். அவர்களுக்குப் பதிலடியாக எங்களுக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை என பகிரங்கமாக அறிவிப்பும் செய்தது பி.ஜே. கட்சி.  போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப் பட்டுள்ளார் என்றச் செய்தி; வெளியானதுதான் தாமதம், நாங்கள் விசாரித்த அளவில் அவருக்கு தொடர்பு இருக்கிறது. ஆகவே அவருக்காக நாங்கள் போராட மாட்டோம் என்று அறிவித்து ஹாமித் பக்ரிக்கு தீவிரவாதி முத்திரையையும் குத்தி விட்டார்கள். பி.ஜே.கட்சியினர்.  தொடர்பு இருக்கிறதா? இல்லையா? என்று விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியது கடமைமிகு காவல் துறையின் கடமை. அது சரியா தவறா என்று தீர்ப்புக் கூற வேண்டியது கனம் கோர்ட்டாருக்கு உள்ள உரிமை. கூட்டமைப்பு மவுலவிகள் மூலமும் அறிவிக்கச் செய்துள்ளார்கள் . 7.12.02. சனிக்கிழமைதான் ஹாமித் பக்ரிய...

ஜிஹாத்! ஜிஹாத்!! ஜிஹாத்!!!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். புதிய சவாலையும் ஏற்கிறேன். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... மவுலவி பி.ஜெய்னுல் ஆப்தீன் உலவி அவர்களுக்கு, கா.அ.முஹம்மது பழ்லுல் இலாஹி எழுதிக் கொள்வது. உங்களால் பொறுப்பு வழங்கப்பட்டவர்களுக்கு நான் பல விமர்சன கடிதங்கள் எழுதி இருக்கிறேன். 2001 மே மாதத்தில் நான் எழுதிய குற்றச் சாட்டுக் கடிதங்களுக்குப் பதில் போட முடியாமல் பதில் போட வேண்டாம் என்று கட்டளை இட்டு விட்டீர்கள். இப்படி கட்டளை இட்ட நீங்கள், எனது கடிதம் ஏற்படுத்திய விழிப்புணர்வை சமாளிக்க அவதூறு நோட்டீஸ்களும் அறிக்கைகளும் செட்டப் சி.டி.யும் 2002 ல் எழுதி 2001 தேதியிட்ட செட்டப் கடிதங்களுமாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அந்த கடிதத்திற்கு உங்களால் எந்த பதிலும் தர முடியவில்லை. எனது பிரசுரங்களைப் படித்தால் உங்கள் சாயம் வெளுத்து விடும். எனவே உங்களை நம்பி ஏமாந்து கொண்டிருக்கும் அப்பாவிகளிடம் அதைப் படிக்காதீர்கள் என்று கூறி வருகிறீர்கள். ஒற்றுமைக்கு முயற்சி செய்வது போல் கடிதம் ஒன்றை வெளியிடச் செய்து, அது பற்றி பரபரப்பாகவும் பேசச் செய்துள்ளீர்கள். பொறுப்பான விஷயங்களை உங்களுக்கு எழுதினால் நான் பொறுப்பில் இல்லை என்று...