Posts

இக்பால் மதனி அவர்களின் துணைவியார்

அஷ;ஷய்கு முஹம்மது இக்பால் மதனி அவர்களின் துணைவியார் ருகையா அம்மையார் அவர்கள் 11.3.2010அன்று இறப்பெய்தினார்கள் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம். தமிழகத்தில் தவ்ஹீது எழுச்சி ஏற்பட அரும்பாடுபட்டவர்களில் பெண்களில் முதன்மையானவர் மணப்பாறை ருகையா அம்மையார் அவர்கள் என்று சொன்னால் மிகையாகாது. துபை பாத்திமா பள்ளியில் நடந்த தவ்ஹீது பிரச்சார கூட்டங்கள், ஐ.ஏ.ஸி. (இஸ்லாமிய எழுச்சி மையம்) ஆலோசனை கூட்டங்கள், இன்று ஏகத்துவம் என்ற பெயரால் வெளி வரும் பத்திரிக்கைக்கு மூல வித்தான புரட்சி மின்னல் ஆலோசனை கூட்டங்கள், அது அல்முபீன் ஆக ஆன பின் நடந்த ஆலோசனை கூட்டங்கள், ஆசிரியர் குழு கூட்டங்கள் என அனைத்திலும் அஷ;ஷய்கு முஹம்மது இக்பால் மதனி அவர்களுக்கு உறுதுணையாக ருகையா அம்மையார் அவர்கள் இருந்துள்ளார்கள். அன்னாரின் நல்லறங்களை ஏற்று பாவங்களை மன்னித்து சுவர்க்கத்தை அளிக்க அல்லாஹ்விடம் வேண்டுவோமாக.

நெல்லை மதுக்கடை மறியல் படங்கள் & செய்திகள்.

Image

மில்லத் இஸ்மாயிலிடம்தான் நீதி இருக்கிறது

Image
கலெக்டர், எஸ்.பி, நீதிபதி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு குடிநீரே கிடைக்கக்கூடாது, அமைச்சர்களுடன் மோத வேண்டும் என்று நினைப்பவரால் சமுதாயத்திற்கு நன்மைகளை எப்படி பெற்றுக்கொடுக்க முடியும்? எல்லா வற்றிற்கும் மேலாக எங்கள் கட்சி வளருவதை விட சமூக ஒற்றுமையே முக்கியம். அதற்கு எவர் வெளி யேறு வதைப்பற்றியும் எங்களுக்கு கவலை இல்லை. என்பது மு.லீக் தரப்பு பதிலாகும். இது அவர்களது பத்திரிக்கையிலும் சைட்டிலும் வெளியிட்டு நமது பிளாக்கரிலும் பதிந்துள்ளார்கள். அதிகாரிகளுக்கு குடி நீரே கிடைக்கக் கூடாது என்று கூறவில்லை. பொதுமக்கள் உரிமையை அதிகாரிகள் பறிக்கக் கூடாது என்பதுதான் பிரச்சனை. அதுவும் ஆஸ்பத்திரி நோயாளிகள் உரிமையை பரித்தால் அதை கண்டு கொள்ளாமல் விரல் வைத்து சூப்பிக் கொண்டிருப்பவர்கள் அதிகாரிகளின் அடிவருடிகளாகத்தான் இருக்க முடியும். இதை அவர்கள் அறிக்கை மூலம் நிரூபித்துள்ளார்கள். மில்லத் இஸ்மாயிலிடம்தான் நீதி இருக்கிறது என்பதற்கு பத்திரிக்கைகள் சாட்சி பகிர்கின்றன. முஸ்லிம் லீக் ஆதரவால்தான் இன்று வரை கலெக்டர் மட்டும் நோயாளிகள் நீரை குடித்து வருகிறார்.

அதி தீவிர முஸ்லிம் லீக் பக்தரின் மைந்தன்.

Image
மில்லத் இஸ்மாயில் அவர்களின் தந்தை அதி தீவிர முஸ்லிம் லீக் பக்தர். அதனால்தான் காயிதே மில்லத் என்றழைக்கப்பட்ட முஹம்மது இஸ்மாயில் ஸாஹிப் நினைவாக தன் மகனுக்கு மில்லத் இஸ்மாயில் என்று பெயரிட்டார். அந்த மில்லத் இஸ்மாயில் மு.லீக் பற்றி கூறியுள்ளதைப் பாருங்கள். மில்லத் இஸ்மாயில் மு.லீக்கில் தென் மண்டல பொறுப்பாளராக ஆனதும் அவருடன் தொடர்பு கொண்டு பேசினேன். எப்படி இருக்கிறீர்கள் என்றேன். ஆளில்லாத ஊருக்கு (மு.லீக்) ராஜாவாக இருக்கிறேன் என்றார். அதையும் இங்கு நினைவுபடுத்திக் கொள்கிறேன்.அவர் மு.லீக்கில் இணையும் முன்னால் அவரிடம் மு.லீக் நிலை பற்றி சொன்னேன். இப்பொழுது அனுபவபூர்வமாக உணர்ந்து வெளியேறி இருக்கிறார். அவர் 26-1-10இல் ம.ம.க.வில் இணைந்தார். 29-1-10இல் அவர் மீது ஒழுங்கு நடடிக்கை எடுத்துள்ளதாக மணிச்சரடில் செய்தி வந்துள்ளது.

த.மு.மு.க. வின் முதல் பொதுச் செயலாளர்.

தமிழ்நாடு முஸ்­லிம் முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் என்ஜினீயர் அப்துஸ் ஸமது சாஹிப் அவர்கள் சென்ற சனிக்கிழமை (அக்டோபர் 17) அன்று பிற்பகல் சென்னையில் காலமானார்கள். [இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்] அவருக்கு வயது 78 ஆகும். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பிறந்த ஹெச். அப்துஸ் ஸமது அவர்கள் ஒரு பொறியாளர் ஆவார். பொறியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற அவர் பொறியியல் கல்லுரிகளில் பேராசிரியராகவும், முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.தமிழ்நாடு முஸ்­லிம் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர்களில் ஒருவரான என்ஜினீயர் அப்துஸ் ஸமது சாஹிப் அவர்கள் அமைப்பின் முதல் பொதுச் செயலாளராக ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் துடிப்புடன் செயலாற்றினார். பின்னர் உடல்நலக் குறைவின் காரணமாக அப்பதவியில் இருந்து விலகினார். சமுதாய மற்றும் மார்க்கப்பணியில் அதிக நாட்டம் உடையவராக விளங்கிய இஞ்சினியர் அப்துஸ் ஸமது அவர்கள் தமது கடைசி மூச்சு வரை அப்பணிகளை ஆற்றிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பல மார்க்க நூல்களை எழுதியும், மொழிபெயர்த்தும் உள்ளார். இந்தியன் இஸ்லாமிக் மிஷனின் அறங்காவலர்களில் ஒருவராகவும் அவர் விளங்கின...

இந்த பெண்கள் முஸ்லிம்களா?

Image
இப்படியும் சில சகோதரிகள் ஈமான் அடிப்படையை மறந்து வழிதவறி போய் உள்ளார்கள். அல்லாஹு தான் இவர்களுக்கு அல்லாஹுfவின் பயப்பக்தியை தரவேண்டும். நம்மிடையயே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சகோதரர் ஏபி.முஹும்மது அலி இந்த செய்தி புகைப்படத்தை அனுப்பியுள்ளார். எந்த ஒரு சிறு உதவி என்றாலும் அல்லாஹுfவின் மூலமே வருகிறது என்ற உணர்வு நம் சமுதாய மக்களiடம் வர வேண்டும். அதற்கு நம் சமுதாயம் நன்கு கல்வி பெற்ற சமுதாயமாக மாற வேண்டும் அந்த கல்வி உலகம் மற்றும் மார்க்க கல்வியாக இருக்க வேண்டும். அப்போது தான் இம்மை மற்றும் மறுமையில் efவற்றி பெற முடியும். இளைய சமுதாயம் நல்வழியில் செல்ல அல்லாஹுf துணை புரிய வேண்டும். நாமும் முயற்சி செய்வோம். நம் சமுதாயத்தையும் முயற்சி செய்ய ஊக்கம் கொடுப்போம். கடைசியில் இதுபோன்ற வழிக்கேட்டிலிருந்து விடுதலை பெற்று அல்லாஹுfவிடம் நன்மதிப்பை பெறுவோம். ஆமீன் Photo News: Deccan Chronicles (23/9/2009) Br.AP Mohammed Ali (mdaliips@yahoo.com) மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் அருகில் கிளி ஜோசியம் பார்க்க புர்கா அணிந்து வந்துள்ள இந்த பெண்கள் முஸ்லிம்களா? முஸ்லிம் பெண்களும் கோயில் அருகில் குறி...

21-08-2009 வெள்ளி அன்று ரமழான் ஆரம்பிக்கிறது.

ஜாக் சார்பில் 21ல் ரமலான் தொடக்கம் ஏர்வாடி, ஆக.19: நெல்லை, ஏர்வாடி ஜாக் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: ஆகஸ்டு 20ம் தேதி சந்திரன் முழுமையாக தேய்ந்து அமாவாசை ஏற்படுகிறது. அதற்கு அடுத்த நாள் வளர்பிறை ஆகும். இதை கவனத்தில் கொண்டு 21ம் தேதி (வெள்ளிக்கிழமை) இஸ்லாமியர்கள் அனைவரும் நோன்புடன் ரமலான் மாதத்தை கண்ணியப்படுத்தும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல்: நெல்லை தினகரன் (19-08 09) In the name of Allah, the Most Gracious the Most Merciful. According to Ahillah/Manaazil of the moon. (Quran 2:189) First day of Ramadan 1430H falls on Friday, August 21, 2009 And First day of Shawwal Eid-Al-Fithr falls on Saturday, September 19, 2009 21-08-2009 வெள்ளி அன்று ரமழான் ஆரம்பிக்கிறது, வெள்ளி பகலில் நோன்பு நோற்க வேண்டும். 18-09-2009 வெள்ளி அன்று 29 நோன்புகளுடன் ரமழான் முடிவடைகிறது. 19-09-2009 சனியன்று நோன்புப் பெருநாள். *************** புரோகிதர்களின் கேடுகெட்ட புத்தி! – அபு அப்தில்லாஹ் மனிதனைப் படைத்த இறைவன் அன்றிலிருந்து அதாவது முதல் மனிதரும் நபியுமான ஆதம் (அல...