17,18 பொருளுணர்ந்து குர்ஆனை படிக்க எளிய வழி(பாகம் -5)
இந்த பதிவு வரையிலான 18 வார்த்தைகள் தான் குர்ஆனின் 967 இடங்களில் திரும்ப திரும்ப வந்துள்ளன
17வதாக உள்ள ஒரு சொல் 3 இடங்களில் வந்துள்ளது.
18வதாக உள்ள ஒரு வார்த்தை 11 விதமாக 107 இடங்களில் வந்துள்ளது. 18தாக உள்ள ஒரு வார்த்தைக்கு அர்த்தம் புரிவதன் குர்ஆனின் 106 வசனங்களில் விளக்கம் பெறுகிறீர்கள்.
https://mdfazlulilahi.blogspot.com/2021/02/17-18.html
----------------
மொழி பெயர்ப்பு பற்றி வந்துள்ள அத்தனை விமர்சனங்களுக்கும் அடுத்தடுத்த வெளியீடுகளின் மூலம் உங்கள் சிந்தனையிலல் பதில்கள் விளக்கங்கள் தானாக கிடைத்து விடும். இன்ஷாஅல்லாஹ்.
--------------------
உப்பு உவர்க்கும் கைப்பாக இருக்கும் என்பது ஏட்டில் படித்த ஏட்டுச் சுரைக்காய் தான்.
உணவில் உப்பு கூடி விட்டால் யாரும் சோறு உவர்க்கிறது சால்னா கைப்பாக இருக்கிறது என்று சொல்வது கிடையாது.
நடைமுறையில் என்ன சொல்வோம்? உப்பாக இருக்கிறது அல்லது உப்பு கசக்கிறது என்போம். இது தான் நடைமுறையில் உள்ள பயன்பாட்டு வார்த்தை.
இந்த பயன்பாட்டு வார்த்தைகளை விட்டு விட்டு உவர்க்கிறது கைப்பாக இருக்கிறது என்று உங்கள் வீடுகளில் சொல்லிப் பாருங்கள்.
மக்களின் பயன்பாட்டில் உள்ள, மக்களுக்கு புரியும் பாஷையில் தான் எதையும் சொல்ல வேண்டும் என்று. நடைமுறைத் தமிழின் அவசியத்தை புரிந்து தெளிவு பெறுவீர்கள்.
------------------
அஜ்ரன் என்பதற்கு எல்லா இடங்களிலும் கூலி என்று மொழி பெயர்த்த அறிஞர் 7:113. 26:41. இரு இடங்களில் பரிசு என்று மொழி பெயர்த்துள்ளார். உமர் ஷரீப் போன்றவர்கள் இந்த இரு இடங்களிலும் கூலி என்றே மொழி பெயர்த்துள்ளார்கள்.
அவர்களுக்குரிய கூலி (ஊதியம்) என்ற பொருள்பட 65:6. வசனத்தில் உள்ள உஜுரஹுன்ன எனும் அதே வார்த்தைதான் 4:24, 25. 5:5. 33:50. 60:10. ஆகிய 5 வசனங்களில் இடம் பெற்றுள்ளன. இங்கே எல்லாம் யாரும் ஊதியத்தை கூலியை என்று மொழி பெயர்க்கவில்லை. மஹர் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்த மாதிரி தான் எல்லா இடங்களிலும் இடத்துக்கு தக்கவாறான மொழி பெயர்ப்பு மூலம் பீ.ஜே. தர்ஜமா சிறந்து நிற்கிறது.
28:26 வசனத்துக்கு இவரைக் கூலிக்கு வைத்துக் கொள்ளுங்கள். கூலிக்கு அமர்த்திக் கொள்ளுங்கள். என்று கூலிக்கு, கூலிக்கு என்பதை விட இவரைப் பணியில் சேர்த்துக் கொள்ளுங்கள்! என்பது அந்த இடத்தில் சிறந்ததாக உள்ளது.
இனி மொழி பெயர்ப்பை படியுங்கள். நாம் தேர்வு செய்து தரும் தர்ஜமாவின் மொழி பெயர்ப்பை ருசியுங்கள்.
17 |
اُجَاجٌ |
உஜாஜுன் (3) |
கசப்பு 25:53. 35:12.
உப்பு 56:70. |
|
18 |
تَاْجُرَنِ |
தஃஜுரனி (1) |
1.எனக்குக் கூலி வேலை செய்ய வேண்டும் 28:27. |
اسْتَاْجِرْهُ | அஸ்தஃஜிர்ஹு (1) | 2. இவரைப் பணியில் சேர்த்துக் கொள்ளுங்கள்! 28:26. |
|
اَجْرُ |
அஜ்ரு (40) |
3. கூலி 3:136, 171,172,179. 5:9. 7:170. 8:28. 9:22, 120. 10:72. 11:11,29, 51(2)115. 12:56,57,90,104.16:41. 18:30. 25:57. 26:109. 127,145, 164,180. 28:25. 29:58. 34:47. 35:7. 36:11. 38:86. 39:74. 41:8. 49:3. 57:7,11,18. 64:15. 67:12. 84:25.95:6. |
|
اَجْرًا |
அஜ்ரன் (27) |
4. கூலியை4:40, 67.74,95,114, 146, 162. 6:90.11:51. 17:9. 18:2,77. 33:29,35,44. 36:21. 42:23. 48:10,16,29. 52:40.65:5. 68:3,46. 73:20. பரிசு 7:113. 26:41. |
|
اَجْرُهٗ |
அஜ்ருஹு(4) |
5. அவரது கூலி .2:112. 29:27. 42:40. அவருக்குரிய கூலி 4:100. |
اَجْرَهَا | அஜ்ரஹா(1) | 6. அவரது கூலியை | .33:31. |
اَجْرُهُمْ | அஜ்ருஹும்(12) | 7.அவர்களின் கூலி 2:62, 262,274,277. 3:199. 16:96,97. 28:54. 39:10,35.57:19,27. |
اَجْرِىَ | அஜ்ரிய(9) | 8. என் கூலி10:72. எனதுகூலி11:29. 26:109,127, 145. 164.180. எனக்குரிய கூலி 11:51. |
اُجُوْرَكُمْ | உஜுரகும் (2) | 9. உங்களின் கூலிகள் | 3:185. 47:36. |
اُجُوْرَهُمْ | உஜுரஹும்(4) | 10.அவர்களின் கூலிகளை | 3:57. 4:152.173.35:30. |
اُجُوْرَهُنَّ | உஜுரஹுன்ன(6) | 11.அவர்களுக்குரிய மணக் கொடைகள் 4:24,25. 5:5. 33:50. 60:10. அவர்களுக்குரிய கூலி 65:6. |
Comments