ஜுமுஆ உரையை நீட்டி தொழுகையை சுருக்குவது யார் வழி?
எங்களுக்கு அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் (ஒரு வெள்ளிக்கிழமை) சுருக்கமாகவும் செறிவுடனும் உரை நிகழ்த்தினார்கள். அவர்கள் (மேடையிலிருந்து) இறங்கியபோது , அபுல் யக்ளானே! செறிவுடன் சுருக்கமாகப் பேசினீர்கள். இன்னும் சிறிது நேரம் பேசியிருந்தால் நன்றாயிருந்திருக்குமே ? என்று நாங்கள் கூறினோம். அதற்கு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை நீட்டி உரையைச் சுருக்குவது ஒருவரது மார்க்க அறிவிற்கு அடையாளம் ஆகும். ஆகவே , தொழுகையை நீட்டி உரையைச் சுருக்குங்கள். சில சொற்பொழிவுகளில் கவர்ச்சி உள்ளது என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள். கூறியவர் ;- அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) புகாரி 1577 நான் நபி (ஸல்) அவர்களுடன் பல தொழுகைகளைத் தொழுதிருக்கிறேன். அவர்களது தொழுகையும் உரையும் (நீண்டதாகவும் இல்லாமல் மிகவும் சுருக்கமானதாகவும் இல்லாமல்) நடுத்தரமாகவே அமைந்திருந்தன. அறிவிப்பவர் ;- ஜாபிர் பின் சமுரா (ரலி) புகாரி 1571 : ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்கள் அருகில் உரையாற்றினார். அப்போது யார் அல்லாஹ்விற்கும் அவன் தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கின்றாரோ அவர...