கேப்டன் பிரபாகரனின் மகனை என்ன செய்தார்கள்?
அநியாயமாக எந்தக் காரணமும் இல்லாமல் யார் ஒரு அடியான் உடைய உயிரை பறிக்கிறானோ அவன் அல்லாஹ் உடைய பார்வையில் மனித சமூகத்தையே கொன்றவனைப் போல் ஆவான் . காரணம் எல்லாருமே அல்லாஹ் உடைய அடியார்கள் . எல்லாருமே அல்லாஹ்வால் படைக்கப்பட்ட மக்கள் . யாராவது அநியாயமாக எந்தக் காரணமும் இல்லாமல் ஒரு உயிரைப் பறித்தால் எப்படிப்பட்ட குற்றத்திற்கு உரியவனாக அல்லாஹ் உடைய நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுவான் ? உலக மக்கள் அனைவரையும் கொன்றவனைப் போல் குற்றவாளியாக விசாரிக்கப்படுவான் . ஒரு உயிரை நீங்கள் இந்த பூமியில் வாழ வைத்தால் உலக மக்கள் அனைவரையும் நீங்கள் வாழ வைத்தவர்கள் போல் ஆவீர்கள் என்று சொன்ன மார்க்கம் இஸ்லாம் . ( அல்குர்ஆன் 5 ;32) இப்படிப்பட்ட வசனம் வேறு எந்த வேதத்திலாவது உண்டா ? முஸ்லிம்களுடைய ஆட்சியின் கீழ் பிற மதத்தவர்கள் யாராவது இருந்து . அவர்கள் அநியாயமாக கொலை செய்யப்பட்டால் . அந்த முஸ்லிம்கள் சொர்க்கத்துடைய வாசனையைக் கூட நுகர முடியாது என்று சொன்ன மார்க்கம் இஸ்லாம் ( புகாரி 6914) இது போல் சொன்ன மதங்கள் உலகில் உண்டா ? அப்படி சொன்ன மதம் உண்டு என்றால் அது இஸ்லாம் ம...