நபி(ஸல்) கோட்டை கொத்தளங்களில் ஒளிந்து கொண்டிருந்தார்களா?
மதீனாவில் ஸஹாபிகளில் யாராவது ஒருவர் மாறி மாறி வந்து இரவில் கண் விழித்து நபி ( ஸல் ) அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருந்தார்கள் . பல இரவுகள் இவ்வாறு கழிந்து கொண்டிருந்தது. இப்படி இருக்கும்பொழுது ஒரு இரவில் அல்லாஹ்விடமிருந்து வஹி வந்தது . “.. அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான்.. ”( திரு குர்ஆன் 5;67) மனிதர்களால் அல்லாஹ்வின் துாதரை கொலை செய்துவிட முடியாதவாறு மனிதர்களிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றுவான் என்ற உத்தரவாதத்தை அல்லாஹ் தந்து விட்டான் . இந்த வசனம் ஒரு முன்னறிவிப்புமாகும். கடைசி வரை நபி(ஸல்) அவர்கள் கொலை செய்யப்படவில்லை. அல்லாஹ்வின் விதிப்படியிலான அஜல் வந்துதான் மரணம் அடைந்தார்கள். முன்னறிவிப்பும் நிறைவேறியது. இந்த வசனம் வந்த உடன் இறைவனின் துாதர் அல்லாஹ் நமக்கு பாதுகாப்பு அளித்து விட்டான். இனி மனிதர்களுடைய பாதுகாப்பு தேவை இல்லை என்று முடிவு எடுத்தார்கள். அதன் பிறகு அல்லாஹ்வின் துாதருடைய செயல்பாடுகள் அனைத்தும் திறந்த புத்தகமாக இருந்தது. யாருடைய பாதுகாப்பும் கிடையாது. எங்கு போனாலும் பாதுகாப்பு என்பது கிடையாது. துணைக்கு ஆட்கள்...