நெல்லையில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலவரம்.






நெல்லையில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் மசூதி உள்ள தெரு வழியாக தான் செல்வோம் என்று ரகளை செய்த இந்து முன்னணியினருக்கு காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இதனை அடுத்து போலிசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.



நெல்லை விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலவரம் : 31 பேர் ஜாமீனில் விடுதலை

ஞாயிறு 7, செப்டம்பர் 2014 12:38:31 PM (IST)

நெல்லையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் நடந்த கலவரத்தில் கைதான 31 பேர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

நெல்லையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது கலவரம் வெடித்தது. இந்து முன்னணியினருக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் போலீசார் தடியடி நடத்தினர். மேலப்பாளையம் குறிச்சியில் நடந்த மோதல் தொடர்பாக பா.ஜ. மாநில செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் உள்பட 17 பேர் மீதும், டவுனில் நடந்த கலவரம் தொடர்பாக இந்துமுன்னணி நிர்வாகிகள் உள்பட 50 பேர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. இதில் 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் பாலசுப்பிரமணியன் முன்ஜாமீன் கேட்டு நெல்லை மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி நஷீர்அகமது அவருக்கு முன்ஜாமீன் வழங்கினார். இதேபோல் குறிச்சியில் கைதான 11 பேருக்கும், டவுனில் கைது செய்யப்பட்ட 20 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு