கொள்ளைக்கூட்டம் தா.தா.சாவுசெய்த கபட நாடகத்திற்கு இரண்டறைக் கோடிக்கு மேல் செலவா?
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் ........ அன்புள்ளம்கொண்டோர்களே!அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.. தா.தா. சாவினர் நடத்திய இடஒதுக்கீடு சிறை செல்லும் போராட்டம் பற்றிய ஓர் ஆய்வை நாம் பார்ப்போம். சகோதரர்களே! இந்த இடஒதுக்கீடுக்காகவும்,அரசியல் கட்சிகளிடம் தங்களின் பலத்தைக் காட்டுவதற்காகவும் இதற்கு முன்னால் பல ஆர்ப்பாட்டங்கள்,மாநாடுகள் என்று தேர்தல் நெருங்கும் நேரத்தில் எல்லா கட்சிகளைப் போல தா.தா. சாவினர் நடத்திக்காட்டினார்கள். அதில் ஒன்றை குறிப்பிடுகிறேன். 2010 ம் வருடம் சென்னையில் தீவுத்திடலில் சைபுல்லாஹ் தலைமையில் ஒரு மாநாடு நடந்தது. அந்த மாநாட்டிற்காக சுமார் ஆறு ஏழு மாதங்களாக உள் நாட்டிலும், வெளிநாடுகளிலும் வசூல் வேட்டை நடந்தது. இந்த மாநாட்டிற்காக எவ்வளவு வசூல் செய்யலாம் எவ்வளவு செலவாகும் என்று மாநாட்டுக்குழு முடிவு செய்து வெளிநாட்டு மண்டலங்களுக்கு ஒரு தபால் அனுப்பினார்கள் அட்டாச் பைலில் பார்க்கவும். அதில் அவர்கள் நிர்ணயித்த தொகை ஒரு கோடியே இருபத்தேழு லட்சத்து பதினைந்தாயிரம் ரூபாயாகும். வசூல் நடந்தது எவ்வளவோதெரியவில்லை இது அல்லாஹ்வுக்குத்தான் தெரியும்...