IN THE NAME OF ALLAH
அன்புள்ள சகோதரர் பீஜே அவர்களுக்கு!ஒரு சகோதரனின் அன்பான
வேண்டுகோள் உங்கள் மார்க்கப்பணி இந்த சமுதாயத்திற்கு
அல்லாஹ்வினால் கிடைக்கபெற்ற பாக்கியம் என்பதில் என்னைப்
போல் உள்ள சகோதரர்கள் ஏன் "தவ்ஹீத்"கொள்கையினை
யாரெல்லாம் பேசுவார்களோ அவர்கள் அனைவருக்கும் தெரிந்த உண்மை
என்பதில் எந்தவிதமாற்றமும் இல்லை.புகழ் அனைத்தும்
அல்லாஹ் ஒருவனுக்கே.அப்படிப்பட்ட நீங்கள் உங்களையே
நமபியிருக்கும் உங்கள் குடும்பத்தாரின் மனநிலைகளையும், எண்ண ஓட்டங்களையும் மனதில்கொண்டு உங்கள் உடல்
நலத்தினைப் பேணிவரவும்.அந்தப் பொதுக்கூட்டத்தினை Live இல் நானும் சவூதியில் இருந்து பார்த்தவன்.நீங்கள் பேசிய தலைப்பில் ஒரு கட்டத்தில்"கடவுளை நம்பிய ஒருவன் கடவுள் பெயரால்
தன்னைத்தானே நிந்திப்பது,கஷ்டப்படுத்திக் கொள்வது இஸ்லாத்தில்
இல்லை" என்று அதற்கான குர் ஆன்(2;286)இன் ஆரம்ப வசனம் மற்றும்
நபி(ஸல்) அவர்கள் உரை நிகழ்த்திக்கொண்டிருக்கும்போது ஒரு மனிதர்
வெளியில் நின்றுகொண்டு.......அந்த சம்பவம் ஒன்றையும்,மற்றும் 'ஹஜ்ஜுக்காக"ஒருவர் தன்னை வருத்திக்கொண்டு நடந்து சென்ற அந்த சம்பவத்தினையும்" மக்களுக்கு எடுத்து சொல்லிய நீங்கள் அதனை மறந்து இங்கணம் அந்தப் பொதுக் கூட்டதிற்கு வந்தது 'நீங்கள்
வாக்குறுதி கொடுத்துவிட்டதால்" என்று இருக்குமேயானால்,
எத்தனையோ கூட்டங்கள் பல தவிர்க்கமுடியா காரணங்களால்
மாற்றம் செய்யப்பட்டுள்ளதை தாங்கள் அறிந்திப்பீர்கள்.நாம்
அனைவரும் மனிதர்களே.அல்லாஹ்வின் நாட்டப்படியே நமக்கு ஒரு துன்பம் தொடரப்பட்டால் அதற்க்கு அல்லாஹ்வே பொறுப்பாளியாவான்.தாங்கள்
13/5/2014 அன்று "துஆ மட்டும் போதும்"என்ற அந்தக் கடிதத்தில் ஒரு
இடத்தில் " எது நடந்தாலும் நானே இலேசாக எடுத்துக் கொள்ளும் போது ஆளாளுக்கு ஏன் பயம் காட்டுகிறார்கள் என்ற எண்ணம் தான் எனக்கு
ஏற்படுகிறது" என்று குறிப்பிட்டிறிக்கின்றீர்கள் அப்படியில்லை ச
கோதரரே!இது முற்றிலும் தவறான எண்ணம்.இது முற்றிலும் உங்களை
நீங்களே சமாதானம் செய்யவோ (அல்லது)இயக்கத்திலுள்ள
சகோதரர்களை சமாதானம் செய்யவோ நீங்கள்
மேற்கொண்டுள்ள ஒரு செயல்.ஆனால், உங்களுக்குள்
மறைந்திருக்கின்ற அந்த மரணபயம் அதுதான் உண்மை.அந்த கடிதத்தில்
நீங்களே ஒரு நிலையில் பயந்திருக்கின்றீர்கள் இதோ நீங்கள் எழுதிய
அந்த கடித வார்த்தை" எனது குடும்பத்தில் சிலருக்கு கேன்சர் ஏற்பட்டு
அறுவை சிகிச்சைக்குப் பின் அதிகமாகப் பரவி அவர்கள் மரணித்ததைக்
கண்டதால் ஏற்பட்ட மனக்குழப்பம் ஒரு காரணம்"என்று
எழுதியது உண்மைஎன்றால் அந்த பயம்"என் கணவருக்கு
ஏதாவது ஆகிவிட்டால்"என்று தங்களின் குடும்பத்தார்(அண்ணி) ஏன் எண்ணக்கூடாது?ஏகத்துவக் கொள்கையினை மற்றும்
அல்லாஹ்வின் நம்பிக்கையினைப் பற்றி எங்களுக்கெல்லாம் தைரியமாக
சொன்ன அண்ணனாகிய நீங்களே பயந்தீர்கள் என்றால்,பலகீனப்
படைப்பாகிய பெண்(அண்ணி) பயப்படுவதில் அர்த்தம் இருக்காதா?
எனவே,தாங்கள் சிறிது காலங்கள் ஓய்வு எடுத்துக்கொண்டு மார்க்கப்
பணிகள் தொடரவேண்டும் என்பது என்னைப்போல் உள்ளவர்களின்
ஆவல்! மற்றும் அதுவே இஸ்லாம் நமக்குக் கூறும் அறிவுரை.
இந்த ஓய்வு உங்களுக்கு அல்லாஹ் கொடுத்துள்ள அருட்கொடை
என்றுதான் தோன்றுகின்றது ஏனென்றால்,தற்போது நீங்கள் நோயாளியாக
இருப்பது "அந்தநோயாளி அதனால் பொறுமை காத்திருக்கும்
காலமெல்லாம் அவரது பாவங்கள் மன்னிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கும்"
என்ற நபி மொழிக்கேற்ப அத்துடன் அனைத்து
சகோதரர்களின் "துஆ"வினைபெற்றவராகவும் ஆகிவிட்டீர்கள்.எனவே,
தயவு செய்து உங்களின் உடல் நலத்தில் கூடுதல் அக்கறை காட்டும்படி
உங்களை அன்புடன் வேண்டும் தவ்ஹீத் சகோதரன். எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும்,ஏகத்துவத்தினை எடுத்துச் சொல்லும் நமக்கும் மற்றும் முஸ்லிம்கள் அனைவருக்கும் நற்பாக்கியங்களையும்,நல்ல ஆரோக்கியங்களையும் தந்தருள்வானாக!ஆமீன் Thanks;TO ALLAHதவ்ஹீத் சகோதரன் Hassan Gani
இதற்கு ஜேடி மார்க்சின் தலைவன் முஹம்மது அலி எழுதியது
|
Comments