இஜ்மா மார்க்கத்தின் ஆதாரமா? ரஷாதி VS பீ.ஜே.2013
2.2.2013 அன்று மவுலவி பி.ஜெய்னுல் ஆபிதீன் உலவி அவா்களும் மவுலவி ஸைபுத்தீன் ரஷாதி அவா்களும் விவாதம் (முனாழரா) செய்தார்கள். அதை அப்படியே எழுத்து வடிவில் நடுநிலையோடு தருகிறோம். எழுத்து வடிவு ஒத்துப் பார்ப்பதற்கு எளிதாக இருக்கும்
வாதத்தின் போது தங்களை அறியாமல் தவறான தகவல்களை கூறி இருந்தால் அல்லாஹ் அவா்களை மன்னிப்பானாக. பொய்களை வேண்டும் என்று யார் கூறி இருந்தாலும் பாதிக்கப்பட்டவா்களின் பிரார்த்தனைகளின் பலன்களை அவரவா்கள் பெறுவார்கள்.
நிகழ்ச்சி சம்பந்மான தகவல்களை லிங்குகளை அனுப்பிய குழுமத்தை நினைவு கூா்ந்து நன்றிகளை கூறிக் கொள்கிறோம்.
from: | Khaleel Baaqavee, K-Tic | ||
reply-to: | K-Tic-group-owner@yahoogroups.com | ||
to: | "k-tic-group@yahoogroups.com" | ||
date: | Sat, Feb 2, 2013 at 1:36 PM | ||
subject: | [K-Tic] மவ்லானா ஷைபுதீன் ரஷாதி & P ஜைனுல் ஆபிதீன் பங்கேற்கும் நேரடி விவாதம் |
https://www.youtube.com/watch?v=DeT5qAenKL8&t=525s
முதல் அமா்வில் இஜ்மாஃ (ஒருமித்த கருத்து-
ஏக மனதாக எடுக்கப்படக் கூடிய முடிவுகள்) இஸ்லாத்தினுடைய மூல ஆதாரங்களாக ஆகுமா?
என்ற தலைப்பில் மவுலவி பி.ஜெய்னுல் ஆபிதீன் உலவி அவா்கள் ஆற்றிய உரை.
அன்பிற்குரிய
சகோதரா்களே! இஸ்லாத்தினுடைய மூல ஆதாரங்கள், திருமறை குர்ஆனும் நபிகள் நாயகம்(ஸல்) அவா்களுடைய
குா்ஆனுக்கு முரண்படாத ஆதாரப் பூா்வமான ஹதீஸ்கள் மட்டும்தான். இந்த இரண்டைத் தவிர வேறு
எதுவும் இஸ்லாத்தின் மூல ஆதாரங்களாக ஆகாது என்பது எங்களுடைய நிலைபாடு.
அந்த
நிலை பாட்டின் அடிப்படையில்தான் இஜ்மாஃ என்பது அதாவது ஒருமித்த கருத்து, இஜ்மாஃ என்றால்
ஒருமித்த கருத்து. ஏக மனதாக எடுக்கப்படக் கூடிய முடிவுகள். இஸ்லாத்தினுடைய மூல ஆதாரங்களாக
ஆகுமா? என்பது குறித்து இன்றைய தலைப்பில் நாம் விவாதிக்க இருக்கிறோம்.
நாங்கள்
இஜ்மாஃ என்பதையோ இது அல்லாத வேறு எதனையுமோ ஆதாரமாக ஏன் எடுத்துக் கொள்வது இல்லை என்று
சொன்னால் இந்த மார்க்கம் அல்லாஹ்வுக்கு சொந்தமானது. அல்லாஹ் திருமறையிலே லில்லாஹி தீனுல்
காலிஸ் என்கிறான். 39 ஆவது அத்தியாயம் 3ஆவது வசனத்திலே இந்த மார்க்கம் அல்லாஹ்வுக்கு
சொந்தம்.
மார்க்கத்திற்கு
சொந்தக்காரன் அல்லாஹ் எனும்பொழுது அந்த மார்க்கத்திலே என்ன செய்ய வேண்டும் செய்யக்
கூடாது என்ற அனைத்தையுமே அவன் மாத்திரம்தான் முடிவு செய்ய முடியும். அவன் செய்கிற முடிவுகள்
வஹியின் மூலமாக மட்டும்தான் மனித குலத்திற்கு கிடைக்க முடியும். அந்த வஹி அல்லாத வேறு
எதுவும் மார்க்கமாக ஆகாது என்று இதன் அடிப்படையில்தான் நாங்கள் எங்களுடைய நிலை பாட்டை
எடுத்திருக்கிறோம்.
அல்லாஹ்
உடைய வஹி என்பது ஓதிக் காட்டப்படக் கூடிய திருக்குா்ஆன் என்ற வஹி இருக்கிறது. ஒருவரை
துாதராக தோ்வு செய்து அவருடைய உள்ளத்திலே இறைவன் போடுகிற செய்தி – வஹி என்று இன்னொரு
வஹி இருக்கிறது. இந்த இரண்டும்தான் இஸ்லாத்தின; மூல ஆதாரங்கள். அதாவது வஹியைத்தான்
பின்பற்ற வேண்டும் என்கிற அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்படுகிறது.
ஆதம்
அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவா்களை அவா் செய்த தவறுக்காக அல்லாஹ் வெளியேற்றும்பொழுது,
மனித குலத்திற்கு அல்லாஹ் இந்த கட்டளையைத்தான் முதல் கட்டளையாகப் போட்டான். Fபஇம்மா
யஃதியன்னகும் மின்னீ ஹுதன் Fபமன் தபிய ஹுதாய Fபலா கவ்புன் அலைஹிம் வலாஹும் யஹ்ஸனுான்-
என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும். அதைப் பின் பற்றினால் உங்களுக்கு பயமில்லை
– அச்சமில்லை என்கிறான்.
ஆதம்
அலைஹிஸ்ஸலாம் அவா்களுக்கு மலக்குகளை வெல்லக் கூடிய அறிவை – திறமையை- ஆற்றலை அல்லாஹ்
கொடுத்து இருந்தும், அல்லாஹ்வுடைய திருக் கரத்தால் அவா்கள் நேரடியாகப் படைக்கபட்டு
இருந்தும். நீங்கள் போய் நல்லதையெல்லாம் செய்து கொள்ளுங்கள் என்று ஆதம் அலைஹிஸ்ஸலாத்திற்க்கு
கூட அதிகாரம் கொடுக்காமல் என்னிடமிருந்து உங்களுக்கு நோ் வழி வரும். நோ் வழி என்னிலிருந்து
வரணும். நான் சொல்வதைத்தான் கேட்கணும். அப்ப இந்த வஹியைத்தான் பின்பற்ற வேண்டும் என்பதுதான்
மனித குலத்திற்கு அல்லாஹ்விடமிருந்து வந்த முதல் கட்டளை.
இந்த
ஆதாரத்தின் அடிப்படையிலேயும் நாங்கள் குா்ஆன் ஹதீஸ் மட்டும்தான் மார்க்கம். வேறு இஜ்மாவோ
வேறு என்னவோ எதுவும் மார்க்கம் இல்லை என்று சொல்லுகிறோம்.
இதை நம்முடைய மூல மந்திரமாக
கொள்கை முழக்கமாக உலக முஸ்லிம்கள் அத்தனை பேரும் ஏற்றுக் கொண்டிருக்கக் கூடிய லாஇலாஹ
இல்லல்லாஹ் முஹம்மதுர்றஸுலுல்லாஹ் என்ற திருக்கலிமாவும் நமக்குச் சொல்கிறது.
இந்த
இரண்டுதான். அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் எஜமான் அவன் சொல்லை
கேட்பேன். முஹம்மது நபி அல்லாஹ்வுடைய துாதர் சொந்தமாக சொல்ல மாட்டாங்க அல்லாஹ்ட்ட கேட்டு
சொல்வாங்க அவுங்க சொல்லையும் கேட்பேன். இந்த இரண்டு பேர் சொல்லை கேட்பேன் என்பதும்
இந்த திருக் கலிமாவுக்குள் அடங்கி இருக்கிறது.
வேறு எதையாவது யாரு சொல்லையாவது கேட்க
வேண்டும் என்று இருந்தால் அதையும் சேர்த்து நம்முடைய மூல கொள்கை முழக்கத்திலேயே நமக்கு
சொல்லித் தரப்பட்டு இருக்கும்.
இந்த லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர்றஸுலுல்லாஹ் என்ற
திருக்கலிமாக் கூட இரண்டுதான் மூல ஆதாரம் என்பதை தெள்ளத் தெளிவாகச் சொல்கிறது. அதே
மாதிரி 5ஆவது அத்தியாயத்திலே 3ஆவது வசனத்திலே அல் யவ்ம அக்மல்து லகும் தீனகும் இன்றைக்கு
உங்கள் மார்க்கத்தை நான் பூா்த்தி செய்து விட்டேன்.
பூா்த்தி
செய்து விட்டேன் என்று சொல்வது அல்லாஹ். ஏதோ அரை குறையாக கொடுத்ததையெல்லாம் பூா்த்தி
என்று மனுஷன் சொல்லி விடுவான். படைத்த இறைவன் ஒன்றை பூா்த்தி செய்தால் அதற்குப் பிறகு
வேறு எதுவுமே மிச்சம் வைக்கலே. குறை இல்லை. எல்லாமே சொல்லி முடிக்கப்பட்டு விட்டது.
என்பது இந்த அல் யவ்ம அக்மல்து லகும் என்பதிலேயே நமக்கு விளங்குகிறது.
இது
கூட இந்த இரண்டைத் தவிர வேறு எதுவும் ஏன்னா இஜ்மாவாக இருந்தாலும் வேறு எதுவாக இருந்தாலும்
அந்த நாளுக்குப் பிறகுதான் வருது. இன்றைக்கே பூா்த்தியாகி விட்டது என்று அல்லாஹ் என்றைக்கு
சொல்கிறானோ அதற்குப் பிறகு உள்ளதையெல்லாம் ஆதாரம் என்று ஏற்றுக் கொண்டோமேயானால் அல்லாஹ்
வந்து மார்க்கத்தை பூா்த்தி செய்யவில்லை என்று குர்ஆனை பொய்யாக்கக் கூடிய ஒரு நிலைமை
ஏற்பட்டு விடும்.
அல்லாஹ் எதையும் மறக்கிறவன் கிடையாது. வமா கான றப்புக நஸீய்ய உமது
இறைவன் எதையும் மறப்பவன் கிடையாது. மறந்திட்டு விட்டு விடுவானா? முடியாது.
அதே
மாதிரி விளக்குவதிலே அரைகுறையாக விளக்கி இருப்பான் அதனாலே வேறு ஒருத்தன்களுடைய இது
தேவைப்படும் என்று சொன்னால் வலா யுனப்பியுக மிஸ்லு கபீா் அவனைப் போல வேறு யாரும் உங்களுக்குச்
சொல்லித் தர முடியாது என்கிறான் அல்லாஹ்.
அவ்வளவு அழகா நான் சொல்லித் தருவேன். இப்படியெல்லாம்
திருமறை குா்ஆனிலே அல்லாஹ் சொந்தம் கொண்டாடுகின்ற காரணத்தினாலே இது வந்து இஜ்மாவோ
வேறு என்னவோ மூல ஆதாரம் கிடையாது.
அடுத்ததாக
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவா்களை அல்லாஹ் சொல்லச் சொல்கிறான் இன் அத்தபிஊ
இல்லா மாயூஹா இலைய இது வந்து 6ஆவது அத்தியாயத்திலே 50ஆவது வசனத்தில் இருக்கிறது. பல
இடங்களில் இந்த கருத்து இருக்கிறது.
எனக்கு வஹியாக இறைவன் புறத்திலிருந்து அறிவிக்கப்படுவதைத்
தவிர வேறு எதையும் நான் பின்பற்றவில்லை என்று அல்லாஹ் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவா்களையே சொல்லச் சொல்கிறான்.
அதே
மாதிரி இதுவும் ஆதாரமாக இருக்கிறது. வஹியைத்தான் ரசூலுல்லாஹ்வே பின்பற்றனும் என்று
சொல்லும்பொழுது வஹி இல்லாத, படைத்தவனுடைய மார்க்கத்தில் படைத்தவனுடைய கருத்து இல்லாமல்
வேறு எவருடைய கருத்தும் மார்க்கமாக ஆகவே ஆகாது. என்பதற்கு இது ஆதாரமாக இருக்கிறது.
அதே
மாதிரி வந்து மூமின்களுக்கு ஒரு அடையாளத்தை அல்லாஹ் சொல்லும்பொழுது வஅன்னல்லதீன ஆமனுா
இத்தபவுல் ஹக்க மின் றப்பிஹிம். மூமின்கள் யார் என்று கேட்டால் றப்பிடமிருந்து வந்த
சத்தியத்தை அவா்கள் பின் பற்றுவார்கள். றப்பிடமிருந்து வஹி மூலமாகத்தான் நமக்கு சத்தியம்
வரும். அதனாலே வஹியைத் தவிர வேறு எதுவும் மார்க்கம் கிடையாது என்று நாங்கள் சொல்லுகிறோம்.
அதே
போல ரசூல்மார்களை அல்லாஹ் அனுப்புவதைப் பற்றி 4ஆவது அத்தியாயத்திலே 165ஆவது வசனத்திலே
சொல்லும்பொழுது லிஅல்லா யகூன லின்னாஸி அலல்லாஹி ஹுஜ்ஜதுன் பஃதா் ருசுலி. ரசூல்மார்களை
அனுப்புன பிறகு மனிதா்களுக்கு எந்த ஒரு ஹுஜ்ஜத்தும் இருக்கக் கூடாது. என்பதற்குத்தான்
ருசுலன் முபஷ்ஷிரீன வமுன்திரீன ரசூல்மார்களை நற்செய்தி சொல்பவா்களாகவும் எச்சரிக்கை
செய்பவா்களாகவும் அல்லாஹ் அனுப்பி இருக்கிறான்.
இது
பல அா்த்தங்கள் கொண்ட ஒரு வசனமாக இருந்தாலும் இந்த அா்த்தமும் இதற்கு உள்ளது. - இதற்குள்
அடங்கி இருக்கிறது. எந்த அா்த்தம் ரசூல் வந்த பிறகு வேறு எதற்கு ஹுஜ்ஜத்து? வேறு ஹுஜ்ஜத்து
இருக்கக் கூடாது. மனிதா்களுக்கு வேறு எதுவும் ஹுஜ்ஜத்துனா ஆதாரம். வேறு எதுவும் ஆதாரம்
இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் அல்லாஹ் அனுப்பியதாக சொல்வதும் நமக்கு இஜ்மாவோ வேறு
எதுவுமோ மார்க்க ஆதாரம் இல்லை என்பதற்கு சான்றாக இருக்கிறது.
அதே
மாதிரி அல்லாஹு றப்புல் ஆலமீன் திருமறை குா்ஆனிலே சொல்லும்பொழுது. குல் நபியே நீங்கள்
கேளுங்கள். அதுஅல்லிமூனல்லாஹ பீ தீனிகும் உங்களுடைய தீனை நீங்கள் அல்லாஹ்வுக்கு சொல்லி
கொடுக்கிறீங்களா?
அல்லாஹ்வுக்கு நம்ம சொல்லி கொடுக்கிற மாதிரி எங்கேயெல்லாம் வருதோ
அது எல்லாமே வழி கேடுதான். இஜ்மாவோ வேறு எதையோ சொல்லி நம்ம ஒரு முடிவு எடுக்கிறோம்
வைங்க அப்ப இது அல்லாஹ் சொல்லலே ரசூலும் சொல்லலே நம்ம சொல்றோம்னு சொன்னா தீனை வந்து
நம்ம அல்லாஹ்வுக்கு சொல்லி கொடுக்கிறோம்.
இது
தீனில் உள்ளதாக இருக்குமேயானால் அல்லாஹ் சொல்லி தந்து இருப்பான். அல்லாஹ் எப்படி இந்த
மாதிரி இந்த மாதிரியான விஷயங்களுக்கு எப்படி கேள்வி கேட்கிறான். குல் நபியே நீங்கள்
கேளுங்கள் அதுஅல்லிமூனல்லாஹ பீ தீனிகும் உங்களுடைய தீனை நீங்கள் அல்லாஹ்வுக்கு சொல்லி
கொடுக்கிறீங்களா?
அப்ப தீனை சொல்லித் தர்ரது நானாத்தான் இருக்கனுமே தவிர நீங்களாக இருக்கக்
கூடாது. நான் சொல்றதுதான் தீனு. எஞ் சொல்லை நீங்க கேட்கணும். நீங்களாக முடிவு எடுத்துக்
கொண்டு இதுதான் என்று சொன்னால். அப்ப தீனை நீங்கள் எனக்கு சொல்லித் தா்ரீங்க. இது இஜ்மாவோ
வேறு எதையோ நீங்கள் சொன்னீா்களேயானால் அது இந்த எச்சரிக்கையிலே அது அடங்கும் என்று
நாங்கள் வாதிடுகிறோம். அதே
மாதிரி இது ஹுஜராத்திலே 16ஆவது வசனத்திலே இது இருக்கிறது.
அதே
மாதிரி வந்து 10ஆவது அத்தியாயம் 18ஆவது வசனத்திலே அல்லாஹ் சொல்கிறான். குல் நபியே நீங்கள்
கேளுங்கள். அதுநப்பிஊனல்லாஹ் அல்லாஹ்வுக்கு நீங்கள் சொல்லி கொடுக்கிறீா்களா? பிமாலா
யஃலமு பிஸ்ஸமாவாத்தி வலா பில் அா்லி வானங்களிலும் பூமியிலும் இல்லாத ஒன்றை நீங்கள்
போய் அவனுக்கு சொல்லி கொடுக்கின்றீா்களா? எல்லாந்தான் அவனுக்குத் தெரியுமே.
இன்னைக்கு ஒரு புது பிரச்சனை வருதுன்னா
வரும்னு தெரியுமா தெரியாதா? அதை என்ன செய்யணும்னு அவன் சொல்லி இருப்பானா இருக்க மாட்டானா?
அப்ப வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்கு தெரியாமல் இருந்து நீங்க அதை கண்டு பிடித்து
அவனுக்கு நீங்க சொல்லி கொடுக்கிறீா்களா? என்று அல்லாஹ் கேட்பதிலே இருந்து அல்லாஹ்வைத்
தவிர மார்க்கத்தில் கூடும் கூடாது ஹலால் ஹராம் முஸ்தஹப்பு சுன்னத்து இதெல்லாம் சொல்வதற்கு
யாருக்கும் எந்த ஒரு அதிகாரமும் கிடையாது. இதெல்லாம் குர்ஆனுக்கு எதிரானது என்று நாங்கள்
எங்களுடைய வாதத்தை நிறுவுகிறோம்.
அதே
போல நபிகள் நாயகம்(ஸல்) பெரிய ஹதீஸ் இது இந்த ஹதீஸ் வந்து முஸ்லிம்லே 4882ஆவது ஹதீஸாக
இருக்கிறது. சில பிரதிகளில் எண்கள் மாறுபடலாம். அது உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியது
இல்லை. அதிலே ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்றாங்க. இன்ஹு லம் யகுன் நபியுன் கப்லி
எனக்கு முன்னாடி எந்த நபியாக இருந்தாலும் இல்லா கான ஹக்கன் அலைஹி அய்ஞ்யதுல்ல உம்மதஹு
அலா கைரி மா யஃலம் யுஅல்லிமுஹு லஹும். அவருடைய கடமை என்னவென்று சொன்னால் அவங்க செய்ய
வேண்டிய எல்லா நல்ல விஷயங்களையும் அறிவித்து கொடுப்பதும் வயுன்றிருஹும் ஷர்ரமா யுஅல்லிமுஹு
லஹும் அவங்களுக்கு சொல்லிக் கொடுக்கிற விஷயங்களில் கெட்டதையெல்லாம் எச்சரிக்கிறதும்
இது கடமையாக இருந்தே தவிர எந்த துாதரும் அனுப்பப்பட்டது கிடையாது.
துாதரை
அனுப்புவது எதற்கு என்றால் கடமையான எல்லா நன்மையான கடமையானது மட்டுமல்ல நன்மையான எதெல்லாம்
நன்மை தருமோ அதையெல்லாம் சொல்லித் தருவதுதான் எதெல்லாம் கெட்டதாக இருக்குமோ அதையெல்லாம்
எச்சரிக்கிறதுதான் அப்படித்தான் இறைத் துாதர் எல்லாரும் அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.
நானும் அப்படித்தான் அனுப்பப்பட்டிருக்கிறேன் என்ற கருத்திலே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் நமக்கு சொல்கிறார்கள்.
அப்ப நமக்கு எதெல்லாம் கைரோ சொர்க்கத்திற்கு செல்கிற
வழியாக இருக்கிறதோ அது அல்லாஹ்வும் சொல்லி விட்டான் அல்லாஹ்வுடைய ரசூலும் சொல்லி முடித்து
விட்டார்கள்.
எதெல்லாம்
கெட்டதாக நம்மளை பாவத்திலே நரகத்திலே தள்ளக் கூடியதாக இருக்கிறதோ அவை அனைத்தையும் அல்லாஹ்வும்
சொல்லி விட்டான் அல்லாஹ்வுடைய துாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவா்களும் சொல்லி முடித்து சென்று விட்டார்கள். அப்ப அதற்கு
பிறகு வந்துகிட்டு சொல்லலே பாக்கி இருக்கு இன்னும் கொஞ்சம் மிச்சம் இருக்குது.
(நேரம் முடிந்து விட்டது என மணி
அடிக்கப்பட்டதால் உரையை நிறுத்தி விடுகிறார்)
இஜ்மா மார்க்கத்தின் ஆதாரம்-ஸைபுத்தீன் ரஷாதி முதல் உரை
படித்துப் பார்க்க http://mdfazlulilahi.blogspot.ae/2013/03/blog-post.html
Comments