'பறவைகளின் பாடல்களில் இருந்து பிறந்ததா? மனித மொழி'
from: | MohamedFazlul Ilahi | ||
reply-to: | K-Tic-group-owner@yahoogroups.com |
குரங்கிலிருந்து மனிதன் என்ற தத்துவ வாதிகளின் நிரூபிக்க முடியாத வியூக விஞ்ஞானங்களில் ஒன்றுதான் இது.
திருக்குர்ஆன் தெளிவுரை : அறிவுக்கு அறை கூவல் ! - சிராஜுல் மில்லத் என்ற தலைப்பில் வந்த மெயிலில் உள்ள கீழ் காணும் வார்த்தைகளே இதற்கு தக்க பதிலாகும்.
‘’அவனே மனிதனைப் படைத்து அவனுக்கு பேசக்கற்றுக் கொடுத்தான்’’(திருக்குர்ஆன் 55:3,4)
“ஆதமுக்கு அவன் எல்லாப் பொருள்களின் தன்மைகளையும் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான்’’ (திருக்குர்ஆன் 2:31)
‘’எழுத்தறிவித்தவன் இறைவனாகும்’’ --
அந்தச் சொற்றொடரிலே உள்ள வெள்ளைக்கருத்து எவ்வளவு பெரிய உண்மையை திருக்குர்ஆன்வசனத்தை எடுத்துக் காட்டுகிறது என அறியும் போது நாம் வியக்காமல் இருக்க முடியவில்லை.
2013/3/17 Khaleel Baaqavee, K-Tic <abkaleel@yahoo.com>
[Attachment(s) from Khaleel Baaqavee, K-Tic included below]
'பறவைகளின் பாடல்களில் இருந்து பிறந்தது மனித மொழி'பதிவு செய்த நாள் : மார்ச் 17,2013,01:43 IST (Thina malar)வாஷிங்டன்: "பறவைகள் வெளிப்படுத்தும் வெவ்வேறு வகையான ஒலிகள், மனிதர்கள் பேசும் மொழிகளை ஒத்தவை. அவற்றில் இருந்து மனித மொழி பிறந்திருக்கலாம்' என, சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
பரிணாமவியலின் தந்தை என, அழைக்கப்படும், சார்லஸ் டார்வின், 1871ல் எழுதிய நூலில், "பறவைகளின் பாடல்களில் இருந்து, மனிதன் பேச கற்றுக்கொண்டிருக்கலாம்' என, தெரிவித்திருந்தார். தற்போது, அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், அவர் கூறியது உண்மை என, ஒப்புக்கொண்டுள்ளனர். ஆதி மனிதர்கள், தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக்கொள்ள, சங்கேத மொழிகளை பயன்படுத்தினர். அதில், இரண்டு அடுக்குகள் இருந்தன. உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முதல் அடுக்கில், வாக்கியத்தை மாற்றி அமைத்துக்கொள்ள தேவையான தகவல்கள் இருக்கும். மற்றொரு அடுக்கு, வாக்கியத்தின், மொத்த அர்த்தத்தையும் நிர்ணயிக்கக் கூடியது. பறவைகள், தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக்கொள்ள பயன்படுத்தும் பல்வேறு வகையான ஓசைகளும், இதே தன்மை கொண்டிருப்பதை, அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சார்ந்த மொழியிலாளர்கள் கண்டறிந்துள்ளனர். ""ஆதிகாலத்தில், காடுகளில் வாழ்ந்த மனிதர்கள், பறவைகள் வெளிப்படுத்தும் ஓசையை கவனித்து, பேசக் கற்றுக்கொண்டிருப்பர். 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், இரண்டு அடுக்குகளையும் ஒன்றிணைத்து, மேம்பட்ட, மொழி வடிவை உருவாக்கினர்,'' என, மொழியியல் பேராசிரியர், ஷிகெரு மியாகவா தெரிவித்து உள்ளார்.--Forget Self,Realise ALLAH,,,,,,Jazaak ALLAH Hairan,,,,,,,,,Uvais Ahamed.m
E&I Inspector-----------Parangi PettaiKhaleel BaaqaveeKuwait
Comments