ஸலாம் சொல்லாதே. ஸலாம் சொன்னால் பதில் சொல்லாதே என்பது ஷய்த்தானின் கட்டளை.

from: Rasool Mohideen mohideenrasool@rocketmail.com reply-to: Rasool Mohideen to: "fazlulilahi@gmail.com" date: Sun, Jan 22, 2012 at 8:28 AM subject: உங்களுக்கு என்ன தெரியும் signed-by: rocketmail.com

லுஹா வை பற்றி உங்களுக்கு என்ன தெரியும். தன் தங்கை தப்பு செய்தால் கூட அவர் கொள்கையில் சரியாக இருப்பார் அதை ஜும்மாவில் சொல்லியும் காட்டுவார். அப்படிப்பட்ட ஆளை உங்க கூட பழகின காலத்தில் அவர் பேச்சுக்கு சொன்னது எல்லாம் நீங்க தப்பாக சித்தரிக்கிறீர்களே இது தான் மார்க்கம் சொல்லுதா? கொஞ்சம் சிந்தியுங்கள. ஒரு காலத்தில் உங்களையும் உங்க கூட்டத்தாரையும் பற்றி பேசிய பாக்கர் உங்களுக்கு இப்போது நண்பன். அவருடைய எடுபிடி(செங்கிஸ்கான்) உங்களுக்கு உயிர் தோழர். என்ன உங்க கொள்கை .வாழ்க உங்க கொள்கை வளர்க உங்க கொள்கை. இதற்கு மட்டும் பதில் தரவும். வேறு வேறு msg களைஎனக்கு forward பண்ணக்கூடாது .அதிகமாவே பேசி இருந்தால் மன்னிக்கவும்.

from: MohamedFazlul Ilahi fazlulilahi@gmail.com to: Rasool Mohideen date: Tue, Jan 24, 2012 at 12:11 PM subject: Re: உங்களுக்கு என்ன தெரியும் mailed-by: gmail.com

ஒரு முஃமினும் இன்னொரு முஃமினும் சண்டையிட்டால் 3 நாளைக்கு மேல் பகைமை கொள்ளக் கூடாது. ஸலாம் சொல்லி சமாதானம் ஆகி விட வேண்டும். இது அல்லாஹ்வும் அவனது தூதரும் இட்டக் கட்டளை.

அல்லாஹ்வும் அவனது தூதரும் இட்டக் கட்டளைப்படி செயல்படாதே. அதற்கு மாற்றம் செய். நிரந்தர பகையாளிகளாகவே இரு. ஸலாம் சொல்லாதே. ஸலாம் சொன்னால் பதில் சொல்லாதே என்பது ஷய்த்தானின் கட்டளை.

பாக்கரும் அவரைச் சார்ந்தவர்கள் உட்பட யாரெல்லாம் ஷய்த்தானை விட்டும் வெளியேறி விட்டார்களோ அவர்களெல்லாம் அல்லாஹ்வும் அவனது தூதரும் இட்டக் கட்டளைப்படி ஸலாம் சொல்லி சமாதானம் ஆகி விட்டார்கள்.

யாரையெல்லாம் விட்டும் ஷய்த்தான் வெளியேறி விட்டானோ அவர்களும் அல்லாஹ்வும் அவனது தூதரும் இட்டக் கட்டளைப்படி ஸலாம் சொல்லி சமாதானம் ஆகி விட்டார்கள். அதனால் அவர்கள் நண்பர்கள்தான் உயிர்த் தோழர்கள்தான்.

தங்கை தப்பு செய்தால் வீட்டில் வைத்துதான் ஆண்மையுள்ள அண்ணன்கள் கண்டிப்பார்கள்.

குடும்ப விவகாரத்தை சொல்லிக் காட்ட குத்பா மேடையை பயன்படுத்த மாட்டார்கள்.

பழகின காலத்தில்அவர் ( லுஹா) பேச்சுக்கு சொன்னது எல்லாம் நீங்க தப்பாக சித்தரிக்கிறீர்களே என்று கேட்டுள்ளீர்கள் லுஹா சொன்னதில் எதுவெல்லாம் பேச்சுக்கு சொன்னது என்ற விபரம் தரவும் சரியாக எடுத்துக் கொள்வோம். எதுவெல்லாம் பேச்சுக்கு சொன்னது இல்லையோ அவற்றை உங்கள் கூற்றுப்படி எடுத்துக் கொள்வோம்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு