நிஜத் தலைவரின் தொல்லைகள் அப்பாவித் தொண்டன் கேட்கிறான்...

இதக் கேளுங்க! அப்பாவித் தொண்டன் கேட்கிறான்... பதவி ஆசையில்லை என்று கூறிவிட்டு கொல்லைப்புற வழியாக வந்து மேலாண்மை செய்யும் நிஜத் தலைவரின் தொல்லைகள் தாங்க முடியாமல் பொம்மைத் தலைவர் ராஜினாமா செய்து சேலத்திற்கு சென்றார். 

சேலத்து சின்னத்தம்பி சென்னை வந்து தலைவராக பொறுப்பேற்றார். இவரை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்க வேண்டும் என மக்களெல்லாம் மல்லுக்கு நின்ற காமராஜ் அரங்க பொதுக்குழு நாடகம் .

அதில் தான் முடிவு செய்த பனைக்குளத்தார் தான் பதவிக்கு வர வேண்டும் என்பதற்காக, சின்னத் தம்பிக்கு பொதுச் செயலாளருக்குரிய தோரணை இல்லை என புது விளக்கம் கொடுத்தார் நிஜத் தலைவர். பிறகு பாக்கரை பாய்ந்து பிராண்டும் வேட்டை நாயாக்கி, வேலை முடிந்ததும் வீட்டுக்கனுப்பி விட்டார். 

அதே பொதுக் குழுவில் சில்லறை காசையெல்லாம் கணக்குப் பார்ப்பார் என்று சொல்லி கடலை மிட்டாய்க்காரரை பொருளாளராக்கிய பின்பு தான் தெரிந்தது அவருக்கு சில்லறையை மட்டும்தான் எண்ணத் தெரியும் பற்று வரவு என்றால் என்னவென்றே தெரியாது என்பது! 

பிறகு பொருளாளர் தனது நிறுவனத்திற்கு வேலை பார்க்கவும், பொருளாளர் வேலையை "பை'க் கடைக்காரர் பார்த்து கை நிறைய சம்பளமும் பெற்றார். இப்போது கோவைத் தம்பி களமிறக்கி விடப்பட்டு குடும்பத்தோடு சென்னை வந்துள்ளாராம். இவர் சென்னையிலே நிலைத்திருப்பாரா? விரைவிலேயே வேலூர் செல்வாரா? அல்லது பிறந்த ஊரான கோவைக்கே செல்வாரா? என்பது தான் அப்பாவித் தொண்டனின் தற்போதைய கேள்வி. 

மேலும் கோவை ஜாபரையும் நீக்கி விட்டார்களாம். காரணம் என்ன தெரியுமா? 1. ஐ.என்.டி.ஜே. பள்ளியில் தொழுதார். 2. அதிரை ஜமாலோடு பயணித்தார். 3. ஜமாஅத்தே இஸ்லாமி மாநாட்டுக்குச் சென்றார். 

பள்ளிவாசலில் தொழுவது பாவமா? அதிரை ஜமால் என்ன அழகு மங்கையா தனித்த பயணத்தை தவிர்ப்பதற்கு? ஜமாஅத்தே இஸ்லாமி நடத்தியதென்ன கும்பமேளாவா? என அப்பாவி தொண்டன் அறியாமல் கேட்பது நமக்குப் புரிகிறது. 

அப்படியானால் ஐ.என்.டி.ஜே. மற்றும் த.மு.மு.க.வோடு பேச்சு வார்த்தை எனும் பெயரில் லட்டர் கொடுத்து போட்டோவும் எடுத்துக் கொண்ட அந்த "அற்புத விளக்கு' மீது எப்போது நடவடிக்கை எடுப்பார்களாம்? 

தமுமுக நிர்வாகிகளோடு ரியல் எஸ்டேட் வியாபாரம் நடத்தும் மாவட்ட - மாநில நிர்வாகிகள் மேலும் நடவடிக்கை எடுப்பார்களா? இப்படியே போனால் ஒடுக்கப்பட்டோர் மாநாட்டுக்கு பதிலாக ஒதுக்கப்பட்டோர் மாநாடு அல்லவா நடத்த வேண்டியிருக்கும் என்கிறான் அதே அப்பாவித் தொண்டன். 

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு