I.I.T.மாணவனுக்கு த.மு.மு.க. பாராட்டி பரிசளிப்பு.

மேலப்பாளையம் சாயன் தரகன் தெருவைச் சார்ந்த மீரான் மைதீன் அவர்கள் மகன் எம்.யூனுஸ் என்ற மாணவன் I.I.T.GATE EXAM ல் 96 சதவீதம் எடுத்து 330வது ரேங்கில் வந்துள்ளார். இது நமது நெல்லை மாவட்டத்தில் முதல் இடம் ஆகும். சிறப்பான மார்க் எடுத்த மாணவன் I.I.T.யில் சிவில் இன்ஜினியரிங்கில், ஸ்டெக்சுரல் (Structural) பிரிவில் படிக்க இருக்கிறார். மேற்படி மாணவனை மேலப்பாளையம் நகர த.மு.மு.க.சார்பில் பாராட்டி பரிசளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாணவனுக்கு நகர த.மு.மு.க.தலைவர் K.S.ரசூல் மைதீன் பரிசை வழங்கினார். நகர செயலாளர் A.M.மைதீன் பாதுஷா, பொருளாளர் யு.காஜா, P.யு.இனாயதுல்லாஹ், காசீம் பிர்தௌசி, ராஹத் காஜா, ஆகியோர் உடனிருந்தனர்.
Comments