அச்சன்புதூர் ஆர்ப்பாட்டம்.



நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகில் உள்ளது அச்சன்புதூர் கிராமம். இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய இடம் ஆகும். இவ்வூரில் ஏறக்குறைய 2500 க்கும் அதிகமான ரேசன் கார்டுகள் இருந்தும் ஒரே ஒரு ரேசன் கடை மட்டுமே இயங்கி வருகிறது.

இக்கடையை நடத்துபவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதால் நியாயமாக மக்களுக்கு சேர வேண்டிய பொருட்கள் கிடைக்காமல் போகிறது. பலமுறை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் முறையிட்டும் எவ்வித பலனும் இல்லை. மேலும், இவ்வூரில் ஊராட்சி நிர்வாகம் முற்றிலுமாக நிர்வாக அதிகாரியின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி தலைவர் தனக்கு கிடைக்க வேண்டிய பங்குத் தொகை கிடைத்தால் போதும் என்ற நிலையில் உள்ளதால், எந்த மக்கள் பணியும் நடப்பதே இல்லை. அத்திட்டங்களுக்கான பணம் மட்டும் முறையாக பில்கள் அனுப்பப்பட்டு பணப்பட்டுவாடா அதிகார தரகர்களுக்குள் பங்கு வைக்கப்படுகிறது.

இவ்விரு பிரச்சினைகளையும் முன்னிலைப்படுத்தி அச்சன்புதூர் த.மு.மு.க. மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆண்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.



செய்தி தொகுப்பு

நெல்லை உஸ்மான் கான்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

2. அக்கிரமக்காரர்கள் ‏ ழாலிமீன் ‏ -அநியாயம் செய்தவர்கள் - لظّٰلِمِيْن