மாதம் இரண்டு மார்க்க விளக்க பொதுக்கூட்டம்.

மேலப்பாளையம் நகர த.மு.மு.க.சார்பில் I.P.P பெயரில் மாதம் இரண்டு மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடத்துவது என கடந்த மாதம் கழக துணைப் பொதுச்செயலாளர் J.S.ரிபாயீ அவர்கள் தலைமையில் நடந்த மேலப்பாளையம் நகர நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் கடந்த 02.02.2008 அன்று முதல் கூட்டம் மேலப்பாளையம், மைலக்காதர் தெருவில் நகர தலைவர் K.S.ரசூல் மைதீன் தலைமையில் அண்ணல் நபியே அழகிய முன் மாதிரி என்ற தலைப்பில் திருமங்கலம் முகம்மது ரபீக் மற்றும் காசீம் பிர்தௌஸி உரையாற்றினார்.

அடுத்த கூட்டம் சென்ற 23.02.2008 அன்று மேலப்பாளையம் ஞானியார் அப்பா நகர் 4வது தெருவில் நகர தலைவர் K.S.ரசூல் மைதீன் தலைமையில் மாநபி கூறும் மனித வாழ்வு என்ற தலைப்பில் காயல் பட்டிணம் ஆயிஷா சித்தீக்கா கல்லூரி முதல்வர் M.I.அப்துல் மஜீத் மஹ்லரி அவர்களும் K.S.காசீம் பிர்தௌஸி அவர்களும் சிறப்பாக உரையாற்றினர். மேற்கண்ட இரண்டு மார்க்க கூட்டத்திலும் திரளான மக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

இன்ஷா அல்லாஹ் அடுத்த கூட்டம் வருகி;ன்ற 15.03.2008 சனி இரவு மேலப்பாளையம் பஜார் திடலில் நடைபெற உள்ளது. இதில் வேர்க்கிளம்பி இமாம் யாஸின் இம்தாதி உரையாற்ற உள்ளார். மேற்கண்ட அனைத்து நிகழ்ச்சிகளும் நகர நிர்வாகிகள் (I.P.P) பொறுப்பாளர்கள் A.M.மைதீன் பாதுஷா, யA.காஜா, E.M.அப்துல் காதர், K.K..அப்துல் அஜீஸ், அல்அய்ன் த.மு.மு.க.பொறுப்பாளர் மைதீன், ராஹத் செய்யது அலி, அப்பாஸ், சேக், ராஹத் காஜா ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

வஸ்ஸலாம்.

தகவல்
K.S.ரசூல் மைதீன்

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு